WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,471
Date uploaded in London – – 21 DECEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அதர்வண வேதத்தில் ஏராளமான மாயா ஜால , இந்திர ஜால விஷயங்கள் உள்ளன. ஒரு மந்திரம் மனிதனை எவருக்கும் தெரியாமல் இருக்க வைக்கும் வித்தை பற்றிப் பேசுகிறது இன்னொரு மந்திரமோ இந்த மூலிகை கையில் இருந்தால் வருங்கலத்தை உறைக்க முடியும் என்கிறது. ஆனால் என்ன ஏமாற்றம். மூ லிகையின் பெயரைச் சொல்லாமல் அது, இது என்று மட்டுமே ரிஷி பாடுகிறார். இருந்தபோதிலும் இதில் பல சுவையான விஷயங்கள் தெரிய வருகின்றன.
இந்த மூலிகைப் பாடல் அதர்வண வேதத்தின் நாலாவது காண்டத்தில் 20ஆவது பாடலாக (சூக்தம் 122) அமைந்துள்ளது. தலைப்பு ஓஷதி
முதல் மந்திரமே விடுகதை போல அமைந்துள்ளது.
“அவன் இங்கு பார்க்கிறான்; அவன் பின்னால் பார்க்கிறான்;அவன் தூரம் பார்க்கிறான்;அவன் பார்க்கிறான்;வானத்தை பூமியை வானத்துக்கு அப்பாலும் பார்க்கிறான் ஓ, தேவியே அவன் பார்க்கிறான்”.
வெளிநாட்டார் விளக்கம்
இந்தப் பாடலுக்கு ரால்ப் டி எச் கிரிப்பித் RALPH T H GRIFFITH சில விளக்கக் குறிப்புகளை அளித்துள்ளார்.
முதல் மந்திரத்தில் வரும் “அவன்” என்பது ‘சதாபுஷ்பம்’ என்னும் மூலிகை என்று பழைய வியாக்கியனக்காரர்களில் ஒருவரான தாரிலர் (DAARILA) சொல்கிறார்; ஆனால் அது என்ன மூலிகை என்று எவருக்கும் தெரியாது. ஆயிரக் கணக்கான இடங்களில் குறிப்பிடப்படும் சோம ரஸ மூலிகையே என்ன என்று எவருக்கும் தெரியாத பொழுது ‘சதா புஷ்பம்’ பற்றித் தெரியாததில் வியப்பில்லை!
ஆங்கிலத்தில் புகழ்பெற்ற (Milton’s Paradise Lost) சொர்க்க இழப்பு கவிதையை எழுதியவர் மில்டன் என்ற புலவர் ஆவார். இங்கிலாந்தில் ஐ பிரைட் EYE BRIGHT / கண் ஒளி என்ற ஒரு மூலிகை இருப்பதாகவும் அதை வேறொன்றுடன் கலந்து மைக்கேல் (Arhangel Michael) என்ற தேவதை ஆதாமின் கண்களில் விட்டதாகவும் இதனால் ADAM ஆதாம் எதிர்காலத்தைப் பார்க்கும் வல்லமை பெற்றதாகவும் விளக்கம் சொல்கிறார்கள்.
வள்ளுவர் பல இடங்களில் சொல்லும் ‘அனிச்சம்’ என்னும் மலரையோ, மயிர் நீப்பின் வாழாக் கவரி மானையோ இதுவரை நாம் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதையும் நினைவிற்கொள்ள வேண்டும் !
ஆனால் இது உண்மையா ? கப்சாவா என்றால் உண்மை என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இந்துக்களிடம் பவிஷ்ய புராணம் உளது. அதில் எதிர் காலம் பற்றி உளது. கலியுகத்தில் என்ன என்ன நடக்கும் என்பதை பல புராணங்களும் மஹாபாரதமும் பேசுகின்றன. அது பற்றி இங்கு முன்னரே எழுதியுள்ளேன்.
மேலும் பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா , அர்ஜுனனுக்கு எதிர்காலத்தைக் காட்டுவதையும் பார்க்கிறோம். அர்ஜுனன் , தனது எதிரிகளை வீழ்த்துவதற்கு முன்னரே ‘காலம் TIME என்னும் சக்தி அவர்களைக் கப்ளிகரம் செய்து Blackhole பிளாக் ஹோல் என்னும் கருந் துளைக்குள் இழுப்பதைக் கண்ணன் காட்டுகிறான். அது மட்டுமல்ல. சுந்தர மூர்த்தி சுவாமிகள், சம்பந்தர் போன்றோர் காலத்திற்குள் பின்னோக்கிச் (Time Machine) சென்று மாண்ட இருவரை மீட்டு வந்த கதையும் பெரிய புராணத்தில் விரிவாகப் பேசப்படுகிறது அவர்கள் இருவரும் திரும்பி வந்த காலத்தில் என்ன வயது ஆகி இருக்குமோ அந்த வயதில் திரும்பி வந்ததையும் சேக்கிழார் பெருமான் செப்புகிறார்.
