சங்க இலக்கியத்தில், ரிக் வேதத்தில் யூப நெடுந்தூண் (Post No.4943)

 

Yupa is on seen in the right.

சங்க இலக்கியத்தில், ரிக் வேதத்தில் யூப நெடுந்தூண் (Post No.4943)

 

 

RESEARCH ARTICLE WRITTEN by London Swaminathan 

 

Date: 23 April 2018

 

Time uploaded in London –  22-20 (British Summer Time)

 

Post No. 4943

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

 

உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேத்திலுள்ள சொற்களை நாம் இன்று வரை பன்படுத்துவது, இமயம் முதல் குமரி வரை ஒரே கலாசாரம் இருந்ததற்குச் சான்றாக விளங்கி வருகிறது.

 

யூபம் என்னும் தூண் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை இது. இந்த யூப ஸ்தம்பம் ரிக்வேதத்திலும் உள்ளது. அதற்குச் சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் தோன்றிய சங்கத் தமிழ் இலக்கியத்திலும் உளது. ஹரப்பா என்பதே ஹரி யூப என்ற சொல்லின் மருவு என்று நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினேன்.

Pandya coin

நாலாம் நூற்றாண்டைச் சேர்ந்த மூலவர்மனின் ஏழு யூப ஸ்தம்பங்கள் போர்னியோ தீவின் அடர்ந்த காட்டுக்குள் இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்ததை காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள் (1894-1994) பல ஆண்டுகளுக்கு முன்னரே சொற்பொழிவில் குறிப்பிட்டதையும் எழுதினேன்.

 

புற நானூற்றின் மிகப்பழைய பாட்டிலும் பெரும்பாணாற்றுப் படையிலும் யூபம் பற்றிய குறிப்புகள் உளதையும் சுட்டிக்காட்டினேன். தமிழ் மன்னர்கள் வேத கால யாக யக்ஞங்களில் பேரார்வம் கொண்டவர்கள் என்பதை ராஜசூய யாகம் வேட்ட பெருநற்கி ள்ளி பற்றிய கட்டுரையிலும், பருந்து வடிவில் யாக குண்டம் அமைத்த கரிகாற் பெருவள த்தான் செய்த யாகம் பற்றிய கட்டுரையிலும் எழுதினேன்.

 

 

அகஸ்தியரையும் பாண்டியரையும்

தொடர்புப் படுத்திப் பேசிய முதல் காவியம் உலகப் புகழ்பெற்ற காளிதாசனின் ரகுவம்சம் என்பதையும், பாண்டிய மன்னர்கள் சதாசர்வ காலமும் அவப்ருத ஸ்நானத்தில் நனைந்திருப்பதே அவர்களின் பெருமை என்று காளிதாசன் பாண்டிய மன்னனை இந்துமதி ஸ்வயம்வரத்தில் அறிமுகப்படுத்தியதை எழுதி இது பலயாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியின் அஸ்வமேத யாகம் பற்றிய குறிப்பாக இருக்கலாம் என்பதையும் குதிரை பொறித்த பெருவழுதி நாணயம் கிடைத்திருப்பதையும் எழுதினேன். இதன் மூலம் காளிதாசனின் காலம் சங்கத் தமிழ் இலக்கியத்தை ஒட்டியோ முன்னரோ இருக்கலாம் என்றும் சொன்னேன்.

(இவை அனைத்தையும் எனது ஐந்து ஆண்டுக் கட்டுரைகளில் கண்டு மகிழ்க. இப்பொழுது புதிய விஷயங்களைக் காண்போம்).

 

Yupa is shown.

வேள்வி நெடுந்தூண்

 

யூபம் என்ற ரிக்வேதச் சொல்லை மிகப் பழைய புலவரான நெட்டிமையார் அப்படியே குறிப்பிடுவதும் மற்றொரு புலவர் வேள்வி நெடுந்தூண் என்று குறிப்பிடுவதையும் காண்போம்.

