Post No. 10,405
Date uploaded in London – – 3 DECEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கோபத்துக்கு எதிராக வேதம் சொல்லும் கருத்து, பாரதி மற்றும் பாபநாசம் சிவன் பாடல்கள் வரை எப்படியெல்லாம் பரவியது என்பதைக் காண்போம்.
“ராதே உனக்கு கோபம் ஆகாதடி” என்ற பாபநாசம் சிவன் அவர்களின் பாடல் எம்.கே தியாகராஜ பாகவதர் (MKT) மூலமாக அறிமுகமாகியது. பின்னர் பலரும் அதை மாற்றி, மாற்றி, பல பிற்காலத் திரைப் படங்களில் பயன்படுத்தினர். காலத்தால் அழியாத இந்தக் கவிதை, ‘கோபம் கூடாது’ என்பதை மனதில் நன்கு படிய வைக்கிறது.
வள்ளுவனோ சினம்/வெகுளாமை என்ற தலைப்பில் பத்து குறள்களைத் தந்தான். ‘சேர்ந்தாரைக் கொல்லி’ என்று சினத்தை சம்ஸ்க்ருத மொழியில் இருந்து (குறள் 305- ஆஸ்ரயாஸஹ ) மொழிபெயர்த்தும் தருகிறார். ஒருவனுக்கு கோபம் இல்லாவிடில் அற்புதங்களைச் செய்யலாம் என்கிறான் வள்ளுவன் ; ‘உள்ளியதெல்லாம் உடனெய்தும்’ (குறள் 309) என்பான். இதை இந்து சாது, சன்யாசிகளின் வாழ்வில் நாம் காண்கிறோம்.
பாரதியும் ‘கோபத்தைக் கொன்றுவிடு’ என்று பாடுகிறான். ஆனால் ‘ரெளத்திரம் பழகு’, என்றும் ‘சீறுவோர்ச் சீறு’ என்றும் ஆத்திச் சூடியில் எச்சரிக்கிறான். யாரேனும் தரும விரோதக் செயல்களைச் செய்தால் கோபம் கொள்ளுவதில் தவறில்லை என்பான்.
“அச்சத்தை வேட்கைதனை அழித்துவிட்டால்
அப்போது சாவுமங்கே அழிந்து போகும்”
என்பது பாரதியின் அருள்வாக்கு
……
“சினங்கொள்வார் தம்மைத்தாமே தீயார் சுட்டுச்
செத்திடுவாரொப்பார் ; சினங்கொள்வார் தாம்
மனங்கொண்டு தம் கழுத்தைத் தாமே வெய்ய
வாள்கொண்டு கிழித்திடுவார் “
சினம் என்பது ‘சேர்ந்தாரைக் கொல்லி’ என்ற வள்ளுவன் கருத்தை பாரதி சொன்னதோடு, கோபம் என்பது வலியப் போய் தற்கொலை செய்து கொள்வதற்குச் சமம் என்றும் செப்புகிறான்.
அதே பாடலில் பாரதி,
“கோபத்தால் நாடியிலே அதிர்ச்சியுண்டாம்;
கொடுங்கோபம் பேரதிர்ச்சி; சிறிய கோபம்
ஆபத்தாம் அதிர்ச்சியிலே சிறியதாகும்;
அச்சத்தால் நாடியெலாம் அவிந்து போகும்;
தாபத்தால் நாடியெலாம் சிதைந்து போகும்;
கவலையினால் நாடியெலாம் தழலாய் வேகும்;
கோபத்தை வென்றிடலே பிறவற்றைத்தான்
கொல்வதற்கு வழியென நான் குறித்திட்டேனே”
. என்பான்.
கோபம் பற்றி திருக்குறள் உள்ளிட்ட பதினென் கீழ்க்கணக்கு நூல்களில் நிறைய பாடல்கள் இருக்கின்றன. இந்த வெகுளாமை என்னும் lesson பாடம் அவைகளுக்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய அதர்வண வேதத்தில் இருந்து வந்தது என்பது பலருக்கும் தெரியாது ; வேதத்தில் இல்லாத விஷயம் வெளியில் இல்லை!
