Written by London swaminathan
Date: 5 July 2016
Post No. 2945
Time uploaded in London :– 9-24 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
ஸ்த்ரியோ ரத்னானி அத வித்யா தர்ம: சௌசம் சுபாஷிதம்
விவிதானி ச சில்பானி சமாதேயானி சர்வத:
–மனு ஸ்மிருதி 2-240
எல்லா திசைகளிலிருந்தும் எடுத்துக்கொள்ள வேண்டியவை:-
பெண்கள், ரத்னக் கற்கள், கல்வி, தர்மம் (அறச் செயல்கள், அற விதிகள்)
தூய்மை (விதிகள், உணவு), நல்ல சொற்கள் (பொன்மொழிகள், பழமொழிகள், உபதேசங்கள்)
மனு சொல்வதை புறநானூற்றிலும் காணலாம்
நான்கு ஜாதிகளில், தாழ்ந்தவரானாலும், கல்வியில் சிறந்தவன் சொல்லைத் தான் அரசனும் கேட்டு நடப்பான்:–
வேற்றுமை தெரிந்த நாற்பலுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்,
மேற்பால் ஒருவனும் அவன் கண்படுமே (புறம்.183)
மனு, இதை மேலும் அழகான உவமைகளால் விளக்குவான்:-
விஷத்திலிருந்து கூட அமிர்தம் எடுக்க முடியும்;
குழந்தையிடமிருந்து கூட அருமையான யோஜனைகள் கிடைக்கும்;
எதிரியிடமிருந்து நற்குணங்களை கற்றுக்கொள்ளலாம்;
அசுத்தமான மண்ணிலிருந்தும் தங்கத்தைக் காய்ச்சி எடுக்கலாம்
மனு 2- 239
இந்த உவமைகளைச் சொன்ன பிறகே நல்ல பெண்களை எங்கிருந்தாலும் திருமணம் செய்க என்பான்.
மனு, மற்றொரு இடத்தில் (9-23), கீழ் ஜாதியில் பிறந்த அருந்ததி, உலக மஹா கற்புக்கரசியாக மதிக்கப்படுவதை எடுத்துக் காட்டுவான்.
2-241ஆவது ஸ்லோகத்தில் பிராமணர் அல்லாதார் இடமிருந்தும் வேதங்களைக் கற்கலாம் என்கிறார் (உபநிடதங்களில் க்ஷத்ரிய மன்னர்களிடம், பிராமணர்களும் வேதாந்தம் கற்றனர் என்ற குறிப்பு உள்ளது. க்ஷத்ரிய மன்னர் குலத்தில் பிறந்த கௌதம புத்தரை பிராமண அறிஞர்களும் பின்பற்றியபோது புத்தரின் முகம் தாமரை போல மலர்ந்தது என்று தம்மபத விரிவுரைகள் பகரும்.)
வேதங்களைக் கற்பிக்கும் போது அவர்களைக் குருவாக மதிக்க வேண்டும் என்கிறார் மனு. ஜனக மன்னனிடம் பலரும் கற்றதை இங்கே நினைவு கூறலாம்.
ஜாதியை விட உயர்ந்தது கல்வியும், நல்லொழுக்கமும் என்று மனு நிறைய இடங்களில் வலியுறுத்திக் கொண்டே போவதை கற்றோர் அறிவர்.
–Subham–