ரிக் வேத அசுரர்கள் வெளிநாடு சென்றது ஏன்? (Post No.5531)

Research Article Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 12 October 2018

 

Time uploaded in London –9-59 am (British Summer Time)

 

Post No. 5531

 

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

ரிக் வேத அசுரர்கள் வெளிநாடு சென்றது ஏன்? (Post No.5531)

 

அஸீரியா என்னும் பழைய நாட்டின் பெயர் அசுரர் தேசம் என்பதாகும். அசுரர் (Ashur) என்றால் கடவுள் என்று சுமேரியன் அகராதி சொல்லும். அஸீரியா(Assyria) என்பது தற்போதைய இராக் நாட்டில் டைக்ரீஸ் (Tigris) நதி பாயும் பிரதேஸம். அங்கே கி.மு.2000 முதல் கி.மு 1000 வரை 20 மன்னர்களுக்கு மேல் அசுரர் என்ற பெயர் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே கி.மு.2000 வாக்கில் ரிக்வேத அசுரர்கள் கருத்து வேற்பாடு காரணமாக இராக், ஈரான் பகுதிகளுக்குச் சென்றது உறுதியாகிறது.

 

இதற்கு ரிக் வேதத்திலும் வரலாற்றிலும் அசைக்க முடியாத ஆதாரங்கள் உள.

 

சான்று 1

கி.மு 800 முதல் கி.மு 1000 வரை தேதி முத்திரை குத்தப்பட்ட பார்ஸீ மத ஸ்தாபகர் ஜொராஸ்டர் (Zoroaster), சௌராஷ்டிர என்ற குஜராத் பகுதியிலிருந்து ஈரான் சென்று பாரஸீக மதத்தைப் பிரபலப் படுத்தினார். ஈரான் என்ற பெயரே ஆர்யன் என்ற சொல்லிலிருந்து வந்ததும், ஈரானிய ஜெண்ட் அவஸ்தா (Zend Avesta) வேதப் புத்தகத்துக்கும், ரிக் வேதத்துக்கும் உள்ள ஒற்றுமையும் உலகறிந்த விஷயம். எல்லா என்ஸைக்ளோபீடியாக்களிலும் உள.

 

சௌராஷ்டிரர் என்பது ஜொராஸ்டர் என்று மாறியதை காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள் 75 ஆண்டுகளுக்கு முன்னரே மைலாப்பூர் சொற்பொழிவுகளில் செப்பியுள்ளார். ஈரானை முஸ்லீம்கள்  எட்டாம் நூற்றாண்டில் கபளீகரம் செய்தவுடன் பார்சீக்கள், தனது தாயகமான குஜராத்துக்கு ஓடி வந்து அடைக்கலம் புகுந்ததை முன்னம் ஒரு கட்டுரையில் மொழிந்து விட்டேன்.

 

இரண்டாவது சான்று

அசுரர்களுக்கு சுக்ராச்சார்யார் குரு; தேவர்களுக்கு பிருஹஸ்பதி குரு. கீதையில் கண்ணன் வாயால் புகழப்பட்ட சுக்ர கவியின் வம்ஸம் திடீரென்று ரிக் வேதத்தில் மறைந்து போகிறது. ஏனைய ரிஷிகளின் வம்ஸங்கள் தொடர்கதையாக உள்ள போழ்தில் உசனஸ் கவி என்ற உலக மஹா கவி, — கண்னன் தன்னை கவிஞர்களுள் நான் உசனஸ் என்னும் போற்றும் கவி– காணாமற் போய் விடுகிறார்.அவரும் அவர்தம் சீடர்களும் அஸீரியா. ஈராக் ஃநாட்டிற்குக் குடியேறி விட்டனர் போலும்.

 

மூன்றாவது சான்று

ரிக் வேதத்தின் பழைய பகுதிகளில் இந்திரன், வருணன், மித்திரன் ஆகியோர் ‘அசுர’ என்ற அடை மொழியுடன் போற்றப் படுகின்றனர். சுமேரியாவில் இப்பொழுதும் ‘அசுர்’ (ASHUR) என்பது கடவுள் என்றே மொழி பெயர்க்கப்படுகிறது.

நாலாவது சான்று

ஜொராஸ்டர் தன்னை ‘ஸ்பிடம’ (spitama=white) ஜௌராஷ்ட்ர என்று அழைத்துக் கொள்கிறார். அதாவது வெள்ளை (சுக்ர, சுக்ல=வெள்ளை) என்று பெருமை பேசுகிறார். சுக்ராச்சார்யார் வ ழியில் வந்தவன் நான் என்று தம்பட்டம் அடிப்பதே இதன் தாத்பர்யம்.

 

ஐந்தாவது சான்று

 

ரிக்வேதத்தைப் போற்றும் மற்றொரு கோஷ்டி, துருக்கி பகுதியைச் சென்று ஆண்டதை உலகம் முழுதுமுள்ள வரலாற்றுப் புத்தககங்கள் மூலம் அறியலாம். காஞ்சி பரமசார்ய ஸ்வாமிகள் 75 ஆண்டுகளுக்கு முந்தைய மைலாப்பூர் பிரசங்கங்களில் மொழிந்தும் உள்ளார். மிட்டனி (Mitanni Civilization) என்னும் நாகரீகத்தில் தசரதன் பிரதர்தனன், சத்யவசன் முதலிய மன்னர்கள் பெயர் கி.மு 1400 முதல் உள்ளதை விக்கிபீடியா முதல் என்ஸைக்ளோபீடியா பிரிட்டானியா வரை எல்லா கலைக்களஞ்சியங்களிலும் காணலாம். அது மட்டுமின்றி ரிக்வேத தெய்வங்களின் பெயர்களில் ஸத்தியம் செய்து அவர்கள் உடன்படிக்கை கையெ ழுத்திட்டதும், தஸ்ரதமன்னன் எகிப்திய மன்னனுக்கு எழுதிய கடிதங்களும் அப்படியே களிமண் பலகைகளில் க்யூனிபார்ம் கல்வெட்டுகளாகப் பொறிக்கப்பட்டுள்ளன.

சுமேயாவில் ராம சந்திரன்

ஆறாவது சான்று

தஸரதன் பெயர் மட்டுமின்றி ராமன் பெயரும் சுமேரியாவில் கி.மு.2000 வாக்கில் பல மன்னர் பெயர்களில் கணப்படுகிறது.

ரிமூஷ், ரிம் சைன் (Rimush, Rim Sin) என்ற பெயர்களில் குறைந்தது மூன்று மன்னர்கள் உளர்.

 

சுமேரிய அகராதியில் சைன் (sin) அல்லது சின் என்றால் சந்திரன் / நிலவு என்று பொருள்.

