100 வழிகளில் மூளை ஆற்றலைக் கூட்டலாம் – 2 (Post No.10,649)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,649
Date uploaded in London – – 11 FEBRUARY 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

‘ஹெல்த்கேர்’ சென்ற இதழ் கட்டுரையின் தொடர்ச்சி..
100 வழிகளில் மூளை ஆற்றலைக் கூட்டலாம் – 2
ச.நாகராஜன்
(26 முதல் 55 முடிய)

  1. புரிந்து கொள்ளுங்கள் :
    மற்றவர்களின் உணர்ச்சிகளை நன்கு புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்; புரிந்து கொள்ளுங்கள். இது ஒரு தனித் திறனாகும்.
    இந்தத் திறனை உங்களை மூளை எளிதாகக் கற்க முடியும். இதனால் மற்றவர்களைப் புரிந்து கொள்ளும் ஆற்றலைப் பெற்று ஒரு தனித் திறனைப் பெற்றவர்கள் ஆவீர்கள்.
  2. குழுவாகச் சிந்தியுங்கள். ஒரு குழுவாக அமைந்து ஒரு பொருளைப் பற்றிச் சிந்திக்கும் போது பல்வேறு யோசனைகளும், கருத்துக்களும் உருவாகும். இது சிந்தனையில் ஊக்கப்படுத்தும் ஒரு புதிய மூளை ஆற்றலைக் கூட்டுவதற்கான, படைப்பாற்றலை அதிகப்படுத்துவதற்கான ஒரு வழியாகும்.
  3. உங்கள் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் கட்டுரை வடிவத்தில் எழுதுங்கள்.
    எழுதுவது என்பது நினவாற்றலை அதிகப்படுத்தும். அத்துடன் எண்ணங்களை சரியான முறையில் வெளிப்படுத்த வழி வகுக்கும். ஒரு பொருள் பற்றி அகலமாகவும் ஆழமாகவும் சிந்திக்க,
    எழுதுவது ஒரு சிறந்த வழியாகும். டயரி, அல்லது இணைய தள ப்ளாக்குகள் அல்லது பத்திரிகைகளுக்கு எழுதுவது என்பது மூளை ஆற்றலைக் கூட்டும். கதைகள் எழுத ஆரம்பித்தால் ஒரு புதிய மட்டத்திற்கு உயரலாம்.
  4. ஹிப்நாடிக் யோசனை என்பது பொய் அல்ல; நிஜம் தான். தனக்குத் தானே ஆழ்நிலை ஹிப்னாடிஸத்தைக் கொண்டால், அது மன அழுத்தத்தை நீக்கும். வலியைத் தாங்கும் தன்மையை அதிகரிக்கும். சிந்தனையைத் தெளிவாக்கும். இந்தச் சிறந்த வழியை மேற்கொண்டு பார்த்தால் நல்ல பலன் தெரியும்.
  5. 14வது யோசனையாக தொலைக்காட்சியைப் பாருங்கள் என்று தரப்பட்டுள்ளது. உண்மை தான், அதைப் பார்ப்பதில் தவறில்லை. ஆனால் தேவைக்கு அதிகமாக அதற்கு விடாப்பிடி ‘அடிக்ட்’ ஆக ஆகி தொடர்ந்து பார்க்க ஆரம்பித்தால் ஆபத்து தான். மூளை வேலை செய்வது மிக மெதுவாகும். மூளைத் திறனைக் குறைக்கும். ஆகவே ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்திற்கு மேலாக நிச்சயமாகத் தொலைக்காட்சியைப் பார்க்காதீர்கள்.
  6. 22வது யோசனையாக ஓவியம் வரையுங்கள் என்று சொல்லப்பட்டிருகிறது. ஓவியம் என்பதை வெறும் பென்சிலால் கூட வரையலாம். ஆனால் நல்ல வண்ணங்களைத் தேர்ந்தெடுத்து தூரிகை வைத்து வரைவது சிறப்பாகும். இது படைப்பாற்றலை ஊக்குவிக்கும். வலது பக்க மூளையை முழு ஆற்றலுடன் பயன்படுத்த வண்ண ஓவியம் வரைவதே வழி.
  7. அழுவதில் தவறில்லை. சோக நிகழ்ச்சி ஏற்பட்டால் என்ன செய்வது? தவிர்க்க முடியாத சோகத்தில் உணர்ச்சிகளை வடிகாலாக வெளிப்படுத்தி அழுது விட்டால் மனம் ஆறுதல் அடையும். மூளையில் இரத்த ஓட்டம் ஆரோக்கியத்துடன் பாயும். உண்மையில் பல நிலைகளில், அழுவது மூளையை உள்புறமாக சுத்தப் படுத்துவதாகும். இது மூளை ஆற்றலைக் கூட்டும்.
  8. புதிர்களை விடுவியுங்கள்.
