Research Article written by london swaminathan
Date: 28 May 2016
Post No. 2847
Time uploaded in London :– 9-48 AM
(Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
Contact ; swami_48@yahoo.com
யமனுக்கு 14 பெயர்கள்! தர்மராஜன் என்று ஏன் பெயர்?
அமரகோசம் என்ற சம்ஸ்கிருத அகராதி உலகில் தோன்றிய முதல் அகராதி—நிகண்டு ஆகும். ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இந்த அகராதியில் பிரம்மாவுக்கு 29 பெயர்கள் (21 நவம்பர் 2014ல் நான் எழுதிய கட்டுரையில் விவரம் காண்க) கொடுக்கப்பட்டுள்ளன. ஏனைய கடவுளருக்கு
சிவனுக்கு 52 பெயர்களும்
விஷ்ணுவுக்கு 46 பெயர்களும்
பலராமனுக்கு 17 பெயர்களும்
அம்பாளுக்கு 21 பெயர்களும்
லெட்சுமிக்கு 14 பெயர்களும்
கணபதிக்கு 8 பெயர்களும்
முருகன்/ ஸ்கந்தனுக்கு 17 பெயர்களும்
இந்திரனுக்கு 35 பெயர்களும்
அக்னிக்கு 34 பெயர்களும்
யமனுக்கு 14 பெயர்களும்
வருணனுக்கு 5 பெயர்களும்
வாயுவுக்கு 20 பெயர்களும்
குபேரனுக்கு 17 பெயர்களும்
சூரியனுக்கு 37 பெயர்களும்
மன்மதனுக்கு 19 பெயர்களும்
ஜினதேவனுக்கு 18 பெயர்களும்
புத்தபகவனுக்கு 7 பெயர்களும்
கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கு ஒன்பதாம் நூற்றாண்டு முதல் பல உரைகள் எழுந்தன. அவைகளைப் படித்தால் சம்ஸ்கிருதத்தையும் இந்து மதத்தையும் “ஓரளவுக்கு அறிந்ததற்குச் சமம்”. (இவர்களில் இந்திரன், அக்னி, குபேரன், வாயு, பிரம்மா பற்றிய பெயர்ப் பட்டியலையும் அதன் விளக்கங்களையும் இங்கே எழுதிவிட்டேன்)
ரம்பையின் காதல் என்ற தமிழ் திரைப்படத்தில் ஒரு அருமையான பாடல்:–
சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே
ஜாதியில் மேலோர் என்றும் தாழ்ந்தவர் தீயோரென்றும் பேதமில்லாது
எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு
எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு
தொல்லையின்றினே தூங்கிடும் வீடு
தொல்லையின்றினே தூங்கிடும் வீடு
உலகினிலே இது தான் நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே
ஆண்டி எங்கே அரசனும் எங்கே ஆண்டி எங்கே அரசனும் எங்கே
அறிஞன் எங்கே அசடனும் எங்கே அறிஞன் எங்கே அசடனும் எங்கே
ஆவி போன பின் கூடுவார் இங்கே ஆவி போன பின் கூடுவார் இங்கே
ஆகையினால் இது தான் நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே
சேவை செய்யும் தியாகி ஸ்ருங்கார போகி ஆ..ஆ..ஆ…ஆ.
சேவை செய்யும் தியாகி ஸ்ருங்கார போகி
ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி
ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி
எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே
எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே
உண்மையிலே இது தான் நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே
சமரசம் உலாவும் இடமே சமரசம் உலாவும் இடமே
Song: samarasasm ulavum – பாடல்: சமரசம் உலாவும் இடமே
Movie: Rambaiyin kaathal – திரைப்படம்: ரம்பையின் காதல்
Singers: Sirkazhi Govindarajan – பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
Lyrics: Marudhakasi – இயற்றியவர்: மருதகாசி
Music: T.R.Pappa – இசை: டி.ஆர். பாப்பா
Year: – ஆண்டு: 1956
((நன்றி;—Read more at http://www.thamizhisai.com))
Thanjavur Big Temple painting of Yama, Markandeya and Lord Shiva
இந்துக்கள் ஏன் தினமும் மரணதேவனை (யமனை) வழிபடுகிறார்கள் என்ற எனது கட்டுரையில் (Why do Hindus worship God of Death (my research article posted on 29 July 2013) பிராமணர்கள் தினமும் மூன்று வேளை செய்யும் சந்தியாவந்தனத்தில் தெற்கு திசையை நோக்கி நின்று கொண்டு யமதர்மராஜாவை வணங்குவதையும் அதில் யமனைப் போற்றி கீழ்கண்ட பெயர்களை சொல்லுவதையும் எழுதியுள்ளேன்:–
யமாய, தர்மராஜாய, ம்ருத்யவே, அந்தகாய, வைவஸ்வதாய, காலாய, சர்வபூதக்ஷயகராய, ஔதும்பராய, தத்னாய, நீலாய, பரமேஷ்டினே, வ்ருகோதராய, சித்ராய, சித்ரகுப்தாய.