 

ரிம் சைன் என்பது ராம சந்திரன் என்பதன் திரிபாகும்.

 

சைன்/சந்திரன் என்பதை நாம் எப்படி பெயரில் விகுதியாகவும் பகுதியாகவும் பயன் படுத்துகிறோமா அப்படியே சுமேரிய மன்னர்களும் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்துவது ஸம்ஸ்க்ருத மொழியின் தாக்கத்தைக் காட்டுகிறது.

நாம்,

சந்திர மூர்த்தி, சந்திர ஹாஸன், சந்திரமதி, சந்திர ஸேகரனென்றும்

 

மற்றொரு புறம் ராம சந்திரன், பூர்ண சந்திரன், விபின சந்திரன் என்றும் பயபடுத்துவது போல அவர்களும் சின், சைன் என்பதை பெயர்களில் முன்னொட்டாகவும் பின்னொட்டாகவும் பயன் படுத்துகின்றனர்.

 

சுமேரிய, அஸீரிய, பாபிலோனிய  மன்னர்களின் பட்டியலை அப்படியே எனது ஆங்கிலக் கட்டுரையில் இருந்து கொடுக்கிறேன். இவை என்ன காட்டுகின்றன என்பதை முதலில் மொழிவேன்:

 

1.’அசுர’   ன்ற சொல்லின் ‘மூலம்’  (root) தெரியாமல் சுமேரிய ஆராய்ச்சியளர் முழிக்கின்றனர். ‘அசுர்’ Ashur என்பது ஒரு பிரதேசத்தின் பெயரிலிருந்தோ அல்லது கடவுள் என்ற அர்த்தத்தில் இருந்தோ வந்திருக்கலாம் என்பது சுமேரிய ஆராய்ச்சியளர் துணிபு. இரண்டும் இந்துக்கள் செப்பியதே. மத்ஸ்ய தேசம், நாக நாடு என்று நமது புராணங்கள் சொல்கையில் அங்கு மீன்களோ நாகப் பாம்புகளோ அதிகம் இருப்பதால் அல்ல மத்ஸ்யர்கள், நாகர்கள் என்ற இனத்தினர் நாடு என்ப தை நாம் அற்கிறோம். அது போல, கி.மு.2000 ஆண்டில் தேவர்களுடன் கருத்து மோதல் காரணமாக புதுக் கட்சி துவங்கிய அசுரர்கள் குடியேறிய தேசம் -அசுர தேசம் =அஸீரியா

என்று அழைக்கப்பட்டது. அந்த ‘அஸூர்’  Ashur என்பது கடவுளைக் குறிக்கும் என்பது ரிக் வேதத்தாலும் ஜெண்ட் அவஸ்தாவாலும் மெய்ப்பிக்கப்ப ட் டது. பாரஸீக நாட்டின் (ஈரான்) பாரஸீக மதத்தின் தலையாய கடவுள் அசுர மஸ்டா (Azura Mazda). அவர்கள் எதிர்க்கட்சி துவங்கியதால் பழைய தலைவரான இந்திரனை ஒழித்துவிட்டு வருணனை கட்சித் தலைவராக ஏற்றுக்கொண்டு வருணனை மஹா அசுரான் (பெரிய கடவுள்) என்று விதந்து ஓதுகின்றனர்.

 

(காம்போஜர் என்ற இனம் இருக்கும் இடமெல்லாம் காம்போஜம் என்பது இந்தியாவிலுள்ள காம்போஜத்தாலும் கம்போடியாவிலுள்ள காம்போஜத்தாலும் அறியப்படும்.)

 

இது தெரியாமல் புராணத்தை விமரிசித்த, துவக்க கால இந்திய வரலாற்றை எழுதிய, வெளிநாட்டினர் திணறிப்[போயினர். சோழர்கள் உள்ள பகுதி சோழ தேசம். அவர்கள் பாண்டிய நாட்டைப் பிடித்துவிட்டால் ‘சோழ தேசத்துக்குள் உள்ள’ என்று கல்வெட்டுகள் துவங்கும். இது போல, மத்ஸ்யர்கள் உள்ள இடம் மத்ஸ்ய தேசம்; அவர்கள் எல்லையை விஸ்தரித்தால் அந்த இடமெல்லாம் மத்ஸ்யர் தேசம்; இது தெரியாத அரை வேக்காடுகள் இந்தியாவின் வடமேற்கில் எல்லையை விஸ்தரித்த யவனர் பற்றி தத்துப் பித்து என்று உளறிக்கொட்டி கிளறி மூடி இருக்கின்றனர். அலெக்ஸாண்டர் படையெடுப்புக்கு முன்னர் இந்தியருக்கு யவனர் தெரியாது என்று எண்ணி மஹாபாரத யவனர், சங்க இலக்கிய யவனர் பற்றி எல்லாம் உளறி விட்டனர்.

 

மற்றொரு முக்கியமான விஷயம் ஒரே மன்னர் பெயர்கள் பல இடங்களில் தோன்றுவதாகும்.

 

புராணங்களை மிகவும் ஆராய்ந்து தேதி குத்திய பர்ஜிட்டர் Pargitter முதலிய வெளி நாட்டுக்காரர்கள், சில புராணங்களுக்கு முட்டாள் பட்டம் கட்டி அவை எல்லாம் பெயர்களை இருமுறை எழுதி குழப்பி விட்டதாக எழுதி நம்மைக் குழப்பினர். எகிப்திய வரலாற்றில் ராமர் பெயரில் ராமேஸ்ஸஸ் என்ற பெயரில் 14 மன்னர்கள் உள்ளனர்.

 

சுமேரியா, அஸ்ஸீரியாவில் பல சற்குணர்கள்/ சத்ருக்னன் உளர் (ஸர்கோன் என்று அவர்கள் அழைப்பர்). அஸீரியாவில் ஒரே மன்னர் பெயர் ஆறு ஏழு முறை வருகின்றன. ஆக அடுத்தடுத்து இரண்டு மன்னர்கள் ஒரே பெயரில் வர முடியும் என்பதை எகிப்திய சுமேரிய, அஸீரிய மன்னர் பட்டியல் காட்டுகின்றன. இது தெரியாமல் புராணங்கள் புளுகிவிட்டன என்று பகர்ந்தோர் பலர்.

 

சின்/ சைன் என்று முடியும் பெயரகள் சந்திரன் என்று மேலே குறிப்பிட்டு இருந்தேன். இவை சேன என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லாகவும் இருக்க முடியும் மஹாபாரதத்தில் மட்டும் 24 மன்னர்களின் பெயர்கள் ‘சேன’ என்று முடிவது எனது ஆராய்ச்சியில் தெரியவந்தது.

