தமிழ்ச் சங்கத்தில் மோதல்! (Post No.4083)

Written by London Swaminathan


Date: 15 July 2017


Time uploaded in London-6-59 am


Post No. 4083


Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

மதுரையில், சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த கடைத் தமிழ்ச் சங்கத்தில் புலவரிடையே காழ்ப்புணர்ச்சியும் பொய்யும்,புரட்டும் மிகுந்திருந்தது. இது பற்றி திருவிளையாடல் புராணத்தில் பல படலங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சொல்லப்பட்டுள்ளது.

 

1931ஆம் ஆண்டில் வெளியான திருவள்ளுவர் சரித்திரத்தில் சில சுவையான பாடல்கள் உள்ளன:

 

சங்கத்தாரை வெல்ல வேண்டி அவ்வையார் ஞானக் குறிகளால் கை சைகைகள் பண்ணி இவை என்னென்று கேட்கச் சங்கத்தார் சொல்லியது:-

இவ்வளவு கண்ணினாள் இவ்வளவு சிற்றிடையாள்

இவ்வளவு போன்ற இளமுலையாள் – இவ்வளவாய்க்

காமத் தலைவனையும் காணாது கன்றினால்

நாமத்தை காட்டுகுறி நன்கு

 

இஃது தகுதியான உத்தரவன்றென்று அக்குறிகளுக்கு ஔவை சொல்லியது

 

ஐயமிடுமின் அறநெறியைக் கைப்பிடிமின்

இவ்வளவேனும் மனத்தை இட்டுண்மின் றெய்வம்

ஒருவனே யென்ன உணரவல்  லீரேல்

அருவினைகள் ஐந்தும் அறும்

 

 

இப்படியென்று ஔவை சொல்ல சங்கத்தார் நாணமுற்று இவளை வெல்லப் படாதென்று திருவள்ளுவரைப் பார்த்து நீர் எந்த வூரென்றதற்கு அவர் சொல்லியது

எந்தவூர் என்றீர் இருந்தவூர் நீர் கேளீர்

அந்தவூர்ச் செய்தி அறியீரோ – வந்தவூர்

முப்பாழும் பாழாய் முடிவிலொரு சூனியமாய்

அப்பாலும் பாழாயறும்

 

என்றிது முதலான ஞானார்த்தமான செய் யுட்களளாலவர் வினவியவைகளுகெல் யு லா முத்தரவு சொல்ல (உத்தரவு=பதில்)

சொல்ல, இவரையும் வெல்வ தரிதென்று இடைக்காடருடனே பேச, அவர் சொல்லியது

 

ஆற்றங்கரையின் அருகிருந்த மாமரத்தில்

காக்கை யிருந்து கஃகஃகென்னக் — காக்கைதனை

எய்யக்கோல் இல்லாமல் இச்சிச் செனவெய்தான்

வையக்கோ னார்தன் மகன்

 

இது போன்ற அனேகஞ் செய்யுட்களை அவர்களாலெழுதப் படாமலும்

கற்றுக்கொள்ளப்படாமலுஞ் சொல்ல நாணித் தோற்படைந்தார்கள்

 

திருவள்ளுவ நாயனார் திருவடி வாழ்க!

xxx

நாகலிங்க முதலியார் வெளியிட்ட திருக்குறள் மூலமும் பரிமேலழகர் இயற்றிய உரையும் என்ற நுலில் திருவள்ளுவர் சரித்திரம் என்ற பகுதியில் உள்ள விஷயம், ஆண்டு 1931.

