மூளைக்கு வேலை : 5 நிமிடத்தில் விடை தர முடியுமா?!(Post No.9205)

WRITTEN  BY KATTUKKUTY

Post No. 9205

Date uploaded in London – – 30 January 2021          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மூளைக்கு வேலை : 5 நிமிடத்தில் விடை தர முடியுமா?!

Kattukutty

கீழே ஐந்து குட்டிக் கணக்குகள் உள்ளன.சுலபமானவைதான்.

என்றாலும் தவறான விடையே பலருக்கு தோன்றும்.சிறிது யோசித்தால் பளிச்சிடும் விடை. 5 நிமிடங்களில் விடை தர முடியுமா, பாருங்கள்!

லாபமா , நஷ்டமா, எவ்வளவு ???

ஒரு மெக்கானிக் ரூபாய் 300/-க்கு ஒரு மெஷின் வாங்கி 400

ரூபாய்க்கு விற்றான். அடுத்த நாளே அதே மிஷினை 400 ரூபாய்க்கு

வாங்கி 500 ரூபாய்க்கு விற்றான்.அவனுக்கு லாபமா? அல்லது நஷ்டமா? எவ்வளவு?

எத்தனை???

ஒரு சைக்கிள் சக்கரத்தில் 16 “ஸ்போக்” கம்பிகள் உள்ளன. இந்த

கம்பிகளுக்கிடையே எத்தனை இடை வெளிகள் உள்ளன?

15 ஆ, 16 ஆ, அல்லது 17 ஆ. ???

ஓடியது எவ்வளவு ???

ஒரு ஸ்கூட்டரில் 3000 மைல்கள் பயணம் செய்தார் ஒருவர். அதன்

(ஸ்பேர் டயர் உள்பட) 3 டயரகளையும் சரி சமமான அளவு தூரத்திற்கு உபயோகப்படுத்தியிருந்தால் ஒவ்வொரு டயரும்

எத்தனை மைல்களுக்கு ஓடியிருக்கும்?

எத்தனை பேர் தேவை ???

மூன்று தையற்காரர்கள் மூன்று நாட்களில் மூன்று “கோட்” தைப்பார்கள் என்றால், 30 நாட்களில் 30 கோட் தைக்க எத்தனை

பேர் தேவைப் படுவார்கள்?

எத்தனை “போர்???

ஓரிடத்தில் 3 வைக்கோல் போர் இருக்கிறது.இன்னொரு இடத்தில்

ஒன்றரை வைக்கோல் போர் இருந்ததையும, மற்றோரு இடத்தில்

இரண்டரை வைக்கோல் போர் இருந்ததையும் எல்லாவற்றையும்

ஒன்றாக சேர்த்தால் எத்தனை வைக்கோல் போர் ஆகும்?

விடைகள்

1.லாபம் 200 ரூபாய். முதல்தடவை விற்ற போது நூறும், இரண்டாவது

தடவை விற்ற போது நூறும் ஆக மொத்தம் லாபம் இருநாறு ரூபாய்

2.16 தான்! நன்றாக யோசித்து பாருங்கள்

3.ஒரு சமயத்தில இரண்டு டயர்கள் உபயோகத்தில் இருக்கும். வண்டி

3000 மைல் சென்றதென்றால், ஒவ்வொரு டயரும் 2000 மைல்

போயிருக்க வேண்டும். ஆக மொத்தம் 6000 மைலகள். இதை மூன்ற

டயர்களுக்கும் பிரித்தால் ஒவ்வொரு டயரும் ஓடிய தூரம் 2000 மைலகள்.

4.அதே 3 தையல்காரர்கள் போதுமே!!!

5.எல்லாவற்றையும் சேர்த்தால் வைக்கோல் போர் ஒன்று தானே!!!

tags -மூளைக்கு வேலை