 

காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள் (1894-1994) தனது உபந்யாஸங்களில் எகிப்திய ராமஸெஸ் , ராமபிரானின் பெயர் என்று குறிப்பிட்டார். இது ரமேஷ், ரமேசன் என்ற சிவ பிரான் பெயராகவும் இருக்க லாம். எகிப்திய மன்னர் அனைவரும் சிவ பிரான் போல நாகப் பாம்புகளை முடியில் சூடியது பற்றி எனது ஆராய்ச்சிக் கட்டுரையில் முன்னரே விளக்கி இருக்கிறேன்.

 

மற்ற ஒரு அதிசய விஷயம் கடவுள் நம்பிக்கை பற்றியது.

சுமார் 40 மத்தியக் கிழக்கு நாட்டு மன்னர்கள் கடவுளின் பெயருடன் துவங்குகின்றன. ‘மர்துக்’, ‘அதாத்’, ‘அசுர’ என்பதெல்லாம் கடவுளின் பெயர்கள். இவ்வாறு குறைந்தது 40 மன்னர்களின் பெயர்கள் உள.

 

முடிவுரை

ஒரு மன்னர் பெயர் பல முறை வந்ததால் குழம்ப்பிப் போய் வரலாற்றைத் திரிக்கக் கூடாது. அசோகனின் பெயரன் தஸரதன். துருக்கியை கிமு.138-0ல் ஆண்டவன் தஸரதன். ராமாயண தஸரதனுக்கு முன்னால் உள்ள தஸரதன் பெயரும் மன்னர் பட்டியலில் உள.

 

இரண்டாவதாக,

பெயர்கள் எப்படி திரிபடையும், மாறுபடும் என்றும் அறிவதற்கு சுமேரியா, அஸீரிய, பாபிலோனிய, எகிப்திய மன்னர் பட்டியல் முன் உதாரணமாகத் திகழ்கின்றன. தற்காலத்திலும் மொரீஷியஸ், மலேஷியா, இலங்கையில் வாழும் தமிழர்கள் ஸஸ்க்ருதப் பெயர்களைக் குதறி, தவறான பெயர்களாக, எழுதுவது போல எகிப்திலும் மத்தியக் கிழக்கிலும் எழுதினர். க்யூனி பார்ம் கல்வெட்டில் ‘துஷ்ட்ரத’ என்று தஸரதன் பெயர் உளது. இதே போல பிரதர்தனன், சத்யவாசன் பெயர்களும் குதறப் ப்பட்டுள்ளன. வெளிநாட்டுத் தமிழர் பெயர்களின் ஆங்கில ஸ்பெல்லிங் spellings பார்ப்போருக்கு நாம் சொல்லுவது தெள்ளிதின் விளங்கும்.

 

மூன்றாவதாக,

நாம் நமது குழந்தைகளுக்குக் கொஞ்சம் எகிப்திய, சுமேரிய வரலாற்றையும் சேர்த்து ஒப்பிட்டுக் காட்ட வேண்டும்

 

நாலாவதாக,

வெளிநாட்டினர் செய்த அயோக்கியத் தனத்தை உடனே அகற்ற வேண்டும். கி.மு ஆறாம் நூற்றாண்டு புத்தர் கால அஜாத சத்ரு, உதயணன் போன்றோர் முதல் வரலாறு துவங்குவதாக மார்கஸீயவாதிகளும் வெள்ளைக்காரகளும் எழுதி வைத்துள்ளனர் ஆனால் அதற்கு முந்தைய 140 தலை முறை மன்னர் பட்டியல் நமது புராணங்களில் உள. அவற்றை சேர்த்து மாணவர்களின் ஆராய்ச்சிக்கு அவைகளை (Home Work/ assignment) ஹோம் ஒர்க் ஆகக் கொடுக்க வேண்டும்.

 

இறுதியாக உடனே வரலாற்றை திருத்தி எழுதி துருக்கி நாட்டு மிட்டன்னி கல்வெட்டு, எகிப்திலுள்ள தஸரதன் கடிதங்கள் (அமர்ணா லெட்டர்ஸ்), முன்று தமிழ் சங்கங்களில் உள்ள மன்னர்களின் பெயர்கள், உலகம் முழுதும், மத்திய ஆஸியப் பாலைவனம் முதல் தென்கிழக்காஸிய நாடுகள் வரை,கண்டு பிடிக்கப்பட்ட தமிழ், ஸம்ஸ்க்ருத கல்வெட்டுகளின் உலக வரைபடம்/மேப் ஆகியவற்றை சிலபஸில் சேர்க்க வேண்டும்.

வரலாற்றை திருத்தி எழுதுவது மிகமிக அவஸியம்.

 

நேரம் போதாமையால் மன்னர் பட்டியலை ஆங்கிலக் கட்டுரையிலிருந்து இணைத்துள்ளேன் கீழே காண்க.

Puzur Ashur I 2000 BCE

Naram Sin (Nara simha or Nara Chandra or Nara Sena)

Sena titles are very common in Mahabharata; at least 24 kings with Sena names in Mahabharata.

Ashur Rabi – around 1500 BCE (Rabi- Ravi/Surya/Sun)

Ashur nadin ahhe

Ashur Nirari 1426 BCE (N and M are interchangeable; it may be Murari)

Ashur bel nishesu 1410 BCE

Ashur nadin ahhe II 1402 BCE

Ashur Ubalit I 1365 BCE

 

Then there are seven kings with ASHUR title  until 1000 BCE.

Some kings names were used up to four times with I, II, III, IV numbers.

 

We come across at least Four Dasarathas until Asoka’s grand son’s time in Indian History.

 

Ram’s Name

 

Rim Sin (Rama Chandra or Rama Sena) – 1822 BCE (ruled from Larsa)

Rim sin II – 1741 BCE

Sin in Sumerian is Moon God; Sin= Chandra

 

There is another proof for using only Gods names in Sumeria:

ADAD and MARDUK- gods’ names were used by at least 20 kings.

