இலக்கியம் பற்றி 31 அற்புதப் பொன் மொழிகள்!

சுவாமியின் பொன்மொழி காலண்டர் – மன்மத வருடம்- வைகாசி (மே 2015)

இந்த பிளாக்—கில் இதுவரை தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆயிரத்துக்கும் மேலான தமிழ், சம்ஸ்கிருத பொன் மொழிகள் வெளியிடப் பட்டுள்ளன! படித்துப் பயன் பெறுக!!

Compiled by London Swaminathan

Article No.1835;  Dated 29 ஏப்ரல் 2015.

Uploaded at London time 8-38 am

 

முக்கிய நாட்கள்/ விழாக்கள்:– மே 1 தொழிலாளர் தினம்; மே 5- அன்னமாசார்ய ஜயந்தி, மே 13- தத்தாத்ரேய & ஹனுமன் ஜயந்தி,

மே 4 & 25 பிரிட்டனில் விடுமுறை

 

ஏகாதசி  : 14 & 29; அமாவாசை- 17; சித்திரா பவுர்ணமி- 3.

முகூர்த்த நாட்கள்:– 1, 6, 8, 10, 14, 15, 20, 22, 29

 

 

 

மே 1 வெள்ளிக்கிழமை

அர்த்தமாத்ரா லாகவேனாபி புத்ரோத்சவம் மன்யந்தே வையாகரணா: -சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

அரை மாத்திரை (எழுத்து/ஒலி) சேமிக்க முடிந்தாலும், இலக்கண வித்தகர்கள்,  ஒரு பிள்ளையைப் பெற்ற சந்தோஷத்தை அடைவர்.

 

 

மே 2 சனிக்கிழமை

 

உபமா காளிதாசஸ்ய பாரவேர் அர்த்தகௌரவம்

தண்டின: பத லாலித்யம் மாகே சந்தி த்ரயோ குணா:

-சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

உவமைக்குக் காளிதாசன், பொருளுள்ள கவிக்கு பாரவி, சொல் நயத்துக்கு தண்டி, மாகனோ இம்மூன்றும் உடைத்தவன்.

 

மே 3 ஞாயிற்றுக் கிழமை

உதிதே நைஷதே காவ்யே க்வ மாக: க்வ ச பாரவி:

நைஷத காவியம் உண்டான பின்னர், மாகன் எங்கே? பாரவி எங்கே?

 

 

மே 4 திங்கட் கிழமை

ஏகோ ரஸ: கருணா ஏவ நிமித்த பேதாத்

உத்தரராம சரிதம், பவபூதி

ரசம் என்பது கருணை ரசம் ஒன்றே: ஏனையவை அதிலிருந்து சில காரணத்துக்காகப் பிரிந்தவையே

 

 

மே 5 செவ்வாய்க் கிழமை

 

கரோதி ராகம் ஹ்ருதி கௌதுகாதிகம்

-பாணபட்டரின் காதம்பரி

மனதில் மகிழ்ச்சி உண்டானால் கதைகள் பிறக்கும்

 

மே 6 புதன் கிழமை

கலாரத்னம் கானம்

கலைகளில் சிறந்தது இசையே

மே 7 வியாழக் கிழமை

கவிதாயா: பரிபாகான் அனுபவ ரஸிகோ

விஜானாதி

கவிதையின் நயத்தை, அனுபவம் உள்ள ரசிகர்களே பூரணமாக அனுபவிப்பர்

 

மே 8 வெள்ளிக்கிழமை

கஸ்ய ந ஜனயதி ஹர்ஷம் சத் காவ்யம் மதுர வசனம் ச – காதா சப்த சதி, ஹாலன்

நல்ல காவியமும் இனிமையான சொற்களும் யாரிடத்தில்தான் மகிழ்ச்சியை உண்டாக்காது?

 

மே 9 சனிக்கிழமை

கா வித்யா கவிதாம் வினா

கவிதை இல்லாத கல்வி எதற்கு?

 

 

மே 10 ஞாயிற்றுக் கிழமை

காவ்யம் சுதா ரசஞானம் காமினாம் காமினீ சுதா

ரசனை உடையவர்களுக்கு காவியம் அமிர்தமயமானது; காம உணர்வுடையோருக்குப் பெண்களைப் போல

 

 22TH_MANGO_2349151f.jpg (636×401)

மே 11 திங்கட் கிழமை

காவ்ய சம்பந்தினீ கீர்த்தி: ஸ்தாயினீ நிரபாயினீ

இலக்கியத்தால் வரும் புகழ், அழியாத புகழாகும்

 

 

மே 12 செவ்வாய்க் கிழமை

காவ்யஸ்யாத்மா த்வனி:  – த்வன்யாலோக:

ஒரு காவியத்தின் ஆத்மா, அதிலுள்ள த்வனியேயாம் (இறைச்சி பொருள்)

 

 

மே 13 புதன் கிழமை

காவ்யேஷு நாடகம் ரம்யம்

காவியங்களில் நாடகம் இதமானது

 

மே 14 வியாழக் கிழமை

கத்யம் கவீனாம் நிகஷம் வர்தந்தி

கவிதை என்பது கவிஞர்களுக்கு இயற்கையாக வருவது (கவிஞர்களுடன் பிறந்தது கவிதை)

 

 

மே 15 வெள்ளிக்கிழமை

ஜயந்தி தே சுக்ருதினோ ரஸசித்தா: கவீஸ்வரா:

நாஸ்தியேஷாம் யச: காயே ஜராமரணஜம் பயம் –பர்த்ருஹரி

கவியரசர்கள், ரசத்தின் (நவரஸம்) கரை கண்டவர்கள். அவர்கள் புண்ணியம் செய்தவர்களாகத் திகழ்கின்றனர்.அவர்களுடைய புகழ் உடம்புக்கு மரண பயமோ, முதுமையோ இல்லை (பூத உடல் மறைந்தாலும் புகழ் உடம்பு நிலைத்து நிற்கும்)

 

மே 16 சனிக்கிழமை

தர்ம ஜிக்ஞாசமானானாம் ப்ரமாணம் பரமம் ஸ்ருதி: — மஹாபாரதம்

தர்ம நாட்டம் உடையோருக்கு பெரிய ப்ரமாணம் (சான்று) வேதம் ஆகும்.

