RESEARCH ARTICLE by London swaminathan
Date: 6 JULY 2018
Time uploaded in London – 7-26 am
(British Summer Time)
Post No. 5187
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
நேற்றைய கட்டுரையில் புறநானூறு, அகநானூறு, பெரும்பாணாற்றுபடை முதலிய சங்ல நூல்களில் காணப்படும் யூபம் எனும் வேள்வித் தூண் பற்றிய செய்திகளைக் கண்டோம். ரிக் வேத ஸம்ஸ்க்ருதச் சொல்லை புறநானூற்றுப் புலவர்கள் தயக்கமின்றி தமிழ் பாக்களில் அள்ளித் தெளித்திருப்பதையும் சுவைத்தோம். இன்று எண்-17 க்கும் யூபத்துக்கும் உள்ள தொடர்பையும் ராவணன் மகன் மேகநாதன் நூற்றுக் கணக்கில் யூபங்கள் நட்டதையும் காண்போம்.
முதுகுடுமிப் பெருவழுதியைப் பாராட்டிய நெட்டிமையார், “நீ வென்ற பகைவர்கள் எண்ணிக்கை அதிகமா? அல்லது நீ செய்த யாகங்களும், அதன் காரணமாக நட்ட யூபத் தூண்களும் அதிகமா? என்று வியந்தார். அவனுக்குப் போட்டி ராவணன் மகன் மேக நாதன். அவனூடைய யாக பூமியில் நூற்றுக் கணக்கான யூப ஸ்தம்பங்கள் இருந்ததாக வால்மீகி ராமாயணத்தின் உத்தரகாண்டம் செப்பும்.
யூபம் என்பது இருவகைப்படும் ஒன்று அலங்காரத்துக்காக யாகப் பந்தல்களில் நடப்படும் தூண்கள். மற்றொன்று வேள்விக்காக நடப்படும் யூபம். இது 17 முழம் அளவு உடையது.
ஏன் 17 முழம்?
இது ஒரு மர்மமான எண்; வேதத்தில் பல இடங்களில் இது காணப்படுகிறது. வாஜபேய யாகத்தில் 17 குதிரை ரதங்களின் போட்டி நடைபெறும் ஏனெனில் 17 என்பது பிரஜாபதியின் எண் என்றெல்லாம் விளக்கப்படுகிறது (எனது முந்தைய கட்டுரைகளில் விளக்கம் உளது)
அது மட்டுமல்ல இந்த 17-க்கும் அடி முதல் நுனி முடிய 17 பெயர்களும் இருக்கின்றன. (எனது ஆங்கிலக் கட்டுரையில் பெயர்கள் உள; கண்டு மகிழ்க)
பால காண்டத்திலும் (14-22) யூபம் பற்றிய சுவையான செய்திகள் உண்டு.
பால காண்டத்தில் அஸ்வமேத யாகம் பற்றிய செய்திகளில் 21 கம்பங்கள் நடப்பட்டதாக வால்மீகி பாடுகிறார். அதன் உயரம் 21 முழம் என்பார்.
ஏன் 21?
பிராஹ்மணர்கள் முத்தீ வழிபடுவோர். அதாவது ஆஹவனீயம், கார்கபத்யம், தக்ஷிணாக்னி என்ற முத்தீயை வழிபடுவதால் ஒவ்வொன்றுக்கும் ஏழு ரிஷிகள் வீதம் (ஸப்த ரிஷி 3×7= 21) 21 நடப்பட்டதாம்.