 

Sin Iddinam 1849 BCE

Sin Eribam 1842 BCE

Sin Iquisham 1840 BCE

 

xxx

 

Rimush ruled Akkad in 2284 BCE

Naram Sin in 2260  BCE ( other areas also had this name)

Amar sin (Amara Sena or Amara Chandra)- 2046 BCE from Ur

Shu Sin 2037 BCE (ruled from Ur) Susena or Suchandra

Ibbi sin – 2026 BCE

 

 

-சுபம்–

 

ராமனின் அதிசயப் பயணம்-4 (post no.5265)

WRITTEN by London swaminathan

Date: 28 JULY 2018

 

Time uploaded in London – 13-19  (British Summer Time)

 

Post No. 5265

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

COMPARISION BETWEEN KASHMIR POET KALHANA AND TAMIL POET TIRUVALLUVAR

 

ராம பிரான் நடந்தது 14 ஆண்டுகள்; அதாவது சுமார் 5113 நாட்கள்; சில இடங்களில் பல மாதங்கள் கூட ஓய்வெடுத்தார். உதாரணத்துக்கு மழைக் காலங்களில் காட்டு வழியே நடக்க மாட்டார்கள். ஆகையால் ரிஷி முனிவர்கள் சாதுர் மாஸ்ய விரதம் ( நான்கு மாத நோன்பு) அனுஷ்டிப்பர். ராமனும் அதைப் பின்பற்றியதற்கு சான்று உள்ளது. கிஷ்கிந்தையில் சுக்ரீவனுக்கு நான்கு மாத கெடு விதிக்கிறார். படை திரட்டிக் கொண்டு திரும்பி வா என்று அனுப்புகிறார். அவன் 4 மாதங்கள் ஆகியும் வராததால் லெட்சுமணனை தூது அனுப்புகிறார்.  ஆக, ராமாயணம் நடந்ததை நடந்தவாறு சொல்கிறது.

 

முதல்  மூன்று பகுதிகளில் ராமன் சென்ற இடங்களைக் கண்டோம்; இதோ நாலாவது பகுதி.

 

75.சுதீக்ஷண ஆஸ்ரமம் (ஆகோலா)

முனிவருடன் சந்திப்பு

 

(முன்னரே வேறு ஒரு சுதீக்ஷ்ண ஆஸ்ரமம் குறிப்பிடப்பட்டது. ராமன் மீண்டும் அங்கு சென்றாரா? அல்லது ஒரே முனிவரின் பல ஆஸ்ரமங்களில் இதுவும் ஒன்றா? என்பது குறிப்பிடப்  படவில்லை)

 

76.அகஸ்த்ய ஆஸ்ரமம்

அகஸ்த்ய முனிவருடன் சந்திப்பு.

அகஸ்தியரின் ஆஸ்ரமங்கள் நாடு முழுதுமுள. இது ஒரு கோத்திரப் பெயர் என்பதால் பல முனிவர்கள் அந்தப் பெயரால் அழைக்கப்பட்டிருக்கலாம்)

 

77.பஞ்சவடி (ஐந்து ஆல மரம்)

கோதாவரி நதிக்கரையில் ஐந்து பெரிய ஆலமரங்கள் உள்ள இடம். நாஸிக் அருகில் உள்ளது. ராவணனின் சஹோதரி சூர்ப்பநகையின் மூக்கை லக்ஷ்மணன் அறுத்த இடம்; ஸீதா தேவியை ராவணன் கடத்திய இடம்.

 

(ராவணன், பருவக்காற்றைப் பயன்படுத்தி பல நதிகள் வழியாகப் பல இடங்களுக்குச் சென்று அட்டூழியம் செய்ததை ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில் விளக்கியுள்ளேன் . அசோகனின் குழு ஏழே நாட்களில் இலங்கையிலிருந்து பாட்னாவுக்கு திரும்பி வந்ததை மஹாவம்ஸம் இயம்பும். இதை அறியாத அரை வேக்காட்டு ஆராய்ச்சியாளர் கோதாவரி நதித்  தீவுதான் லங்கா என்று உளறிக்   கொட்டினர்)

 

78.ஸர்வ தீர்த் (கோடி)

ராவணனுடன் சண்டையிட்டு ஜடாயு மாண்ட இடம்; இங்கே ஜடாயுவை ராமன் தஹனம் செய்து ஜல அஞ்சலி (தர்ப்பணம்) செய்தான். (ஜடாயு என்பது கழுகு அல்ல; கழுகை அடையாளமாகக் கொண்ட ஒரு இனம். அவர்களும் மனிதர்களே; வானரர்கள் என்போர், குரங்கு போல முறையற்ற வாழ்க்கை நடத்திய மனிதர்களே. அவர்களுடைய அடையாளம் குரங்கு. இப்பொழுதும் ஆப்பிரிக்காவிலும், தென் அமெரிக்காவிலும் மூக்கு, முகம், வாய் முதலியவற்றை இனம் வாரியாக, வெவ்வேறு வகையில்  சிதைத்துக் கொள்ளும் பழக்கம், கானக வாஸிகள் இடையே உண்டு. அது போலவே வானர இனங்களும்).

  1. சுகல் தீர்த்

சுதீக்ஷண முனிவர் ஆஸ்ரமத்தில் ராமர் ஓய்வெடுத்தார்

 

(இமயம் முதல் குமரி வரை காடுகளில் முனிவர்கள் வசித்ததும் அவர்களுடன் ராமன் தங்கியதும் இதன் மூலம் தெரிகிறது. அமைதியான வாழ்வு நடத்தி, இறைவனை நோக்கி தவம் இயற்றுவதும், கானகப் பொருட்களை- கனி காய், தேன் வரகு அரிசி  — உணவாகப் பயன் படுத்தியதும் தெரிகிறது.)

 

மும்பை வட்டாரம்

 

80.பாலுகேஷ்வர் மந்திர், மும்பை

மணலினால் ராமர் உருவாக்கிய லிங்கம்; இங்கு ராமர் வில்லினால் ஒரு ஊற்று உண்டாகினார். வால்கேஷ்வர் கோவில் என்றும் அழைப்பர்.

 

81.புனே வட்டாரம்

81.ராம் தாரியா

இந்த வழியாக ராமர் தென் திசை நோக்கிப் பயணித்தார்.

82.ராம்லிங் (யட்ஸி)

ராமன் சிவனை வழிபட்ட இடம்

 

83.ஸ்ரீ ராம வர்தாயனி

துல்ஜாபூரில் ராமரை ஸதி மாதா சோதித்துவிட்டு, ஸீதையைக் கண்டுபிடிக்க ஒரு பொருளைக் கொடுத்ததாக ஐதீகம்

 

84.காட் ஷிலா மந்திர் (துல்ஜாபூர்)

ஒரு கல்லில் ஸதி மாதவின் உருவத்தை ராமர் கண்டதாகவும்அவள், ராமனை தெற்கு திசை நோக்கிச் செல்ல உத்த்ரவிட்டதாகவும் ஐதீகம்

 

85, 86 ராமேஷவர் (அதானி), ஜாம் கண்டி ஷிவ் மந்திர்

 

இரண்டு இடங்களும் ராமர் சிவ பூஜை செய்த இடங்கள்

  1. அயோமுகி கௌபா( ராம் த்ர்க்)

தொல்லை கொடுத்த ஒரு அரக்கியின் காதுகளையும், மூக்கையும் லக்ஷ்மணன் அறுத்த இடம்

 

  1. கபந்த ஆஸ்ரமம் (ராம் துர்க்)

கபந்தன் என்னும் அரக்கனை ராமன் கொன்ற இடம்

89.சபரி ஆஸ்ரமம்

காட்டுக்குள் சபரி ஆஸ்ரமம் இருக்கிறது. அவள்  கானகப் பழங்களை இனிக்கிறதா என்று கடித்துப் பார்த்தபின்னர் ராமனிடம் கொடுத்தாள்; அதை ராமன் அன்போடு வாங்கிச் சப்பிட்டான்.

