ஹிந்துக் கோவில்களை இழிவு படுத்தும் சீரியல்கள், படங்கள்! (Post.8966)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8966

Date uploaded in London – – 25 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்துக் கோவில்களை இழிவு படுத்தும் சீரியல்கள், படங்கள்!

ச.நாகராஜன்

ஊடக சுதந்திரம் என்றால் எந்தப் பத்திரிகை வேண்டுமானாலும் எந்த படத் தயாரிப்பாளர் வேண்டுமானாலும் ஹிந்து மதத்தையும், ஹிந்துக் கோவில்களையும் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரையும் இழிவு படுத்தலாம் என்று அர்த்தமில்லை.

இப்படிப்பட்டவர்களை யாரும் சுட்டிக் காட்டுவதுமில்லை, தட்டிக் கேட்பதும் இல்லை.

ஓரிருவர் தட்டிக் கேட்டாலோ பத்திரிகை சுதந்திரம் என்ற பேரில் கம்யூனிஸ்டுகள், ஜிஹாதிகள், மிஷனரிகள் வருவார்கள். ஹ்யூமன் ரைட்ஸ் பேர்வழிகளும், சில எழுத்தாளினிகளும் எழுத்தாளர்களும் ‘தாங்கள் இதுவரை மறைந்திருக்கும் மர்மத்தை விடுவித்து’ உடனே ஓடோடி வந்து தட்டிக் கேட்போரை மட்டம் தட்ட ஆரம்பிப்பார்கள்.

இது ஜனநாயகம் தந்த ஒரு மோசமான கேலிக் கூத்து.

மூக்குத்தி அம்மன் என்று ஒரு படம். ஒரு குறிப்பிட்ட ஜாதியினரை இழிவு படுத்தும் வசனங்கள், ஒரு சிறு பெண் கிறிஸ்தவ மத சிலுவைக் குறியைப் போடுவதும் அவளை கர்த்தர் தேர்ந்தெடுத்துள்ளார் என்று ஒரு நன் வீர வசனம் பேசுவதும் என்ன ஒரு அநியாயம். அதே போல ஒரு முஸ்லீம் பெண்ணோ அல்லது ஒரு கிறிஸ்தவ பெண்ணோ கோவிலின் முன் சென்று கும்பிடுவது போல ஒரு காட்சியையாவது நீங்க்ள் பார்த்திருக்கிறீர்களா? அந்தப் பெண்ணை ஹிந்து தெய்வம் தேர்ந்தெடுத்து விட்டது என்று வீர வசனம் பேச விடுவார்களா?

‘எ சிடி ஆஃப் ட்ரீம்ஸ்’ என்று ஒரு டி.வி. சீரியல்! மோசமான காட்சிகள் ஒரு புறம் இருக்கட்டும், ஒரு இஸ்லாமியரை வீரனாகவும் தியாகியாகவும் காண்பிப்பது ஒரு புறம் இருக்கட்டும், ஒரு ஹிந்து குடும்பத்தில் அதிகார ஆசையினால் அண்ணன் தங்கை போட்டி ஏற்படுவது ஒரு புறம் இருக்கட்டும், கோவிலின் பிரகாரத்தில் பின் புறத்தில் உள்ள நீர்த்த்தொட்டியில் அண்ணனை தங்கை சாக அடிக்கும் காட்சி என்ன நியாயம்?

தட்டிக் கேட்க ஆளில்லை எனில் தம்பி சண்ட பிரசண்டன் தான்.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

ஜோதிகளும், பூமி நாயகர்களும் வெளி நாட்டில் கோடிக் கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு ஹிந்து மதத்தை இழிவு படுத்தி, வாங்கிய பணத்திற்கு சரிக் கட்டும் காட்சிகளை எடுப்பது நியாயமா? வசனங்களைப் பேசுவது சரிதானா?

ஹிந்து மதத்தில் ஆசாரியர்கள் முன் வருவதில்லை, ஓரிரண்டு அப்பாவிகள் இதை எடுத்துச் சொன்னால் அவர்களுக்கு வரும் விபத்துக்கள் ஏராளம்!

மோடிஜி அரசும் முன் வருவதில்லை, பாதுகாப்பிற்கு, என்பது இன்னும் ஒரு துக்ககரமான விஷயம்.

தமிழ் படங்களில் ஏராளமான படங்களில் சண்டைக் காட்சிகள் கோவிலுக்கு முன்னால் படம் பிடிக்கப்படுவதை இணைய தள் ஆர்வலர்கள் தங்கள் ப்ளாக்குகளில் சுட்டிக் காட்டி வருகின்றனர். வரவேற்கத்தக்க ஒரு அம்சம் இது.

அவர்கள் கேட்கும் கேள்வி ; “எந்த ஒரு இந்தியத் தயாரிப்பாளராவது இதே சண்டைக் காட்சிகளை ஒரு மசூதியின் முன்னாலோ அல்லது ஒரு சர்ச்சின் முன்னாலோ இதே போல எடுப்பாரா, எடுக்கத் தயாரா என்பது தான்!

ஹிந்துப் பெயர்களைக் கொண்டுள்ள தயாரிப்பாளர்கள் இப்படி எடுப்பது அவர்கள் பெரிய கோழைகள் என்பதைக் காட்டுகிறது என்கிறார் விலாஸ்னி என்னும் ஒரு ஆர்வலர்.

அன்பர்கள் ஒருங்கிணைந்து இப்படிப்பட்ட படங்கள், சீரியல்கள் வந்தவுடன் தகுந்த நடவடிக்கை எடுக்க ஒரு பெரும் நிறுவனம் வேண்டும்.

ஹிந்துக்களை இழிவுபடுத்தியும் ஹிந்துக் கோவில்களை இழிவு படுத்தியும் இப்படி காட்சி, வசனம் அமைப்போர், பத்திரிகை சுதந்திரம், மனித உரிமைகள், சமத்துவம் என்ற பெயரால் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முன் வந்தால் அதை சட்ட ரீதியாகவும், சமூக ரீதியாகவும் எதிர்த்து அற நெறிகளைக் காப்பாற்ற ஒரு நிறுவனம் வேண்டும் என்பது தான் இன்றைய உண்மை.

இதில் அரசியல்வாதிகளும் போலி முதலைக் கண்ணீர் விடுபவர்களும் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மிக முக்கியம்!

சமீபத்தில் வந்த தமிழ் சீரியலில் ஒரு கற்பழிப்பு காட்சி மிக மோசமாக சித்தரிக்கப்பட்டதை நீதி மன்றமே கண்டித்து தயாரிப்பாளரை மன்னிப்புக் கேட்கச் சொன்னது ஒன்று தான் நமது அரசியல் அமைப்பின் மீதும் ஜனநாயகத்தின் மீதும் நீதி மன்றத்தின் மீதும் நமக்கு இருக்கும் கடைசி நம்பிக்கை சரி தான் என்பதை உறுதிப்படுத்துகிறது!

இந்தக் கட்டுரையில் உள்ளது ஓரிரு காட்சிகள் தான்! இன்னும் சுட்டிக் காட்டுவது என்று ஆரம்பித்தால்……?!

அன்பர்கள் தாங்கள் பார்த்த படங்களிலும் சீரியல்களிலும் வரும் ஹிந்து விரோத காட்சிகளைச் சுட்டிக் காட்டுவார்களா?

***

tags– மூக்குத்தி அம்மன், ‘எ சிடி ஆஃப் ட்ரீம்ஸ்’

***