மே மாத (2021) நற்சிந்தனை காலண்டர் (Post.9543)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9543

Date uploaded in London – –28 APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

ப்லவ வருஷம் சித்திரை/வைகாசி  மாதம்

31 நீதி வெண்பா மேற்கோள்கள் /பொன்மொழிகள்

பண்டிகை/ விடுமுறை தினங்கள் – மே 1- மே தினம் , 14- அட்சய திருதியை, பரசுராம ஜெயந்தி, ரம்ஜான் , 17-சங்கர ஜெயந்தி,

25-வைகாசி விசாகம், 26-புத்த பூர்ணிமா, காஞ்சி மஹா பெரியவா ஜெயந்தி, சந்திர கிரஹணம்  (அக்கினி நட்சத்திரம் ஆரம்பம்- மே 4, முடிவு-28)

XXXX

ஏகாதசி மே 7, 22/23; அமாவாசை மே 11; பெளர்ணமி 26;

முஹுர்த்த தினங்கள் – 9,14,17, 23,24,28

XxxX

xxx

மே 1 சனிக்கிழமை

மந்திரங்கள் ஐந்தெழுத்துக்கு ஓப்பாகா–

ஆமந்திரம் எவையும் ஐந்தெழுத்தை ஒவ்வாவே

சோமசுந்த ரற்கு என்றே சொல்.

xxx

மே 2 ஞாயிற்று க்கிழமை

பெரியோரைச் சேரின் துன்பம் நீங்கும்; சத் சங்க மஹிமை-‘பெரியோ ரிடம்சேரில் அக்கணமே போமென்று அறி’

xxx

மே 3 திங்கட் கிழமை

நீற்றின் பெருமை-  சீராம் வெண்ணீற்றுத் திரிபுண்டரம் விடுத்தே

பேரான முத்தி பெறவிரும்பல்

xxx

மே 4 செவ்வாய் க்கிழமை

அடியார்கள் தியானத்தில் ஆண்டவர்களை எதிர்பார்ப்பர்–

கந்தமிகும் பூவலரப் பார்க்கும் பொறிவண்டு அரனன்பர்

தேவரவைப் பார்ப்பர் தௌிந்து.

xxx

மே 5 புதன் கிழமை

கற்றவர்க்கு நிகரில்லை–‘கல்லார் பலர்கூடிக் காதலித்து வாழினும்நூல்

வல்லான் ஒருவனையே மானுவரோ’

xxx

மே 6 வியாழ க்கிழமை

சேர்ந்த இடத்தின் பயன்- ‘சந்தனத்தைச் சேர்தருவும் தக்கமணம் கமழும்’

xxx

மே 7 வெள்ளி க்கிழமை

இனிய சொல்லே இன்பம் பயக்கும்–

அன்பறிவு சாந்தம் அருளுடையார் நல்வசனம்

இன்பமிகும் சீதள மாமே

xxx

xxx

மே 8 சனிக்கிழமை

. தீயோர் சொல் மிகவும் வருத்தம்- வெய்யகதிர்

எல்லோன் கிரணத் தெரியினிலும் எண்ணமிலார்

சொல்லே மிகவும் சுடும்.

xxx

மே 9 ஞாயிற்று க்கிழமை

தானம் மூவகை–

தானறிந்தோருக் குதவி தன்னால் அமையும்எனில்

தானுவந்து ஈதல் தலையாமே – ஆனதனால்

சொன்னால் புரிதலிடை சொல்லியும் பன்னாள்மறுத்துப்

பின்னாள் புரிவதுவே பின்.

xxx

மே 10 திங்கட் கிழமை

உயர்ந்தோர் கைம்மாறு கருதார்–

எல்லோர் தமக்கும் இனிதுதவல் அன்றியே

நல்லோர் தமக்குதவி நாடாரே

xxx

மே 11 செவ்வாய் க்கிழமை

நல்லோரை அறிய வாக்கு– வாக்குநயத் தாலன்றி கற்றவரை மற்றவரை

ஆக்கைநயத் தால்அறியல் ஆகாதே

xxx

மே 12 புதன் கிழமை

தீயோர் நண்ணிய நல்லோர்க்கும் தீமையே–

நல்லொழுக்கம் இல்லார் இடம்சேர்ந்த நல்லோர்க்கும்

நல்லொழுக்க மில்லாச்சொல் நண்ணுமே

xxx

மே 13 வியாழ க்கிழமை

உண்மையை சிலரே விரும்புவர்–

சத்தி யம் எக்காலும் சனவிருத்த மாகுமே

எத்தயபொய் யார்க்கும் இதமாகும்

xxx

மே 14 வெள்ளி க்கிழமை

துயருண்டு இல்லத்தில்– மாசுபுரி

மாயா மனைவியராம் மாக்கள் மகவென்னும்

நாயால் கடிப்பித்தல் நாடு.

xxx  

மே 15 சனிக்கிழமை

விருப்பு பல்வகைத்தது–

கல்லார் பகைசேர் கலகம் விரும்புவர்

நல்லார் விரும்புவர் நட்பு.

