இந்திய நூல்களில் சிகை அலங்காரம் -Part 1 (Post No. 3201)

bengali-3

Research article written by London Swaminathan

 

Date: 29 September 2016

 

Time uploaded in London: 17-40

 

Post No.3201

 

Pictures are taken from various sources; thanks.

 

Contact swami_48@yahoo.com

 

வேதத்தில் சிகை அலங்காரம்!

 

வேத காலத்தில் முடி,  தலை மயிர், சிகை அலங்காரம் பற்றி ஏராளமான இடங்களில் பல வகையான வேறுபட்ட சொற்கள் பயிலப்படுவதால் அவர்கள் நகர நாகரீகத்தின் உச்ச நிலையை அடைந்தது தெளிவாகிறது; பல அரைவேக்காடு திராவிடங்களும் மார்காசீயங்களும்,அசட்டுப் பிச்சுகளும் தத்துப் பித்து என்று உளறி அவர்களை “நாடோடி” என்று எழுதியுள்ளன!! நீரளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு.

 

இதோ வேதங்களில் உள்ள சிகை அலங்காரச் சொற்கள்

 

ஓபாச:–

ரிக் வேதம், அதர்வண வேதத்தில் பயிலப்படும் இச் சொல்லுக்கு பொருள் விளங்கவில்லை; ஒருவேளை பின்னல் என்று பொருள்படலாம்; சீனீவாலீ என்னும் பெண் தெய்வத்துக்கு ‘ஸ்வௌபாச’ என்ற சொல் இருக்கிறது; இது வேதகாலத்தில் பயன்படுத்தப்பட்ட பொய் முடி, சௌரி என்று ஒரு வெளிநாட்டுக்காரர் எழுதியுள்ளார். இதை இந்திரனுக்குப் பயன்படுத்துகையில் கிரீடம் என்று பொருள் கொள்ளுவர்.

 

எனது கருத்து:

இது கொண்டை, ஆண்டாள் கொண்டை போல சிகை அலங்காரமாக இருக்கலாம். தமிழில் முடி என்றால் மயிர் என்றும் கிரீடம் என்றும் பொருள்படுவது போல; இந்திரனுக்குச் சொல்லும்போது கிரீடம்; சீனீவாலீ என்னும் தேவதைக்குச் சொல்லும் போது முடி/கொண்டை

 

கபர்தா (ரிக் வேதம் 10-114-3)

 

கபர்தா என்பது சடை, பின்னல் என்று பொருள்படும். வேதத்தில் பெண் ‘நான்கு சடை’யுடன் (சதுஸ் கபர்தா) இருப்பதாகவும் சினீவாலி (சு கபர்தா) என்ற கடவுள் நல்ல (அழகிய) சடையுடன் இருப்பதாகவும் வருகிறது. ஆண் கடவுளரில் ருத்ரனும் பூசனும் கபர்தீன் என வருணிக்கப்படுகின்றனர்.

 

வசிஷ்டர்கள், வலது பக்க குடுமியுடனும் மற்றவர்கள் (புலஸ்தி) நேரான சடையுடனும் இருந்ததாகக் குறிப்பு உளது.

 

எனது கருத்து

சினீவாலீ என்ற தேவதைக்கு பல முடி அலங்காரங்கள் கூறப்படுவதால் வேத கால நாகரீகம் நகர நாகரீகம் என்பது உறுதியாகிற து. நாடோடி மக்கள் இப்படிப் பல சில சிகை அலங்காரங்கள் செய்வதுமில்லை. அதை வேதம் போலக் கவிதை வடிவில் பாடுவதும் இல்லை. பாடியதைப் பல்லாயிரம் ஆண்டுகள் பாதுகாத்ததும் இல்லை. ஆக வேத கால மக்களை நாடோடிகள் என்று சொன்னவரின் அறிவை எண்ணி எண்ணி சிரிக்கலாம். நல்ல நகைச் சுவை!