    புதிர்களை விடுவிப்பது மூளை இயக்கத்தை ஊக்குவிக்கும் ஒன்றாகும். சிந்தனைக்குச் சவாலாக வேடிக்கையாக அமையும் புதிர்கள் மூளையின் இடது பக்க இயக்கத்தை ஊக்குவிக்கிறது. வலது பக்க காட்சிப்படுத்தும் மையத்திற்கு இது தகவலைப் பரிமாறுகிறது.
  9. நியூரோ ஃபீட்பேக் (neurofeedback) என்பது உங்கள் மூளை அலை அமைப்பை கட்டுப்படுத்துகிறது. இது மூளை அமைப்பை கட்டுமானம் செய்வதோடு மூளை நெட் வொர்க்கை நெகிழ்வடையச் செய்கிறது. இந்தக் கலையைக் கற்பதற்குச் சற்று செலவாகும் என்பது ஒரு உண்மை!
  10. நான் என்னும் அகங்காரத்தை விட்டால் அது அந்த அகங்காரத்துடன் சேர்ந்து வரும் உணர்ச்சிகளை உதறித் தள்ளுவதாகும். உடன் விளைவாக ஏற்படுவது பகுத்தறிவுடன் ஆராயும் முனைப்பான அறிவு நமக்குள்ளே புகுவது தான்.
    பகுத்தறிவோ தன்னை உணர வழி வகுக்கும். அதாவது எதிர்காலம் பற்றிய சரியான கணிப்பைக் கொண்டு மூளையை ஆரோக்கியத்துடன் வைத்து நல்ல முடிவுகளை எடுக்க வழி வகுக்கும்.
    தியானம், சுய ஹிப்னாடிஸம், உள்ளார்ந்து விசாரம் செய்வது இவை எல்லாமே சுய விழிப்புணர்வூட்டுவதற்கான வழிகளாகும்.
  11. கல்லூரியிலோ பள்ளியிலோ படிப்பவர் என்றால் அநதப் படிப்பு மூளை ஆற்றலைக் கூட்ட வல்ல ஒரு வழியாகும். பள்ளி, கல்லூரியில் படிக்கவில்லை என்றாலும் எப்போதுமே எதையாவது கற்றுக் கொண்டே இருக்கலாமே!
  12. சதுரங்க விளையாட்டு – செஸ் – மனதின் ஆற்றலை – மூளை ஆற்றலைக் கூட்டும் ஒரு விளையாட்டூ ஆகும். பல விதத் திறன்களை இதன் மூலம் பெறலாம்.
  13. சிற்பக் கலை: எதையேனும் சிற்ப அடிப்படையில் செய்வது புதிய திறன்களை வண்ணத்திலும் வடிவத்திலும் ஏற்படுத்தும். இது, படைப்பாற்றலை ஊக்குவித்து இடம், அமைப்பு, பகுத்துப் பார்த்து முடிவு எடுப்பது ஆகியவற்றில் முன்னேற்றத்தை நல்கும்.
  14. சைக்காலஜி டு டே என்ற பிரசித்தி பெற்ற உளவியல் இதழ் ஆராய்ச்சிக் கட்டுரை சுவையான தகவல் ஒன்றைத் தருகிறது. தனது மரபு பற்றி அறிவோர் மூளைத் திறன் பற்றிய சோதனைகளில் முதல் இடத்தைப் பெறுகின்றனர். இதன் காரணம் சரியாகத் தெரியவில்லை என்றாலும் முன்னோர் மரபு பற்றி அறிவோர் தற்காலத்திய நடப்பை நன்கு அறிபவர்கள் ஆகின்றனர்.
  15. நல்ல ஒரு விவாதம், பேச்சு மூளை ஆற்றலைக் கூட்டுகிறது என மிச்சிகன் பல்கலைக்கழக பேராசிரியர்கள் தங்கள் அனுபவத்தின் அடிப்படையில் கூறுகின்றனர்.
  16. எதையும் எப்போதும் ஒரே மாதிரியாகச் செய்து கொண்டே இருக்காமல் சில செயல்களை தன்னிச்சையாக அப்போதே வேறு மாதிரியாகச் செய்து பாருங்கள்.
  17. நல்ல உடல் பயிற்சி மூளைக்கு நல்ல ரத்த ஓட்டத்தைத் தருகிறது. அதற்கான ஆக்ஸிஜன் அப்போது கிடைக்கிறது. ஆகவே அதிக சக்தி கிடைக்கிறது. சிந்திக்கும் ஆற்றல் கூடுகிறது. அப்போது மூளைக்குப் பெரிதும் தேவையான Human Growth Hormone சுரக்கிறது.
  18. உங்கள் இடது கையைப் பயன்படுத்திப் பாருங்கள். (இடது கைப் பழக்கம் உள்ளவர்கள் வலது கையைப் பயன்படுத்த வேண்டும்), இஸ்ரேலில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று, இது சிந்தனையை வலுவாக்கும் என்று கண்டுபிடித்துள்ளது.
  19. நல்ல தூக்கத்தை அனுபவித்துத் தூங்குவது மூளை ஆற்றலைக் கூட்டிச் சரியாக சிந்திக்க வைக்கிறது.
  20. இதயம் சம்பந்தமான நோய் இருக்கிறதா, அதிக அளவில் கொலஸ்ட்ரால், உயர் இரத்த அழுத்தம் இருக்கிறதா என்பதைச் சோதனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள்.