XXXX
அதர்வண வேதப் பாடல்
காண்டம் 6; துதி 42 (சூக்தம் 215)
1.வில்லிலிருந்து விடுபட்ட அம்பினைப் போல உன்னுடைய இதயத்திலிருந்து கோபத்தை விரட்டுகிறேன்; நாம் இருவரும் ஒருமித்த மனதுடன் நண்பர்களாக உலா வருவோம்.
2.நாம் நண்பர்களாக நடந்து செல்லுவோம் ; நான் உனது கோபத்தை நீக்குகிறேன் ; நான் உன்னு டைய கோபத்தைக் குழி தோண்டிப் புதைக்கிறேன்
3. நான் உனது கோபத்தை என் கால்களுக்கு அடியில் போட்டு நசுக்குகிறேன் நீ அடங்கி நட ; இனியும் எதிர்த்துப் பேசாதே
இதற்குப் பழைய விளக்கம்:
இரண்டு நண்பர்கள் இடையே இருந்த கோப தாபத்தை நீக்கும் பாடல் என்பதாகும்; இதைப் படித்துவிட்டு பாபநாசம் சிவனின் ‘ராதே உனக்குக் கோபம் ஆகாதடி’ என்ற பாடலைப் படித்தால், பொருள் இன்னும் நன்றாக விளங்கும்.
xxx
எனது வியாக்கியானம்
இதில் ‘உன்னுடைய’ என்பது எதிரில் உள்ள நண்பனிடம் சொல்லுவது அன்று ; நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் AUTO SUGGESTION ஆட்டோ சஜ்ஜஷன் கட்டளை இது.
நீ ஒரு முக்கியமான ஆளை சந்திக்கப் போகிறாய். அவன் உன்னைக் கோபப்படுத்தி மடக்குவதற்காக உன்னை ஏசுவான்; ஏமாந்துவிடாதே ; ஜாக்கிரதை; கோபப்பட்டு ஏதேனும் கத்திவிடாதே ; அத்தனையையும் ரிக்கார்ட் செய்து உனக்கு எதிராகப் பிரசாரம் செய்வான்- என்பது ஒரு விளக்கம்
இதோ பார்; நீ ஆன்மீக தாகம் கொண்டுள்ளாய்; விசுவாமித்திரன் கோபத்திலும், காமத்திலும், அஹங் காரத்திலும் தபோ பலத்தை வீணாக்கி, ஒவ்வொரு முறையும், வசிட்டரிடம் தோற்றான். ஆகையால் ஏமாறாமல் கோபத்தை ஒழித்துவிட்டால் நீ முன்னேறுவாய்.. இதுதான் சரியான பொருள்.
இப்போது பாரதி பாடலைப் படியுங்கள்; அதர்வண வேதம் மனதுக்கு இடும் ஆட்டோசஜ்ஜெ ஷன் கட்டளைதான் அந்த துதி
இதையே வள்ளுவனும் சொல்கிறான் .
.தன்னைத் தான் காக்கின் சினம் காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்’ – குறள் 305
சினம் பற்றிய பத்து குறள்களையும் துறவறவியலில் வள்ளுவன் செப்பியது குறிப்பிடத் தக்கது. அதாவது வெகுளாமை வந்த பின்னரே வசிட்டர் வாயால் விசுவாமித்திரனுக்கு பிரம்மரிஷி பட்டம் கிடைத்தது. முதல் மோதலே வசிட்டனின் காமதேனுவைப் பறித்தவுடன் அதை வசிட்டன் தடுக்க, கோபக்கனல் பொங்க படைகளை ஏவினான் விசுவாமித்திரன் என்பதையும் நினைவிற் கொள்ளவேண்டும்
கி.மு. 3150 வாக்கில், அதாவது இற்றைக்கு 5150 ஆண்டுகளுக்கு முன்னர் வேதத்தை நான்காகப் பிரித்து 4 சீடர்களிடம் கொடுத்து இதை எழுதக் கூடாது வாய் மொழியாகப் பரப்புங்கள் என்றார் வியாசர்.
