பகவத் கீதை பொன் மொழிகள் ,மேற் கோள்கள், பிப்ரவரி 2022 காலண்டர் (10,605)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,605

Date uploaded in London – –    28 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பண்டிகைகள் – பிப்ரவரி 8- ரத சப்தமி; 8- பீஷ்மாஷ்டமி ; 16/17 மாசி மகம்- பல கோவில்களில் தெப்பத் திருநாள்

(மாசி மகம் –17; ரத சப்தமி –8; பாம்பு பஞ்சாங்கத்தில் பிப்ரவரி எட்டாம் தேதி ரத ஸப்தமி , பீஷ்மாஷ்டமி இரண்டும் போடப்பட்டுள்ளது)

பெளர்ணமி  பிப்.16;

பிப்ரவரியில் அமாவாசை கிடையாது

ஏகாதஸி விரத நாட்கள் – 11, 26

சுபமுஹூர்த்த நாட்கள் – பிப்ரவரி 6, 11, 14

xxxx

பகவத் கீதை பொன் மொழிகள் ,மேற் கோள்கள்

பிப்ரவரி 1 செவ்வாய்க் கிழமை

ந மே பக்த ப்ரணச்யதி (9-31): என் பக்தன் அழியவே மாட்டான்)

xxxx

பிப்ரவரி  2 புதன் கிழமை

பரித்ராணாய சாதூணாம், விநாசாய துஷ்க்ருதாம் (4-8) :

சாதுக்களைக் காத்தற்கும், துஷ்டர்களை அழிப்பதற்கும் யுகம் தோறும் அவதரிப்பேன்.

xxx

பிப்ரவரி  3 வியாழக் கிழமை

சம்யாத்மா விநஸ்யதி(4-40) : ஞானம் இல்லாதவன் சிரத்தை இல்லாதவன் சந்தேகம் உடையவன் அழிகிறான் அவர்களுக்கு இவ்வுலகும் இல்லை, அவ்வுலகும் இல்லை.

xxxx

பிப்ரவரி  4 வெள்ளிக் கிழமை

கர்மன் ஏவ அதிகாரஸ்தே மா பலேஷூ கதாசன (2-47): கருமத்திலேயே உனக்கு அதிகாரம், ஒருபோதும் பலனில் இல்லை

xxx

பிப்ரவரி  5 சனிக் கிழமை

க்லைப்யம் மாஸ்ம கம: ந ஏதத் த்வயீ உபபத்யதே(2-3) :

பேடித்தனத்தை அடையாதே.இது உன்னிடத்தில் சிறிதும் பொருந்தாது

xxxx

பிப்ரவரி  6 ஞாயிற்றுக் கிழமை

ஆசை, பயம் கோபம் இல்லாதவர்கள், என்னைச் சரண் அடைந்தவர்கள் என் தன்மையை அடைந்திருக்கிறார்கள் (4-10).

Xxxx

பிப்ரவரி  7 திங்கட் கிழமை

ந ஜாயதே ம்ரியதே வா கதா சிந் நாயம் பூத்வா பவிதா வா ந பூய:

(2-20) ஆத்மா ஒருபோதும் பிறப்பதும் இல்லை, இறப்பதும் இல்லை. இல்லாமல் இருந்து மறுபடியும் உண்டாவதும் இல்லை. என்றும் உள்ளது, அழியாதது.

xxxx

பிப்ரவரி 8 செவ்வாய்க் கிழமை

பண்டிதா: சம தர்சின (5-18): பிராமணன்,பசு, யானை, நாய், புலையன் எல்லோரையும் சமமாகப் பார்ப்பவனே ஞானி

xxxx

பிப்ரவரி  9 புதன் கிழமை

ந ஹி கல்யாண க்ருத் கஸ்சித் துர்கதிம் தாத கச்சதி (6-40) : நல்லதைச் செய்பவன் எவனும் நிச்சயமாக தீய நிலையை அடையவே மாட்டான்.

xxxx

பிப்ரவரி  10 வியாழக் கிழமை

யத் யத் ஆசரதி ஸ்ரேஷ்ட: தத் ததேவ இதர ஜன: (3-21):

 பெரியவன் ஒருவன் எதைச் செய்கிறானோ அதையே ஜனங்களும் பின்பற்றுவர்.

xxxx

பிப்ரவரி  11 வெள்ளிக் கிழமை

ஆசையும் அதற்குக் காரணமான சங்கல்பமும் இல்லாமல் வினைகளை ஞானத்தீயில் யார் ஒருவன் பொசுக்குகிறானோ அவனே பண்டிதன்(4-19)

xxxx

பிப்ரவரி  12 சனிக் கிழமை

ஸ சாந்தி மாப்னோதி ந காம காமி (2-70) : ஆசையுள்ளவனுக்கு அமைதி இல்லை.

