மண்டோதரி பற்றி இரண்டு விசித்திரக் கதைகள் (Post No.3680)

0e629-mandodari-in-siya-ke-ram-piyali-munsi

Written by London swaminathan

 

Date: 1 March 2017

 

Time uploaded in London:- 8-27 am

 

Post No. 3680

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

ராவணனின் மனைவியான மண்டோதரியை இந்துப் பெண்கள் தினமும் காலையில் வணங்குகின்றனர்சீதை.அஹல்யா,திரவுபதி, குந்தி, தாரா, மண்டோதரி என்ற பஞ்சகன்யைகளை (5 பெண்களை) யார் தினமும் நினைக்கிறார்களோ அவர்களுடைய பாபங்கள் அகன்று அவர்கள் புண்ணியம் அடைவார்கள் என்பது இந்துக்களின் வௌவான நம்பிக்கை.

ராமகிருஷ்ண பரமஹம்சரும் , மாணிக்கவாசகரும் மண்டோதரி பற்றி சொல்லும் கதைகள் விநோதமானவை.

 

மண்டோதரி மயன் என்னும் அசுரனின் மகள்; இந்திரஜித்தின் தாய்; ராவணன் உயிர் துறந்தவுடன் உயிர் நீத்த பத்தினி; சீதையை விட்டுவிடும்படி ராவணனுக்கு புத்திமதி சொன்ன வீராங்கனை!

 

 

“ஸீதையைத் தங்கள் நாயகியாக்கிக் கொள்வது கருத்தானால், தங்களுடைய மாயா சக்தியால் ராமனுடைய உருவத்தை எடுத்துக்கொண்டு அந்த ஸீதையைத் தாங்கள் ஏன் ஏமாற்றிவிடக் கூடாது? என்று மண்டோதரி தன் கணவனான ராவணனைக் கேட்டாள்.

 

அதற்கு ராவணன் “சீ! போ, ராமனை நினைத்த மாத்திரத்தில் எனக்குச் சொல்லவொண்ணாத ஆனந்தமும் இன்பமும் உண்டாகின்றன. பரமபதமான சொர்கமும்கூட வெறுப்பாகிவிடும் போலத் தோன்றுகிறது. அப்படியிருக்க அவனுடைய திவ்விய ரூபத்தை எடுத்துக்கொண்டால் எனக்குச் சிற்றின்பத்தில் எப்படி மனம் செல்லும்?” என்று பதில் சொன்னான்.

 

ஆதாரம்:— ராமகிருஷ்ண பரம்ஹம்சரின் உபதேச மொழிகள், பக்கம் 152 (ராமகிருஷ்ணமடம், மயிலாப்பூர், சென்னை)

 

மாணிக்க வாசகர், திருவாசகத்தில் இரண்டு இடங்களில் மண்டோதரி பெயரைக் குறிப்பிடுகிறார்.

 

உந்து திரைக்கடலைக் கடந்தன்

றோங்கு மதிலிலங்கையதனில்

பந்தணை மெல்விரலாட்கருளும்

பரிசறி வாரெம்பிரானவாரே

–திருவார்த்தை, திருவாசகம்

 

 

இதற்கு வியாக்கியானக்காரர்கள் சொல்லும் விளக்க உரை:-

 

மண்டோதரி ராவணன் மாளிகையில் இருந்து இறைவனைத் தியானித்தாளாக, இறைவன் குருமேனி தாங்கியிருந்த  கோலத்துடன், அங்குச் சென்று அவளுக்குக் காட்சியளிக்க, இறைவனுடைய பேரழகில் ஈடுபட்டுப் பேரின்பத்தைக் கேட்கவிருந்த அவள் மயங்கிச் சிற்றின்பத்தில் தன்னுடைய சிந்தையைச் செலுத்தினாள். அவளுடைய அறியாமையைக் கண்ட இறைவன், அவள் கற்பொழுக்கம் கெடாதிருக்க, உடனே அந்த இடத்தை விட்டு மறைந்தார். அவள் வருந்தினாள். அவள் கொண்டது ஒருதலைக் காமம் ஆதலின் பெண் குழந்தை ஒன்று அவளுக்குப் பிறந்தது. அதனைப் பெட்டியுள் வைத்துக் கடலில் விட்டாள். அதுவே மிதிலையில் வந்து ஒதுங்கிப் புதையுண்டு ஜனகனுடைய உழுகால் நுனியில் வெளிவந்தது என்பது வரலாறு.

