31 முக்கிய சித்தர் பாடல்கள் (Post No.7634)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7634

Date uploaded in London – 29 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

மார்ச் 2020 காலண்டர்

(மாசி மாதம் -விகாரி வருஷம்)

பண்டிகை நாட்கள் – மார்ச் 8 உலக மகளிர் தினம்; 8 மாசி மகம் 9 ஹோலி/காம தஹனம்; 14-காரடையான் நோன்பு; 25-யுகாதி புத்தாண்டு தினம்.

அமாவாசை-24; பௌர்ணமி-9; ஏகாதசி -5/6, 20

முகூர்த்த தினங்கள்– மார்ச் 5, 6, 12, 13, 22, 30

நந்த வனத்திலோர் ஆண்டி –  – அவன்

நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி

கொண்டு வந்தானொரு தோண்டி- அதைக்

கூத்தாடிக்  கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி

—கடுவெளிச் சித்தர்

மார்ச் 1 ஞாயிற்றுக் கிழமை

நெளிந்து நெளிந்து  நெளிந்து   ஆடு பாம்பே சிவன்

சீர்பாதங் கண்டு தெளிந்து ஆடு பாம்பே!

–பாம்பாட்டிச் சித்தர்

XXX

மார்ச் 2 திங்கட்  கிழமை

நாதர் முடிமேல் இருக்கும் நாகப் பாம்பே

நச்சுப் பையை வைத்திருக்கும் நல்ல  பாம்பே

பாதலத்திற் குடிபுகும் பைங்கொள்  பாம்பே

பாடிப்பாடி நின்று விளையாடு பாம்பே !

XXx

மார்ச் 3 செவ்வாய்க் கிழமை

எட்டு மலைகளைப்  பந்தாய் எடுத்து எறி குவோம்

 ஏழு கடலையும் குடித்து ஏப்பமி டுவோம்

மட்டுப்படா மணலையும் மதித்து விடுவோம்

மகராசன் முன்பு நீ நின்று ஆடு பாம்பே!

XXX

மார்ச் 4 புதன் கிழமை

மூண்டெரியும் அக்கினிக்குள் மூழ்கி வருவோம்

முந் நீருள் இருப்பினும் மூச்சடக்குவோம்

தாண்டி வரும் வன்புலியைத் தாக்கி விடுவோம்

தார் வேந்தன் முன்பு நீ நின்று ஆடு பாம்பே!

XXX

மார்ச் 5 வியாழக் கிழமை

வேந்தன் செய்த சிருட்டிகள் போல வேறு செய்குவோம்

வேதனையும் எங்கள் கீழே மேவச் செய்குவோம்

நாதனுடன் சமமாக நாங்களும் வாழ்வோம்

நாங்கள் செய்யும்  செய்கை இதென்று ஆடுபாம்பே!

XXX

மார்ச் 6 வெள்ளிக் கிழமை

அறுபத்து நாலு கலையாவும் அறிந்தோம்

அதற்கு மேல் ஒரு கலையான தறிந்தோம்

மறுப்பற்றுச் சற்றுமில்லா மனமும் உடையோம்

மன்னனே ஆசான் என்று ஆடுபாம்பே !

XXX

மார்ச் 7 சனிக் கிழமை

சீறுபு லி யானை யாளி சிங்க முதலாய்ச்

சிற்றடிக்குக் குற்றேவல் செய்யச் சொல்லுவோம்

வீறு பெருங் கடவுளை எங்களுடனே

விளையாடச்  செய்குவோம் என்று ஆடுபாம்பே !

XXX

மார்ச் 8 ஞாயிற்றுக் கிழமை

யானை சேனை தேர் பரியாவும் அணியாய்

யமன் வரும்போது துணை யாமோ அறிவாய்

XXX

மார்ச் 9 திங்கட் கிழமை

முக்கனியும் சர்க்கரையும் மோதகங்களும்

முதிர் சுவைப் பண்டங்களும் முந்தி உண்டவாய்

மிக்க உயிர் போன பின்பு  மண்ணை விழுங்க

மெய்யாகக் கண்டோம் என்று ஆடுபாம்பே !

XXX

மார்ச் 10 செவ்வாய்க் கிழமை

வெயில் கண்ட மஞ்சள் போன்ற மாதர் அழகை

விரும்பியே மேல் விழுந்து மேவு மாந்தர்

ஒயில் கண்டே இலவு காத்து ஓடும்  கிளி போல்

உடல் போனால் ஓடுவாரென்று என்று ஆடுபாம்பே !

XXX

மார்ச் 11 புதன் கிழமை

மயில் என்றும் குயில் என்றும் மாணிக்கம் என்றும்

மானே என்றும் தேனே என்றும்  வான் அமுதென்றும்

ஒயிலான வன்ன மயிற் கொத்தவளென்றும்

ஓதாமற் கடிந்தோம் என்று ஆடுபாம்பே !

XXX

மார்ச் 12 வியாழக் கிழமை

நாறு மீனைப் பலதரம் நல்ல தண்ணீரால்

நாளும்  கழுவினும் அதன் நாற்றம் போமோ

கூறும் உடல் பல நதியாடிக் கொண்டதால்

கொண்ட மலம் நீங்கா தென்று ஆடுபாம்பே !

XXX

மார்ச் 13 வெள்ளிக் கிழமை

கோபம் என்னும் மதயானை கொண்ட மதத்தைக்

கூர்கொள் யுத்தி அங்குசத்தால் கொன்று விட்டேங்காண் 

தீபமென்னுஞ் சிற்சொரூபச் செய்ய பொருளை

சேர்ந்துறவு கொண்டோம் என்று ஆடுபாம்பே !