 

பாண்டியன் பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது (புறம்.15)

 

நால்வேதத்து

அருஞ் சீர்த்திப்பெருங்கண்ணுறை

நெய்மமலி ஆவுதி பொங்க, பல் மாண்

வீயாச்சிறப்பின் வேள்வி முற்றி

யூபம் நட்ட வியன் களம் பல கொல்?

யா பல கொல்லோ?

 

பொருள்

உன்னால் தோற்கடிக்கப்பட்ட பகைவர்கள் எண்ணிக்கை அதிகமா? அல்லது நான்கு வேதங்களில் சொன்னபடி நெய்யும் பொரியும் போட்டு யூப ஸ்தம்பங்கள் நட்டு நீ செய்த யாககங்கள்  அதிகமா?என்று பாண்டிய மன்னரைக் கேட்கிறார் நெட்டிமையார்.

 

சோழன் கரிகால் பெருவளத்தானைப் பாடிய கருங்குளவாதனார் பாடிய (புறம்.224) பாட்டில்,

எருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண்

வேத வேள்வித் தொழில் முடித்ததூஉம்

என்கிறார்.

 

அதாவது பருந்து வடிவ யாக குண்டத்தில் அந்தணர் சொற்படி செய்யப்பட்ட யாகத்தில் யூப நெடுந்தூண் நட்டவன் நீ…

 

இவ்வாறு பதிற்றுப் பத்து,  பெரும்பாணாற்றுப்படையிலும் வருகிறது

 

கேள்வியந்தணர் ரருங்கடனிறுத்த

வேள்வித்தூணத் தசைஇ யவன

ரோதிம விளக்கின்………

–பெரும்பாணாற்றுப்படை வரி 315, 316

 

யூபம் பற்றி அக்காலத் தமிழ் அறிஞர்களுக்கு நன்கு தெரியுமாதலால் உரைகாரர்கள் அதிகம் விளக்கவில்லை. இதற்கு நாம் ஸம்ஸ்க்ருத நூல்களையே நாட வேண்டியுள்ளது.

 

யூபக் கம்பங்களில் வேள்வியில் ‘பலியிடும்’ மனிதர்கள், மிருகங்களைக் கட்டுவார்கள். பின்னர் அவைகளை அவிழ்த்து விட்டு விடுவார்கள்.

 

ஐதரேய பிராஹ்மணம் என்னும் நூல் ரிக் வேதத்தின் துணை நூல். அதில் ராஜ சூய யாகம் பற்றி வருகிறது; எந்த யாகம் செய்தாலும் அதில் மன்னர்கள் சுநஸ்சேபன் கதையைக் கேட்க வேண்டும்.

உயிர்ப்பலி இல்லை

 

சுநஸ்சேபன் என்பவன் யாகத்தில் பலியிடக் கட்டியிருந்த போது அவனை விஸ்வாமித்ரர் விடுவித்த கதை இது. இது சூர்ய வம்சத்தின் 28ஆவது மன்னரான ஹரிச்சந்திரன் காலத்தில் நடந்தது.

 

இதிலிருந்து நமக்குத் தெரிவது என்னவென்றால் ஹரிசந்திரன் காலத்துக்கு முன்னாலோ பின்னாலோ இப்படி நடந்ததாக எங்கும் எந்தக் குறிப்பும் இல்லை. ஆக அந்த ஒரே சம்பவத்திலும் சுனஸ்சேபனை விஸ்வாமித்ர மஹரிஷி காப்பாற்றி விடுகிறார்.

 

மேலும் நால் வேதத்துக்கும் உரை எழுதிய பலருள் மிக முக்கியமானவர் சாயனர். அவரே சொல்கிறார்: ‘யாகத்தில் உயிர்கள் பலியிடப்படுவதில்லை. யூப ஸ்தம்பத்தைச் சுற்றி தீ எடுத்துச் செல்லப்பட்டவுடன் அவை  விடுதலை செய்யப்பட்டுவிடும்’.

சாயனர் சொல்லுவதை எல்லோரும் ஏற்றுக் கொள்வர்.

