வெற்றி பெற்ற மேதைகள் கடைப்பிடிக்கும் 10 விஷயங்கள்! (Post No.7180)

Written by S Nagarajan

swami_48@yahoo.com

Date: 5 NOVEMBER 2019

Time  in London – 6-19 am

Post No. 7180

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

வெற்றி பெற்ற மேதைகள் கடைப்பிடிக்கும் 10 விஷயங்கள்!

ச.நாகராஜன்

டாக்டர் ஹென்றி க்ளவுட் எழுதியுள்ள நெவர் கோ பேக் : 10 திங்ஸ் யூ வில் நெவர் டூ எகெய்ன் என்ற புத்தகம் வெற்றி பெற்ற மேதைகள் திருப்பிச் செய்யாத 10 விஷயங்களைச் சொல்கிறது.

அந்த 10 விஷயங்களை அலசிப் பார்த்தால் நமக்குக் கிடைக்கும் முக்கிய கருத்துக்கள் :

  1. ஒரு வேலையோ அல்லது உறவில் விரிசலோ எதானாலும் சரி, ஒரு நல்ல காரியத்தை முன்னிட்டு முடிந்து விட்டது என்றால் அதை மீண்டும் திருப்பிக் கிளறக் கூடாது.
  2. எந்த ஒரு காரியத்தைச் செய்தாலும், இதை நான் ஏன் செய்கிறேன், இதற்கு நான் தகுதியானவன் தான, இது எனக்குப் பொருந்துமா, இது நீடித்து நிலைக்குமா என்று கேட்க வேண்டும். ஆம் என்ற பதில் கிடைத்தால் அதைச் செய்ய வேண்டும்.
  3. இன்னொருவரை மாற்ற முயலுதல் : இன்னொருவரை மாற்ற முயலாமல் இருந்தால் அவருக்குத் தனது சுதந்திரத்தை நீங்கள் வழங்குகிறீர்கள். அதன் விளவாக என்ன ஏற்படும் என்பதை அனுபவிக்க அவரை அனுமதிக்கிறீர்கள். இப்படிச் செய்தால் உங்களது சுதந்திரமும் உறுதிப் படுகிறது.
  4.  அனைவரையும் திருப்திப் படுத்த எண்ணுதல் : அனைவரையும் திருப்திப் படுத்த ஒருக்காலும் முடியாது என்பதை அறிந்து கொண்டால் நீங்கள் நல்ல இலட்சிய வாழ்க்கையை வாழ முடியும்.சரியான நபர்களை மட்டும் திருப்திப் படுத்த முடியும்.
  5. நீண்ட காலப் பயனை விட்டு விட்டு குறுகிய கால சுகத்தை அனுபவிக்க நினைப்பது : கொஞ்சம் கஷ்டத்தை அனுபவிப்பதானாலும் நீண்ட காலப் பயன் தரும் விஷயத்திற்காக வெற்றிகரமாக வாழ விரும்புவோர் அந்த வழியையே தேர்ந்தெடுப்பர்.

6) ஒரு வித குறைபாடும் இல்லாதவரை நம்புதல் : உலகில் பிரமாதமான ஆட்களையே அனைவரும் விரும்புவது இயல்பு. ஆனால் உலகத்தில் உள்ள அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் சிறு குறையுடன் தான் இருப்பர். அதை அப்படியே ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.

7) ஒரு சிறு சம்பவம் முழு கதையாக ஆகி விடாது : ஒரு விஷயத்தின் முழு உருவத்தை நாம் அறியும் போது நன்கு செயல் பட முடியும்; நமது வாழ்க்கையில் திறம்படச் செயலாற்ற முடியும். ஒரு சிறு சம்பவம் முழுக் கதை அல்ல. இதை வெற்றியாளர்கள் ஒவ்வொரு நாளும் நன்கு மனதில் பதிய வைக்கின்றனர்.

8) முழுதுமாகப் புரிந்து கொள்ளுதல் : வெளிப்பார்வைக்கு எது எப்படி இருந்தாலும், பிரமாதமாக இருந்தாலும் ஆழ்ந்து உன்னிப்பாக ஒன்றைக் கவனிக்கும் போது அதன் உண்மை நிலையை நம்மால் புரிந்து கொள்ள முடியும். பின்னர் நாம் செயலாற்றலாம்.