 

ஆதாரம்:–பக்கம் 1168,  திருவாசகம் ,திருவாவடுதுறை ஆதீனம், 1964

3510a-mandodari-stopping-ravan

ராவணனைத் தடுத்து நிறுத்தும் மண்டோதரி

 

இன்னொரு இடம்:

 

ஏர்தரு மேழுல கேத்த எவ்வுரு வுந்தன் நுருவாய்

ஆர்கலி சூழ்தென்னி லங்கை யழகமர் வண்டோதரிக்குப்

பேரரு ளின்ப மளித்த பெருந்துறை மேய பிரானைச்

சீரிய வாயாற் குயிலே தென்பாண்டி நாடனைக் கூவுவாய்

–குயில்பத்து, திருவாசகம்

 

 

பொருள்:

 

கடல் சூழ்ந்த அழகிய இலங்கையில் வண்டோதரிக்கு எழுச்சியை விளைவிக்கும் ஏழுலகத்தவர்களும் போற்றக் காணப்பெறும் எல்லா வடிவங்களும் தன் வடிவேயாய்ப் போந்து பேரருளால் பேரின்பத்தையளித்த பெருந்துறைக்கண் விரும்பி எழுந்தருளியுள்ள பெருமானை, தென்பாண்டி நாட்டானை உனது புகழமைந்த வாயால் வரக்கூவுவாயாக குயிலே என்றவாறு.

 

ஆதாரம்:–பக்கம் 748,  திருவாசகம் ,திருவாவடுதுறை ஆதீனம், 1964

 

அசுரப் பெண்களையும் இந்துக்கள் தினமும் கொண்டாடுவது ஆரிய-திராவிட மாயையைப் பரப்பும் அறிவிலிகளுக்கு செமையடி கொடுக்கும்; எல்லா அசுரர்களும், இராக்கதர்களும் சிவனையும், பிரம்மாவையும், விஷ்ணுவையும் பிரார்த்தித்து வரம் வாங்கியது அவர்களும் இந்துக்களே; ஆனால் சக்தியைத் தீய வழியில் பயன்படுத்தியவர்கள் என்பதை காட்டுகின்றன. ‘அசுரர்களும் இராக்கதர்களும் திராவிடர்கள்’ என்று அங்கலாய்க்கும் பொந்தெலிகளுக்கும் பேதிலிகளுக்கும், ஆரிய-திராவிட இனவாதம் பேசும் அசிங்கங்களுக்கும் இது செமையடி தரும்.

 

–subaham–

பரம (ஹம்ஸ) ரகசியம் !

567-Sri-Ramakrishna-Paramahamsa

ராமகிருஷ்ண கதாம்ருதம்

Written by S NAGARAJAN

Post No.2228

Date: 9  October 2015

Time uploaded in London: 9-20 AM

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

 

By .நாகராஜன்

 

பரமஹம்ஸர் கூறிய மூன்று மந்திரங்கள்

தர்மம் மிக நுட்பமானது. சூட்சுமமானது. பெரியோர்கள் கூட தர்ம விஷயத்தில்  திகைக்கின்றனர்.

அயோக்கியர்கள் நிறைந்த உலகம் இது, அடிக்கடி வந்து தொந்தரவு செய்கின்றனர். அஹிம்சை வழியைப் பின்பற்றி பேசாமல் நடந்து சென்றால் கலி யுகத்தில் நம் பிழைப்பு ஓடுமா? அவர்களை அடிப்பதா? அல்லது நாம் ஓடி வந்து விடுவதா?

ஆகவே தான் இந்த மாதிரி சந்தேகங்களைத் தீர்க்க பெரியோர்களை நாடுங்கள், அவர் கூறுவதே தர்மம் எனத் தெளியுங்கள் என நமது அற நூல்கள் கூறுகின்றன.

இந்த வகையில் ராமகிருஷ்ண பரமஹம்ஸர் போகிற போக்கில் ஏராளமான ரகசியங்களைக் கூறிக் கொண்டே வந்திருக்கிறார். அதை நல்ல வேளையாக விவேகானந்தர், மகேந்திரநாத் குப்தா (எம்), பரமஹம்ஸரின் இதர சீடர்கள் வரி வரியாகத் தொகுத்து நம்மிடம் தந்துள்ளனர்.

மகேந்திரநாத் குப்தா அவற்றையெல்லாம் தம்மிடம் நாடி வந்த பக்தர்களுக்கு அவ்வப்பொழுது தெளிவாகச் சொல்லி வந்துள்ளார்.

