FLOATING STONE: RAMAYANA WONDER!!

(Based on News from Nakkiran magazine)

Translated by Swaminathan from Tamil

Post 1837 ;Date 30 April 2015; Time in London 5-23 am

All of us know that when Hanuman wrote RAM on the stones, the stones started floating. Like army build pontoon bridges Rama built a pontoon bridge with the help of a Tamil engineer named NALAN. Now Ponnagaram fishermen have found out a fifteen kilo floating stone. Ponnagaram is near Manalmelkudi in Pudukkottai District of Tamil Nadu,India.

When the fishermen told the villagers about their stone in the fishing net which floats when put in water, they tried it at the temple tank at Adikesava Perumal Temple. When it was floating, hundreds of people came and watched it. I have already written about how Rama flew from Sri Lanka to Uttar Pradesh in a day based on a New Scientist Article. Please visit my blog tamilandvedas.com

மிதக்கும் கல்!

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே உள்ள மீனவர் கிராமத்தில் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றபோது மீனவர் வலையில் தண்ணீரில் மிதக்கும் 15 கிலோ எடை கொண்ட அதிசய கல் சிக்கியது. இந்த கல்லை பொதுமக்கள் ஏராளமானோர் அதிசயத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

மணமேல்குடி அருகே உள்ளது பொன்னகரம் மீனவர் கிராமம். இங்கு தினசரி 500க்கும் மேற்பட்டோர் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். நேற்று வழக்கம் போல் கடலுக்குச் சென்று மீன்பிடிப்பதற்காக வலையை கடலில் வீசிவிட்டு பின்பு வலையை எடுத்தபோது, அந்த வலையில் மீன்களுடன் ஒரு கல்லும் வந்தது. அந்த கல்லை எடுத்து அந்த மீனவர் தண்ணீரில் வீசியபோது அந்த கல் மிதந்தது. உடனே ஆச்சியப்பட்ட அந்த மீனவர் படகில் அந்த கல்லை தூக்கி போட்டுக் கொண்டு கரைக்கு வந்து பொதுமக்களிடம் இந்த அதிசயத்தை கூறினார். பின்னர் அந்த கல் அருகில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோவில் வாசலில் உள்ள குளத்தில் போடப்பட்டது. குளத்தில் போடப்பட்ட அந்தக்கல் தண்ணீரில் மூழ்காமல் மிதந்தது. இந்த அதிசயத்தை கேள்விப்பட்ட சுற்றுவட்டார பொதுமக்கள் ஏராளமானோர் வந்து குளத்தில் மிதந்துக் கொண்டிருக்கும் அந்த கல்லை அதிசயத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
(நன்றி -நக்கீரன் )