9) நாம் ஏன் இப்படி இருக்கிறோம் எனக் கேள்வி கேட்டல் : வெற்றியாளர்கள் எப்போதுமே தன்னைத் தானே நான் இந்த நிலையில் என்ன பங்கை வகிக்கிறேன் என்ற கேள்வியைக் கேட்டுக் கொள்வர்.  சூழ்நிலை ஒன்றில் அவர் பாதிக்கப்பட்டவராக இருந்தாலும் கூட தான் பாதிக்கப்பட்டதாக நினைக்காமல் உண்மை நிலையை அறியக் கேள்விகளைக் கேட்பர்.

10. வெளி வாழ்க்கையும் உள் வாழ்க்கையும் : வெற்றியாளர்களுக்கு அந்தக்கரண வாழ்க்கை என்னும் உள் வாழ்க்கையே முக்கியமானது. இது அழகாக, வெற்றி தரும் ஒன்றாக இருக்கும் போது அது வெளியிலும் பரிணமிக்கிறது;

கட்டுரையின் ஆங்கில வடிவம் இதோ!

June 24, 2014

“Never go back.” What does that mean? From observations of successful people, clinical psychologist and author of Never Go Back: 10 Things You’ll Never Do Again (Howard Books, June 2014), Dr. Henry Cloud has discovered certain “awakenings” that people have—in life and in business—that once they have them, they never go back to the old way of doing things. And when that happens, they are never the same. In short, they got it.

Successful people never again…

1. Return to what hasn’t worked.

Whether a job, or a broken relationship that was ended for a good reason, we should never go back to the same thing, expecting different results, without something being different.

2. Do anything that requires them to be someone they are not.

In everything we do, we have to ask ourselves, “Why am I doing this? Am I suited for it? Does it fit me? Is it sustainable?” If the answer is no to any of these questions, you better have a very good reason to proceed.

3. Try to change another person.

When you realize that you cannot force someone into doing something, you give him or her freedom and allow them to experience the consequences. In doing so, you find your own freedom as well.

4. Believe they can please everyone.

Once you get that it truly is impossible to please everyone, you begin to live purposefully, trying to please the right people.

5. Choose short-term comfort over long-term benefit.

Once successful people know they want something that requires a painful, time-limited step, they do not mind the painful step because it gets them to a long-term benefit. Living out this principle is one of the most fundamental differences between successful and unsuccessful people, both personally and professionally.

6. Trust someone or something that appears flawless.

It’s natural for us to be drawn to things and people that appear “incredible.” We love excellence and should always be looking for it. We should pursue people who are great at what they do, employees who are high performers, dates who are exceptional people, friends who have stellar character, and companies that excel. But when someone or something looks too good to be true, he, she, or it is. The world is imperfect. Period. No one and no thing is without flaw, and if they appear that way, hit pause.

7. Take their eyes off the big picture.

We function better emotionally and perform better in our lives when we can see the big picture. For successful people, no one event is ever the whole story. Winners remember that – each and every day.

8. Neglect to do due diligence.

No matter how good something looks on the outside, it is only by taking a deeper, diligent, and honest look that we will find out what we truly need to know: the reality that we owe ourselves.

9. Fail to ask why they are where they find themselves.

One of the biggest differences between successful people and others is that in love and in life, in relationships and in business, successful people always ask themselves, what part am I playing in this situation? Said another way, they do not see themselves only as victims, even when they are.

10. Forget that their inner life determines their outer success.

The good life sometimes has little to do with outside circumstances. We are happy and fulfilled mostly by who we are on the inside. Research validates that. And our internal lives largely contribute to producing many of our external circumstances.

And, the converse is true: people who are still trying to find success in various areas of life can almost always point to one or more of these patterns as a reason they are repeating the same mistakes.

Everyone makes mistakes…even the most successful people out there. But, what achievers do better than others is recognize the patterns that are causing those mistakes and never repeat them again. In short, they learn from pain—their own and the pain of others.

A good thing to remember is this: pain is unavoidable, but repeating the same pain twice, when we could choose to learn and do something different, is certainly avoidable. I like to say, “we don’t need new ways to fail….the old ones are working just fine!” Our task, in business and in life, is to observe what they are, and never go back to doing them again.