ஒரு நாள் தன் சீடர்களிடம் அவர் கூறியது பரமஹம்ஸரின் மூன்று மந்திரங்களைப் பற்றி!

பக்தர் ஒருவர் பரமஹம்ஸரிடம், “என்ன பாவம் செய்தேன் நான்! என்னுடைய தட்டில் இருந்த மீனை பூனை கவ்விக் கொண்டு சென்று விட்டது. அதை என்னால் தடுக்கவே முடியவில்லை” என்றார். அதைக் கேட்டு உறுதியான குரலில் பரமஹம்ஸர் கூறினார்:” அது ஏன் அப்படி இருக்க வேண்டும்? ஒரே ஒரு தடவை அதை அடி! உன் அடி ஒன்றும் பூனையைக் கொன்று விடாது!”

பக்தர் தன்னை பரமஹம்ஸர் வெகுவாகப் பாராட்டுவார் என்று நினைத்திருந்தார். பாவம், அவர் ஏமாந்தே போனார்!

மோசமான நபர்கள் உள்ள உலகத்தில் வாழ பரமஹம்ஸர் மூன்று தாரக மந்திரம் போன்ற வழிகளைச் சொல்லி உள்ளார்.

FDC

அனுமதி; சீறு; தள்ளி நில்!

அதை பரம(ஹம்ஸ) ரகசியம் என்றே சொல்லலாம்! 1) முதலில் கொஞ்சம் சலுகை கொடு, அதாவது அனுமதி! 2) அப்புறம் சீறு 3)தள்ளி நில் இவையே அந்த மூன்று ரகசியங்கள்.

நல்லதும் கெட்டதும் கலந்ததே உலகம். அதில் வாழும் மனிதர்களும் அப்படியே தான். அவர்களிடம் நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும். முதலில் எதைச் செய்யவும் அனுமதி அல்லது சலுகை தரலாம். ஆனால் அது தீமை பயக்கும் விதத்தில் இருக்குமானால் சீறத்தான் வேண்டும். அடிதடி போன்ற வன்முறை இல்லாவிட்டாலும் கூடச் சீறித்தான் ஆக வேண்டும். அப்படிச் செய்ய பிடிக்கவில்லை எனில் மரத்தடியில் சென்று உட்கார்ந்து ஹரி நாமம் ஜெபிக்க வேண்டியது தான்! ஆனால் உலகத்தில் வாழ வேண்டுமென்றால் சீறினால் தான் முடியும்.

மூன்றாவதாக, “ஒரு மனிதனிடம் ஏராளமான குறைகளைக் கண்டால் என்ன செய்வது? அவனைத் தூர இருந்து சல்யூட் செய்! டைகர் நாராயணனுக்கு எப்படி மனிதர்கள் வணக்கம் செலுத்துகிறார்களோ, அதே போல! அந்த நாராயணனுக்கும் நமஸ்காரம் செய்ய வேண்டியது தான் – ஆனால் தூரத்திலிருந்தே செய்ய வேண்டும். அது உன்னை அடித்து முழுங்கி விடாத தூரத்தில் நீ இருக்க வேண்டும்! அதாவது தள்ளி நில்!” என்கிறார் அவர்!

இதைச் சொன்ன மகேந்திரநாத் குப்தா, பரமஹம்ஸர் இதையெல்லாம் ஏன் சொல்ல வேண்டும் என்று கேட்டு விட்டு, அப்போது தான் தன்னை அண்டிய பக்தர்கள் அமைதியாக வாழ்க்கையைக் கழிக்க முடியும், அமைதியாக இருக்கும் வாழ்க்கையில் தான் கடவுளைப் பற்றி அதிகமாகச் சிந்தித்து துதிக்க முடியும் என்பதனால் தான் அவர் இப்படி அருளியுள்ளார் என்று கூறினார்.

“The first thing necessary is a quiet and peaceful life. If I have to go about the world the whole day to make a living, it is hard for me to attain anything very high in this life”” என்று ஸ்வாமி விவேகானந்தரும் இதையே வலியுறுத்திக் கூறியுள்ளார்.

இப்படி எல்லாம் வழி காட்டி வந்ததால் தான் பரமஹம்ஸரை கருணா சமுத்திரம் என்று அழைக்கிறோம் என்று மகேந்திரநாத் குப்தா உணர்ச்சி பொங்கக் கூறினார்.

அவருடைய சீடர்களுக்கு உலகியல் வழியில் தெளிவு ஏற்பட்டது. நமக்கும் தான்!

