நட்சத்திர விளக்கத்தில் ராகுவும் கேதுவும் – விதி விளக்கம் – 5 (Post No.3918)

Written by S NAGARAJAN

 

Date: 18 May 2017

 

Time uploaded in London:-  5-53 am

 

 

Post No.3918

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

ஜோதிடமே துணையாகும்

மிட்டா முனிசாமி செட்டி (1897)யின் விதி விளக்கம் நூலிலிருந்து சில பகுதிகள் தொகுக்கப்பட்டு தரப்படுகிறது. நூலின் பகுதிகள் படிப்பதற்கு ஏதுவாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

முதல் 4 அத்தியாயங்களைப் படித்து விட்டு இதைத் தொடரவும் 

1934ஆம் ஆண்டு பிரசுரிக்கப்பட்டுள்ள் இந்த நூலை எனக்கு அனுப்பி உதவிய எனது சம்பந்தி திரு ஆர்.சேஷாத்திரிநாதன் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

நட்சத்திர விளக்கத்தில் ராகுவும் கேதுவும் – விதி விளக்கம் – 5

ச.நாகராஜன்

 

  1. ராகுவும் கேதுவும்

 

      சந்திரன் மற்ற கிரகங்களை விட பூமிக்கு வெகு அருகில் உள்ளது. ஆகவே முன்னோர்கள் விதி விளக்கத்திற்குச் சந்திரனை முக்கிய காரணமாக அங்கீகரித்திருக்கின்றனர். சந்திரன் பூமியைச் சுற்றி வரும் பாதையில் கும்ப மாதத்திலிருந்து கடக மாதம் வரை – அதாவது மாசியிலிருந்து ஆடி மாதம் வரை அருக்கன் வீதி அல்லது சூரியன் பாதைக்கு வடக்கிலோ அல்லது மேற்கிலோ சந்திரனின் வீதி இருக்கும்.

சிங்க மாதம் முதல் மகர மாத ஆரம்பம் வரை – அதாவது ஆவணி முதல் தை மாதம் வரை – சூரியன் பாதைக்குத் தெற்காக அல்லது கீழ்புறமாக சந்திர வீதி அமையும்.

ஆவணி முதல் தை வரை சந்திரனுக்கு வலிமை கிடையாது.

ஆகவே தான் ஆவணிக்குப் பிறகு ஹிந்துக்கள் சாதாரணமாக விவாகம் செய்வதில்லை.

 

மேலே கூறிய சூரியன் பாதையும் சந்திரன் பாதையும் சந்திக்கும் நிலைகள் இரண்டு. அவையாவன வடக்கு சந்திப்பு ஒன்று; மற்றொன்று தெற்கு சந்திப்பு.

வடக்கு சந்திப்புக்கு ராகு நிலை என்றும் தெற்கு சந்திப்புக் கேது நிலை என்றும் பெயர்கள் நம் முன்னோரால் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

ராகுவும், கேதுவும் கிரகங்களாக அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன.

ஆகவே தான் கிரகங்கள் ஒன்பதென்று ஏற்பட்டிருக்கின்றன.

பூமியானது மேற்கிலிருந்து கிழக்குப் பக்கமாக வானியல் சாஸ்திரப் படி சுழன்று வருவதினாலும் சூரியனைச் சுற்றி வருவதினாலும் மேற்காட்டிய சந்திப்புகளின் இடம் ராசிக்கு ராசி மாறிக் கொண்டே இருக்கிறது.

இப்படி மாறுவதால் ஒரு குறிப்பிட்ட ராசியிலிருந்து மறுபடி அந்த ராசிக்கு ராகு வருவதற்கு சுமார் 18 வருடம் 7 மாதம் ஆகிறது.

  • சந்திரன் ஒவ்வொரு ராசியிலும் சஞ்சரிக்கும் போதும்,
  • ஒவ்வொரு நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் போதும்
  • அந்தந்த நட்சத்திரத்தின் இயற்கை அமைப்பின் இயல்பினாலும்
  • தற்கால நிலைமையினாலும்

மானிடரின் விதி விளக்கமாகிறது.

எந்த கிரகத்தின் அதிகாரம் நடக்கிறதென்று அறிந்து அந்தந்த நட்சத்திரங்களுக்கு  அந்த கிரகத்தின் திசை நடப்பு என்று அனுஷ்டானத்தில் வைத்துக் கொண்டு தற்கால விதியை விளக்கலாமென்று கொண்டு கீழ் வருமாறு திசையை நிர்ணயித்திருக்கின்றனர்:

 

அசுவதி  மகம்  மூலம்                      கேது 7 வருடம்

பரணி  பூரம் பூராடம்                    சுக்கிரன் 20 வருடம்

கார்த்திகை  உத்திரம் உத்திராடம்         சூரியன்  6 வருடம்

ரோகிணி  ஹஸ்தம் திருவோணம்        சந்திரன் 10 வருடம்

மிருகசீரிஷம் சித்திரை  அவிட்டம்       செவ்வாய் 7 வருடம்

திருவாதிரை ஸ்வாதி சதயம்              ராகு    18 வருடம்

புனர்பூசம் விசாகம் பூரட்டாதி              குரு    16 வருடம்

பூசம் அனுஷம் உத்திரட்டாதி               சனி   19 வருடம்

ஆயில்யம் கேட்டை ரேவதி               புதன்   17 வருடம்

                                              ————-

        மொத்த வருடங்கள்                     120

                                              ————-

மேலே காட்டிய திசை பலன் விதி விளக்கத்திற்கு மூலாதாரமாக அமைகிறது.

ஜோதிட சாஸ்திரத்தில் சகல அனுஷ்டானத்திற்கும், அனுபவத்திற்கும் சரிவர வருவது சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தினால் ஏற்படும் திசை தான்.

ஒரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம்:

அதாவது, அசுவதியில் பிறந்தவனுக்கு கேது திசை. அந்த திசைக்கு 7 வருட அதிகாரம் உண்டென்றாலும், பிறந்த காலத்தில் அசுவதியில் அன்றைய ஆதி அந்த வியாபகம் முழுவதும் கேது திசை என்பதால், ஜனன கால மணி நேரத்தில் ஜெனன காலத்தில் சென்ற நாழிகை போக இனி செல்ல வேண்டிய இருப்பு நாழிகை வீதமாகக் கேது திசை பாக்கி இருக்கும்.

இவற்றுடன் திதி பற்றிய விதிகளையும் நன்கு அறிந்து கொண்ட பின்னரே பலன்களைச் சொல்ல வேண்டும்.

 

****