****

–subham–

இதை எழுதிய மாங்காய் மடையன் யார்? அது, நான்தான்! (Post No.4507)

WRITTEN by London Swaminathan 

 

Date: 17 DECEMBER 2017 

 

Time uploaded in London-  7-35 AM

 

 

Post No. 4507

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

ஆஸ்திரிய நாட்டு இசை மேதையும் சாஹித்ய கர்த்தாவுமான மோசார்ட் (Mozart) திரு ஞான சம்பந்தர் போல இளம் வயதிலேயே பாடல்களை எழுதியவர்; பாடியவர். அவரிடம் ஒரு பையன் வந்தான்.

ஐயா, எப்படி ஸிம்பனி (symphony ஸ்வரத் தொகுப்பு) எழுதுவது என்று எனக்குச் சொல்லுங்கள் – என்றான்

 

“அட, நீ ரொம்பச் சின்னவன். முதலில் நாட்டுப் பாடல், கதை பாட்டு (ballads) ஆகியவற்றை எழுதிப் பழகு” – என்றார்.

 

“என்ன இப்படிச் சொல்கிறீர்கள்? நீங்கள் மட்டும் பத்து வயதிலேயே ஸ்வரங்களை எழுதினீர்களே!”

 

 

அது உண்மைதான். ஆனால் ஸிம்பனி எப்படி எழுதுவது என்று நான் யாரிடமும் போய்க் கேட்கவில்லையே – என்றார்.

 

வான மயிலாடக் கண்டு தானும் அதுவாகப் பாவித்த வான் கோழியின் கதை போல உள்ளது அந்தப் பையன் கதை!

 

XXXX

பிரபல ஜெர்மன் தத்துவ ஞானி (Nietzsche) நீட்ஸே, வாக்னருடன் பேசிக்கொகொண்டிருந்தார்.

“நான் நினைக்கிறேன்; மோசார்ட் எழுதிய  F பிகாரொவில் (Figaro) அற்புதமான இசையைக் கண்டு பிடித்து இருக்கிறார்”.

 

வாக்னர் (Wagner) சொன்னார்: அவர் அற்புதமான இசையைக் கண்டுபிடிக்கவில்லை. நீங்கள் சொன்னதற்கு நேர்மாறாக நடந்தது. அவர் இசையில் அற்புதத்தைக் கரைத்துவிட்டார்”.

 

XXX

 

 

அற்புத நினைவு சக்தி!

 

பிரான்ஸ் தேசத்தைச் சேர்ந்த குனோட் (Gunod) ஒரு சாஹித்யகர்த்தா (composer) ; பியானோ வாத்யக்காரர். அவர் மற்றொரு மேதையான பெர்லியோஸ் (Berlioz) எழுதிய  ரோமியோவும் ஜூலியட்டும் என்ற இசை நிகழ்ச்சியின் ஒத்திகைக்குப் போயிருந்தார். மறுநாள் வீட்டுக்கு பெர்லிசோவை அழைத்தார். முதல்நாள் கேட்ட இசையை அப்படியே அ ட்சரம் பிசாகாமல் பெர்லியோஸுக்கு வாசித்துக் காண்பித்தார்.

 

அவருக்கு ஒரு பக்கம் வியப்பு; மற்றொரு பக்கம் திகைப்பு.

நன்றாக வாசித்தீர்கள் ஆனால் இதை எங்கிருந்து தெரிந்து கொண்டீர்கள்? என்று வியப்புடன் கேட்டார்.

அவருக்கு ஒரு சந்தேகம்; யாரோ தன்னுடையதைத் திருடிக் கொடுத்து இருக்க வேண்டும்; அல்லது இரண்டு பேர் ஒரே மாதிரி இசை அமைத்த உலக அதிசயம் நடந்திருக்க வேண்டும் என்று.

 

குனோட் சொன்னார்: “நான் உங்கள் ஒத்திகை நிகழ்ச்சிக்கு வந்தேனல்லவா?அப்போது கேட்டதைத்தான் நினைவில் வைத்து எழுதினேன்!”

 

XXX

அருவருக்கத்தக்க இசை!!!