Xxx

மார்ச் 14 சனிக் கிழமை

மனமென்னும் குதிரையை வாகனமாக்கி

மதியென்னும் கடிவாளம் வாயிற் பூட்டி

சினமென்னும் சீனியின் மேற் சீராய் ஏறித்

தெளிவிடம் சாரி விட்டு ஆடுபாம்பே

Xxx

மார்ச் 15 ஞாயிற்றுக் கிழமை

உளியிட்ட கற்சிலையில் உண்டோ உணர்ச்சி ?

உலகத்தின் மூடர்களுக்கு உண்டோ உணர்ச்சி ?

புளியிட்ட செம்பிற் குற்றம் போமோ ?அஞ்ஞா னம்?

போகாது மூடருக்கென்று ஆடுபாம்பே !

xxx

மார்ச் 16 திங்கட்  கிழமை

சதுர் வேதம் ஆறுவகை சாத்திரம் பல

தந்திரம் புராணங்களை சாற்றும்  ஆகமம்

விதம் விதமானவான  வேறு நூல்களும்

வீணான நூல்களே என்று ஆடுபாம்பே !

Xxx

மார்ச் 17 செவ்வாய்க் கிழமை

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கிங் கெய்திடாது போல்

எண்திசை திரி  ந்துங் கதி எய்தல் இல்லையே

நாட்டுக்கொரு கோயிற்கட்டி நாளும் பூசித்தே

நாதன் பாதம் காணார்கள் என்று ஆடுபாம்பே !

xxxx

மார்ச் 18 புதன்  கிழமை

ஆயிரத்தெட்டித ழ் வீட் டில்  அமர்ந்த சித்தன்

அண்டமெல்லாம்  நிறைந்திடும் அன்புதச் சித்தன்

காயமில்லாது ஓங்கி வளர் காரண ச் சித்தன்

கண்ணுள் ஒளியாயினான் என்று ஆடுபாம்பே !

Xxx

மார்ச் 19 வியாழக் கிழமை

கண்டவர்கள் ஒருக்காலும் விண்டிடார்களே

விண்டவர்கள் ஒருகாலும் கண்டிடார்களே

கொண்டகோலம் உள்ள வர்கள்  கோள் நிலை காணார்

கூத்தாடி கூத்தா டியே நீ ஆடுபாம்பே !

Xxx

மார்ச் 20 வெள்ளிக் கிழமை

தந்திரம் சொல்லுவார் தம்மை அறியார்

தனி மந்திரஞ் சொல்லுவார் பொருளை அறியார்

Xxx

மார்ச் 21 சனிக் கிழமை

ஓம்காரக்  கம்பத்தின் உச்சி மேலே

உள்ளும் புறம்பையும் அறிய வேண்டும்

ஆங்காரக் கோபத்தை அறுத்து விட்டே

ஆனந்த வெள்ளத்தைத் தேக்கிக்கொண்டே

Xxxx

மார்ச் 22 ஞாயிற்றுக் கிழமை

சூத்திரக் குடத்திலே பாம்பை அடைப்போம்

சுழுமுனைக் குள்ளேயே சுகித்திருப்போம்

Xxxx

மார்ச் 23 திங்கட் கிழமை

பஞ்ச கருவியைப் பலி கொடுப்போம்

சிவ்வுருவாகியே  நின்றோம் என்றே

சீர் பாதங் கண்டு தெளிந்து

Xxx

மார்ச் 24 செவ்வாய்க் கிழமை

தா ந்திமி திமி தந்தக் கோனாரே

தீந்திமி திமி திந்தக் கோனாரே

ஆனந்தக் கோனாரே – அருள்

ஆனந்தக் கோனாரே

–இடைக்காட்டுச் சித்தர்

Xxx

மார்ச் 25 புதன் கிழமை

மனமென்னும் மாடு அடங்கில் தாண்டவக்கோனே – முத்தி

வாய்த்ததென்று என்ணேடா தாண்டவக்கோனே

சி னமென்னும் பாம்பு இறந்தால் தாண்டவக்கோனே – முத்தி

சித்தியென்றே நினையேடா தாண்டவக்கோனே

Xxxx

மார்ச் 26 வியாழக் கிழமை

ஆறாதாரத் தெய்வங்களை நாடு

அவர்க்கும் மேலான ஆதியைத் தேடு

Xxxx

மார்ச் 27 வெள்ளிக் கிழமை

ஆதி பகவனையே பசுவே !

அன்பராய் நினைப்பாயேல்

சோதி  பரகதிதான் பசுவே !

சொந்தமது ஆகாதோ?

Xxx

மார்ச் 28 சனிக் கிழமை

மனம், வாக்கு, காயம் எனும் வாய்த்த பொறிக்கு எட்டாத

தினகரனை நெஞ்சசமத்தில் சேவித்துப் போற்றீரே

xxx

மார்ச் 29 ஞாயிற்றுக் கிழமை

பாலிற்  சுவை போலும் பழத்தில் மது போலும்

நூலிற் பொருள் போலும் நுண் பொருளைப் போற்றீரே

Xxxx

மார்ச் 30 திங்கட்  கிழமை

கை  விளக்குக் கொண்டு கடலில் வீழ்வார் போல்

மெய் விளக்குன்னுளிருக்க வீழ்குவதேன் புல்லறிவே

Xxx

மார்ச் 31 செவ்வாய்க் கிழமை

அன்னையைப் போல் எவ்வுயிரும் அன்புடனே காத்துவரும்

முன்னவனைக் கண்டு முக்தியடை புல்லறிவே

Xxxx subham xxxx