WOMAN GIVES ELECTRIC SHOCK சம்சாரம் தொட்டால் மின்சாரம் (Post No.8172)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8172

Date uploaded in London – 14 June 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சம்சாரம் தொட்டால் மின்சாரம் வரும்; இலவசம்!

உலகில் பல அற்புத மனிதர்கள் வாழ்கிறார்கள் ; சிலர் உடலில் காந்த சக்தி இருக்கிறது. இன்னும் சிலர் உடலில்  மின்சார சக்தி இருக்கிறது.ஞானிகளுக்கு நம்மைச் சுற்றியுள்ள ஒளி (AURA) வட்டத்தைப் பார்க்க முடிகிறது. அவ்வப்போது பத்திரிகைகளில் வரும் செய்திகளை சேகரிப்பது என் வழக்கம் இதோ 23-2-2008-ல் லண்டன்  டெய்லி மெயில்

(DAILY MAIL) பத்திரிகையில் வந்த செய்தி.

இந்தப் பெண்மணி யின் பெயர் மேவிஸ் ப்ரைஸ் MAVIS PRICE ; வயது 60. இவர் எ தைத் தொட்டாலும் அதில் அதி பயங்கர மின் சக்தி பாய்கிறது. இதனால் இவர் மின்சார கெட்டில் பக்கம் போகவே அஞ் சுகிறார். அம்மணி தொட்டால் வீடு முழுதும் எலெக்ட்ரிக் கட் (ELECTRICITY CUT) தான் . எல்லாம் பியூஸ் (FUSE) போய்விடும்.

இருடைய சாதனை — இவர் தொட்ட 15 மின்சார கெட்டில்கள், 20 அயன் பாக்ஸ்கள் (IRONS) , 10 வாக்வம் கிளீனர்கள் (VACUMN CLEANERS) எல்லாம் விளங்காமல் போய்விட்டது.

சிலர் தொட்டதெல்லாம் பொன் ஆகும்; அவ்வளவு அதிர்ஷ்டக் கை ; இவர் தொட்டதெல்லாம் பியூஸ் ஆகும்; அவ்வளவு துரதிருஷ்டக் கை!!

இவருக்கு 50 ஆண்டுகளாக இந்த அபூர்வ சக்தி இருக்கிறது.

மேவிஸ் ப்ரைஸ்  சொல்கிறார் “சிறு வயதில் ஒரு முறை டெலிவிஷன பிளக்கை சாக்கெட்டில் சொருகப் போனேன். டெலிவிஷனும் இயங்காமல் போனது. என்னையும் தூக்கிப் போட்டது. அறையி ல் ஒரு மூலையில் போய் நன் விழுந்தேன். என் பேரக் குழந்தைகள் பக்கத்தில் வந்தால் பாட்டி, எனக்கு ‘ஷாக்’ அடிக்கிறது என்பர்”.

இவர் வசிப்பது இங்கிலாந்தில் ஷ்ராப்ஸைர் பகுதியில் உள்ள டெல்போர்ட் நகர்(TELFORD IN SHROPSHIRE, ENGLAND, UK)

இது போல டெப்பி உல்ப் ( DEBBIE WOLF OF TELLSCOMBE CLIFFS, NEAR BRIGHTON, ENGLAND, UK) என்னும் 38 வயது பெண்மணி இங்கிலாந்தில் பிரைட்டன் நகர் அருகில் வசிக்கிறார். அவர் உடலில் பாயும் மின்சார சக்தி மிகவும் வினோதமானது. அவர் தெருவில் நடந்து சென்றால் மின்சார விளக்குகள் எல்லாம் அணைந்துவிடும். இரவு நேரத்தில் இவர் நடந்தால் எல்லோருக்கும் திண்டாட்டம். எந்த மின்சார சாதனமும் இவர் வந்தால் அப்படியே அசந்து போய்விடும். அவ்வளவு ‘மின்சார அழகு’!!

பெண்களின் அன்ன நடையைக் கண்டால் நாம் மயங்குவோம். இவர் நம் அருகில் அன்ன நடை பயின்றால்  நாம் மயங்கி விழுந்து விடுவோம். நம் கம்ப்யுட்டர் , மொபைல் போன் ஆகியன எல்லாம் இவர் மீது காதல் கொண்டுவிடும்.

சம்சாரம் என்பது மின்சாரம் மட்டுமா ; ஸம்ஹாரமும் கூட !!

சம்சாரம் = மனைவி; ஸம்ஹாரம் = அழிவு (மின்சாரப் பொருட்களுக்கு மட்டும்).

இது பற்றி விஞ்ஞானிகள் கூறுவது என்ன ?

நம் எல்லோருடைய உடலிலும் ஸ்டாடிக் எலெக்ட்ரிசிட்டி (STATIC ELECTRICITY)  இருக்கிறது. சில நேரங்களில் உலோகப் பொருட்களைத் தொடும்போது நமக்கு இது தெரியும்; சிலருக்கு செயற்கை இழைகளால் ஆன நைலான் முதலிய உடைகளை அணியும்போது இது அதிகரிக்கிறது. இரண்டு பொருட்களை உராயும்போது இந்த வகை மின்சக்தி வரும். ஆயினும் மேவிஸ் ப்ரைஸ் போன்ற சிலரின் உடலில் இருக்கும் மின் சக்தியின் அளவு விஞ்ஞானிகளையும் திகைக்க வைக்கிறது என்கிறார்கள். அவர் வீட்டிலுள்ள கம்பளம், அவர் அணியும் உடை , அவரது நடை ஆகிய எல்லாவற்றையும் கவனித்தால்தான் விளக்க முடியும் என்றும் சொல்கிறார்கள்.

அறிவியல் அறிஞர்களுக்கு அதிசய விஷயங்களில் நம்பிக்கை வராது . அதை ஆராய்வதில் ஆர்வம் மட்டுமே பிறக்கும்.

TAGS – சம்சாரம் , மின்சாரம்,அபூர்வ சக்தி

–SUBHAM–