 

சீஸர் ப்ராங்க் (Caesar Frank) என்பவர் நல்ல இசை அமைப்பாளர்; மிகவும் சாது. அதிகமாக வெளியே வந்தவர் அன்று; இதனால் அவரைப் பலருக்கும் தெரியாது. அவர்  அமைத்த இசை முழங்கிய  கச்சேரியில் அவர் ரஸிகப் பெருமக்களுடன் உட்கார்ந்திருந்தார். பொதுவாக புதிய இசை அமைப்பாளர்களுக்கு கடும் எதிர்ப்பு இருக்கும். அவருக்கும் பிற்காலத்தில்தான் அங்கீகாரம் கிடைத்தது.

 

அவர் உட்கார்ந்திருந்த வரிசைக்குப் பின்னால் செல்வச் செருக்குள்ள ஒரு சீமாட்டி உட்காந்திருந்தாள். அவள் அகந்தையின் உறைவிடம். ஒரு பாட்டுக்கும் இன்னொரு பாட்டுக்கும் இடையே ஏற்பட்ட இடைவெளி நேரத்தில் அந்தப் பெண் உரத்த குரலில் எந்த மடையன் அருவருக்கத்தக்க இந்தப் பாட்டை எழுதினானோ! என்று நகைத்தாள்.

ஸீஸர் ப்ராங்க் மெதுவாகப் பின்னால் திரும்பி, அம்மணி, இந்தப் பாட்டை எழுதியவன் நான்தான் – என்றார்

TAGS:- இசை ,மேதைகள், நினைவு சக்தி, இளம் வயது, மோசார்ட், குனோட், மடையன்

–subham–

கடைசியில் என்ன சொன்னார்கள்?! (Post No.3443)

Written by S NAGARAJAN

 

Date: 13 December 2016

 

Time uploaded in London:- 6-48 am

 

Post No.3443

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

 

பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 கடைசியில் என்ன சொன்னார்கள்?!

by ச.நாகராஜன்

 

“எல்லோரும் ஓர் நாள் இறக்கத்தான் வேண்டும். ஆனால் அப்படிச் சொல்லி ஞாபகப்படுத்துவதைக் கேட்க சிலரே விருப்பப்படுகிறார்கள்”. – லெமனி ஸ்னிக்கெட்

 

 

 

  பிரபல விஞ்ஞானிகள், யோகிகள், மேதைகள், மகான்கள், சீர்திருத்தவாதிகள் தங்களின் கடைசி நிமிடத்தில் என்ன சொன்னார்கள்?

 

 

பிரபல பத்திரிகையாளரான எம்.வி.காமத் பத்ம பூஷண் விருது பெற்றவர். இல்லஸ்ட்ரேடட் வீக்லி ஆஃப் இந்தியா என்ற பிரபல வார இதழின் ஆசிரியராகப் பணியாற்றியவர். அவர் 55 மேதைகளின் இறுதி நேரத்தை ஆராய்ந்து பிலாஸபி ஆஃப் லைஃப் அண்ட் டெத் (Philosophy of Life and Death) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

 

 

மரணத்தை பிரபல மேதைகள் எப்படி எதிர் கொண்டார்கள் என்பதை ஆராய்ந்த அவர் வாழ்க்கையை நன்கு ஒருங்கிணைந்து வாழ்ந்தவர்கள் தைரியத்துடனும் அமைதியுடனும் இறக்கிறார்கள். என்று தன் ஆய்வு முடிவை அறிவிக்கிறார்.

 

 

வில்லிய்ம் பி.ப்ராம்ஸ் (William B,Brahms)  என்ற அமெரிக்கர் நூலகப் பணியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். அதற்கென நியூ ஜெர்ஸியில் நூலகத்தில் பல்லாண்டுகளாகப் பணியாற்றி வருபவர். அவர் தகவல் தொகுப்பாளரும் கூட.

 

 

1992ஆம் ஆண்டு அவர் ஒரு நாள் நூலகத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். முதன் முதலில் யார் எதைக் கண்டு பிடித்தார்கள் என்பதைப் பற்றி பல நூல்கள் இருக்கும் போது பிரபலமானவர்கள் இறக்கும் போது என்ன சொன்னார்கள் என்பதைப் பற்றி ஒரு தகவலும் சரியான முறையில் இல்லையே என்று நினைத்தார். உடனே அதைத் தானே ஆராயப் புகுந்தார். ஆயிரக்கணக்க்கான நூல்கள், பத்திரிகைக் கட்டுரைகளைச் சேகரித்துப் படித்தார்.