***********

கிருஷ்ணார்ஜுனர்: பரமஹம்ஸ விவேகானந்தர் அவதார ரகசியம்!

11.4nara_narayana

Post No 930 Dated 25th March 2014
This article was written by my brother S Nagarajan for Njana Alayam Magazine

ஆன்மீக மாத இதழான ஞான ஆலயம் ஆகஸ்ட் 2013 இதழில் வெளியான கட்டுரை:

கிருஷ்ணார்ஜுனர்: பரமஹம்ஸ விவேகானந்தர் அவதார ரகசியம்!

ச.நாகராஜன்

எவ்வளவு நாள் உனக்காகக் காத்திருந்தேன்!

1881ஆம் வருடம் நவம்பர் மாதம். முதன் முதலாக ராமகிருஷ்ண பரமஹம்ஸரை விவேகானந்தர் தக்ஷிணேஸ்வரத்தில் சந்தித்தார்.கங்கையைப் பார்த்திருந்த மேற்குப் பக்க வாயில் வழியே விவேகானந்தர் நுழைந்தார்.ஒரு பாடலைப் பாடினார். அவ்வளவு தான், பாடல் முடிந்த பிறகு நரேந்திரனின் கையைப் பிடித்து வட புறம் இருந்த வாரந்தாவிற்குச் சென்ற பரமஹம்ஸர் அறைக் கதவை மூடினார், அவர்களை யாரும் பார்க்க முடியாதபடி! “இவ்வளவு தாமதமாக நீ வந்தது சரியா? உனக்காக எவ்வளவு நாள் காத்திருந்தேன்! உலகியல் சம்பந்தமான வெற்றுப் பேச்சைக் கேட்டுக் கேட்டு என் காது புளித்துப் போய் விட்டது! “ என்று ஆரம்பித்தவர் அழ ஆரம்பித்தார். பின்னர் அவர் சொன்ன பேருண்மை தான் உலகை அதிசயிக்க வைத்த ஒன்று!

“ எனது கடவுளே! எனக்குத் தெரியும். நீங்கள் தான் புராதன ரிஷியான நாராயணரின் அம்சமான நர ரிஷி என்று! இந்த உலகில் மனித குலம் படும் துன்பங்களைத் துடைக்க நீங்கள் அவதாரம் செய்துள்ளீர்கள்” என்றார் பரமஹம்ஸர்.

“இவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது” என்று அப்போது நான் நினைத்தேன் என்று பின்னால் அந்தச் சந்திப்பைப் பற்றிக் கூறினார் அப்போது நரேந்திரனாக இருந்த விவேகானந்தர்! ஆனால் தான் தான் நாராயணர் என்பதை பரமஹம்ஸர் வெளிப்படுத்தவில்லை. ஆனால் பின்னர் விவேகானந்தர் இதை உணர்ந்து கொண்டார்.

முதலில் நாராயணர், நர ரிஷியிடம் பூலோகம் போக வேண்டும்; அனைவரின் துயரையும் துடைக்க வேண்டும் என்று கூறிய போது நர ரிஷி பிகு செய்து கொண்டாராம்! போயும் போயும் எதற்காக அங்கே போக வேண்டும் என்று! ஆனால் பூவுலகில் அவதரித்த பின்னர் திரும்பிப் போக வேண்டிய வேளை வந்த போது விவேகானந்தர் பூமியில் அனைவர் படும் துன்பத்தையும் பார்த்து திரும்ப மறுத்து விட்டாராம். இவர்கள் அனைவரும் மோக்ஷம் அடைந்த பின்னரே நான் அங்கு வருவேன் என்றார் அவர்! “பூவுலகில் அனைவரும் முக்தி பெறும் வரை எத்தனை முறை வேண்டுமானாலும் பூமிக்கு வர நான் தயார்” என்று வெளிப்படையாகவே ஒருமுறை அவர் குறிப்பிட்டார்.
நர நாராயண ரிஷிகளுக்கு மனிதர்களை முக்தி பெற வழிகாட்டுவதில் அவ்வளவு அபார பிரியம்!

Nara-narayana-for-web

அர்ஜுனா! நீ நரன்; நான் நாராயணன்!