 

அகநானூற்றில் ஒரு ஆமை மர்மம் இருந்தது. அது எப்படி வெளியே வந்தது என்ற மர்மத்தைத் துலக்கி நான் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரையிலும் ஆமை பலியிடப்படவில்லை என்பதைக் காட்டி இருக்கிறேன் (கட்டுரையில் மேல் விவரம் காண்க)

 

 

ரிக் வேதத்தில் இரண்டு இடங்களிலும் அதர்வ வேதத்தில் சில இடங்களிலும் பிற்கால பிராமண நூல்களில் ஏராளமான இடங்களிலும் யூபம் என்ற சொல் நேரடியாகப் பயிலப்படுகிறது. குறிப்பால் உணர்த்தும் இடங்கள் மிகப் பல.

 

யூப ஸ்தம்பம் கடிர மரத்தால் (கருங்காலி வகை மரம்) செய்யப்படும், அதன் மேல் பகுதி த்ரிசூலம் போல இருக்கும்; யக சாலைக்கு கிழக்கே வைப்பர். அதில் நெய் தடவி தோரணங்கள் கட்டுவர். அந்தக்கால இளைஞர்களின் அலங்காரம் போல இது விளங்குவதால் யுவ (இளைஞர்) என்ற சொல்லே இப்படி மருவியதாச் சிலர் பகர்வர்.

 

மனிதர்களுக்கு யாக யக்ஞங்க்ள் பற்றிய அறிவு வருவதைக் கடவுளர் விரும்பாமல் தடுத்ததால் (யோயுபயன்) யூபம் என்பப் எயர் வந்ததாக ஐதரேய பிராஹ்மணம் செப்பும். சதபதப் பிராமணத்தில் வேறு விளக்கம் உண்டு.

 

யாகத்தில் பலியிடப்படும் விலங்குகளோ மனிதர்களோ சம்மதம் தெரிவித்தால்தான் அவைகளைப் பலியிடலாம். ம்ருகங்களுக்கு, தான் சாகப்போகிறோம் என்று தெரிந்தவுடன் தயங்கும் என்றும் அப்போது கடவுளர் அவைகளிடம் நான் உன்னை சுவர்க்கத்துக்கு அழைத்துச் செல்கிறேன் என்று சொன்னவுடன் அவை இசைவு தெரிவிக்கும் என்றும் நூல்கள் இயம்பும்.

இன்னும் சிலர் மந்திரத்தைக் கேட்டவுடன் அதன் சக்தியில் மிருகங்களே செயல் இழந்து விடும் என்பர். எது எப்படியாகிலும் யாகத்தில் பலி என்பதே இல்லை அதற்குப் பதிலாக நெய்யே விடப்படும் என்று 700 ஆண்டுகளுக்கு முன்னர் சாயனர் எழுதி வைத்ததே சரி யென்று தோன்றுகிறது.

 

மாபாரதக் கதை

 

 

இசைவு தெரிவிக்கும் விஷயம் பற்றி மஹாபாரத்ததில் ஒரு சுவையான சம்பவம் உண்டு. அஸ்வமேத பர்வத்தில் அந்தக் கதை வருகிறது

 

கிருஷ்ணரும் அர்ஜுனரும் பிராமணர் வேடத்தில் மேவரத்வஜன் என்ற மன்னரிடம் சென்றனர். கிருஷ்ணனின் மகனை புலி தூக்கிக்கொண்டு போய்விட்டதென்றும் அரசனின் மகனின் உடலில் பாதி கிடைத்தால்தான் புலி அவனை விடும் என்றும் சொன்னார்கள். உடனே மன்னன், தன்னையே பலி கொடுப்பதாகச் சொல்லி மகனையும் மனைவியையும் கூப்பிட்டு அறுக்கச் சொன்னான். அவர்களும் அப்படியே செய்ய முன்வந்தார்கள். அப்பொழுது அந்த மன்னரின் இடது கண்ணில் ஒரு சொட்டுக் கண்ணீர் வந்தவுடன் கிருஷ்ணன் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். முழு சம்மதம் இருந்தால்தான் யாகத்தில் பலியிடலாம், கண்ணீர்த் துளியானது முழு மனது இல்லை என்பதைக் காட்டுகிறது என்று சொல்லி நிறுத்திவிட்டனர். இந்தக் கதையானது எதையும் அனுமதி இன்றி செய்யக்கூடாது என்பதை விளக்குவதோடு அக்காலத்தில் சிறந்த ஜனநாயகம் இருந்ததைக் காட்டுகிறது.