 

இதில் இன்னும் சுவையான செய்திகளும் வருகின்றன. சங்கத் தமிழ் இலக்கியங்களில் தமிழ்ப் பெண்கள் ‘ஐம்பால் கூந்தல்’ அணிந்ததாக வருகிறது. இதற்கு ஐந்து வகையான கொண்டைகள் என்று விளக்கமும் உண்டு. ஆனால் இராக்கிய மலைகளில் வாழும் பழங்கால இந்து மக்களான யாசிதிகள் (Yazidis of Iraq) பற்றி நான் ஏற்கனவே ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியுள்ளேன் அவர்கள் அக்னியையும் மயிலையும் வழிபடுவர். வேதத்தில் கூறப்பட்டுள்ளது போல நாற்பால் கூந்தலையும் தமிழ்ல் கூறப்பட்டுள்ளது போல ஐம்பால் கூந்தலையும் அணிவர்.

yazidis

Yazidis of Iraq ( Vedic and Tamil Hair Style)

சிதம்பரம் தீட்சிதர்கள், கேரள நம்பூதிரிப் பிராமணர்கள், முன் குடுமிச் சோழியர்கள் ஆகியோர் குடுமி அணியும் வழக்கத்தை இத்தோடு ஒப்பிடுகையில் பொருள் இன்னும் நன்றாக விளங்கும். வேதத்தில் கூறப்படும் ‘பாணி’ (Style) இன்று வரை நாட்டின், குறிப்பாக தென்னாட்டின்,  பல பகுதிகளில் இருப்பது சிறப்புடைத்து.

 

குரீர

ரிக் வேதத்திலுள்ள திருமண மந்திரங்களில் (10-85-8) இச் சொல் மணமகளின் சிகை அலங்கார அணிகலணாகப் பேசப்படுகிறது அதர்வ வேதத்திலும் (6-138-3) அதே பொருள்.

 

யஜூர் வேதத்தில் சினீவாலீ என்னும் தேவதைக்கு அடைமொழியாக வருகையில் அவள் சு-கபர்தா, சு-குரீர, ஸ்- ஓபாச என்று போற்றப்படுகிறதால் நல்ல அழகிய அணி அணிந்தவளே என்பது பொருள்.

 

கெல்ட்னர் என்பார் இதை கொம்பு என்று மொழி பெயர்ப்பார்.

 

என் கருத்து

திருமணத்தில் மணப் பெண்கள் கிரீடம் போல , மகுடம் போல தலையில் அணிகளை அணியும் வழக்கம் இன்றும் வட நாட்டில் உண்டு. இப்படிப்பட்ட உயரிய நாகரீகம், வேத காலத்தில் இருந்ததை இரண்டு பழைய வேதங்களில் இருந்து அறிய முடிகிறது. இதை அறியாத மண்டுகள், வேத கால இந்துக்களை நாடோடிகள் என்று சொல்லி இன்று ‘ஜோக்கர்’கள் என்று நம்மிடையே பட்டம் பெறுகின்றனர்.

 

எல்லா கலாசாரங்களிலும் — ஆதிவாசிகளும் கூட –தலையில் ஏதேனும் அணிந்திருப்பது உண்மையே. ஆனால் பல்வேறு விதமான அணிகளை, ஆபரணங்களை சினீவாலீ அணிவதாகப் பாடுவதும் அதை பல்லாயிரம் வருடம் போற்றி இன்றும் துதி பாடுவதும் உலகின் உன்னத நாகரீகம் வேத கால நாகரீகம் என்பதை வெள்ளிடை மலையென விளக்கும். மார்க்சீய அரை வேக்காடுகளும் திராவிட அரை வேக்காடுகளும் இனிமேலாவது அறிவு பெறுவார்களாக.

 

கும்ப

அதர்வ வேதத்தில் குரீர, ஒபாசவுடன் , கும்ப என்பதும் பெண்களின் தலையில் வைக்கப்படும் ஆபரணமாக சொல்லப்படுகிறது.கெல்ட்னர் இவைகளைக் கொம்பு என்று மொழி பெயர்த்தாலும் கீத், மக்டொனெல் (Keith and Macdonell)  ஆகிய இருவரும் ஏற்கவில்லை. இந்திய பாரம்பர்யமானது இவைககளை ஆபரணங்களாகவே கருதுகின்றன.