 

(நான் முன்னர் வெளியிட்ட கட்டுரைகளில் திருவள்ளுவருடன் பிறந்த ஆறு பேர் கதைகளையும், தமிழ்ச் சங்கத்தில் ஏற்பட்ட மோதல்கள் பற்றிய திருவிளையாடல் புராணக் கதைகளையும் கொடுத்துள்ளேன்)

–சுபம்–

ஆறுமுக நாவலர் – அருட்பிரகாச வள்ளலார் மோதல் (Post No3448)

Written by London swaminathan

 

Date: 14 December 2016

 

Time uploaded in London:- 11-34 am

 

Post No.3448

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

சைவ மறுமலர்ச்சியின் தந்தை ஆறுமுக நாவலர்; அவர் பணி செய்திராவிடில் இலங்கைத் தமிழர் ஏராளமானோர் கிறிஸ்தவர்களாக மதம் மாறி இருப்பர். இதே போலத் தமிழ் நாட்டில் அருட்பிரகாச ராமலிங்க அடிகள் செய்த பணி மகத்தானது. எளிய தமிழில், பாரதிக்கும் முன்னோடியாக நல்ல கவி புனைந்தவர். ஆறுமுக நாவலரும் வள்ளலாரும் பிராமணர்கள் அல்ல. இருவருக்கும் இடையேயும் வேண்டாத மோதல் ஏற்பட்டு (ஏற்படுத்தப்பட்டு) கோர்ட் வரை சென்று விட்டது. இறுதியின் ஏனோ தானோ என்று அந்த சண்டை முடிந்தது. நல்ல வேளை, இந்து மதத்துக்கு பெரிய சேதம் ஏற்படவில்லை. இருவர் புகழும் வாழ்க.

 

நான் மதுரையில் வடக்கு மாசிவீதியில் யாதவர் பள்ளியில் (யாதவா ஸ்கூல்) ‘ஐந்தாப்பு’ வரை (மதுரை பாஷை- ஐந்தாம் வகுப்பு) படித்தேன். தினசரி பிரார்த்தனை வள்ளலாரின் பாடல்தான்: “கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே……………..”

 

பின்னர் வீடு வீடாகச் சென்று நான் பஜனை செய்த காலங்களில் பாடியதும் வள்ளலார் பாடலே- “அம்பலத் தரசே அருமருந்தே, ஆனந்ததேனே அருள் விருந்தே”. என் தந்தைதான் இதைச் சொல்லிக் கொடுத்தார். அவரே எனக்கு “முன்னவனே யானை முகத்தவனே” — என்ற வள்ளலாரின் பிள்ளையார் பாட்டையும் சிறுவயதில் சொல்லிக் கொடுத்தார். 60 வருடங்களுக்கும் மேலாக இதை தினமும் சொல்லி வருகிறேன்! பள்ளிக்கூடத் தமிழ் நூலில் மனப்பாடப் பகுதியில் வள்ளலாரின் பாடல் “ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்…………”. இவ்வாறு வள்ளாலார் எம் வாழ்வில் கலந்தவர்.

 

சின்ன வயதில் சிவாஜி கட்சி — எம்.ஜி ஆர். கட்சி என்று பிரிந்து பள்ளிக்கூடங்களில் சண்டை போடுவோம். பெரியவன் ஆனபோது காஞ்சி சங்கராச்சார்யார் கட்சி- சிருங்கேரி ஆச்சார்யாள் கட்சி என்று மதுரையில் சண்டை போட்டார்கள்; என் தந்தையோ பத்திரிக்கை ஆசிரியர் என்ற முறையில் இருவரையும் ஆதரித்தவர்..

     

அதுபோலத்தான் இந்த வள்ள்லார்- நாவலர் மோதலும் என்பது எனது கணிப்பு. கீழேயுள்ள தகவல் நாவலரின் தமையானார் புதல்வர் எழுதியது. மறுதரப்பு வாதம் இருந்தால் விமர்சனப் பகுதியில் தெரிவியுங்கள்:–

 

 

 

 

–subham–

 

1915 ஜூன் 2, கண்டி முதல் கொழும்பு வரை நடந்த, பௌத்தர்- முஸ்லீம் மோதல் பாட்டுப் புத்தகம்!

Don’t Reblog it for a week. Pictures are copyrighted by someone else. Don’t use them. When you use the matter, you must not remove the author’s name and blog name.