அந்தக் கட்டளையை சிரமேற்கொண்டு இன்றுவரை நமக்கு அதர்வண வேத மந்திரத்தை அளித்த பார்ப்பானுக்கு பல கோடி நமஸ்காரங்கள் உரித்தாகுக
பார்ப்பான் வாழ்க ; வேதம் வாழ்க ; சம்ஸ்க்ருத மறையை தமிழ் மறையாக நமக்கு அளித்த வள்ளுவன் வாழ்க
வெகுளாமை என்னும் அதிகாரத்தின் கீழ் உள்ள பத்துக் குறட்களையும் பத்து முறை படியுங்கள்
xxxxx
பாபநாசம் சிவன் பாடல்
ராதே உனக்கு……………………………….
FROM WWW.LAKSHMANSRUTHI.COM (THANKS TO LAKSHMAN SRUTHI)
படம். சிந்தாமணி
வருடம். 1937
பாடல். பாபநாசம் சிவன்
பல்லவி.
ராதே உனக்கு கோபம் ஆகாதடி………..
ரா……….தே உனக்கு கோபம் ஆகாதடி………..
ரா…………தே உனக்கு கோபம் ஆகாதடி……….
மாதரசே, பிழையே……….து செய்தேன் சுகுண
ராதே உனக்கு கோபம் ஆகாதடி………
மா……….தரசே………, பிழையே……..து செய்தேன் சுகுண…….
ராதே உனக்கு கோ……….பம் ஆகாதடி…………
மா………..தரசே………..பிழையே…………..து செய்தேன் சுகுண
ரா………தே உனக்கு கோபம் ஆ………..காதடி…………
எனைக் கணம் பிரிய மனம் வந்ததோ………….
4
எனைக் கணம் பிரி…………ய மன…………..ம் வந்ததோ……….
நீ எங்கு சென்றாலும் நான் உன்னை விடுவேனோ
ஓடா………தே ராதே உனக்கு கோபம் ஆகாதடி…………
நீ…………எங்கு………..சென்றா……….லும் நான் உன்னை……..விடுவேனோ
ஓ….டாதே ராதே உனக்கு கோபம், ஆ…………..கா………….த……..டி……….
ரா………தே உனக்கு கோபம், ஆகா………..தடி…………..ஈ……………….ஈ…………..
8
கண்ணை இழந்தவன் நீயோ நானோ……………..
கண்ணை இழந்………..தவன் நீயோ………..நா………..னோ………..
கண்ணை இழந்தவன் நீ………யோ நா…………னோ……………
கண்………ணை இழந்தவன் நீயோ………….நானோ………….
கண்ணா…………..நீ வேறு நான் வேறோ…………எவன் சொன்ன…………வன்
கண்ணை யிழ………ந்தவன் நீ…………யோ நா…………னோ…………..
கண்ணை யிழ……….ந்தவன் நீயோ நானோ…………………
விண்ணும் மண்ணும் நிறைமுகில் வண்ணணே………….
4
விண்ணும் மண்ணும் நிறைமுகில் வண்ணணே…………….
விருப்பு வெறுப்பில் பரஞ்ஜோதி பொருளே இன்று………….
கண்ணை இழந்…………தவன் நீயோ நானோ……………
விருப்பு வெறுப்பில் பரஞ்ஜோ…………..தி பொருளே இன்று
கண்………..ணை இழ………..ந்தவன், நீயோ நானோ………ஓ……….ஓ……….
—SUBHAM—
tags -கோபம், பாரதி, பாபநாசம் சிவன், அதர்வண வேதம், சினம், ராதே உனக்கு