  21. டயபடீஸ் -நீரிழிவு நோய் – இருக்கிறதா என்று சோதித்து அறியுங்கள்.
  22. சேவை நிறுவனங்களில் தன் ஆர்வலராகச் சேருங்கள். இது மன ஆற்றலைக் கூட்டுகிறது; மன அழுத்தத்தைக் குறைக்கிறது.
    45 Strength Training மூளை ஆற்றலைக் கூட்டும். எடைகளைப் படிப்படியாக அதிகரித்துத் தூக்குவது BDNF – Brain derived Neurotrophic Factor -ஐக் கூட்டுகிறது. இது நரம்பு செல்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
    46.நடனப் பயிற்சியும் நல்லது தான். அது மனதிற்கான சவால்களைத் தருகிறது. திட்டமிடல், மற்றவர்களுடன் இணைந்து இருத்தல் உள்ளிட்ட பல ஆற்றல்களை அது வளர்க்கிறது.
  23. கோல்ஃப் விளையாடுவது மூளையின் அமைப்பில் உணர்ச்சிகளை அறிந்து கட்டுப்படுத்தும் பகுதியைச் செம்மை ஆக்குகிறது.
  24. யோகா பழகுங்கள். ஒரே நிலையில் நிலையாக மனதை வைத்திருப்பது, கவனக் குவிப்பு, மூளை ஆற்றல் திறன் கூடுதல் இவை எல்லாம் யோகாவினால் அடையும் பலன்கள். மூளைத் திறன் குறையாமல் இருக்க யோகா ஒரு வழியாகும்.
  25. பகலில் ‘பவர் நேப்’ (Power Nap) எனப்படும் சக்தி தரும் தூக்கத்தைக் கொள்ளுங்கள் ஒரு மணி நேரம் இப்படி உறங்குவோர் தெளிவான சிந்தனை ஆற்றலையும் கூடவே நினைவாற்றலையும் கூட்டிக் கொள்கின்றனர்.
  26. புல்வெளியில் புல் செதுக்குவது மன அழுத்தத்தைப் போக்கும் ஒரு இரசாயனத்தை வெளிப்படுத்துவதோடு நினைவாற்றலையும் கூட்டுவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
  27. பல் இடுக்குகளைச் சுத்தம் செய்தல் : பல் இடுக்குகளில் சேரும் பலவித உணவுத் துகள்களனது, மூளை நாளங்கள் ஊட்டச் சத்தைப் பெறுவதைத் தடுக்கிறது. ஆகவே அவற்றைச் சுத்தமாக வைத்திருந்தால் மூளைத் திறனும் கூடும்.
  28. தலையைத் தொங்க விட்டுப் படுதிருப்பது நினைவாற்றலைக் கூட்டும். ஏனெனில் இரத்தமானது மேம்பட்ட முறையில் மூளைக்குச் செல்கிறது.
  29. Anagram என்பது ஆங்கிலத்தில் ஒரு வித விளையாட்டு. அதாவது ஒரு வார்த்தையில் உள்ள எழுத்துக்களை மாற்றி அமைத்து இன்னொரு புதிய வார்த்தையை உருவாக்குவதே அனக்ராம். எடுத்துக்காட்டாக ஒரு வார்த்தை இதோ: A GENTLEMAN என்பதை மாற்றினால் வருவது ELEGANT MAN!
    இதை விடுவிப்போர் முன்னர் சொன்னது போல உடலில் தலை பாகத்தைச் சற்றுக் கீழே தொங்க விட்ட பின் புதிரை விடுவித்தால் மற்றவரை விட சீக்கிரமாக வெற்றியைப் பெறுகின்றனர் என்கிறது ஒரு ஆய்வு.
  30. ஆழ்ந்து சுவாசித்தல் : ஆழ்ந்து சுவாசிக்கும் போது ஆக்ஜிஜன் அளவுகள் அதிகமாகி மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டமும் அதிகரிக்கிறது. 10 முதல் 15 நிமிடம் வரை தினமும் ஆழ்ந்து சுவாசித்தால் போதும். அது ஒரு பெரிய நல்ல மாற்றத்தை உங்கள் வாழ்வில் ஏற்படுத்தும் – ஏனெனில் அப்போது மூளை ஆற்றலின் திறன் அபரிமிதமாகக் கூடும் என்பதால்!
  31. நடைப் பயிற்சி : உடல் பயிற்சி மிக நல்ல விளைவை உடலில் ஏற்படுத்தும் என்பது உறுதி. நடைப் பயிற்சி மூளை ஆற்றலை வெகுவாகக் கூட்டுகிறது. நடைப்பயிற்சி மனதை ஓய்வான நிலையில் நிலை நிறுத்துகிறது. மூளை சிறப்பாகச் சிந்திக்க ஆரம்பிக்கிறது. அது மூளையை அங்கும் இங்கும் சற்று அலைபாய விடுவதோடு பிரச்சினை தரும் சிந்தனைகளை அப்புறப்படுத்துகிறது.
    *** தொடரும்