 

bengali-wedding-dress-4

அமரகோசத்தில்

உலகின் முதல் நிகண்டான அமரகோசத்தில் முடி, சிகை அலங்காரம் பற்றிய ஸ்லோகங்கள்/பாடல்கள்:-

 

1.சிகுர: குந்தலோ வால: கச: கேச:  சிரோருஹ:

தத் வ்ருந்தே கைசிகம் கைஸ்யம் அலகாஸ்சூர்ண குந்தலா:

 

சிகுரஹ– முடித்துவைக்கப்படுவது முடி

குந்தலHஅ- நீண்டு இருப்பதால் கூந்தல்

சிரோருஹ:-சிரஸில்/தலையில் முளைப்பதால்

கேஸஹ- தலைக்கு க என்று பெயர்; க-வில் முளைப்பதால் அது கேசம்

வாலஹ – பூக்களால்அ லங்கரிக்கபடுவதால் வால:

கைசிகம், கைஸ்யம் — கேசங்களின் கூட்டம் (கட்டோடு குழல் )

அலம் – அலங்கரிக்கப்படுவது

வாரி – வாரப்படுவதால் (Eg. தலையை வாறு)

கசஹ- கட்டப்படுவதால் (உ.தாரணம்: கச்சை)

கைசிகம், கைஸ்யம்- கேசங்களின் கூட்டம் (கட்டுக் குடுமி)

 

2.தே லலாடே ப்ரமரகா: காகபக்ஷ: சிகண்டக:

கபரீ கேசவேசோ அத தம்மில்ல: சம்யதா: கசா:

ப்ரமரகாஹா- நெற்றியில் (லலாடத்தில்) விழும் வண்டுகள்; பெண்களின் முடி நெற்றியில் விழுவது வண்டுகள் மொய்ப்பது போல உள்ளதால்;

காக பக்ஷ:- காக்கை சிறகு அடித்துப் பறப்பது போல இருப்பதால்; வால்மீகி ராமாயணத்தில் ராம லெட்சுமனர்களின் முடி இப்படி இருந்ததாக வால்மீகி வருணிக்கிறார்.

 

சிகண்டஹ- வகிடு எடுத்து வாருவதால்;

கபரி- தலையில் வாருவதால் இப்பெயர்;

கேசவேசோ – கட்டிவைக்கப்பட்ட முடி;

தம்மிலாஹா – நடுத் தலையில் கொண்டை; புத்தர் தலையில்; சீக்கியச் சிறுவர்கள் தலையில் இவ்வாறு முடியை நடுவில் குவிப்பர்.

 

3.சிகா சூடா கேசபாசீ வ்ரதிநஸ்து ஜடா சடா

வேணிப்ரவேணீ சீர்ஷன்யசிரஸ்யௌ விசதே கசே

 

சிகா- தலை முழுவதும் ‘பரவி’ இருப்பதால்;

சூடா – காற்றில் அசைவதால்; சூடப்படுவதால் (சந்திர சூடன், பூச்ச் சூடி)

 

கேசபாசி- தலையைக் காப்பதால்

 

ஜடா- பின்னப் படுவதால் (ஜடாவர்மன் சுந்த்ர பாண்டியன், சடைய வர்மன்)

 

வேணி- அழுக்கில்லாமல் பிரகாசிப்பதால்

ப்ரவேணீ – மேற்கூறிய பொருளே; இதுவுமது.

 

சீர்ஷன்ய: – தலையிலுள்ளது

 

To be continued…………………………………………….