Compiled by London swaminathan

Date : 8 September  2015

Post No. 2137

Time uploaded in London: – 9-56 am

Buddhist – Muslim Riot in Ceylon ,from Kandy to Colombo on 2nd June 1915.

Tamil Sindhu/Kummi song book on the riot (Source: British Library, London)

தமிழர்கள் தனி ரகம்! அவர்கள் அதிசயப் பிறவிகள்; உலகில் வேறு எவரும் செய்யாத செயல்களைச் செய்து வரலாறு உண்டாக்கிவிட்டனர். 1912 முதல் 1915 வரை பத்திரிக்கைகளில் எது எது தலைப்புச் செய்தியாக வந்ததோ அத்தனையையும் சிந்து, கும்மி பாடல்களாகப் பாடி, அவைகளைப் புத்தகங்களாக அச்சிட்டு, 6 பைசா முதல் 112 பைசா வரை விலை நிர்ணயித்து விற்றும் இருக்கின்றனர்.

இந்த வகையில் எனக்கு பிரிட்டிஷ் லைப்ரரியில் 20 புத்தககங்கள் கிடைத்தன. அததனையும் பழைய பழுப்பு நிற சாணித்தாள். ஆகையால் அவைகளை பிரிட்டிஷ் நூலகப் பாதுகாப்பாளர்கள் ‘’லாமினேட்’’ செய்துவிட்டனர். இது புத்தகத்தைப் பாதுகாத்தாலும் ‘காப்பி’ எடுக்கையில் மிகவும் சன்னமாக இருக்கிறது. வாசகர்கள் இதை ‘’என்லார்ஜ்’’ செய்து படிப்பது நலம்.

1915 ஆம் ஆண்டு கண்டி நகரில் சிங்கள புத்தர்கள் ஆண்டுதோறும் நடத்தும் ஊர்வலத்தை மேளதாளங்களுடன் நடத்தினர். அந்த ஊர்வலம் மசூதிக்கு அருகே வந்தவுடன், இந்தியாவில் முஸ்லீம்கள் செய்ததைப் போலவே, அங்கும் முஸ்லீம்கள் அந்த மேள தாளத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே கலகம் வெடித்தது. அதை ஆங்கில ஆட்சி திறம்பட அடக்கியதாக பாடல் சொல்லுகிறது.

((இந்தியாவிலும் இப்படி ஊர்தோறும் கலகம் வெடித்தது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் முஸ்லீம்களின் வோட்டுக்களைப் பெறுவதற்காக வாளாவிருந்தனர். ஆர். எஸ்.எஸ். இயக்கம் நாடு முழுதும் இந்து உணர்ச்சியைத் தட்டி எழுப்பியவுடன் இந்த கலகங்கள் அடங்கின. நேற்று கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே க்ருஷ்ண ஜயந்தி ஊர்வலம் நடத்தும் அளவுக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கம் வளர்ந்துவிட்டது!))

வேறு எந்த மொழியிலும் இப்படி சூடான பத்திரிக்கைச் செய்திகளைப் பாடலாகப் போட்டு, புத்தகமாக அச்சடித்து, விலைக்கும் விற்றிருப்பாளர்களா என்பது ஐயப்பாடுடையதே.

மைலாப்பூர் தேர்த் திருவிழாவில் சிறுவர்கள் அடிபட்டது முதல், மதுரை அருகே ரயில் மோதிய விபத்து உள்பட கொலை, கொள்ளை, வெள்ளம், கலகம் எல்லாவற்றையும் பற்றிப் பாட்டுப் புத்தகங்கள் உள்ளன. இன்று ஒரு புத்தகத்தைக் காண்போம்:–

IMG_7212 (2)

IMG_7213 (2)

IMG_7214 (2)

IMG_7215 (2)

IMG_7216 (2)

IMG_7217 (2)

IMG_7218 (2)

IMG_7219 (2)