ஆசை பற்றி 30 பழமொழிகள்; செப்டம்பர் 2016 காலண்டர் (Post No.3101)

ganapathy on baby

Compiled by London Swaminathan

 

Date: 29 August 2016

 

Time uploaded in London: 5-10 AM

 

Post No.3101

 

Pictures are taken from various sources; thanks for the pictures.

 

செப்டம்பர் மாத (துன்முகி ஆவணி– புரட்டாசி) காலண்டர், 2016

 

திருவிழா நாட்கள்:– செப்டம்பர் 4-சாமவேத உபாகர்மா, 5- விநாயக சதுர்த்தி, 13- ஓணம், பக்ரீத், 17– மாளய பட்சம் ஆரம்பம், 30- மாளய அமாவாசை;

 

அமாவாசை – 1, 30

பௌர்ணமி – 16

ஏகாதசி – 12/13, 26/27

முகூர்த்த நாட்கள் – 4,5,8, 14, 15

chacolate ganapathy

செப்டம்பர் 1 வியாழக்கிழமை

 

ஆசை காரணமாக எதுவும் செய்யக்கூடாதுதான்; ஆனால் உலகில் ஆசை இல்லாத செயல் எதுவுமில்லை; வேதம்  கற்பதும், சடங்குகளைச் செய்வதும்    ஆசையினாலன்றோ! -மனு 2-2

செப்டம்பர் 2 வெள்ளிக்கிழமை

ஆசை இல்லமல் ஒரு மனிதனும் ஒரு செயலையும் செய்வதில்லை; ஒரு ஆசையின் தூண்டுதலினால், ஆசை நிறைவேறவே அவன் எதையும் செய்கிறான்-மனு 2-4

 

செப்டம்பர் 3 சனிக்கிழமை

யோகத்தை அடைந்தவன் சாந்தியை அடைகிறான்; யோகம் கைகூடாதவன், ஆசையின் தூண்டுதலினால், பயனில் பற்றுக்கொண்டு, கட்டப்பட்டுவிடுகிறான் – பகவத் கீதை 5-12

 

செப்டம்பர் 4 ஞாயிற்றுக் கிழமை

நிலத்தில் விளையும் களை, பயிர்களைப் பாதிக்கின்றன; மனதில் விளையும் ஆசைகள், மனிதனின் குணநலன்களைப் பாதிக்கின்றன.- தம்மபதம் 359

 

செப்டம்பர் 5 திங்கட்கிழமை

நான் எல்லாவற்றையும் வென்றுவிட்டேன்; எனக்கு எல்லாம் தெரியும்; என் வாழ்க்கை தூய்மையானது; நான் அனைத்தையும் துறந்தவன்; நான் ஆசையிலிருந்து விடுபட்டவன்; யாரை குரு என்று நான் அழைப்பேன்? யாருக்கு நான் உபதேசம் செய்வேன்? –தம்மபதம் 353; புத்தர் சொன்னது.

 

ganesh manal

செப்டம்பர் 6 செவ்வாய்க் கிழமை

ஆசைக்கு அடிமையானோர், ஆசை வெள்ளத்தில் சிக்குகின்றனர்; சிலந்தி தான் பின்னிய வலையிலேயே கட்டுப்பட்டிருப்பதைப்போல –தம்மபதம் 347

 

செப்டம்பர் 7 புதன் கிழமை

ஒரு மரத்தை வெட்டினாலும் அதன் வேர்கள் சேதமாகாவிட்டால் அது தழைத்தோங்கும்; அதுபோல ஆசை வேர்கள் அறுபடாதவரை, துன்பம் தழைத்தோங்கும்- தம்மபதம் 338

 

செப்டம்பர் 8 வியாழக்கிழமை

ஒருவனை ஆசைகள் சூழுமானால், அவன் “பிரானா” கொடி வளருவதைப்போல, துன்பங்களால் சூழப்படுவாந்- தம்மபதம் 335

செப்டம்பர் 9 வெள்ளிக்கிழமை

உங்களை நான் நேசிப்பதால் சொல்கிறேன்; ஆசை என்னும் பந்தக்கட்டுகளை அறுத்து எறியுங்கள்; உசிரா என்னும் வாசனைக் கிழங்கு எடுப்பதற்காக, “பிரானா” கொடியை வெட்டி எறிவது போல ஆசையை வெட்டுங்கள் – தம்மபதம் 337

செப்டம்பர் 10 சனிக்கிழமை

ஓசைபெற்று உயர்பாற்கடல் உற்று, ஒரு
பூசை முற்றவும் நக்குபு புக்கென
ஆசை பற்றி அறையலுற்றேன் – மற்று, இக்
காசு இல் கொற்றத்து இராமன் கதை அரோ! (4)

பொருள்:– பெரிய புனிதமான திருப் பாற்கடலை ஒரு பூனை நக்கிக் குடிப்பது போல, குற்றமற்ற, வீரம் மிக்க ராமன் கதையை சொல்லவேண்டும் என்ற ஆசையால் நான் சொல்கிறேன்.