 

–Subham–

 

மொட்டையும் குடுமியும்

India Hindu Festival

எழுதியவர் லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண். 835 தேதி 12-02-14

ஆதி காலத்தில் இந்து, புத்த, சமண மதத்தில் மிகுந்த ஈடுபாடுடையோர் வெளிச் சின்னங்கள் மூலம் அதைக் காட்டினர். காவி உடை, மஞ்சள் உடை, வெள்ளாடை இப்படி வெளிப்புறத்திலும் நெற்றியில் விபூதி, குங்குமம், சந்தனம், கோபி, நாமம் இப்படிப் பல சின்னங்களாலும் யார் என்பதைக் காட்டினர். இது போலவே தலை முடி விஷயத்திலும் பல பாணிகள் (ஸ்டைல்) நிலவின. முன் குடுமி, பின் குடுமி, மொட்டை (பௌத்தர்), மயிர் ஒவ்வொன்றாக பறித்து மொட்டையாகுதல் (சமணர்) என்று பல வகைகள் இருந்தன. முற்றிலும் உணர்ந்த ஞானிகள் இந்த வெளி வேஷத்தைப் பொருட்படுத்தாமல் தத்துவங்களில் மட்டுமே நம்பிக்கை வைத்தனர். ஏனெனில் காலப்போக்கில் இது எல்லாம் ஏமாற்றும் பேர்வழிகளுக்கு வசதியாகப் போயின.

வள்ளுவர், ஆதிசங்கரர், புத்தர், திருமூலர் ஆகிய எல்லோரும் இதில் ஒருமித்த கருத்து வைத்திருப்பது வியப்பளிக்கிறது.இவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு காலகட்டங்களில், இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வசித்தவர்கள்.

Young-Buddhist-Monks

1400 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தை ஆண்ட மஹேந்திர பல்லவ மன்னன் சம்ஸ்கிருதத்தில் ஒரு நகைச்சுவை நாடகம் எழுதி இருக்கிறான். மத்தவிலாசப்ரஹசனம் என்ற அந்த நாடகத்தில் இந்து, புத்த, ஜைன (சமண) மத போலி சந்யாசிகளைக் கிண்டல் செய்துள்ளான். சங்க்ரரின் பஜகோவிந்தத்தில் சொல்லும் விஷயம், மஹேந்திர வர்மன் நேரில் கண்ட காட்சியுடன் இணைகிறது!

முடி விஷயத்தில் பல வகையான ‘ஸ்டைல்கள்’ வேத காலம் முதலே இருந்திருக்கின்றன. ஏதோ இந்தக் காலத்தில் ரவிவர்மா வரைந்த படங்களில்தான் சிவனுக்கு மீசை, விஷ்ணுவுக்கு மீசை இல்லை என்று நினைத்துவிட வேண்டாம். சிவபெருமானை வருணிக்கும் யஜூர் வேத ருத்ரம்/சமகத்தில் சிவனை மொட்டையன் என்றும் நீண்ட சடையன் என்றும் போற்றுகின்றனர்.

நீண்ட சடையன் (கபர்தீன்)
வ்யுப்தகேச (முண்டம்/ மழித்த) – ருத்ரம் (யஜூர் வேதம்)
வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை என்ற தமிழ்ப் பழமொழி இந்த ருத்ர மந்திரத்தில் இருந்துதான் வந்ததோ என்னவோ!

வள்ளுவர் கூறுகிறார்:

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்துவிடின் – (குறள் 280)

பொருள்: தவம் செய்வாருக்கு மொட்டை அடித்துக் கொள்வதும் சடை முடி வளர்த்தலும் தேவை இல்லை உலகத்தார் எதையெல்லாம் பழிக்கிறார்களோ அத்தகைய தீய வழக்கங்களை விட்டாலே போதும்.
Maha Kumbh Mela. Man. Skull. Shaved. Worship.