tags– 100 வழிகள் ,  மூளை ஆற்றல்

மூன்றே நிமிடங்களில் மூளை ஆற்றலைக் கூட்டலாம்!

super brain yoga

Article No. 2044

Written by S NAGARAJAN

Swami_48@yahoo.com

Date : 5  August  2015

Time uploaded in London : – 8-52 am

 

 

My brother S NAGARAJAN has been contributing to Gana Alayam, Bhagya, E-zine and several other magazines and blogs for years. Following is his recent article (Pictures are added by me from various sources;thanks): London swaminathan

 

கடந்த நான்கரை வருடங்களாக டைரக்டர் கே.பாக்யராஜ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளி வரும் பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடர் வெளியாகி வருகிறது.31-7-2015 இதழில் வெளிவந்துள்ள கட்டுரை இது.

அறிவியல் துளிகள் 232

SuperBrain-Yoga-Pranic-Healing

 

மூன்றே நிமிடங்களில் மூளை ஆற்றலைக் கூட்டலாம்!

By .நாகராஜன்

மூளையைப் பயன்படுத்துவதால் மூளை ஆற்றல் கூடுகிறது. உடல் பயிற்சி செய்வதால் உடல் வலிமை கூடுவதைப் போல” – .என்.வில்ஸன்

 

   இன்டர்நெட் மூலமாக சமீபத்தில் பரபரப்பாக அனைவரும் படிக்கும் ஒரு விஷயம் மூன்றே நிமிடங்களில் மூளை ஆற்றலைக் கூட்ட முடியும் என்பது தான்!

சக்தி வாய்ந்த ஒரு சிறு பயிற்சி மூலம் இந்த அரிய மூளை ஆற்றலைப் பெறலாம் எனத் தெரிவிக்கப்படுவதால் அனைவரின் கவனமும் இதன் மீது திரும்பியுள்ளது.