மே 17 ஞாயிற்றுக் கிழமை

நரத்வம் துர்லபம் லோகே வித்யா தத்ர சதுர்லபா

கவிதவம் துர்லபம் தத்ர சக்திஸ்தத்ர சதுர்லபா – அக்னி புராணம்

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது; அதிலும் கல்வி கற்றவராய் விளங்குவது அரிது;  அதிலும் கவிதை புனையும் ஆற்றல் அரிது; அதிலும் செல்வாக்குடைய வராய் (பெயர்பெற்றவராய்) விளங்குவது அரிது.

 

மே 18 திங்கட் கிழமை

நாட்யம் பின்னருசேர் ஜனஸ்ய பஹுதாப்யேகம் சமாராதனம் — மாளவிகாக்னிமித்ரம்

வெவ்வேறு ருசியுடையவர்களும் ஒருங்கே (அமர்ந்து) ரசிக்கவல்லது நாட்டியம்

 

மே 19 செவ்வாய்க் கிழமை

நிரங்குசா: கவய:

கவிஞர்களைக் கட்டுப்படுத்துவது எதுவும் இல்லை

(சிட்டுக் குருவிக்கு என்ன கட்டுப்பாடு?)

 

மே 20 புதன் கிழமை

புராணமித்யேவ ந சாது ஸர்வம் ந சாபி காவ்யம் நவமித்யவத்யம் — மாளவிகாக்னிமித்ரம்

பழமையானது என்பதால் மட்டும் எல்லாம் சிறந்தன என்பதும் இல்லை; புதியது என்பதால் சிறப்பில்லாதவை என்பதும் இல்லை.

மே 21 வியாழக் கிழமை

பாரதம் பஞ்சமோ வேத:

மஹாபாரதம் என்பது ஐந்தாவது வேதம் (அதாவது வேதத்துக்குச் சமமானது)

 

மே 22 வெள்ளிக்கிழமை

பாரதாம்ருதசர்வஸ்வம் கீதா

மஹாபாரதத்தைப் பிழிந்தெடுத்த அம்ருதம் பகவத் கீதை

மே 23 சனிக்கிழமை

யதிஹாஸ்தி ததன்யத்ர யன்னே ஹாஸ்தி ந தத் க்வசித்  – மஹாபாரதம்

உலகில் உள்ள எல்லாம் மஹாபாரதத்தில் உளது; இதில் இல்லாவிட்டால் உலகில் எங்கும் இல்லை.

 

மே 24 ஞாயிற்றுக் கிழமை

யஸ்ய வாக்யம் ச ருஷி:  -ருக் வேத சர்வாணுக்ரமணி

மந்திர ஸ்வரூப வாக்கியம் உடையவர் ரிஷி

 

மே 25 திங்கட் கிழமை

யஸ்ய ஸம்புடிகா நாஸ்தி குதஸ்தஸ்ய சுபாஷிதம் – பஞ்ச தந்திரம்

நெட்டுரு செய்ய முடியாதோருக்கு பொன்மொழிகள் என்ன பயன் தரும்?

 

மே 26 செவ்வாய்க் கிழமை

ரமணீயார்த்த ப்ரதிபாதக: சப்த: காவ்யம் – ரசகங்காதர:

அழகிய பொருள் உடைய  சொற்களை எடுத்துக் காட்டுவது காவியம் ஆகும் (  (சொல் அழகைப் பிரதிபலிக்கும் கண்ணாடி காவியம்)

 

மே 27 புதன் கிழமை

ரோசனார்த்தா பலச்ருதி: — பாகவதம்

படிக்கும் ஆர்வத்தைத் தூண்டிவிடவே பலஸ்ருதி சொல்லப்படுகிறது.

 

 

மே 28 வியாழக் கிழமை

வக்தார: சுலபா லோகே ஸ்ரோதாரஸ்து சுதுர்லபா:

சொல்லுதல் யார்க்கும் எளிது; கேட்பதே கடினம் (சொல்லிய சொல்லைக் கேட்டு அதற்குத்தக வாழ்க்கை அமைப்பது அரிது, அரிது).

 

 

மே 29 வெள்ளிக்கிழமை

வேதோகிலோ தர்மமூலம் – மனு

எல்லா தர்மங்களுக்கும் மூலம் வேதமே.

 

மே 30 சனிக்கிழமை

வேதோஹி விஞ்ஞானம்

வேதம் என்பது விஞ்ஞானம்

 

மே 31 ஞாயிற்றுக் கிழமை

ஸ்ரீமத்ராமாயணீ கங்கா புனாதி புவனத்ரயம்

ஸ்ரீமத் ராமாயணம் என்னும் கங்கா ப்ரவாகம் மூன்று  உலகங்களையும் புனிதமாக்கும்.

Pictures used here are from my face book friends; thanks.