யூத மத ‘ரப்பை’ ஜோக்குகள்! (Post No.4920)
WRITTEN by London Swaminathan
Date: 16 April 2018
Time uploaded in London – 11-03 am (British Summer Time)
Post No. 4920
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.
இது பழைய ப்ரஷ்யாவில் (ஜெர்மனி, போலந்தின் பகுதிகள் கொண்ட நாடு) நடந்தது. Frederic the Great பிரெடெரிக் தெ க்ரேட் (1740-86) என்று அழைக்கப்படும் மன்னரிடம் ஒரு ப்ராடெஸ்டன்ட் (protestant bishop) பிஷப் சென்றார்.
“மன்னரே எனது சமயத்துக்கு ஒரு அலுவலகம் தேவை”.
“அடக் கடவுளே! இப்பொழுதுதானே அந்த இடத்தை வேறு ஒரு பிரிவுக்குக் கொடுத்தேன். ஆனால் கத்தோலிக்க மதப் பிரிவுக்கான ஆபீஸ் இடம் காலியாக இருக்கிறது.
அப்படியா! என்று சொல்லிவிட்டு ப்ராடெஸ்டன்ட் சமயப் பிரிவு பிஷப் போய்விட்டார்.
ஒரு வாரம் கழித்து அவர் திரும்பி வந்தார்.
“மன்னரே! உண்மைக் கடவுளைக் கண்டு விட்டேன். நான் இப்பொழுது கத்தோலிக்க குருவாக மாறிவிட்டேன். நீங்கள் சொன்னீர்கள், கத்தோலிக்கப் பிரிவு அலுவலகம் காலியாக இருப்பதாக. அடியேனுக்கு அருள்கூர்ந்து அதைக் கொடுக்கலாமே.”
மஹா ப்ரெடெரிக் சொன்னார். “என்ன துரதிருஷ்டம் உங்களுக்கு! அதுவும் போய்விட்டதே. ஆனால் ஒரு நல்ல செய்தி. நேற்று யூதமத ரப்பை (சமய குரு, அறிஞர், யூத சட்ட நிபுணர்) இறந்து விட்டார். இப்பொழுது அவர்களுடைய சைனகாக் (கோவில்) என் கையில் உள்ளது.
ஒருவேளை நீங்கள் யூதமத………………………………
அவர் போய்விட்டார்.
xxx
Bronx Zoo ப்ரான்க்ஸ் நகர மிருகக் காட்சி சாலை
ஒருவர் ப்ரான்க்ஸ் நகர மிருகக் காட்சி சாலையில் வேலை கேட்டு வந்தார். அவர் ஒரு பருமனான ஐரிஷ்காரர். அவரிடம் வேலை வாய்ப்பு மனுவைக் கொடுத்து,
“அன்பரே, இதைப் பூர்த்தி செய்யுங்கள்; பின்னர் நிரப்பிய மனுவை எங்களிடம் கொண்டு வாருங்கள்” என்றனர் அதி காரிகள்.
அவரும் பூர்த்தி செய்தார்.
ஒரு கேள்வி ரபிஸ்(Rabies) என்றால் என்ன? அதை எப்படி தடுப்பீர்கள்?
அவர் எழுதினார்,
ரப்பைஸ் என்பவர் யூத சமய நிபுணர்; அவர் வந்தால் யாரும் தடுக்க முடியாது!
ரபிஸ் (Rabies) என்பது வெறிநாய்கள் மற்றும் மிருகங்களின் எச்சில் மூலம் பரவும் கொடிய வைரஸ் நோய்; மரணம் கூட வரும்; ரப்பைஸ் (Rabbis) என்பவர் யூத சமய சட்ட நிபுணர்கள்; சமய வித்தகர்)
விலங்கியல் பூங்காவின் மனுவை நிரப்புகிறோம் என்ற உணர்வே இல்லாமல் பொருத்த மற்ற பதிலை எழுதினார் ஐரிஷ்காரர்!!!
xxx
ஒரு யூத மத நபர் பின்ஸ்க் (Pinsk) நகரில் இருந்து மின்ஸ்க் (Minsk) நகருக்கு வேலைக்குப் போனார். ஆறு மாதம் ஆகிவிட்டது வெள்ளிக்கிழமை மாலை வேளை; நண்பரிடம் விடைபெற்றார்.
அடக்கடவுளே! நாம் யூதர்கள்! வெள்ளி மாலை முதல் சனி மாலை வரை Sabbath சப்பத் என்பது மறந்துவிட்டதா? நீ மின்ஸ்க் நகருக்குப் பயணம் செய்தால், அது அபச்சாரம். என்னுடன் தங்கி விட்டு மெதுவாகப் போகலாம்.