 

90.பம்பாசர் (ஹம்பி- துங்கபத்ரா)

ஸீதையைத் தேடுகையில் ராமன் சென்ற  இவ்விடத்தில் வரிசையாகக் கோவில்கள் இருக்கின்றன.

91.ஹனுமான் ஹல்லி (ஹம்பி)

ராம லக்ஷ்மணர்களை அனுமன் சந்தித்த இடம்.

 

ரிஷ்யமுக பர்வதம்

சுக்ரீவனை சந்தித்த இடம்

 

  1. கந்தமாதன் பஹரி (ஹம்பி)

ஐந்து குரங்குகளைக் கண்ட ஸீதா தேவி தனது ஆபரணங்களைக் கீழே போட்ட இடம் (புறநானூற்றில் இது உள்ளது)

 

94.துங்கபத்ரா சக்ர தீர்த

வாலி- சுக்ரீவன் சண்டையை ராமன் மரத்தின் பின்னால் இருந்து பார்த்த இடம்

 

  1. கிஷ்கிந்தா (ஹம்பி)

வாலியின் தலைநகருக்கு ராமன் வந்தான்

96.பரஸ்ராவன் பர்வத் (ஹம்பி)

 

ராமன் இங்கே 4 மாதங்கள் (சாதுர் மாஸ்ய வ்ரத காலம்/ மழைக் காலம்) தங்கினார்.

97.ஸ்படிக சிலா

ஸீதையைத் தேடுவதற்கான திட்டங்களை அனுமான் அறிவித்த இடம்

98, 99, 100, 101.கர் ஸித்தேஸ்வர் மந்திர், ஹல் ராமேஷ்வர், கூடட் நைலிகர், சோம்வார் பேட்

 

இங்கு ராமன், சிவனை வழிபட்டார்.

இதில் நைலிகேர் என்னும் இடத்தில் தசரதனுக்கு ராமர் திதி கொடுத்தார்– சிரார்த்தம் செய்தார்.

  1. தனுஷ் கோடி (மேலி கௌடி)

வானர சேனை இங்கே காலை உணவு உண்டனர். ராமரின் அம்பு மூலம் ஒரு ஊற்று ஏற்படுத்தப்பட்டது.

 

103, 104, 105- சிவ, விஷ்ணு மந்திர்

மைசூர் மவட்டத்தில் கவி ராயன் பேட்டையில் ஒரு சிவன் கோவில் இருக்கிறது. இந்த ஊரில் அரக்கன் கவியை ராமன் கொன்றார். ராம நகரில் ஒரு ராமர் கோவில் இருக்கிறது. இது அவர் ஓய்வெடுத்த இடம். இதே போல ராம் மந்திரும் (ராம் நகர்) அவர் ஓய்வெடுத்த இடம். ராவணனின் சஹோதரன் த்ரிசிரா கட்டிய ஊரில் விஷ்ணு மந்திர் உள்ளது.

 

ராமனும் பஞ்ச பாண்டவர்களும் 14, 13 ஆண்டுகள் சஞ்சாரம் செய்ததால் அவர்கள் காலடி படாத இடமே பாரதத்தில் இல்லை. ஆகவே அவர்கள் வந்த வழியெல்லாம் புனிதத் தலமாக மாறியதில் வியப்பொன்றும் இல்லை. மேலும் அவர்கள் மிகப்பெரிய அரசுகளின் பிரதிநிதிகள் என்பதால் அவர்களுக்கு அரசுகளின் மஹத்தான ஆதரவும் மக்களின் மாபெரும் வரவேற்பும் கிடைத்திருக்கும் என்பதில் ஐயம் இல்லை!

–தொடரும்

 

 

ராமனின் அதிசயப் பயணம்! 5113 நாட்கள் எங்கே போனார்?- Part 1 (Post No.5250)

Written by London swaminathan

Date: 23 JULY 2018

 

Time uploaded in London – 13-52  (British Summer Time)

 

Post No. 5250

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

ராமனின் அதிசயப் பயணம்! 5113 நாட்கள் என்ன செய்தார்? எங்கே போனார்?-1 (Post No.5250)

 

ஒரு அருமையான ராமாயண ஆராய்ச்சிப் புத்தகம், லண்டன் பல்கலைக் கழக நூலகத்தில் கிடைத்தது. ராமன் 14 ஆண்டுகள் நாடு கடத்தப்பட்டார். அதாவது 365 நாட்கள் X 14 ஆண்டுகள் + 3 லீப் வருட நாட்கள் = 5113 நாட்கள்.

 

இந்த 5113 நாட்களில் அவர் எங்கெங்கு போனார்? யார் யாரைப் பார்த்தார்? என்னென்ன செய்தார்? நாம் அனைவரும் யோசிக்காத வகையில் யோசித்து வால்மீகி ராமாயணப்படி தொகுத்துக் கொடுத்துள்ளார் டாக்டர் ராமாவதார் சர்மா .

 

ராமன் 14 ஆண்டுகளுக்குள் வராவிடில் தீக்குளித்து விடுவேன் என்று அருமைத் தம்பி பரதன் செப்பியதும், அதன்படி சரியாக 14 ஆண்டுகள் முடியும் தருவாயில் ராமன் வந்ததும், பரதன் சொன்ன சொல் மீறாதவன் அவசரப்பட்டு ஏதேனும் செய்து விடப்போகிறான் என்று ஹனுமாரை ‘எமர்ஜென்ஸி’ பயணத்தில் ராமன் அனுப்பியதும் நாம் அறிந்ததே.

 

மற்ற விஷயங்களை நாம் நுணுகிப் பார்க்கவில்லை. டாக்டர் ராமாவதார் சர்மா செய்த ஆராய்ச்சியை டாக்டர் ராஜேந்திர சிங் குஷ்வாஹா – ‘’பாரதீய வரலாறு- ஒரு கண்ணோட்டம்’’ என்ற ஆங்கிலப் புத்தகத்தில் பட்டியலிட்டுள்ளார். இதோ சில சுவையான தகவல்கள்:–

 

கைகேயி உத்தரவு போட்டபின்னர் என்ன நடந்தது?

