ராசிக்குரிய ராகங்களும், நவக்ரஹ கீர்த்தனை ராகங்களும்! (Post No.9170)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9170

Date uploaded in London – –21 January  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ராகங்கள் தொடரில் சில புதிய ராகங்கள்!

ராசிக்குரிய ராகங்களும், நவக்ரஹ கீர்த்தனை ராகங்களும்!

ச.நாகராஜன்

12 ராசிக்குரிய ராகங்கள்!

  1. மேஷம் – ஷண்முகப்ரியா
  2. ரிஷபம் – ஸ்ரீராகம்
  3. மிதுனம் – மாளவம்
  4. கடகம் – ஹிந்தோளம்
  5. சிம்மம் – வசந்தா
  6. கன்னி – பூபாளம்
  7. துலாம் – நாதநாமக்ரியா
  8. விருச்சிகம் – கரகரப்ரியா
  9. தனுசு – சாரங்கா
  10. மகரம் – பைரவி
  11. கும்பம் – சங்கராபரணம்
  12. மீனம் – பங்காளா

*

கல்யாணத்தில் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் பாட வேண்டிய ராகங்கள்

நிச்சயதார்த்தம் – கானடா, அடாணா, பியாக்கடை

மாப்பிள்ளை அழைப்பு – கல்யாணி, சங்கராபரணம்

ஜானவாசம் – தோடி, காம்போதி, கரகரப்ரியா

ஊஞ்சல் – ஆனந்தபைரவி

சடங்குகள் – கேதாரம், பூபாளம், லஹரி

முகூர்த்த நேரம் முன்பு – நாட்டைகுறிச்சி

முகூர்த்த நேரம் – தன்யாசி, நாராயணி

தாலி கட்டியவுடன் – ஆனந்த பைரவி

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே பாடல் – சைந்தவி

*

ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதர் நவக்ரஹ கீர்த்தனைகளை இயற்றியுள்ளார்.

அதில் வரும் ராகங்கள் வருமாறு:-

சூர்யமூர்தே நமோஸ்துதே – சூரியன் -சௌராஷ்டிரம்

சந்த்ரம் பஜ மானஸ – சந்திரன் -அசாவேரி

அங்காரக மாஸ்ர யாம் யஹம் – செவ்வாய் – ஸுரடி

புதம் ஆஸ்ரயாமி ஸததம் – புதன் –  நாடகுரஞ்சி

ப்ரஹஸ்பதே தாராபதே – குரு – அடாணா

ஸ்ரீ சுக்ர பகவந்தம் சிந்தயாமி – சுக்ரன் – பரஸ்

திவாகரதனுஜம் சனைஸ்சரம் – சனி – யதுகுலகாம்போஜி

ஸ்மராம்யஹம் சதா ராஹும் – ராகு – ரமா மனோஹரி

மஹாசுரம் கேதுமஹம் – கேது – ஷண்முகப்ரியா (சாமரம் என்ற பெயரும் உண்டு)

*

ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதர் அவர்கள் இயற்றியுள்ள 11 கமலாம்பிகா நவாவர்ண கீர்த்தனைகளும் அவற்றின் ராகங்களும் வருமாறு:

  1. கமலாம்பிகே – தோடி
  2. கமலாம்பா சம்ரக்ஷது – ஆனந்தபைரவி
  3. கமலாம்பாம் பஜரே – கல்யாணி
  4. ஸ்ரீ கமலாம்பிகயம் – சங்கராபரணம்
  5. கமலாம்பிகாயை – காம்போஜி
  6. ஸ்ரீ கமலாம்பா பரம் – பைரவி
  7. கமலாம்பிகயாஸ்தவ – புன்னாகவராளி
  8. ஸ்ரீ கமலாம்பிகயம் – ஸஹானா
  9. ஸ்ரீ கமலாம்பிகே – கண்ட ராகம்
  10. ஸ்ரீ கமலாம்பா ஜயதி – ஆஹிரி
  11. ஸ்ரீ கமலாம்பிகே – ஸ்ரீ

***



tags– ராசி, ராகம், நவக்ரஹ கீர்த்தனை, 

எந்த வியாதியை எந்த ராகம் குணப்படுத்தும்? (Post N0.9017)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 9017

Date uploaded in London – – 10 DECEMBER 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

எந்த வியாதியை எந்த ராகம் குணப்படுத்தும்?

ச.நாகராஜன்

ராகங்கள் வியாதியைக் குணப்படுத்தும் என்பது மிகப் பழைய செய்தி. பல்வேறு நவீன் ஆய்வுகள் இந்தச் செய்தியைத் தங்கள் ஆய்வுகள் மூலம் நிரூபித்துள்ளன.

அதிக களைப்புடனும் மனச் சோர்வுடனும், ஏமாற்றத்துடனும் இருக்கும் மனிதர்கள் தங்களையே மறந்து இசையிலே லயித்தால் அவர்களது களைப்பு தீரும்; மனச் சோர்வு போகும். ஏமாற்றங்கள் மறக்கப்படும்.

இனிய பழைய கால நினைவுகளை இசையின் மூலம் உடனே மனதில் கொண்டு வர முடியும் என்பது அனைவரது அனுபவமும் ஆகும்.