மஹாபாரதத்தில் அடிக்கடி வலியுறுத்தப்படும் கருத்து அர்ஜுனன் நர ரிஷி என்பதும் கிருஷ்ண பரமாத்மா நாராயண ரிஷி என்பதும் தான்! வன பர்வத்தில் 12ஆம் அத்தியாயத்தில் (அர்ஜுனாபிகமன உப பர்வத்தில்) அர்ஜுனன் கிருஷ்ணரின் உண்மை சொரூபத்தை விளக்கி அவரைப் புகழ்ந்து துதி செய்த போது கிருஷ்ணர் அர்ஜுனனை நோக்கிச் சொல்லும் வாக்கியம் ஒரு பேருண்மையை வெளிப்படுத்துகிறது.

:அர்ஜுனா! நீ என்னைச் சேர்ந்தவன். நான் உன்னையே சேர்ந்தவன். நீ நரனாக இருக்கின்றாய்! நான் ஹரியான நாராயணனாக இருக்கின்றேன். நர நாராயணர்களென்ற ரிஷிகளாகி ஒரு சமயத்தில் இவ்வுலகை அடைந்தோம்” என்று கிருஷ்ணர் தாங்கள் யார் என்பதை விரிவாக விளக்குகிறார்.

பரமஹம்ஸர் விளக்கமும் கிருஷ்ணரின் விளக்கமும் நர நாராயணர்கள் எப்படி துயருற்றிருக்கும் மக்களின் அவலத்தைப் போக்கி முக்தி மார்க்கத்தை அளிக்க எப்போதும் தயாராக இருக்கிறார்கள் என்பதை உணர வைக்கிறது.

நர நாராயண ரிஷிகள் யார்?

இந்த நர நாராயண ரிஷிகளின் பிறப்பையும் பிரபாவங்களையும் தேவி பாகவதம் நான்காம் ஸ்கந்தத்தில் விரிவாகக் காணலாம். அதில் எட்டு ஒன்பதாவது அத்தியாயங்கள் கூறும் சுவையான நிகழ்வுகள் நம்மை ஆச்சரியப்படுத்தி பரவசத்தில் ஆழ்த்தும்.

ஒரு முறை பிருகு முனிவரின் புதல்வரான சியவன மஹரிஷி நர்மதை நதியில் குளித்துக் கொண்டிருந்த போது விஷ நாகம் ஒன்று அவரைப் பிடித்து இழுத்தவாறே நதியின் ஆழத்திற்குச் செல்ல ஆரம்பித்தது. பயமோ நடுக்கமோ இன்றி சியவனர் விஷ்ணுவைத் துதிக்க ஆரம்பித்தார். விஷ்ணு உடனே அவரைக் காப்பாற்றினார். நாகம் தன் பிடியை விடவே சியவனர் பாதாள லோகம் அடைந்தார். அங்கே அவரைக் கண்ட அசுர ராஜனான பிரகலாதன் விஷ்ணு பக்தரான அவரின் வருகை குறித்து மிகவும் மனமகிழ்ந்து அவரை உபசரித்து வணங்கினான். அவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது உலகில் உள்ள தீர்த்தங்களில் சிறந்த தீர்த்தங்கள் எவை என்று கேட்டான். சியவனர் நைமிசாரண்யம், புஷ்கரம், சக்ரதீர்த்தம் ஆகிய மூன்று தீர்த்தங்களைக் குறிப்பிட்டார்.(நைமிசாரண்ய மஹிமை பற்றி ஞான ஆலயம் டிசம்பர் 2012 இதழில் படித்ததை நினைவு கூறலாம்.)

இதை மனதில் வாங்கிக் கொண்ட பிரகலாதன் நேராக நைமிசாரண்யம் சென்றான். அங்கே சரஸ்வதி நதிக் கரையில் இரு ரிஷிகள் தவம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தான். ஆனால் அவர்கள் அருகில் வில்லும் அம்புகளும் இருந்தன. இதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட அவன் உண்மையான ரிஷிகளுக்கு அருகில் வில்லும் அம்பும் இருக்குமா என்று சந்தேகப்பட்டான். அவர்கள் போலி ரிஷிகள் என்று அவன் தீர்மானித்தான்.

தவம் புரிவோருக்கு தபசு தான் வேண்டுமே தவிர தனுசு எதற்காக என்று பிரகலாதன் அவர்களிடம் வினவ,” எங்கள் தபசில் உனக்கு எதற்காக இந்த வீணான விசாரம்? உலக சுகத்தை அனுபவிக்கும் ஒரு சாதாரண பிராணி நீ! பிரம்ம ரிஷிகளுடன் தர்ம அதர்ம விசாரம் செய்யலாகுமா? : என்று பதில் வந்தது.