 

1.அயோத்தி- பிறந்த ஊரில்– ராம ஜன்ம பூமியில் — எல்லோரையும் நமஸ்கரித்து விட்டுப் புறப்பட்டார்- ஸீதா தேவியோடு கடும் வாக்குவாதம்; காடு என்பது கல், முள் நிறைந்தது என்பது ராமர் வாதம்- ஸீதையோ பிடிவாதம்- கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை- ராமன் ஸாமியே அப்பப்பா! என்றாள். கணவனே கண் கண்ட தெய்வம் என்றாள். ராமனும் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்- போகும் இடம் வெகு தூரம்!- புறப்படு என்றான்.

 

2.முதல் ஸ்டாப் (முதல் மண்டகப்படி)- தமஸா நதி

 

முதல் நாள் இரவு தமஸா நதிக் கரையில் தங்கினார்; ஏன்? அயோத்தி நகரமே திரண்டு எழுந்து பின்னால் வந்து விட்டது; அவர்களுடைய உணர்ச்சிக் கொந்தளிப்புகள் அடங்க வேண்டுமே! ராமனோ- சாந்த குண ஸ்வரூபன் – கோபமோ தாபமோ இல்லாத ஜீவன் முக்தன்.

 

3.அடுத்த மண்டகப்படி- பூர்வ சகியா–

அயோத்தி மக்களுக்கு பெரிய கும்பிடு போட்டார்; காம்ரேட்ஸ் (Comrades)! உங்கள் ஆதரவுக்கு நன்றி; தயவு செய்து திரும்பிப் போங்கள். என்னப்பன் தஸரதனும் , என் தம்பி பரதனும் உங்களைக் காத்து ரக்ஷிப்பர் என்றார். ராமன் சொல்லைத் தட்ட எவரால் முடியும்? தயக்கத்தோடு, மனக் கலக்கத்தோடு திரும்பினர்.

 

4.சூர்ய குண்டம்

ராமன், லக்ஷ்மணன், சீதா ஆகிய மூவரும் சூர்ய குண்டத்தில் குளித்தனர். சூர்ய பகவானை வணங்கினர்.

 

இப்பொழுது பைஸாபத் (அயோத்தி) மாவட்டத்திலிருந்து உத்தர பிரதேஸத்தின் சுல்தான்பூர் மாவட்டத்தில் நுழைந்தனர்.

 

 

  1. 5-வது மண்டகப்படி- வேதஸ்ருதி நதி

தற்போதைய அஷோக் நகர் அருகில் நதி யைக் கடந்தனர்.

  1. கோமதி நதி

அடுத்ததாக வழியில் தடை போட்ட நதி கோமதி. அதைத் தற்போதைய வால்மீகி ஆஸ்ரமம் அருகே கடந்து எதிர்க் கரை அடைந்தனர்.

 

ஆசையே அலை போலே, நாமெலாம் அதன் மேலே
ஓடம்போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே!

(ஆசையே அலை போலே நாமெலாம் அதன் மேலே)

பருவம் என்னும் காற்றிலே
பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வார்
சுகம் பெறுவார் அதிசயம் காண்பார்!
நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவார்?

என்ற திரைப் படப் பாடல் என் காதில் ஒலிக்கிறது ( இதை எழுதும் போது)

 

 

7.பிரதாப்கார் மாவட்டத்தில் நுழைகின்றனர்

ஸ்யந்திகா (சாய் ஆறு) — ஸாய் நதியும் பராரியா ஆறும் கலக்கும் இடத்தில் நின்று இயற்கையை ரஸிக்கின்றனர்.

 

8.அடுத்ததாக வேத்ரவதி நதியை அடைகின்றனர் – தற்போது இந்த நதிக்கு சாகர்னி என்று பெயர்.

 

9.பாலுக்னி நதி –

நிறைய மணலும் கூழாங்கற்களும் நிறைந்ததால் இந்த நதியை பாலுக்னி என்று அழைப்பராம்.

 

இதைத் தாண்டியவுடன் ராமன் உத்தரப் பிரதேஸத்தின் பிரயாகை மாவட்டத்துக்குள் (இப்போதைய பெயர் அலஹாபாத்) பிரவேஸிக்கிறான்.

 

10.சிருங்கிபேர புரம்

‘குகனுடன் ஐவரானோம்’ என்ற கம்பன் பாடல் மூலம் பிரஸித்தி பெற்ற குகன் என்னும் வேடனைக் காண்கிறான் ராமன். ஸஹோதரனைப் போல அவன்  பாஸமும் பரிவும் நேஸமும் நட்பும் பாராட்டுகிறான். அவன் நிஷாத குல மன்னன். கங்கையைக் கடக்க நூற்றுக் கணக்கான படகுகளை அணிவகுக்கிறான்.

11.ஸீதா குண்டம்

கங்கையைக் கடந்தவுடன், அமைச்சன் ஸுமந்திரனைத் திருப்பி அனுப்புகிறான் ராமன்.

 

12.சிவன் கோவில்

ஸீதா தேவி, ஒரு குளத்திலிருந்து மண் எடுத்து சிவ லிங்கம் செய்து வழிபடுகிறாள்.

 

( இதை எழுதியவர் வால்மீகீ ராமாயணத்தோடு ஆங்காங்கே உள்ள ஸ்தல புராணக் கதைகளையும் இணைத்துப் படைத்துள்ளார் என்பதை நினைவிற் கொள்க.)

 

13.ராம ஜோய்தா

சரவா கிராமம் அருகில் ராமர் குளித்தார்.

 

14.பரத்வாஜ மஹரிஷியுடன் சந்திப்பு

 

ராமன் முதலில் சந்தித்த பெரிய ரிஷி பரத்வாஜர். அவரது ஆஸ்ரமத்தில் அவர்களுக்கு பெரிய வரவேற்பு. அது கங்கை நதிக் கரையில் அமைந்தது.

 

15.ஆலமர வழிபாடு (யமுனை நதிக்கரை)

 

ஸீதா தேவி அக்ஷய வடம் என்னும் ஆலமரத்தை வழிபடுகிறாள்

 

16.. பதினாறாவது மண்டகப்படி – சங்கம்

 

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலகின் மிகப் பெரிய கும்பமேளா திருவிழா நடக்கும் த்ரிவேணி சங்கமத்தில் கங்கை– யமுனை- ஸரஸ்வதி — நதி கலக்குமிடத்தில் புண்ய ஸ்நானம்.

17.ஸீதா ரஸோய் (ஜஸ்ரா பஜார்)

இங்கு மிகப் பழைய குகை ஒன்று இருக்கிறது. அங்கு ராமனுக்கும், லக்ஷ்மணனுக்கும் ஸீதா சமைத்து அறுசுவை உண்டி படைத்தாள்

 

பாண்டா மாவட்டத்தில் நுழைகின்றனர்

  1. சிவ் மந்திர்/ சிவன் கோவில் (ரிஷ்யான் ஜங்கல்)

கானகம் வாழ் ரிஷிகளின் கூட்டத்துடன் ராமன் சந்திப்பு

  1. ஸீதா ரஸோய் (ஜன் வன்)

ஸீதா தேவி இங்கு அரிசிச் சோறு உண்டாக்கினாள்.