முதன்முதலக அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து சிபிஎஸ் செய்தி அறிக்கை ஒன்று இதைக் கூறியதோடு இந்தப் பயிற்சி இப்படி ஒரு ஆற்றலைத் தருவது உண்மை தான் என யேல் நகரைச் சேர்ந்த மூளை இயல் நிபுணர் ஒருவர் கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகிய அனைவரும் கூறியுள்ளதையும் மேற்கோளாக எடுத்துக் காட்டியது.

 

ஆடிஸம் (autism) எனப்படும் மனவளம் குன்றிய நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களும், மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளும் இதனால் பெரும் பயன் அடைய முடியும் என்பது கூடுதலான போனஸ் தகவல்! அல்ஜெமீர் வியாதி உள்ள வயதானோருக்கும் இது பயன் அளிக்க வல்லது!

 

அத்தோடு மட்டுமல்ல, ‘டல்லாக இருக்கும் மூளையை இது துடிப்புடன் செயல் பட வைக்கும். மந்த நிலையைப் போக்கும். உணர்ச்சியில் மாறுபாடு, மூட் சரியில்லை என்பன போன்ற குறைபாடுகளையும் இந்தப் பயிற்சி போக்குகிறது! நினைவாற்றலைக் கூட்டுவதுடன், ஸ்மார்ட்டாக ஒருவரை இது ஆக்குகிறது. எந்த மனநிலை உள்ளவருக்கும் கூட இது பொருந்துகிறது!

 

அது சரி, அந்தப் பயிற்சி தான் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள ஆசை மேலிடுகிறது, இல்லையா?

 

பாதங்களை நேராக இருக்கும்படி வைத்து கால்களை தோள்களின் அகலத்திற்கு விரித்து வைத்துக் கொள்ள வேண்டும். வலது காதை இடது கை கட்டைவிரல் மற்றும் சுட்டு விரலால் பிடித்துக் கொள்ள வேண்டும். இதே போல இடது காதை வலது கை கட்டைவிரல் மற்றும் சுட்டுவிரலால் பிடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் குந்தி அமர்ந்து மூச்சை உள்ளிழுக்க வேண்டும். பிறகு மெதுவாக எழுந்திருக்க வேண்டும். எழுந்திருக்கும் போது மூச்சை வெளியில் விட வேண்டும். ஆக இப்படி அமரும் போதும் எழுந்திருக்கும் போதும் மூச்சுப் பயிற்சியைச் சீராகச் செய்தல் வேண்டும். மூன்று நிமிடங்கள் தொடர்ந்து இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்தல் வேண்டும். ஐந்து நிமிடம் வரை தொடரலாம் என்றாலும், மூன்று நிமிடப் பயிற்சியே நிச்சயமாகப் போதும். எந்த வயதினரும் இதை செய்யலாம்!

 eric

லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த டாக்டர் எரிக் ராபின்ஸ் (Eric Robins), இந்தப் பயிற்சி மூலம் மூளை செல்களும் நியூரான்களும் ஆற்றல் உட்டப்பட்டவையாகின்றன என்கிறார். அவர் இதை தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு பிரிஸ்கிரிப்ஷனாக எழுதிக் கொடுத்து வருகிறார். அதனால் நோயாளிகள் மிக நல்ல பலனை அடைகின்றனர் என்கிறார். அவர் கூறும் ஒரு எடுத்துக்காட்டு இது: ஒரு பையன் பள்ளியில் பாடங்களைச் சரியாகவே கற்க முடியவில்லை. இந்தப் பயிற்சியைச் செய்ய ஆரம்பித்தவுடன் அவன்கிரேடுடன் முதல் மாணவனாக ஆனான்.

 

யேல் நரம்புஉயிரியல் நிபுணரான டாக்டர் யூஜீனியஸ் ஆங் (Yale neurobiologist Dr Eugenius Ang), காது மடல்களைப் பிடிக்கும் படும் போது மூளையின் நரம்புப் பாதைகளை தூண்டிவிடும் அகுபங்சர் புள்ளிகளை அழுத்துகிறோம் என்கிறார். மூளையின் இரு பாதிகளும் காது மடல்களின் எதிர்புறங்களில் உள்ளன. எதிரெதிர் கைகளைப் பயன்படுத்தி காது மடல்களைப் பிடிப்பதால் நுண்ணிய ஆற்றலைத் தூண்டும் மனித உடலின் ஒரு சிறப்பான அமைப்பைப் பயன்படுத்தியவர்களாக ஆகிறோம்.