 

 

தன் ஆராய்ச்சியின் முடிவாக 3500 பேர்கள் தாங்கள் இறக்கும் போது என்ன சொன்னார்கள் என்பதைத் தொகுத்து ‘லாஸ்ட் வோர்ட்ஸ் ஆஃப் நோடபிள் பீப்பிள்’ (Last words of Notable People)  என்ற நூலை அவர் எழுதியுள்ளார். அதிகாரபூர்வமான தகவல்களை சரி பார்த்து ஆய்வு செய்த நூலாக இது அமைகிறது.

 

மஹாத்மா காந்திஜி இறக்கும் தருணத்தில் ஹே! ராம் என்று கூறியவாறே உயிர் துறந்தார் என்பதையும் பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீன் இறக்கும் கடைசி நிமிடத்தில் தனது தாய் மொழியான ஜெர்மானிய மொழியில் ஏதோ கூற அதை ஜெர்மானிய மொழி அறியாத நர்ஸினால் புரிந்து  கொள்ள முடியவில்லை என்பதையும் அனைவரும் அறிவர்.

 

 

   இன்னும் பல பிரபலங்கள் தங்கள் கடைசி நிமிடத்தில் என்ன சொன்னார்கள்?

 

சில தகவல்களைப் பார்ப்போம்.

 

பிரபல விஞ்ஞானியான சர் ஐஸக் நியூட்டன் கூறியது:

 

 “என்னை உலகம் எப்படிப் பார்க்குமோ எனக்குத் தெரியாது.ஆனால் எனக்கு என்னை கடற்கரையில் விளையாடும் ஒரு பையனைப் போலவே எண்ணத் தோன்றுகிறது. உண்மை என்னும் பெருங்கடல் என் முன்னே கண்டுபிடிக்கப்படாமல் இருக்கும் போது, சாதாரணமாகக் கிடைப்பதை விட ஒரு அருமையான கூழாங்கல் அல்லது கிளிஞ்சலைக் கண்டு பிடிப்பதில் என்னை ஈடுபடுத்தியவன் போலத் தோன்றுகிறது

 

என்று இவ்வாறு எளிமையுடன் கூறி அவர் இறந்தார்.

 

சார்லஸ் டார்வின், “நான் இறப்பதற்குப் பயப்படவில்லை” என்று கூறி விட்டு மரணமடைந்தார்.

 

 

1988இல் லாஸ் ஏஞ்சல்ஸில் மரணமடைந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானியான ரிச்சர்ட் ஃபெய்ன்மேன், “இந்த மரணம் எனக்கு போரடிக்கும் ஒன்றாக இருக்கிறது” என்றார்.

பிரபல விஞ்ஞானியும் அமெரிக்க ராஜ தந்திரியுமான பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் தனது 84ஆம் வயதில் இறந்தார். மரணத் தறுவாயில் அவர் அருகில் இருந்த மகள் அவரை படுக்கையில் சற்று ஒருக்களித்துப் படுக்குமாறு கூறினார். அதற்கு அவர்,  “இறக்கும் ஒரு மனிதனுக்கு எதையும் சுலபமாகச் செய்ய முடியாது” என்று பதில் கூறினார். அதைச் சொல்லும் போதே அவர் உயிர் பிரிந்தது.

தாமஸ் ஃபேனட் டெ லாக்னி என்பவர் ஒரு பிரபலமான கணித மேதை. அவர் இறக்கும் போது அவரிடம் 12ன் ஸ்குயர் (12ஐ 12ஆல் பெருக்கு வரும் எண்) என்ன என்று கேட்கப்பட்டது. 144 என்று பதில் கூறியவாறே அவர் மரணமடைந்தார்.

 

 

பாப் மார்லி என்ற இசைக் கலைஞர், “பணம் வாழ்க்கையை வாங்க முடியாது” என்று கூறி விட்டு இறந்தார்.

