கழிந்த இரவு மீண்டும் வராது!

ராமாயண வழிகாட்டி

அத்தியாயம் – 3 

By ச.நாகராஜன்

 

கழிந்த இரவு மீண்டும் வராது!

 

அத்யேதி ரஜனி யா து  ஸா ந ப்ரதிநிவர்ததே I

யாத்யேவ யமுனா பூர்ணா சமுத்ரமுதகாகுலம் II

 

யா ரஜனி – எந்த இரவு;

அத்யேதி – கழிந்து விடுகிறதோ

ஸா து – அது எப்படியும்

ப்ரதிநிவர்ததே ந – திரும்புகிறதில்லை

பூர்ணா யமுனா- பிரவாகமெடுத்தோடும் யமுனா நதியும்

உதகாகுலம் – ஜலங்களுக்கெல்லாம் சாஸ்வத

வாசஸ்தலமான

சமுத்ரம் – சமுத்திரத்திற்கு

யாதி ஏவ – சென்றே விடுகிறது.

 

பொங்கிப் பெருகும் யமுனா நதி எப்படிக் கடலைச் சென்று அடைகிறதோ அதே போல கழிந்த இரவு மீண்டும் வராது.

                     அயோத்யா காண்டம் 105ஆம் ஸர்க்கம் 19ஆம் ஸ்லோகம்

 

பரதன் ராமரிடம் ராஜ்யத்தை ஏற்க வேண்டிய போது ராமர் பித்ருவாக்கிய பரிபாலனத்தைச் சொல்லும் போது கூறியது இது.

*************

சூரிய கிரணங்கள் செல்கின்றன; ஆயுளும் குறைகிறது!

 

அஹோராத்ராணி கச்சந்தி  சர்வேஷாம் ப்ராணிநாமிஹ I

ஆயும்ஷி க்ஷபயந்த்யாஷு க்ரீஷ்மே ஜலமிவாஷவ: II

 

இஹ அஹோராத்ராணி – இவ்வுலகில் அஹோராத்திரி

கச்சந்தி அம்சவ: – செல்லுகின்ற சூரிய கிரணங்கள்

க்ரீஷ்மே ஜலம் இவ – கோடைகாலத்தில் ஜலத்தைக் குறைப்பது போல

சர்வேஷாம் ப்ராணிநாம் – சமஸ்தமான பிராணிகளுடைய

ஆயும்ஷி  ஆஷு க்ஷபயந்தி – ஆயுள்களையும் விரைவில் குறைக்கின்றன

அஹோராத்திரியில் சூரிய கிரணங்கள் செல்லும் போது கோடைக்காலத்தில் ஜலத்தைக் குறைப்பது போல அனைத்து உயிர்களின் ஆயுளையும் குறைக்கின்றன.

 

அயோத்யா காண்டம் 105ஆம் ஸர்க்கம் 20ஆம் ஸ்லோகம்

 

பரதன் ராமரிடம் ராஜ்யத்தை ஏற்க வேண்டிய போது ராமர் பித்ருவாக்கிய பரிபாலனத்தைச் சொல்லும் போது கூறியது இது.

 

நாளென ஒன்றுபோல் காட்டி உயிர் ஈரும்

வாளது உணர்வார்ப் பெறின் 

                   திருக்குறள் நிலையாமை குறள் 334

 

வள்ளுவரின் திருக்குறள் இங்கு ஒப்பு நோக்கி இன்புதற்குரியது.

                        ****************** 

 

 

யமன் கூடவே வருகிறான்!

 

ஸஹைவ ம்ருத்யுர்வ்ரஜதி ஸஹ ம்ருத்யுர்நிஷீததி I

கத்வா சுதீர்க்கமத்வானம் ஸஹ ம்ருத்யுர்நிவர்ததே II

 

ம்ருத்யு ஸஹ ஏவ வ்ரஜதி –யமன் கூடவே நடக்கிறான்

ம்ருத்யு ஸஹ நிஷீததி – யமன் கூடவே வசித்து வருகிறான்

ம்ருத்யு சுதீர்க்க – யமன் மிக நீண்ட

அத்வானம் கத்வா – வழியில் சென்று

ஸஹ நிவர்ததே- கூடவே திரும்புகிறான்

 

அயோத்யா காண்டம் 105ஆம் ஸர்க்கம் 22ஆம் ஸ்லோகம்

பரதன் ராமரிடம் ராஜ்யத்தை ஏற்க வேண்டிய போது ராமர் பித்ருவாக்கிய பரிபாலனத்தைச் சொல்லும் போது கூறியது இது.

 

நிலையாமையை வற்புறுத்தி தர்மத்தைப் பின்பற்ற வேண்டியதை ராமர் வலியுறுத்திக் கூறும் அற்புதமான ஸ்லோகங்களில் மூன்றை மேலே பார்த்தோம்

*************