சங்கரரும் சாடுகிறார்

தத்துவ வித்தகர் ஆதி சங்கரர் பஜ கோவிந்தம் என்ற அருமையான துதிப்பாடலில் இதை அழகாக வருணிக்கிறார். இந்தப் பாட்டை அவரது சீடர் தோடகர் பாடியதாகச் சொல்லுவர்.:

“ஜடிலோ முண்டி லுஞ்சித கேச :
காஷாயாம்(அ)ம்பர பஹுக்ருத வேஷ :
பஸ்யன் அபி ச ந பஸ்யதி மூட:
ஹ்யுதரநிமித்தம் பஹுக்ருத வேஷ :”
—பஜகோவிந்தம்

( : இவ்வாறு இரண்டு புள்ளி இருக்கும் இடத்தில் ஹ என்று உச்சரிக்கவும்.எ.கா. வேஷஹ, கேசஹ, மூடஹ).

பொருள்: ஒருவன் சடை முடியுடன் இருக்கிறான். மற்றொருவனோ மொட்டைத் தலையன். இன்னும் ஒருவன் ஒவ்வொரு முடியாகப் பிடுங்கிவிட்டான். இன்னொருவன் காவி உடையில் வலம் வருகிறான். இந்த மூடர்கள் கண் இருந்தும் குருடர்கள். இந்த வெளி வேஷம் எல்லாம் வயிற்றுப் பிழைப்புக்குத்தான்.
எவ்வளவு பெரிய உண்மையை எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டார் தோடகர்.

tonsure Swastik_on_head
திருமூலரின் திருமந்திரம்

நூலும் சிகையும் நுவலில் பிரமமோ
நூலது கார்ப்பாசம் நுண்சிகை கேசமாம்
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்
நூலது அந்தணர் காணும் நுவலிலே

பூணூலும் உச்சுக்குடுமியும் தரித்திருக்கும் எல்லா பிராமணர்களையும் பிரம்மத்தை அறிந்தவர்கள் என்று எண்ண முடியுமா? நூல் என்பது வெறும் பருத்தி நூல்தானே, சிகை என்பது வெறும் முடிதானே. உண்மையில் நூல் என்பது வேதாந்த நூலறிவு. நுண் சிகை ஞானம் என்பது இடகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய 3 நாடிகளின் தன்மை அறிந்து, பிரம நாடி சிறக்க தலை உச்சியில் ஞானம் உண்டாவதே. இதுவே அந்தணர் கடைப்பிடிக்க வேண்டிய முறை—என்பார் திருமூலர்.
jain
Picture shows a Jain Monk

புத்தர் பேருரை

நீண்ட முடியும் சிகையும் வைத்திருப்பதாலோ, பிராமண குடும்பத்தில் பிறந்ததாலோ ஒருவன் பிராமணன் ஆகிவிடமாட்டான். எவனிடத்தில் சத்யமும் புனிதமும் இருக்கிறதோ அவனே பிராமணன். அவன் ஆனந்தக் கடலில் மிதப்பான் என்று தம்மபதத்தில் (393) புத்தபிரானும் கூறுகிறார்.

புத்தரும் தனது மதத்தினரின் வெளி வேஷங்களை அபோழுதே கண்டித்துள்ளார். அவரது மதம் எப்படித் தேய்ந்துபோகும் என்பதை அவர் பிரதம சீடரான ஆனந்தனுடன் நடத்திய சம்பாஷணையில் கூறினார். அவர் இறந்தவுடன் நடந்த மூன்று மஹா நாடுகளில் வாதப் பிரதிவாதங்கள் விண்ணைப் பிளந்தன. பெண்களைக் கட்டாயம் புத்த மதத்தில் சேர்க்கவேண்டும் என்று ஆனந்தன் மன்றாடியபோது, 1000 ஆண்டுகள் நிலைக்கக்கூடிய என்னுடைய மதம், பெண்களை (புத்த பிட்சுணிகளாக) அனுமதித்தால், 500 ஆண்டுகளே இருக்கும் என்றார் புத்த பிரான். இது பற்றிய விரிவான விளக்கத்தை எனது ஆங்கிலக் கட்டுரையில் காண்க: Two Interesting Conversations about Women, posted on 5th February 2014.

Contact swami_48@yahoo.com