இனி எந்த வியாதியை எந்த ராகம் குணப்படுத்தும் என்பதைப் பார்ப்போம்;

காச நோய் (Tubercuosis) – மேகமல்ஹார் (Meghmalhar)

தொடர்ந்த தலைவலி – தர்பாரி, ஜெய்ஜய்வந்தி, குன்ஹா (Gunkah)

உயர் இரத்த அழுத்தம் – கோரக் கல்யாண்(GorakhKalyan), பீம்ப்ளாஸ் (Bhimpalas), பூரியா (Puriya)

மனச்சோர்வு -நட்நாராயண்

ஜலதோஷம், இருமல் – குர்ஜன் தோடி(Gurjantodi), பைரவி

முடக்கு நோய் – ஜெய்ஜயவந்தி

பசியின்மை – தீபக், சந்த்ரகௌன்ஸ் (Chandrakauns)

முடக்கு வாதம் (Rheumatoid Arthritis) – பைரவி, ஆஹிர்பைரவி, குங்கலி(Gunkali)

வயிற்றுப் பொருமல், வயிற்று உப்புசம், வாயுத் தொல்லை – மல்கான்ஸ், ஜோன்புரி (Malkauns, Jaunpuri)

தோல் சம்பந்தமான வியாதிகள் (Skin disorders) – அசாவேரி

இந்த ராகங்களில் அமைந்துள்ள பாடல்களை ஒருவர் முழு ஓய்வுடனும், இசையில் லயித்த மனதுடனும், தனது முழுக் கவனத்துடன் பாட்டுடன் ஒன்றிய நிலையில் கேட்டால் வியாதிகள் அகலும்.
இசையைப் பற்றிய ஆய்வுகளை இந்தியாவில் பல நிறுவனங்கள் நடத்தியுள்ளன.
குறிப்பிடத்தகுந்த இரு ஆய்வகங்களாக சென்னையில் உள்ள ராகா ரிஸர்ச் செண்டரும் (Raga Research Centre RRC) பரோடாவில் உள்ள இசைக் கல்லூரியும் (Music College, Vadodara) அமைகின்றன.
 
 
குன்னக்குடி வைத்யநாதன் இந்த இசை ஆராய்ச்சியில் மிகவும் ஆர்வத்துடன் ஈடுபட்டிருந்தார். பைரவி ராகம் சக்தியைத் தரும் ராகம் என்பதை பல வித ஆய்வுகள் மூலமும் அதனால் ஏற்பட்ட அனுபவங்கள் மூலமும் கண்டறிந்து அதை உலகிற்கு அறிவித்தார்.
ஆர் ஆர் சி ஒரு பெரிய குழுவைக் கொண்டுள்ளது. மருத்துவர்கள், மூளை இயல் நிபுணர்கள், இசை வல்லுநர்கள் ஆகியோர் ஒரு குழுவாக ஒருங்கிணைந்து தங்கள் முழுத் திறமையையும் ஒத்துழைப்பையும் தருவதால் இந்தக் குழு பல நல்ல முடிவுகளைக் கண்டறிந்து வந்துள்ளது.
அசாவேரி ராகம் நம்பிக்கை தரும் ராகம். இது காலையில் கேட்கப்பட வேண்டிய ராகம்.
 
 
தூக்க வியாதி எனப்படும் இன்ஸோம்னியாவை குணப்படுத்தும் ராகம் பாகஸ்ரீ. (Bageshri – Insomnia). இது இரவில் கேட்கப்பட வேண்டிய ராகம்
சிறுநீரகக் கற்களை அகற்றி குணப்படுத்தும் ராகம் வசந்தவிஹார். (Basant Bahar – Gall stones). இது காலையில் கேட்கப்பட வேண்டிய ராகம்.
உயர் ரத்த அழுத்தம், கவலை முதலியவற்றை நீக்க வல்லது பீம்ப்ளாஸ் (Bhim palas – Anxiety, Hypertension). இது பகல் நேரத்தில் கேட்கப்பட வேண்டிய ராகம்.
 
இரவில் தூக்கத்தைத் தரும் அருமருந்தான ராகம் தர்பாரி.
குர்ஜரி தோடி (Gurjri Todi) இருமலை நீக்கும். இது காலையில் கேட்கப்பட வேண்டிய ராகம்.
கேதார் (Kedar) ராகம் தலைவலி, ஜலதோஷம், ஆஸ்த்மா ஆகியவற்றைப் போக்கும். இது இரவில் கேட்கப்பட வேண்டிய ராகம்.
பூரியா ராகம் பெருங்குடல் அழற்சி, உயர் ரத்த அழுத்தம், ரத்த சோகை ஆகியவற்றை நீக்கி விடும். (Puriya – Colitis, Anaemia, Hypertension). இது மாலையில் கேட்கப்பட வேண்டிய ராகம்.
 
யமன் ராகம் முடக்கு வாதத்தை நீக்க வல்லது (Yaman). இது மாலையில் கேட்கப்பட வேண்டிய ராகம்.

பல்வேறு ஆய்வுகள் தரும் முடிவுகள் இவை.

செலவில்லாமல் இனிமையாக வியாதிகளைக் குணப்படுத்தும் இசையைப் போற்றி இசையுடன் இசைந்து வாழ்வோமாக!

tags — வியாதி, ராகம் , 

***