இப்பொழுது அமரகோஷத்தில் உள்ள 14 பெயர்களைக் காண்போம்:–
தர்மராஜ:=அறத்தில் வழுவாதவன்; யார், யார் என்னென்ன செய்தார்களோ அதற்கேற்ப பலன் தருபவன்
பித்ருபதி:= இறந்தவர்களை பித்ருக்கள், என்றும் நீத்தார் என்றும் அழைப்போம்; அவர்களுக்குத் தலைவன்
சமவர்த்தி= சமமாகப் பார்ப்பவன் (ஆண்டியும் ஒன்றே; அரசனும் ஒன்றே; சமரசம் உலாவும் இடம் சுடுகாடு.)
“முடி சார்ந்த மன்னரும் பிடிசாம்பராய்ப் போவர்.”
பரேதராட் = பர லோக ராஜா
க்ருதாந்த: = முடிவை உண்டாக்குபவன் (க்ருத+ அந்த)
யமுனாப்ராதா = யமுனையின் சகோதரன் (சூரியனுடைய புத்ரி, புத்ரர்கள் யமுனா, சனி, யமன்)
சமன: = கட்டுப்படுத்துபவன்
யமராட்= கட்டுப்படுத்துவதில் மன்னன்/ ராஜா
யம: = கட்டுப்படுத்துபவன் யம, நியமம் முதலிய சம்ஸ்க்ருத சொற்கள் கட்டுப்பாடு, ஒழுங்கு முதலிய பொருட்களில் கையாளப்படுகின்றன.
கால: = காலத்தைக் கணக்கிடுபவன்
தண்டதர: = யமனின் கையிலுள்ள ஆயுதம் தண்டம்; அதால் தண்டிப்பவன்
ஸ்ராத்ததேவ:= சிராத்தத்தின் (திதி) தலைவன்
வைவஸ்வத: = விவஸ்வான் (சூரியன்) புத்ரன்
அந்தக: = வாழ்க்கையை முடித்து வைப்பவன்
இவைகளில் தர்மராஜன், சமவர்த்தி என்ற இரண்டு பெயர்களும் அழகான பெயர்கள். மரணத்தில் யாருக்கும் சலுகை காட்டாதவன். அதே நேரத்தில் அவரவர் பாபபுண்யங்களை கணக்கிட்டு நீதி தவறாமல் தீர்ப்பு வழங்குபவன்.
சித்ர (வரைபடம்), சித்ரகுப்த (மறைவான படம்):– இவ்விரு பெயரும் யமனின் கணக்குப்பிள்ளைகள்; ஒருவர் இறந்தவுடன் பாப, புண்ணிய பதிவேட்டை எடுத்துக் கொண்டு வந்துவிடுவர் என்று சொல்லுவர். உண்மையில் நம்முடைய எண்ணங்கள் ஒவ்வொன்றும் ஒரு உருவத்தை உண்டாக்குகிறது. அதுதான் சித்ரம், சித்ர குப்தம். மனதினால் தீங்கு செய்தாலும் அது சித்திரமாக உருவாகி கணக்குப் புத்தகத்தில் பதிவாகி, இறுதித் தீர்ப்பன்று தக்க தண்டனைகளைப் பெற்றுத் தரும். அதே போல நல்ல எண்ணங்கள் நற்பலனைத் தரும். இந்துக்கள் எந்த தத்துவத்தையும் கதை ரூபத்தில், உவமை ரூபத்தில் சொல்லுவதில் வல்லவர்கள்!
இந்துக்கள் யமனை தினமும் வணங்குவதால் மரண பயம் நீங்கி விடுகிறது. பிறந்தோர் எல்லாம், இறப்பது இயற்கை என்ற நியதியையும் நினைவுபடுத்துகிறது யம வந்தனம்.
–சுபம்–
You must be logged in to post a comment.