 

இந்தப்  பயிற்சியைச் செய்து முடித்த பின்னர் எடுக்கப்பட்ட   ஜி (எலக்ட்ரோஎன்செபலோக்ராஃபிமுடிவுகளை ஆங் காண்பித்து விரிவான விளக்கம் ஒன்றைத் தந்தார். அதன்படி, இந்தப் பயிற்சி வலது மற்றும் இடது பக்க மூளைப் பகுதிகள் இரண்டையும் ஒருங்கியையச் செய்கிறது. சாதாரணமாக, ஜியின் மூலம் எடுக்கப்படும் அளவுகள் உச்சந்தலையில் எலக்ட்ரோடுகள் மூலமாக  நியூரான் இயக்கங்கள் (neuron firings) மூளையில் ஏற்படுவதைக் காட்டி விடும். அத்தோடு மூளையின் அலை சமன்பாட்டையும்  சீரற்ற தன்மையையும் (wave normalcies and abnormalities) கூட அது காட்டி விடும்.

 

டாக்டர் ஆங், “ விஞ்ஞான பாஷையில் கூறுவதெனில், மூளையானது ஒவ்வொரு கட்டுப்பாடு பகுதியையும் அதைக் கட்டுப்படுத்தும் உடல் பகுதியையும் பொருத்தமுற அமையச் செய்கிறது. இது மிகச் சரியாக அடையப்பட வேண்டிய ஒரு அமைப்பு முறை. இந்தக் காலத்தில் இப்படிப்பட்ட அமைப்பு முறை  சாதாரணமாக யாருக்கும் அமைவதில்லை. இன்று விற்கப்படும் மூளை தொழில்நுட்ப சி.டிக்கள் இதை அடைவதற்காக நுண்ணிய ஒலிகளை ஹெட்போன் மூலமாக கேட்க வைக்கின்றன. ஆனால் இந்த எளிய பயிற்சியானது இப்படிப்பட்ட சிடிக்களின் தேவையே இல்லாதபடி இதை எய்த வழி வகை செய்கிறதுஎன இந்தப் பயிற்சி முறையைப் புகழ்கிறார்.

 Thoppukaranam

இதைப் படிக்கும் தமிழ் வாசகர்கள் இலேசாக புன்சிரிப்இபை நழுவ விட்டால் அதில் தப்பே இல்லை. எங்கள் ஊரில் அப்பா, அம்மா, வாத்தியார் சின்ன வயதிலேயே பிள்ளையார் முன்னால் போடச் சொன்ன தோப்புக்கரணத்திற்கு இப்படி ஒருமாடர்ன் பில்ட் அப்பா என்று கேட்டால் அது நியாயம் தானே!

 

வகுப்பில் கேள்விக்கு பதில் சொல்லாத மாணவர்களைஉக்கிபோட வைத்து அவர்களின் மூளைச் செயல்பாட்டைக் காலம் காலமாகத் தூண்டி விட்ட நம் அருமை பள்ளிவாத்தியார்கள்டாக்டர் ஆங்கின் நவீன சோதனைகளைச் செய்தா, வழி வழியாக அதைச் செய்து வந்தார்கள்!

 

நம் முன்னோர்கள் சொன்ன எதிலும் ஒரு ஆழ்ந்த அர்த்தம் இருக்கிறது என்பதை நிரூபிக்க இந்த தோப்புக்கரண சித்தாந்தமும் இப்போது உலகெங்கும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது

 

இதை முதன் முதலாக ப்ராணிக் ஹீலிங் மாஸ்டர் கோயா சோக் சூயி (Koa Chok Sui) தனதுசூப்பர் ப்ரெய்ன் யோகாஎன்ற நூலில் எழுதினார். பல இடங்களுக்குப் பயணம் செய்து இதை அறிமுகப்படுத்திப் பரப்பினார்.

 ganesh drawing by cat.

செலவில்லாத மூன்று நிமிட தோப்புக்கரணத்திற்கு வித்திட்ட பிள்ளையாருக்கு ஒரு தோப்புக்கரணம் போட்டு நமது பணிவான நன்றியைத் தெரிவித்து மூளை ஆற்றலைக் கூட்ட ஆரம்பிக்கலாமே!

***************

-Subham-