உடனே பிரகலாதன்,” உங்களுக்கு யுத்தத்தில் சக்தி இருக்கிறது என்கிறீர்கள் அல்லவா? வாருங்கள், யுத்தம் புரிவோம் என்று அறை கூவவே தங்களது சார்ங்கம் ஆர்ஜவகம் என்னும் வெண்ணிற தனுசுகளை எடுத்து நர நாராயணர் யுத்தத்தை ஆரம்பித்தனர். பிரகலாதன் வில்லில் இருந்து வானத்தில் வந்த பாணங்கள் அங்கேயே அறுபட்டன, தேவர்களும் அசுரர்களும் கோரமான இந்த யுத்தத்தைப் பார்க்கக் கூடினர்.பற்பல ஆண்டுகள் சென்ற பின் ஒரு நாள் பிரகலாதனின் வில் அறுபட்டு விழுந்தது. அவன் வேறு வில்களை எடுத்தான் அவையும் துண்டு துண்டாகின. நூறு வருடங்கள் தேவர்களோடு யுத்தம் செய்தவன் பிரகலாதன். இப்போது ஆச்சரியப்பட்டு மலைத்து நின்றான்.

அவன் முன்னர் விஷ்ணு தோன்ற அவரைத் துதித்த பிரகலாதன்,” இவர்கள் யார்? ஏன் என்னால் அவர்களை வெல்ல முடியவில்லை? “ என்று ஆச்சரியப்பட்டு வினவினான்.
“இவர்களே மஹா தபஸ்விகளாகவும் சித்தர்களாகவும் விளங்கும் நர நாராயணர் என்று அறிவாய்! இவர்கள் என்னுடைய அம்சங்கள். ஆகவே அவர்களை எப்படி உன்னால் ஜெயிக்க முடியும்! யுத்தத்தை நிறுத்து. பாதாளம் சென்று என் மீதுள்ள பக்தியைத் தொடர்வாய்” என்று விஷ்ணு அருளவே பிரகலாதன் விஷ்ணு தன்னை வெளிப்படுத்திக் கொண்டதால் மிகவும் மகிழ்ச்சி அடைந்து பாதாளம் மீண்டான். நர நாராயணர் தங்கள் தவத்தை மீண்டும் ஆரம்பித்தனர்.

இப்படிப்பட்ட பிரம்மாண்டமான ரிஷிகளே மஹாபாரத காலத்தில் அர்ஜுனனாகவும் கிருஷ்ணனாகவும் வந்து மனித குலத்திற்கு கீதையை அருளினர். இந்த நவீன அறிவியல் யுகத்தில் விவேகானந்தராகவும் பரமஹம்ஸராகவும் வந்து மனித குலத்திற்குத் தேவையான செய்தியை அருளியுள்ளனர்.

விவேகானந்தரே ஒரு முறை அருளியுள்ளார் இப்படி: “வேறு யாரும் சொல்வதற்கு எதையும் நான் விட்டு வைக்கவில்லை” என்று! மனித குலத்திற்குச் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லியாகி விட்டது,
இப்போதைக்கு இது போதும் என்று முடிவு செய்து தங்கள் இருப்பிடம் சென்று விட்டனர் நர நாராயணர்! அவர்களின் மஹிமையை உணர்ந்து, கிருஷ்ணார்ஜுனர்கள் மற்றும் பரமஹம்ஸ விவேகானந்தரின் உபதேசத்தை ஏற்று அவற்றைக் கடைப்பிடித்து உய்வது நமது கலியுக அதிர்ஷ்டம் தான் அல்லவா!

சின்ன உண்மை!
ஸ்ரீமத் பாகவதம் (பதினொன்றாம் ஸ்கந்தம், அத்தியாயம் 4) நர
நாராயண ரிஷிகள் இன்றும் பத்ரிகாஸ்ரமத்தில் தவம் புரிவதையும் (பனிரெண்டாம் ஸ்கந்தம் அத்தியாயம் 39) மார்கண்டேய மஹரிஷி நர நாராயணரின் மஹிமை பற்றி ஸ்தோத்ரம் செய்வதையும் விரிவாக விளக்குகிறது..