இதிலிருந்து ஒன்று தெளிவாகிறது; நாம் அறியாத இன்னொரு பிரபஞ்சம் (Parallel Universe) இருக்கிறது. அங்கு எல்லாம் முன்னரே நடந்த கதையாக பதிவாகிறது. வெகு அபூர்வமாக ஒரு சிலர் விஷயத்தில் மட்டும் ஞானிகள் தலையிட்டு காலச் சக்கரத்தைத் திருப்பி விடுகிறார்கள். ஆனால் எல்லார் விஷயத்திலும் இதைச் செய்வதில்லை!
மந்திர மூலிகை விஷயங்களை வெளிப்படையாக சொல்லாமல் ‘அவன்’ , ‘அது’ என்று பேசவும் காரணம் உளது. ஒரு கெட்டவன் போதும்!உலகையே அழிப்பதற்கு ! அவர்கள் கைகளில் இத்தகைய மூலிகை கிடைத்தால் ஆபத்து. மாயா ஜால சக்தி பெறும் பல சாது சந்யாசிகள் அவர்களுக்குக் கிடைத்த அபூர்வ சக்திகளை துஷ் பிரயோகம் செய்து சிறையில் அவதிப்படும் செய்திகளையும் நாம் பத்திரிக்கையில் படிக்கிறோம் இதனால்தான் அவர்கள் வெளிப்படையாக சில ரகசியங்களை சொல்லுவதில்லை.
இதே துதியில் மேலும் சில அபூர்வ விஷயங்கள் வருகின்றன.
மூன்று பூமிகள், மூன்று வானங்களைப் பார்க்கும் சக்தி பற்றி Mantra No.2 மந்திரம் இரண்டு பேசுகிறது
இதற்கெல்லாம் கிரிப்பித் Griffith போன்றோரால் சரியான விளக்கம் சொல்ல முடியவில்லை.
கருடன் பற்றி வரும் மந்திரத்தை சூரியன் என்று சொல்கின்றனர். கருடன் போல சூரியனும் பார்க்க முடியும் என்று விளக்குகின்றனர். அது தவறாக இருக்கலாம். ஏனெனில் இன்னொரு மந்திரத்தில் கருடனுக்கு மூலிகையைக் கண்டு பிடிக்கும் அபூர்வ சக்தி உண்டு என்று சொல்லுகின்னர் . ரிக் வேதத்தில் 20, 30 இடங்களில் கருடன் அல்லது பருந் து அபூர்வ (Soma) மூலிகையைக் கொண்டுவந்து தருவதாக முனிவர்கள் பாடிவைத்துள்ளனர்.
நாலாவது மந்திரத்தில் 1000 கண்ணுள்ள இறைவனே என் வலது கையில் அந்த மூலிகையை வைத்தால் நான் ஆரியர் , சூத்திரர் அனைவரையும் காணமுடியும் என்கிறார் ரிஷி. 1000 கண் கடவுள் என்பது பிற்காலத்தில் இந்திரனை மட்டும் குறித்தாலும் அதற்கு முன், எல்லா வேத கால கடவுளருக்கும் அந்த அடை மொழி வருகிறது. வலதின் சிறப்பை தமிழர்கள் நன்கு அறிவர். வலது புறம் விழும் இரையை மட்டுமே புலி சாப்பிடும் என்று சங்க இலக்கிய புலவர்கள் பாடுகின்றனர். “மண மகளே! மண மகளே!! உன் வலது காலை எடுத்து வைத்து (வீட்டுக்குள்) வா” என்று பாடுகிறோம்.; ஆரியர் முதல் சூத்திரர் வரை என்பது மனிதர்கள் எல்லோரையும் என்ற பொருளில் கையாளப்படுகிறது. சம் பந்தர் “வாழ்க அந்தணர் , வானவர் ஆனினம்” என்றால் பார்ப்பனர், பசு மட்டும் வாழ்கவே என்று பொருள் அல்ல; அவர்கள் முதலாகவுள்ள மனிதர்கள், பிராணிகள் எல்லாரும் வாழ்க என்றே பொருள்.
கடைசி 4 மந்திரங்களில் பேய் பிசாசுகளை விரட்டும் சக்தியும் இந்த மூலிகைக்கு உண்டு என்று ரிஷி பாடுகிறார் . இடையே இரண்டு உவமைகளும் வருகின்றன . “களைப்படைந்த மண மகள் படுக்கையை நாடுவது போல”, என்றும் “நான்கு கண் நாய்” பற்றியும் பாடுகிறார். நான்கு கண் நாய் என்பது யமன் கொண்டுவரும் இரண்டு நாய்களின்(2+2=4) கண்கள் என்று ரிக் வேதம் பாடுகிறது.
ஆக மொத்தத்தில் நிறைய விஷயங்களை இக்கவிதை காட்டுகிறது.
இதை கற்பனை, கப்ஸா என்று யாராவது கருதினால் விஞ்ஞான புனைக் கதைகள் எழுதுவதில் வேத கால முனிவர்களே முன்னோடிகள் என்று ஒப்புக்கொள்ளவேண்டும். இன்று வெளிநாடுகளில் இப்படிப்பட்ட ஆயிரக்கணக்கான புஸ்தகங்கள் மில்லியன் கணக்கில் விற்பனையாகின்றன.
–சுபம் —
tags- வருங்காலம், எதிர்காலம், மூலிகை, அதர்வண வேதம் , காட்டும் , மில்டன்
You must be logged in to post a comment.