 

இதுவரை சொன்ன விஷயங்கள்:

 

இமயம் முதல் குமரி வரை ஒரே கலாசாரம்  இருந்ததை பாண்டிய மன்னர்கள் சோழ மன்னர்கள், சேர மன்னர்கள் யாகம் செய்ததை சங்கத் தமிழ் இலக்கியம் செப்புவதால் அறிகிறோம்.

 

யாகத்தில் உயிர்ப்பலி இல்லாமல் அது அடையாள         பூர்வமாக செய்யப்பட்டதையும் சாயனர் உரை மூலம் அறிகிறோம்.

 

 

கருங்காலி வகை மரம் பல மருத்துவ குணம் உடைய மரம். அதை யூப ஸ்தம்பத்துக் பயன்படுத்தியது, அதன் தோற்றம் மற்றும் மருத்துவ குணமுள்ள ஒரு மரத்தைப் பயன்படுத்தியது ஆகியவற்றையும் கண்டோம்.

 

 

யூப தூண் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/யூப-தூண்/

Translate this page

ஆகவே யூபம் என்பது சிந்து சமவெளி நாகரீக ஹரியூப்பியவில் மட்டும் இன்றி 2000 ஆண்டுகளாக ஆசியா முழுதும் பரவிவிட்டது தெரிகிறது. யூப ஸ்தம்பம் என்பது வேதத்தில் ஆகுதியாக்கப்படும் யாகப் பசு கட்டப்படும் இடம் அல்லது வேதச் சடங்கின் வெற்றியின் நினைவாக எழுப்பபடும் …

ராவணன் – பாண்டியர் சமாதான …

swamiindology.blogspot.com/2014/06/blog-post_24.html?view=sidebar#!

24 Jun 2014 – வேறு எங்கும் கிடைக்காத இந்தச் செய்திகாளிதாசன் மூலமே கிடைக்கிறது அதுமட்டுமல்ல யாகத்திற்காக செய்த அவப்ருத ஸ்நானத்தில் ( குளியல்)பாண்டிய மன்னர்கள் எந்நேரமும் இருப்பதையும் சொல்கிறார். புற நானூற்றில் பெரிதும் போற்றப்படும் பலயாகசாலை முது …

புலிக் கொடி | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/புலிக்-கொடி/

Translate this page

தமிழ் நாட்டை ஆண்ட சேர, சோழ, பாண்டியர்கள் ஆகிய மூவேந்தர்களும் குறைந்தது 2500 ஆண்டுகளாக வரலாற்றில் இடம்பெறுகிறார்கள். போதாயனர், காத்யாயனர், வால்மீகி, வியாசர், அர்த்தசாஸ்திரம் எழுதிய சாணக்கியர், மாமன்னன் அசோகன், கலிங்க மன்னன் காரவேலன், இலங்கையின் …

பாண்டியர் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/பாண்டியர்/

Translate this page

அதில் முக்கியமான செய்தி – அகத்தியர் – பாண்டியர் – இராவணன் தொடர்பு ஆகும். வேறு எங்கும் கிடைக்காத இந்தச் செய்தி காளிதாசன் மூலமே கிடைக்கிறது அதுமட்டுமல்ல யாகத்திற்காக செய்த அவப்ருத ஸ்நானத்தில் ( குளியல்)பாண்டிய மன்னர்கள் எந்நேரமும் இருப்பதையும் …

–சுபம்–