*****************
Contact swami_48@yahoo.com

மனத்தின் ஏழு நிலைகள்

shanakara face

By London Swaminathan
Post No. 865 Date:

ஆதிசங்கரர் எழுதிய ஒவ்வொரு துதியும் அற்புதமானது. அவைகளில் மிகவும் வியப்பான விஷயங்களைச் சொல்லும் ஒரு ஸ்தோத்திரம் பிரஸ்ன உத்தர (பிரஸ்னோத்தர= வினா விடை) ரத்ன மாலிகா. இது ஒரு கேள்வி பதில் துதி. மஹா பாரதத்தில் உள்ள யக்ஷப் ப்ரஸ்னம் போல கேள்வி—பதில் பாணியில் அமைந்தது. மொத்தம் 67 ஸ்லோகங்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் 3, 4 கேள்விகளும் பதில்களும் இருக்கும். சுமார் 200 கேள்விகளை அவரே எழுப்பி அழகான பதில்களைக் கூறுகிறார். அதில் ஒரு கேள்வியை மட்டும் காண்போம்.

யார் தூய்மையானவர்?

யாருடைய மனம் சுத்தமாக இருக்கிறதோ அவரே சுத்தமானவர்.
ஆதிசங்கரரின் மேற்கண்ட பதில் அருமையான பதில்.. மனம், சொல், உடல் (மனோ வாக் காயம்) மூன்றும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பது இந்து மதம் ஒன்றிலேயே தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. அப்பொழுதுதான் மந்திர சித்தி உண்டாகும். உடலைத் தூய்மையாக வைப்பது எளிது. யானை முதல் காகம் வரை குளிப்பதைப் படத்தில் காண்கிறோம்..மனதைத் தூய்மையாக வைப்பதுதான கடினத்திலும் கடினம்.

காமம், க்ரோதம் (கோபம்), லோபம் (பேராசை) ஆகிய மூன்று தொடர்பாக நம் மனத்தில் வரும் எண்ணங்களை எல்லாம் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு, பின்னர் நாம் அதைப் படிக்க முயன்றால் வெட்கப்பட்டு பாதியிலேயே கிழித்து எறிந்து விடுவோம்.அவ்வளவு விகாரமான எண்ணங்கள் வருகின்றன. இதுதான் சந்யாயாசிகளுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம்.

ராம பிரானுக்கு விதிகளை மீற எவ்வளவோ வாய்ப்பு கிடைத்த போதும் அவர் தர்மத்தில் இருந்து இம்மியும் பிறழவில்லை. ஆகையால்தான் ராமாயணம் காலத்தால் அழியாத காவியமாக விளங்குகிறது.

இந்துக்கள் தினமும் வழிபாடு முடித்தவுடன்
காயேன வாசா மனசேந்த்ரியைர்வா புத்யாத்மனேவா
ப்ரக்ருதேத் ஸ்வபாவாத் கரோமி யத் சகலம் பரஸ்மை நாராயணேத் இதி சமர்ப்பயாமி

என்று சொல்,செயல்,சிந்தனை மூன்றினாலும் செய்த பாவங்கள் உடலின் இயற்கை சுபாவத்தால் நிகழ்ந்தது என்று மன்னிப்பு கேட்டு அதையும் இறைவனுக்கே சமர்ப்பித்து விடுவர்.

யக்ஷப் ப்ரஸ்நத்தில் இப்படி ஒரு கேள்வி:
எது ஸ்நானம்?
தருமனின் பதில்: மன அழுக்கைப் போக்குதல்.

பாரதி பாடுகிறான்:
துணி வெளுக்க மண்ணுண்டு—எங்கள்
முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
தோல் வெளுக்க சாம்பலுண்டு—எங்கள்
முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

மணி வெளுக்க சாணையுண்டு—எங்கள்
முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
மனம் வெளுக்க வழியில்லை—எங்கள்
முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

என்று பாடி மாரியம்மாவைச் சரண்புகுந்தோம் என்று முடிக்கிறார். இறைவனின் திருப்பாதங்களை எண்ணிச் சரணடைவதே மனம் வெளுக்க ஒரே வழி!

மனம் பற்றி வள்ளுவன் கூறும் கருத்துகளும் ஒப்பிடற்பாலவை:

மன நலம் மன்னுயிர்க்கு ஆக்கம் (457)= மனத்தின் தூய்மை உலகில் உள்ள எல்லோருக்கும் இன்பம் தரும்
மன நலத்தின் ஆகும் மறுமை (459)= மனத்தின் தூய்மை, மறு பிறப்பிலும் பலன் தரும்
மனத்தானாம் மாந்தர்க்கு உணர்ச்சி (453)= மனம் அறிவை வளர்க்கும்
மனம் தூயார்க்கு எச்சம் நன்றாகும் (456)= மனம் தூய்மை உடயவர்களுக்கு நல்ல புகழும் நல்ல குழந்தைகளும் உண்டாகும்.

