இந்திய நூல்களில் சிகை அலங்காரம் -Part 2 (Post No.3207)

chidambaram-1

Picture: சிதம்பரம் தீட்சிதர்

Written by London Swaminathan

 

Date: 1 October 2016

 

Time uploaded in London: 10-12 AM

 

Post No.3207

 

Pictures are taken from various sources; thanks.

 

Contact swami_48@yahoo.com

 

 

கட்டுரையின் முதல் பகுதியைப் படித்து விட்டு இரண்டாம் பகுதியைப் படித்தால் பொருள் நன்கு விளங்கும்.

dikshitar-priests-festival-ceremony

Picture: சிதம்பரம் தீட்சிதர்கள்

கேசம்=முடி

 

கேச என்னும் சொல் மயிர் என்பதைக் குறிக்க அதர்வண வேத காலத்திலிருந்து பயன்படுத்தப்படுகிறது. அநேகமாக கேசம் என்றால் என்ன என்பது எல்லா இந்தியருக்கும் தெரியும். முடி வளர் தைலங்கள் அனைத்தும் ‘கேச’ என்ற பெயருடனேயே துவங்கும். நீண்ட முடி வளர்த்தால் பெண்போல இருப்பான் என்று வேதம் கூறுகிறது. ஆனால் அடர்த்தியான முடிக்கான பிரார்த்தனை  அதர்வண வேதத்தில் உள்ளது. சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பயிலப்பட்ட சொல் இன்றும் அதே பொருளில் நம்மிடையே புழங்குவது — தமிழ் நட்டிலும் — புழங்குவது குறிப்பிடத்தக்கது.

 

 

க்ஷுரா= Razor

 

சவரம் செய்தல் என்பது பிளேட் என்று பொருள்படும் க்ஷுரா’ (சவரக் கத்தி) என்ற சொல்லிலிருந்தே வந்தது. இது ரிக் வேதத்தில் மூன்று இடங்களில் வருகிறது. ஆனால் முயல் விழுங்கிய ‘க்சுரா’ என்று ஒரு மந்திரத்தில் வருவதால் அந்த இடத்தில் சவரக் கத்தி என்பது பொருத்தமாக இல்லை.

 

வேதத்துக்கு சங்க கால தமிழர்கள் “மறை” என்ற அழகான சொல்லை தெரிவு செய்துள்ளனர். வேத காலப் புலவர்கள் எதையும் நேரடியாகச் சொல்லாமல் மறை பொருளில் சொல்லுவதால் தமிழன் இச்சொல்லைக் கண்டுபிடித்து வைத்தான். ஆக முயல் விழுங்கிய பிளேடு என்பது ஏதோ ரகசியப் பொருளுடைத்து என்றே நான் கருதுகிறேன்.

 

சங்கத் தமிழ் இலக்கியம் மயிர்குறை கருவி (Scisors or Shaving Razor) என்ற சொல்லைப் பயிலுகிறது (பொரு.29, பலைக் கலி.31,35)

 

தட்சிண கபர்தா Rig Veda (7-33-1) (வலது பக்க குடுமி)

மலையாள தேசத்தில் நம்பூதிரி பிராமணர்களும், சோழ தேசத்தில் முன் குடுமிச் சோழியர், சிதம்பரம் தீட்சிதர்களும் தலை முடி வைத்திருக்கும் தனிப் பாணியை (Style) இன்றும் காணலாம். இது வேத காலத்திலேயே துவங்கியதற்கு தட்சிணதாஸ் கபர்தா என்ற சொல் சான்று தரும். ஒரு வழக்கம் பல்லாயிரம் ஆண்டுகளாக இருப்பது மிகவும் அதிசயமானது. இது தென்னாட்டு பார்ப்பனர்களின் பழமையையும் காட்டும்.

 

nampudiri

படம்: நம்பூதிரி பிராமணர்

பலித (நரைமுடி)

ரிக்வேத (1-144-4, 1-164-1, 3-55.9) காலம் முதல் இச்சொல் பயிலப்படுகிறது. ஜமதக்னி முனிவரின் வழிவந்தோர் நரை அடைவதில்லை என்றும் பாரத்வாஜர் தனது கிழப்பருவத்தில் ஒல்லியாக ஒடிந்து, நரை முடியுடன் காணப்பட்டதாகவும்  வேதங்கள் வருணிக்கின்றன.

 

சதபத பிராமனணம் முதலில் தலிலையில் தோன்றும் நரை முடி பிறகு உடலிலும் கைகளிலும் பரவுவதை பேசும்

 

இந்த நரை முடி பற்றிய விஷயம் புறநானூற்றிலுள்ள (பாடல் 191) புகழ்பெற்ற பிசிராந்தையாரின் பாடலை நினைவு படுத்தும்.

 

ஐயா, தொண்டுக் கிழமாகிவிட்டீரே; முடி மட்டும் கருக்கவில்லையே; ஏதேனும் கூந்தல் வளர் தைலம் தடவுகிறீரோ என்று எல்லோரும் வியப்புடன் பார்க்கின்றனர். அவர் சொல்லுகிறார்:- ஐயன்மீர் என் வீட்டிலும் ஓம் சாந்தி, நாட்டிலும் ஓம் சாந்தி, என் மனதிலும் ஓம் சாந்தி; இப்படி சாந்தி நிலவுகையில் முடி எப்படி நரைக்கும்? என்று பாடுகிறாரார்:–

 

யாண்டு பலவாக நரையில வாகுதல்

யாங்கா கியரென வினவுதிராயின்

மாண்டவென் மனைவியொடு மக்களும் நிரம்பினர்;

யான்கண் டனையர் என் இளையரும்: வேந்தனும்

அல்லவை செய்யான், காக்கும்; அதன் தலை

ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச்

சான்றோர் பலர் யான் வாழும் ஊரே

——(புறநானூறு ,பாடல் எண். 191)

 

பொருள்:-

நுமக்குச் சென்ற ஆண்டுகளோ  பலவாயின; இருந்தும் நரைமுடி காணவில்லை. இது எப்படி? என்று கேட்கிறீர்களா?

என் மனைவி நல்லவள்; என் பிள்ளைகள் கெட்டிக்காரர்கள்; என்னிடம் பணிபுரியும் ஏவலரோ நான் ‘எள் என்றால் எண்ணை யாக’ நிற்பர்; குறிப்பறிந்து ஒழுகும்  தன்மையர். என் அரசன், எந்த தவற்றையும் செய்யான்; இதற்கெல்லாம் மேலாக என் ஊரிலுள்ள அறிஞர்கள் புலன்களை வென்று, உயர்ந்த குறிக்கோள் உடையவர்கள். (எனக்கு கலையே இல்லை; கவலை இல்லாதோருக்கு நரை முடி வராதே!)

holy-man-of-india

–subham–