அவர் சொன்னார்,
“இதோ பார், பிள்ளைக்குட்டி பெண்டாட்டியை விட்டு வந்து ஆறு மாதம் ஆகிவிட்டது. எனக்கு வார இறுதி விடுமுறைதான் பெரிது; சப்பத் அல்ல.
அட நீ ஒன்று ஆறு மாதம் பிரிந்து இருந்து விட்டாய்! 24 மணி நேரம் கூட இருந்தால் குடி முழுகிப் போய்விடுமா? பெரிய வீடு இருக்கிறது. இங்கே நல்ல யூத மத சம்ப்ரதாய உணவு கிடைக்கும்; வா, உள்ளே என்று தர தர என்று இழுத்து, அறைக்குள் விட்டார்.
அவரும் வேண்டா வெறுப்பாக அங்கே தங்கினார். 24 மணி நேரத்துப்பின் புறப்பட்டார். அவரது நண்பரோ உள்ளே மீண்டும் இழுத்துச் சென்று இன்னும் ஒரு நாள் தங்கிவிட்டுப் போ என்றார்.
மீண்டும் அதே பல்லவி; என் பிள்ளைக்குட்டி,பெண்டாட்டி…..
“சீ போ; ஒரே ஒரு நாள் இரு”.
அவரும் மிகவும் கஷ்டப்பட்டு ஒரு நாள் இருந்தார்.
மறு நாள் வீட்டை விட்டு ஓடிவிடத் தயாராக இருந்த அவர் நண்பரிடம்; இப்பொழுது திருப்திதானே? நான் பின்ஸ்க் நகருக்குப் புறப்படுகிறேன் என்றார்.
கட்டாயம் போகலாம், நண்பா! இதோ பில்! இரண்டு நாள் சாப்பாடு, தங்குமிடச் செலவு!
அதைப் . பார்த்தவுடன் அவருக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. ஆகாஸத்துக்கும் பூமிக்கும் குதித்தார்
இது என்னையா அநியாயம்! நீ என்ன கொள்ளைக்கார பிஸினஸ் நடத்துகிறாயா?
ஊருக்குப் போக எத்தனித்த என்னை வலுக்கட்டாயமாக இழுத்து உள்ளே தள்ளினாய். மீண்டும் புறப்பட்டபோது இன்னொரு நாள் விருந்தினராக இரு என்றாய்? இப்பொழுது என்ன மூஞ்சிக்கு பில்?
இருவருக்கும் இடையே பயங்கர கார சார வாதம். அப்பொழுது இடம் கொடுத்து பில்லும் கொடுத்த நண்பர் சொன்னார். இரு நான் மின்ஸ் நகர ரப்பையைக் கூப்பிடுகிறேன் அவர் என்ன சொல்கிறார் என்று கேள்- என்றார்.
அவரும் சம்மதித்தார்; நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்.
ரப்பையும் வந்தார்; நீண்ட தாடியைப் பல முறை உருவித் தடவிக் கொடுத்தார். சொன்னதையே திரும்பத் திரும்பக் கேட்டார். பல முறை கேட்ட பின்னர், நீ பணம் கொடுத்தே ஆக வேண்டும் என்றார்.
இவரோ மறுத்தார்; நியாயமே இல்லை என்று வாதாடினார்.
இறுதியில் மனைவிமக்களைக் காண வேண்டும் என்ற பேரவாவில், சரி நாசமாய்ப் போய்த் தொலை; இந்தா உன் பணம்; எழுத்து மூலம் ரசீது கொடு; என்றார்.
இடம் கொடுத்த நண்பரும் அதை வாங்கிக் கொண்டு, ரப்பை வெளியே போனவுடன் ரஸீதையும் பணத்தையும் திருப்பிக் கொடுத்தார்.
பின்ஸ்க் நகர நண்பருக்கு மேலும் ஆத்திரம் பொங்கியது.
என்ன மயி===== க்கு இவ்வளவு நேரம் என்னிடம் பணம் கேட்டாய்? ஏன் இப்பொழுது திருப்பித் தருகிறாய்?
அன்பரே! இந்த ஊர் Rabbi ரப்பை எவ்வளவு முட்டாள் என்பதை காட்டத்தான் இப்படிச் செய்தேன்.
இவருடன்தான் நாங்கள் தினமும் மாரடிக்கிறோம்.
நண்பருக்கு அழுவதா சிரிப்பதா- என்று தெரியவில்லை!
குட் பை Good Bye என்று சொல்லி விட்டு பின்ஸ்க் நகருக்கு ஓடினார்- ஓடினார்- ஓடிக்கொண்டே இருந்தார்.
சுபம்-