 

ganesh yellow gem

செப்டம்பர் 11 ஞாயிற்றுக் கிழமை

ஆசை அறுபது நாட்கள், மோகம் முப்பது நாள், தொண்ணூறு நாளும் போனால் துடைப்பக் கட்டை அடி– தமிழ் பழமொழி

 

செப்டம்பர் 12 திங்கட்கிழமை

ஆசை அவள் மேலே, ஆதரவு பாய் மேலே –தமிழ் பழமொழி

செப்டம்பர் 13 செவ்வாய்க் கிழமை

ஆசை இருக்கிறது தாசில் பண்ண, அமிசை (அதிருஷ்டம்) இருக்கிறது கழுதை மேய்க்க –தமிழ் பழமொழி

செப்டம்பர் 14 புதன் கிழமை

மீசை நரைத்தாலும் ஆசை நரைப்பதில்லை – தமிழ் பழமொழி

 

செப்டம்பர் 15 வியாழக்கிழமை

ஆசை காட்டி மோசம் செய்கிறதா? –தமிழ் பழமொழி

 

ganesh rose

செப்டம்பர் 16 வெள்ளிக்கிழமை

ஆசைக்கு ஒரு பெண்ணும் ஆஸ்திக்கு ஒரு ஆணும் –தமிழ் பழமொழி

 

செப்டம்பர் 17 சனிக்கிழமை

ஆசை பெரிதோ, மலை பெரிதோ? –தமிழ் பழமொழி

 

செப்டம்பர் 18 ஞாயிற்றுக் கிழமை

ஆசைப்பட்டு மோசம் போகாதே — தமிழ் பழமொழி

செப்டம்பர் 19 திங்கட்கிழமை

ஆசைப்பட்ட பண்டம் ஊசிப் போயிற்று –தமிழ் பழமொழி

செப்டம்பர் 20 செவ்வாய்க் கிழமை

ஆசையாய் மச்சான் என்றாளாம்; “அடி சிறுக்கி” என்று அறைந்தானாம் –தமிழ் பழமொழி

 

ganesh procession

செப்டம்பர் 21 புதன் கிழமை

ஆசை வெட்கம் அறியாது — தமிழ் பழமொழி

 

செப்டம்பர் 22 வியாழக்கிழமை

கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை –தமிழ் பழமொழி

 

செப்டம்பர் 23 வெள்ளிக்கிழமை

தவம் செய்வார் தம் கருமம் செய்வார் மற்றல்லார்

அவம்செய்வார் ஆசை உட்பட்டு – குறள் 266

 

செப்டம்பர் 24 சனிக்கிழமை

“ஆசா லோகஸ்ய ஜீவனம்”- ஆசையே உலகிலுள்ள ஜீவன்கள் வாழ மூல காரணம் — சம்ஸ்கிருத பழமொழி

செப்டம்பர் 25 ஞாயிற்றுக் கிழமை

“ஆசாவதிம் கோ கத:?” ஆசைக்கடலின் கரையைக் கண்டவன் எவன்?

 

chennai ganesh motorcycle

செப்டம்பர் 26 திங்கட்கிழமை

“ஆசா துக்கஸ்ய காரணம்” – ஆசையே துன்பத்துக்கு காரணம்

செப்டம்பர் 27 செவ்வாய்க் கிழமை

“ஆசாபரே ந தைர்யம்” — ஆசை வந்துவிட்டால்; பொறுமை பறந்தோடிப் போகும்.

 

செப்டம்பர் 28 புதன் கிழமை

“கால: க்ரீடதி, கச்சத் ஆயு:, தத் அபி ந முஞ்சத் ஆசாவாயு:” — மோஹமுத்கரம் ( காலம் நம்முடன் விளையாடுகிறது; ஆயுளோ தேய்கிறது; ஆனால் ஆசையின் பிடிப்பு மட்டும் தளர மறுக்கிறது

 

செப்டம்பர் 29 வியாழக்கிழமை

ஆசை அணுவானாலும் ஆளை விடாது- தமிழ் பழமொழி –

செப்டம்பர் 30 வெள்ளிக்கிழமை

ஆசை அண்டாதானால் அழுகையும் அண்டாது –தமிழ் பழமொழி

ganesh indonesia

 

–Subham–