 

TO BE CONTINUED……………………………….

இரண்டு சொற்கள் தொடர்பாக ராமன், பரதன் மோதல்! (Post No.4334)

Written by London Swaminathan

 

Date: 25 October 2017

 

Time uploaded in London- 11-09 am

 

 

Post No. 4334

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

நம் எல்லோருக்கும் ராமாயணம் தெரியும். காலத்தால் அழியாத காவியம்! எங்கெங்கெல்லாம் ஒரு மனிதன் எளிதில் திசை மாறிப்போக முடியுமோ அங்கெங்கெல்லாம் ராமன் என்னும் ஒரு மாமனிதன், ஒரு க்ஷத்ரிய அரசன்- தவறாத, நேரான பாதையில் சென்றான். ஆகையால் உலகம் முழுதும் வாழும் நல்லோர் மனதில் எல்லாம் நீங்காத இடம் பிடித்தான். வால்மீகி முனிவர் சம்ஸ்கிருதத்தில் எழுதிய காவியம்தான் உலகின் ஆதி காவியம். இவர் ராமரின் சம காலத்திய முனிவர். 24,000 ஸ்லோகங்கள் 48,000 வரிகளில் அருமையான் நீதிநெறிகளை ராமன் வாயிலாகவும் ஏனைய கதா பாத்திரங்களின் வழியாகவும் முத்து முத்தாக உதிர்த்துச் செல்கிறார்.

 “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும் (குறள் 50) என்று வள்ளுவன் சொன்னதிலிருந்தே ராமன், கிருஷ்ணன் ஆகிய புருடர்கள் தெய்வம் என்பதை உணரலாம்.

 

தனது தாயான  கைகேயி செய்த தவற்றை உணர்ந்த பரதன்—

அமைச்சர்களும், குருமார்களும் படைகளும், புடை சூழ கானகம் ஏகுகிறான். அங்கே ராமனைச் சந்திக்கிறான்.

“அண்ணா! தாயும் தந்தையும் தவறு செய்துவிட்டனர். உன்னை காட்டிற்கு அனுப்பியது தர்ம விரோதம்”– என்று ராமனிடம் வாதிடுகிறான். ராமனோ ‘தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை’ என்பது ஆன்றோர் வாக்கு. ‘தாய் சொல்லைத் தட்டாதே’ என்பது சான்றோர் வாக்கு. ஆக நான் இருவரின் ஒப்புதலுடன் இங்கே வந்தேன்; 14 வருடம் கழித்து அயோத்தி மாநகருக்கு வந்து ஆட்சியை ஏற்றுக் கொள்வேன் என்கிறான். பரதன் விடவில்லை. சாம, தான, பேத, தண்டம் என்பதில் பல உபாயங்களைக் கையாளுகிறான்

 

“நாம் காலாகாலமாக வணங்கும் குருமார்கள் என்னுடன் வந்துள்ளனர் அமைச்சர்கள் வந்துள்ளனர். அவர்கள் எல்லாம் நான் சொல்லுவதை ஆ மோதிக்கின்றனரே” என்கிறான். அதற்கும் ராமபிரான் மசியவில்லை.

 

“அண்ணா, அண்ணா! ப்ளீஸ்! நான் சின்னப்பையன், என் மீது இவ்வளவு பெரிய ராஜ்ய பாரத்தைச் சுமத்துவது முறையோ, தகுமோ?” என்று கெஞ்சிப் பார்க்கிறான். உலகில் சத்தியத்தை நிலை நாட்ட வந்த ராமன், அசையவில்லை.

 

திடீரென சொற்சிலம்பம் மூலம் ராமனை விழுத்தாட்டல்லாம் என்று எண்ணுகிறான் பரதன்.

“அண்ணா மகன் என்றால் அபத்யம் என்று சம்ஸ்கிருதத்தில் சொல்வார்களே; இதன் பொருள் “கீழே விழாமல் தடுப்பவன்” என்பதுதான் உனக்குத் தெரியுமே. வயதான காலத்தில் கிழவர்களுக்கு புத்தி தடுமாறும் என்று சம்ஸ்கிருத்தில் முதியோர் சொன்ன பழமொழி உளதே.

அந்தகாலே ஹி பூதானி முஹ்யந்தீதி புரா ஸ்ருத்: 2-106-13

நம் அப்பாவும் கிழ வயதில் புத்தி தடுமாறி உன்னை காட்டுக்கு அனுப்பிவிட்டார். பெண் வயப்பட்டோ அல்லது கைகேயிக்குப் பயந்தோ இப்படிச் செய்திருக்கலாம். தவறு செய்தவர்கள் நரகத்தை அடைவார்களே. ஆகையால் நம் அப்பா, வாழ்க்கையில் தவறி விழுந்துவிட்டார். அவர் கீழே விழாமல் தடுக்க, நரகத்தில் விழாமல் தடுக்க நீ உதவலாமே? அபத்யனாக இரு”.

 

 

பிதுர்ஹி சமதிக்ராந்தம் புத்ரோ ய: சாது மன்யதே 2-106-15

ததபத்யம் மதாம் லோகே விபரீதமதோ அந்யதா 2-106-16

 

மா  பவான் துஷ்க்ருதம் பிது: (அப்பா போட்ட தவறான உத்தரவை பின் பற்றாதே)-2-106-16

முதலில் கெஞ்சிய பரதன், இப்பொழுது அண்ணனுக்கே அறிவுரை சொல்லப் புறப்பட்டுவிட்டான். ராமன் விடுவானா?

அபத்யன் என்பது நரகத்தில் விழாமல் தடுப்பவன் என்று பொருள்; அதாவது புதல்வர்களைப் பெற்றால் அவர்கள் செய்யும் திதி முதலியவற்றால் மேலுலகம் சென்றோர் நரகத்தில் விழாமல் தடுப்பர். ஆனால் பரதன் அதைத் தவறாக வியாக்கியானம் செய்தவுடன், அவனை ராமன் ஒரு பிடி பிடிக்கிறான்.

 

கயா க்ஷேத்ர மஹிமை

ச்ரூயதே ஹி புரா தாத ச்ருதிர்கர்தா யசஸ்வினா

கயேன யஜமானேன கயேஸ்வேவ பித்ரூன் ப்ரதி 2-107-11

“தம்பி! முன்னொரு காலத்தில் கயா என்று  ஒரு மன்னன் இருந்தான். அவன் கயா என்ற புனிதத்தலத்தில் சிரார்த்தம் (திதி) செய்து முன்னோர்களைக் கடைத்தேற்றினான். அவன் பல விதிகளைச் செய்திருக்கிறான். ‘புத்’ என்னும் நரகத்தில் இருந்து விழாமல் தடுப்பவனே ‘புத்ரன்’ எனப்படுவான்.