xxx

மே 16 ஞாயிற்று க்கிழமை

. நீத்தார் நுகர்ப்பொருள் நண்ணலாகாது– கற்றருளை

வேட்ட பெரியோர்  பெருமையெலாம் வேறொன்றைக்

கேட்ட பொழுதே கெடும்.

xxx

மே 17 திங்கட் கிழமை

தீயொழுக்கம் தீமையே நல்கும்–

சீலம் குலம்அடியாள் தீண்டின்கெடும் கணிகை

ஆலிங்கனம் தனநா சமாகும்

xxx

மே 18 செவ்வாய் க்கிழமை

மணமகன் இவனாவான்-

பெண்ணுதவுங் காலைப் பிதாவிரும்பும் வித்தையே

எண்ணில் தனம்விரும்பும் ஈன்றதாய் – நண்ணிடையில்

கூரியநல் சுற்றமும் குலம் விரும்பும் காந்தனது

பேரழுகு தான்விரும்பும் கண்.

xxx

மே 19 புதன் கிழமை

. அடிய வர்பொருள் கவர்தலாகாது–

அந்தோ புரமெரித்த அண்ணலடி யார்பொருள்கள்

செந்தீயினும் கொடிய தீக்கண்டாய்

xxx

மே 20 வியாழ க்கிழமை

தீயோர் கேண்மை தீயவே பயக்கும்–

நிந்தையிலாத் துயர் வரும் நிந்தையரைச் சேரிலவர்

நிந்தையது தம்மிடத்தே நிற்குமே

xxx

மே 21 வெள்ளி க்கிழமை

தீயவர் நற்சொல் ஏற்கார்–

கன்மமே பூரித்த காயத்தோர் தம்செவியில்

தன்மநூல் புக்காலும் தங்காதே

xxx

மே 22 சனிக்கிழமை

நல்லோர் நண்ணம்பற்கு உயிருமளிப்பர்– நூலின் நெறி

உற்றோர் இடுக்கண் உயிர்கொடுத்தும் மாற்றுவரே

மற்றோர் புகல மதித்து

xxx

மே 23 ஞாயிற்று க்கிழமை

இவர்களுக்கு இவையில்லை–

ஆசைக்கில்லையாம் மானம்.

xxx

மே 24 திங்கட் கிழமை

தீயவருக்கு இடம்கொடுக்கக் கூடாது–

நன்றறியாத் தீயோர்க் கிடமளித்த நல்லோர்க்கும்

துன்று கிளைக்கும் துயர்சேரும்

xxx

மே 25 செவ்வாய் க்கிழமை

இதற்கு இதுவழகு–

கண்ணுக்கு இனிய சபைக்குமணி கற்றோனே

xxx

மே 26 புதன் கிழமை

நல்லவர் தீயவர் கல்வியின் பயன் —

வல்லவர்பால் கல்வி மதம்ஆ ணவம்போக்கும்

அல்லவர்பால் கல்வி அவையாக்கும்

xxx

மே 27 வியாழ க்கிழமை

நல்லதாயினும் எண்ணிச்சொல்லுக–

இதமகித வார்த்தை எவர்கேனும் மேலாம்

இதமெனவே கூறிலிதமன்றே

xxx

மே 28 வெள்ளி க்கிழமை

மூவகையினர் ஈகைத்தன்மை—

உத்தமர்தாம் ஈயுமிடத்து ஓங்குபனை போல்வரே

மத்திமர்தாம் தெங்குதனை மானுவரே – முத்தலரும்

ஆம்கமுகு போல்வர் அதமர் அவர்களே

தேம்கதலியும் போல்வார் தேர்ந்து.

xxx

மே 29 சனிக்கிழமை

மூவகையார் தன்மைகள்—

உற்ற மறையகத்தின் உய்க்குமவன் உத்தமனே

மற்றம் மறைபகர்வோன் மத்திமனே – முற்றிழையே

அத்தம் உறலால் புகல்வான் அதமனென

வித்தக நூலோதும் விரித்து

மே 30 ஞாயிற்று க்கிழமை

நல்லதாயினும் எண்ணிச்சொல்லுக–

இதமகித வார்த்தை எவர்கேனும் மேலாம்

இதமெனவே கூறிலிதமன்றே

xxx

மே 31 திங்கட் கிழமை

கற்றவராயினும் தீயோர் தீயவரே–

தீயவர்பால் கல்வி சிறந்தாலும் மற்றவரைத்

துயவரேன்று எண்ணியே துன்னற்க

xxx

BONUS VERSES…………………………………..

அழகைக்கொடுப்பன—

அன்னமனையாய் குயிலுக்கு ஆனவழகு யின்னிசையே

கன்னல் மொழியார்க்கு கற்பாமே – மன்னுகலை

கற்றோர்க்கு அழகு கருணையே ஆசைமயக்கு

அற்றோர்க்கு அழகு பொறையாம்.

xxx

துன்பத்திலும் நல்லவர் நல்லவராவார்–

 நலிந்தாலும் உத்தமர்பால்

நற்குணமே தோன்றும் நயந்து

xxx

tags–  மே மாத,  நற்சிந்தனை,  காலண்டர்,