Xxx

பிப்ரவரி  13 ஞாயிற்றுக் கிழமை

வேள்வி செய்தால் தேவர்கள் உங்களுக்கு இன்பம் தரும் பொருட்களைத் தருவார்கள். அவர்கள் கொடுத்ததை அவர்களுக்குக் கொடுக்காமல் உண்பவன் திருடனேயன்றோ? (10-12)

xxxx

பிப்ரவரி  14  திங்கட் கிழமை

பத்ரம் புஷ்பம் பலம் தோயம் (9-26): எவன் எனக்கு பக்தியுடன் பச்சிலையோ, பூவோ, பழமோ, தீர்த்தமோ தூய்மையுடன் கொடுக்கிறானோ அதை நான் புசிக்கிறேன்.

xxx

பிப்ரவரி 15 செவ்வாய்க் கிழமை

உத்திஷ்ட, யசோ லபஸ்வ (11-33): எழுந்திரு, புகழ் அடை.

xxx

பிப்ரவரி  16 புதன் கிழமை

சர்வ பூத ஹிதே ரதா(12-4, 11-55): தே மாம் ஏவ ப்ராப்னுவந்தி: எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க நினைப்பவர்கள் என்னையே வந்து அடைகிறார்கள்.

xxxx

பிப்ரவரி  17 வியாழக் கிழமை

உத்தரேத் ஆத்மநாத்மானம்: தன்னைத்தானே உயர்த்திக் கொள்ள வேண்டும்.தன்னைத்தானே தாழ்த்திக் கொள்ளக் கூடாது.தனக்குத் தானே நண்பன், தனக்குத் தானே பகைவன்(6-5).

xxx

பிப்ரவரி  18 வெள்ளிக் கிழமை

ஆத்மவான் பவ: (2-45) : உன்னையே நீ அறிவாய்

xxx

பிப்ரவரி  19 சனிக் கிழமை

சர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ (18-66): எல்லா தருமங்களையும் விட்டுவிட்டு என்னையே சரண் அடை. நான் உன்னை எல்லா பாபங்களிலும் இருந்தும் விடுவிக்கிறேன்.

Xxxx

பிப்ரவரி  20 ஞாயிற்றுக் கிழமை

நாலு பேர் என்னைத் தேடி வருகிறார்கள்  (7-16) -சதுர்விதா ஜனாஹா பஜந்தே மாம் – துயரம் உள்ளவன், ஞானத்தை நாடுபவன், பணம் வேண்டியவன், ஞானி

xxx

பிப்ரவரி  21  திங்கட் கிழமை

தமக்காகவே சமைப்பவர்கள் பாவத்தையே உண்கிறார்கள் (12-4).

xxx

பிப்ரவரி 22 செவ்வாய்க் கிழமை

சாதுர்வர்ண் யம்  மயாசிருஷ்டம்  குண கர்மா விபாகஸஹ 11-13 நான் குணங்களுக்குத் தக்கபடி நான்கு வர்ணங்களை / பிரிவுகளை உருவாக்கினேன்

Xxxx

பிப்ரவரி  23 புதன் கிழமை

எவர்கள் என்னை எவ்வாறு  வழிபடுகிறார்களோ , அவர்களை நான் அவ்வாறே அனுக்ரஹிக்கிறேன் / அருளாசி வழங்கி ஆதரிக்கிறேன் – யே யதா மாம்  பிரபத்யந்தே தாம் ததய்வ பஜாமஹம் 4-11

XXX

பிப்ரவரி  24 வியாழக் கிழமை

நரகத்தின் மூன்று வாசல்கள் -(16-21) – காமம், கோபம், லோபம்/பேராசை

xxx

பிப்ரவரி  25 வெள்ளிக் கிழமை

ஓடு , பொன்  ஆகிய இரண்டையும் ஒன்றாகப் பார்ப்பவன் குணக் குன்று ஆவான் 14-21

XXXX

பிப்ரவரி  26 சனிக் கிழமை

ச்ரத்தாவான் லபதே ஞானம் 4-39; முயற்சியுள்ளவன் ஞானத்தை அடைகிறான்

XXX

பிப்ரவரி  27 ஞாயிற்றுக் கிழமை

அசுரர்கள் என்னை வணங்குவதில்லை – ந மாம் ப்ரபத்யந்தே ஆஸுரம் பாவம் ஆச்ரிதாஹா – 7-15

XXX

பிப்ரவரி  28 திங்கட் கிழமை

சும்மா இருப்பதைவிட காரியங்களை  செய்வது சிறந்தது 7-8

xxx

BONUS QUOTES

பல பிறப்புகளுக்குப் பின்னரே முடிவில் ஞானவான் என்னை வந்தடைகிறான் – 17-19

XXXX

வேதங்களுள் நான் ஸாம வேதமாக இருக்கிறேன் 10-22

XXXX

சேனாதிபதிகளில் நான் முருகன் – 10-24

XXXX

மரங்களுள் நான் அரச மரம் என்று அழைக்கப்படும் அஸ்வத்த மரம் ஆவேன் 10-28

XXXX Subham xxxx

tags- பகவத் கீதை பொன் மொழிகள் ,மேற் கோள்கள்