ஔரங்கசீப், ஆஷ்மோலியன் மியூசியம், ஆக்ஸ்fஓர்ட் (காப்பிரைட்)
Article No.2022
Written by S NAGARAJAN
Swami_48@yahoo.com
Date : 27 July 2014
Time uploaded in London : 7-59 am
First two parts of this series are published in the last few days. This is the last part.
முகலாய சாம்ராஜ்ய அழிவுக்கு மகாகவி பாரதி கூறும் காரணம்! – 3
By ச.நாகராஜன்
அவரங்கஜீபிடம் மகன் பட்ட பாடு!
அவுரங்கஜீப்பின் சந்தேகங்களை வரிசையாக மகாகவி அழகுற எடுத்துரைக்கிறார் இப்படி:-
“இலேசான சந்தேகங்களினால், தான் மிகவும் காதல் பூண்டிருந்த புத்திரர்களைச் சிறையிலிவ்ட்டு விடுவான். தனக்குப் பின் அடுத்த பட்டத்திற்கு வரவேண்டுமென்று அவன் தீர்மானம் செய்து வைத்திருந்த பஹாதூர்ஷா (முவாஜிம்) என்ற மகனை ஏழு வருஷம் சிறையிலடைத்து வைத்திருந்தான்.
1698ஆம் வருஷத்தில் அவனை ஆப்கானிஸ்தானத்துக்குச் சுபேதாராக (வைஸிராய்) அனுப்பினான்.அங்கே தன் மகனைச் சுற்றி அவன் நியமித்திருந்த ஒற்றர் கூட்டம் சொல்லி முடியாது. மகன் கிழக்கே பார்த்தது, மேற்கே பார்த்தது, மூச்சு விட்டது முதலாக இவனுக்கு ரகசியமாகத் தகவல் கிடைத்து விடும்படி ஏற்பாடு செய்திருந்தான். மகன் யானைப் போர் விட்டுப் பார்த்தால் குற்றம். அவன் உயர்ந்த பீடத்தில் உட்கார்ந்ததாகத் தெரிந்தால் குற்றம். அவுரங்கஜீபின் ஒற்றர்களின் செவியில் படாமல் அவன் யாரிடமேனும் ரஹஸ்யம் பேசிக் கொண்டிருந்ததாகத் தெரிந்தால் குற்றம். இவ்விதமான பிரஸ்தாபங்கள் வரும்போதெல்லாம் ‘இந்தப் பாதக மகன் நாமிருக்கும்போதே அரசனுடைய பதவியை விரும்புகிறான்’ என்று கருதி, அவுரங்கஜீபின் நெஞ்சிலே எரிச்சலுண்டாய் விடும்.
காபூலிலே மகனுடைய அந்தப்புரத்தில் கூட அவுரங்கஜீப் தனதாக ஒரு கிழவியை நியமித்திருந்தான். அந்தப்புர காரியங்களை மேற்பார்க்கும் வேலை அந்தக் கிழவிக்குக் கொடுத்திருந்தான். அது வெளிக்கு யதார்த்தத்தில் அக்கிழவிக்கு பஹாதூர்ஷாவின் வார்த்தைகளையும் செய்கைகளையும் கவனித்துக் கொண்டிருந்து அவுரங்கஜீபுக்குத் தகவல் கொடுக்கும் வேலை. இப்படியே எல்லா மக்களையும் ஒற்றர்களின் கீழ் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். பிள்ளைகளை ராஜதானிலியிருக்க இடங்கொடுக்க மாட்டான். சமீபத்திலிருந்தால் அவர்களுக்கு ராஜ்ய ஆசையுண்டாய் விடுமென்று அவனுக்குப் பயம். தூர தேசங்களில் சுபேதார்களாக அனுப்பப்பட்டிருக்கும் புத்திரர்கள் தில்லிக்கு வர வேண்டுமென்று சொன்னால், வர வேண்டாமென்று கட்டளையனுப்பி விடுவான். சொந்தப் புத்திரர்கள் விஷயத்தில் இத்தனை சமுசயம் பாராட்டிய ராஜா மற்ற காரியஸ்தர்களையெப்படி நடத்துவானென்பது சொல்லவே வேண்டியதில்லை. எல்லோரிடத்திலும் சந்தேகம். அனேக வருஷங்கள் இவன் தனது கையாலே சமைத்துத் தின்று கொண்டிருந்தான். வேறு யாரேனும் சமைத்தால் எங்கே விஷம் கலந்து விடுவார்களோ என்று பயம். எவ்வளவோ அறிவிருந்தும், எவ்வளவோ சத்திரிய குணங்களிலிருந்தும் அவுரங்கஜீபுக்கு இப்படி நித்திய சந்தேகம் ஜனித்த காரணம் யாது?
ஆரம்பத்தில் அவன் குரூரச் செய்கைகளாலும் வஞ்சனையாலும் அதர்மத்தாலும் சிங்காதனத்திற்கு வந்ததே காரணம்.
முதலாவது அதர்மம். இரண்டாவது சமுசயம். மூன்றாவது வினாசம்.
இப்படி முகலாய அரசு வீழ்ந்தது”
பாரதியாரின் இந்தக் கட்டுரையை அவரது பல்வேறு கட்டுரைகளுடனும் பாடல்களுடனும் சேர்த்துப் படித்துப் பார்த்தால் அவனது “ஆழ்ந்திருக்கும் கவியுளம்” நன்கு தெரிய வரும்.
அதர்மம் அழியும்!
அதர்மம் ஜெயிக்காது. பதினாயிரம் புண்கள் வழியேவ் யமன் பாய்ந்து அதர்ம ராஜ்யத்தை அழித்து விடுவான். முகலாயரின் அதர்ம ராட்சஸ ராஜ்யம் அழிந்து ஒழிந்தது என்பதை உணர்கிறோம்.
பாரதியாரின் இதர கட்டுரைகளில் குறிப்பிடத் தகுந்தவை
1)முஸ்லீம்களின் சபை (விஜயா இதழில் 1910, பிப்ரவரி 1ஆம் தேதி இதழில் வெளியானது)
2) ஒரு மகமதிய ஸாது (விஜயா இதழில் 1910, பிப்ரவரி 18ஆம் தேதி இதழில் வெளியானது)
3) ஶ்ரீ சிவாஜி உத்ஸவமும் ஆங்கிலோ இந்தியர்களும்
இவற்றில் உள்ள பாரதியாரின் கருத்துக்களை இன்னொரு கட்டுரையில் காண்போம்!
இந்தத் தொடர் கட்டுரை முற்றும்.
**********
You must be logged in to post a comment.