யூபஸ்தம்பத்தை– வேள்வித்தூணை– புத்தாடை கட்டி அலங்கரித்து அதன் மேல் பழக்குலைகள், இலை தழை தோரணங்கள் கட்டுவராம். யூப ஸ்தம்பத்தின் இடை, நடு, அடி, முடி ஆகியவற்றுக்குப் பிரத்யேக மான ஸம்ஸ்க்ருதப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
முதல் கட்டுரையில் யூபம் நட்ட தமிழ் மன்னர்களின் பெயர்களைக் கண்டோம். இந்தோநேஷியவில் மூலவர்மன், அஸ்வ வர்மன், குண்டுங்கா பெயர்களைக் கண்டோம். ராஜஸ்தான், உத்தரப் பிரதேச யூபங்களில் குஷாண, மாளவ, மோகாரி அரச குடும்பங்களின் பெயர்களும் விக்ரம, குஷாண, க்ருத யுக ஆண்டுகளின் பெயர்களும் காணப்படுகின்றன.
பொது ஆண்டு 102 முதல் மூல வர்மனின் பொ.ஆ.400 வரை ஆண்டுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. இது இந்துக்களின் வரலாற்று உணர்வைக் காட்டும்.
இதில் பிராஹ்மணர்களுக்குக் கொடுத்த தக்ஷிணையும் இடம்பெறுகிறது. இந்தோநேஷியா நாட்டில் மூல வர்மன் நடத்திய யாகத்தின் பெயர் பஹுசுவர்ணகம். இதில் ஐயர்களுக்கு தங்கம் தரப்படும்.
இது வால்மீகி ராமாயணம் பால காண்டத்திலும் (1-95) உளது; ஆக வால்மிகீ ராமாயணம் சொல்வதும் கல்வெட்டு சொல்வதும் வரலாற்று உண்மைகளே!
யூபம் என்ற சொல்லை யாதவ ப்ரகாஸரின் ‘வைஜயந்தி’ எனும் ஸம்ஸ்க்ருத அகராதி நன்கு விளக்குகிறது.
யூபம் பற்றிய அலங்காரம், தோற்றம், எண்ணிக்கை, அதன் தாத்பர்யங்கள் ஆகியவற்றைக் காண்கையில் இது யாக பலிக்கான தூண் அல்ல, பெரிய தத்துவங்களை விளக்க வந்த வேள்வித்தூண் என்பது குன்றிலிட்ட விளக்கு போல விளங்கும். பலிக்கான மிருகம் தூணிலிருந்து அவிழ்த்து விடப்பட்ட பின்னரே யாகம் நடந்ததையும் மாவு ரூபத்தில் மிருக பொம்மைகள் யாகத்தீயில் இடப்பட்டதையும் வியாக்யானங்கள் விளக்குகின்றன.
அவையனத்தையும் மெய்ப்பிக்கிறது 17, 21 முதலான மர்ம எண்கள். வெறும் பலிக்கு ஒரு தூண் என்றால் இவ்வளவு விளக்கம் வந்திராது.
காஞ்சி சுவாமிகள் 400 வகை யாகங்கள் இருப்பதாக்ச் சொன்ன விஷயத்தை தனிக் கட்டுரையில் முன்னர் தந்தேன். இதோ மேகநாதன் செய்த 7 யாகங்கள்:
அக்னிஷ்டோம
அஸ்வமேத
பஹுஸுவர்ணக
ராஜசூய
கோமேத
வைஷ்ணவ
மஹேஸ்வர
(வால்மீகி ராமாயணம், உத்தரகாண்டம் 25-8)
வாழ்க யூப ஸ்தம்பம்! வளர்க தமிழ்!!
OLD ARTICLE
Mysterious Number 17 in the Vedas! (Post No.3916) | Tamil and …
tamilandvedas.com/2017/05/17/mysterious-number…
tamilandvedas.com/2014/03/06/400-types-of-yagas…
Prince Charles and Camilla Parker with Swami Chidananda Saraswati at Rishikesh taking part in a Yajna. “The Brahmin spoiled himself and spoiled others. By …
tamilandvedas.com/tag/pancha-maha-yajnas
Posts about Pancha Maha Yajnas written by Tamil and Vedas. about; … Prince Charles doing Yajna in … called also Veda-yajnah,Sacrifice to Brahman or the Vedas.
–சுபம்–