ஆங்கிலத்தில் சுருக்கமாக

YOU ARE WHAT YOU THINK ‘யூ ஆர் வாட் யூ திங்க்’= மனம் போல மாங்கல்யம் என்று சொல்லி விடுவர்.

புத்தரும் தம்மபதத்தில் கூறுகிறார்:
நம்முடைய கடந்த கால சிந்தனைகளே நம்மை இன்றைக்கு இந்த நிலையில் வைத்துள்ளது. இப்போது நாம் நினைப்பது நாளைய நிலைமையை தீர்மானிக்கிறது
ஒருவன் தீய எண்ணங்களுடன் செயல்பட்டால் வண்டி மாட்டைத் தொடர்ம் வண்டிபோல கஷ்டங்கள் நம்மைத் தொடரும்.(1)

தூய மனதுடன் செயல்பட்டால், ஒருவனைத் தொடரும் நிழல் போல சந்தோஷம் அவனைத் தொடரும்.(2)

rkp shiva

மனத்தின் ஏழு நிலைகள்

ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறுகிறார்: மனம் உலக விஷயங்களைச் சிந்திக்கும் போது லிங்கம், குஹ்யம், நாபி எனும் மூன்று ஸ்தானங்களில் சஞ்சரிக்கும்.. அந்த நிலையில் உயர்ந்த மனோ பாவங்கள் எழுவதில்லை. காமினி காஞ்சனத்திலேயே அழுந்திக் கிடக்கும் (காமினி காஞ்சனம்= பெண் ஆசை, தங்கம்/செல்வம்/பணம் மீது ஆசை).

மனத்தின் நான்காவது ஸ்தானம் இருதயம். இந்த இடத்துக்கு மனம் வரும்போது முதன் முதலில் ஆத்ம எழுச்சி உண்டாகிறது. இந்த நிலையில் மனமானது பெண்ணாசை, பொன்னாசைகளில் ஒருபோதும் செல்வதில்லை.

மனத்தின் ஐந்தாவது ஸ்தானம் கழுத்து. அங்கு வரும்போது அஞ்ஞானம் எல்லாம் அகல்கிறது. ஆறாவது ஸ்தானம் புருவ மத்தி. அங்கு வரும்போது இரவும் பகலும் இறைவனின் திவ்ய தரிசனமே தென்படுகிறது.

தலைதான் மனத்தின் ஏழாவது நிலை. அங்கு சமாதி உண்டாகிறது. தன் நினைவே கிடையாது. உலக வியாபாரங்கள் அனைத்தும் அறவே ஒழிந்து பரமானந்தம் கிட்டுகிறது.

இந்த ஏழு ஸ்தானங்களே யோக நூல்களில் மூலாதாரம், ஸ்வாதி ஷ்டா னம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞா, ஸஹஸ்ராரம் என்று கூறப்படுகின்றன.

ராமகிருஷ்ண பரமஹம்சரின் புற்று நோய்

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் புற்று நோயால் ‘கஷ்டப்பட்டு வந்தார்” சசாதர பண்டிதர் அவரைப் பார்த்து,
ஸ்வாமி, யோக சக்தியால் நீங்கள் ஏன் நோயைக் குணப்படுத்திக் கொள்ளக் கூடாது? என்று கேட்டார்
ராமகிருஷ்ணர்:– பகவானுக்கு என்று அர்ப்பணம் செய்துவிட்ட மனதை இந்த அற்ப உடலின் பொருட்டு எப்படி நான் திருப்புவேன்?

சசாதரர்: ஆனால் வியாதியைத் தீர்த்தருள வேண்டும் என்று ஸர்வேஸ்வரியையாவது பிரார்த்திக்கக் கூடாதா?

ராமகிருஷ்ணர்::– ஸர்வேஸ்வரியை நினைத்துவிட்டால் எனது ஸ்தூல சரீர நினைவே இல்லாமல் போய்விடுகிறது. அப்போது அச் சரீரத்தில் இருப்பது இல்லை. ஆதலால் சரீரத்தப் பற்றி ஒன்றையும் பிரார்த்தித்துக் கேட்கக் கூடாதவனாக இருக்கின்றேன்.

இது போன்ற உயர் நிலை அடைய இடைவிடாத பிரார்த்தனையும் யோகப் பயிற்சியும் தேவை.

Contact swami_48@yahoo.com