மேரி ஆண்டாய்னெட் என்பவர் பிரான்ஸின் மஹாராணி. அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு அவரை கில்லடீனுக்குக் கொண்டு சென்ற போது கில்லடீனை இயக்குபவரின் காலைத் தவறுதலாக அவர் மிதித்து விட்டார். உடனே அவர், “என்னை மன்னிக்கவும். வேண்டுமென்றே இதைச் செய்யவில்லை” என்று கூறியவாறே கில்லடீன் வைக்கப்பட்ட மேடை மீது ஏறி அதில் தன் தலையை வைத்தார்.

 

 

ஷெர்லாக் ஹோம்ஸைப் படைத்த எழுத்தாளரான சர் ஆர்தர் கானன் டாயில் 71ஆம் வயதில் தனது தோட்டத்தில் மரணம்டைந்தார். அருகில் இருந்த தன் மனைவியைப் பார்த்து “யூ ஆர் வொண்டர்புல்” என்று கூறியவர் தனது மார்பைப் பிடித்துக் கொண்டார். இறந்தார்.

 

 

பிரபல கவிஞரான டி.எஸ். எலியட் இறக்கும் போது ஒரே ஒரு வார்த்தையைத் தான் முணுமுணுத்தார் – வாலெரி என்று.

வாலெரி என்பது அவர் மனைவியின் பெயர்

எல்லோரையும் தியேட்டர்களில் நாற்காலியின் விளிம்பில் அமர வைத்த சஸ்பென்ஸ் மன்னன் ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக், “எவருக்கும் எப்போது முடிவு வரும் என்பது தெரிவதில்லை. கத்தோலிக்கர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என்றாலும் கூட, மரணத்திற்குப் பின் என்ன நடக்கிறது என்பதை அறிய செத்துத் தான் பார்க்க வேண்டும்”என்று கூறி விட்டு இறந்தார்.

 

 

  ஜோ டி மக்கியோ என்ற பேஸ் பால் விளையாட்டு வீரர் இறக்கும் போது, “கடைசி கடைசியாக நான் மர்லின் மன்ரோவைப் பார்க்கப் போகிறேன்” என்று கூறி விட்டு இறந்தார்.

 

3500க்கும் மேற்பட்ட பிரப்லங்களின் இறுதி வார்த்தைகளைப் படிப்பது வாழ்க்கையைப் பற்றியும் மரணத்தைப் பற்றியும் சிறப்பாக அறிந்து கொள்ள முடிகிறது என்று படித்தவர்கள் கூறும் போது அவற்றைத் தெரிந்து கொள்ள ஆவல் கொள்வது இயல்பு தானே!

 

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் …

 

பிரபல விஞ்ஞானியான தாமஸ் ஆல்வா எடிஸனுக்கு பல விசித்திரமான நம்பிக்கைகள் உண்டு. யார் என்ன சொன்னாலும் தான் நம்பியதை அவர் கடைசி வரை விடவே இல்லை.

 

இப்படிப்பட்ட நம்பிக்கைகளில் ஒன்று ஆவிகளைப் பற்றியது.

ஆவிகளுடன் நிச்சயமாக மனிதர்கள் பேச முடியும் என்று அவர் நம்பினார்.

 

1920ஆம் ஆண்டு அமெரிககன் மாகஸைன் என்ற பத்திரிகையைச் சேர்ந்த ஒரு நிருபருக்கு அவர் பேட்டி அளித்த போது  தான் ஒரு ‘ஆவி போனை’க் கண்டு பிடித்திருப்பதாகத் தெரிவித்தார். அதாவது அந்த போனின்  மூலமாக இறந்த எந்த ஒருவருக்கும் டய்ல் செய்து யார் வேண்டுமானாலும் பேசலாம்.

இதைக் கேட்ட நிருபர் அசந்து போனார்.

 

ஆனால் அந்த போனைக் காட்டுமாறு பலரும் தொடர்ந்து அவரை நச்சரித்தவண்ணம் இருந்தனர். இது பல ஆண்டுகள் தொடர்ந்தது. பின்னர் ஒரு நாள் அப்படிப்பட்ட போனைக் காண்பிக்க முடியாத நிலையில் எடிஸ்ன் தான் அப்படி சொன்னது ஒரு ஜோக் தான் என்று சொல்லிச் சமாளித்தார்.

இறந்தவருக்கு டயல் செய்து பேசும் போனை அவரைத் தவிர வேறு யாரும் கற்பனையும் செய்ததில்லை; உருவாக்க முயன்றதுமில்லை!

 

*******