 

புத்ராம்னோ நாரகாத்யஸ்மாத்பிதரம் த்ராயதே சுத:

தஸ்மாத் புத்ர இதி ப்ரோக்த: பித்ரூன் ய: பாதி சர்வத: 2-107-12

அப்பா சொல் எனக்கு மட்டும்தானா? பார், என்னை காட்டுக்குப் போ என்று சொன்னார்; நான் காடேகினேன்; உன்னை ஆட்சி செய் என்றார். நீ ஏன் ஆட்சி செய்து அவர் சொல்லைக் காப்பாற்றக் கூடாது? என்னை ‘அபத்யன்’ ஆக இரு என்றாய். நீ என் ‘புத்ரனாக’ இருக்கக்கூடாது? என்று ராமன் செப்பினான்.

பவானபி ததேத்யேவ பிதரம் சத்யவாதினம்

கர்துமர்ஹதி ராஜேந்த்ர க்ஷிப்ரமேவாபிஷேசனாத் 2-107-9

அபத்ய, புத்ர என்ற இரண்டு சொற்களுமே புதல்வன், மகன் என்றே பொருள்படும். ஒருவன் பல மகன்களை ஈன்றெடுத்தால் அதில் ஒருவனாவது கயாவுக்குச் சென்றோ செல்லாமலோ திதி/ சிரார்த்தம் செய்து முன்னோர்களை ‘புத்’ என்னும் நரகத்தில் விழாமல் தடுப்பான் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இது தமிழில் புற நானூற்றிலும் சம்ஸ்கிருதத்தில் மானவ தர்ம சாத்திரம் என்பப்படும் மனு நீதி நூலிலும் உளது.

கோப்பெருஞ் சோழன் வடக்கிருந்து உயிர்துறக்க உடகார்ந்த பந்தலில் தனக்கும் இடம் தா என்று பொத்தியார் என்னும் புலவர் வந்தார். ஆனால் சோழன் இடம் தரவில்லை. நீ திருமணமானவன்; இன்னும் உனக்குக் குழந்தை பிறக்கவில்லை. (ஈமக் கடன் செய்து உன்னை நரகத்தில் விழாமல் காக்க) ஒரு புதல்வன் பிறந்த பின்னர் வருக என்று சொல்லி அனுப்பினான் சோழ மன்னன். புறநானூற்றின் 222ஆவது பாடலுக்கு வியாக்கியானம் செய்த பெரியோர்கள், புதல்வன், புத் என்னும் நரகம் பற்றி விரிவுரை எழுதியுள்ளனர்.

 

ராமனை மடக்கிப் பிடிக்க வந்த பரதனை ராமன் கிடுக்கிப் பிடி போட்டு வீழ்த்திவிட்டான். ராமன் மற்போர் வீரன், விற்போர் வீரன்; சொற்போரிலும் வீரன்.

 

வால்மீகி, கம்பன் எழுதிய காவியங்களை நுணுகிப் படிக்க ஒரு வாழ்நாள் போதாது. இன்றே படிக்கத் தொடங்குங்கள்; பாடல் பாடலாக’ ஸ்லோகம் ஸ்லோகமாக பதம்  பிரித்துப் படியுங்கள்.

Translated by London swaminathan

Source: LECTURES ON THE RAMAYANA, THE RT.HON. V S SRINIVASA SASTRI, 1949, REPRINTED 1994, MADRAS SAMSKRIT ACADEMY

–Subham–

ராமன் – யமன் சண்டை! அரிய ஏட்டுச் சுவடி!!

Compiled by London swaminathan

Date : 4 September  2015

Post No. 2124

Time uploaded in London : 12-58

கம்ப ராமாயணத்திலும்,வால்மீகி ராமாயணத்திலும் இல்லாத எவ்வளவோ விஷயங்கள் செவி வழியாக வந்துள்ளன. புற நானூற்றில் உள்ள இரண்டு பாடல்களில் உள்ள செய்திகள் இரண்டு ராமாயணங்களிலும் இல்லை. ஆழ்வார் பாடல்களில் உள்ள அணில் கதையும் முந்தைய இரண்டு ராமாயணங்களில் இல்லை. இவைகள் குறித்து முன்னரே எழுதிவிட்டேன். ஒரு வேளை இவைகள் நமக்குக் கிடைக்காமற்போன போதாயன ராமாயணம் முதலியவற்றில் இருந்திருக்கலாம். ராமனுக்கும் யமனுக்கும் நடந்த சண்டை குறித்த ஏட்டுப் பிரதி விஷயம், ஒரு சிறிய நூலாக வெளிவந்து, பிரிட்டிஷ் லைப்ரரியில் வைக்கப்பட்டுள்ளது. இதோ அந்தப் புத்தகம்.

வசந்தன் உயிர்வரு படலம்

வெளியான தேதி – 6-11-1917

வெளியிட்டவர்: கும்பகோணம் அ.அரங்கசாமி மூப்பனார்

(தற்போதைய கம்பராமாயணப் பதிப்புகளில் இந்தப் படலம் சேர்க்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை).

IMG_3972 (2)

IMG_4130

IMG_4133 (2)

IMG_4134

IMG_4135 (2)

IMG_4136 (2)

IMG_4137 (2)

IMG_4138

ஸ்ரீ ராமரிடமுள்ள ஐந்து வீரங்கள்!

ram-with-dwaja

Article No.2009

Written by London swaminathan

Swami_48@yahoo.com

Date : 22  July 2015

Time uploaded in London : 8-07 காலை

 

இராம பிரானைப் பற்றி உலகம் முழுதும் 300-க்கும் மேலான வெவ்வேறு வகையான ராமாயணங்கள் இருப்பதை முன்னரே எழுதியுள்ளேன். இது தவிர கம்பன், வால்மீகி, துளசிதாசர் ஆகியோர் கூறாத சில சம்பவங்கள், சங்க இலக்கியமான புறநானூற்றில் இரண்டு பாடல்களில் இருப்பதையும், ஆழ்வார் பாடல்களில் மேலும் சில சம்பவங்கள் இருப்பதையும் காட்டினேன். இப்பொழுது உதிரியாக உள்ள ஒரு பாடல் ராமனை எப்படி வருணிக்கிறது என்று காண்போம்.

உலகில் மற்ற நாடுகளில் ஏ.கே.47 துப்பாக்கியாலும் ‘மிஷின் கன்’ எனப்படும் இயந்திரத் துப்பாக்கியாலும் அதிகம் பேரைச் சுட்டுக் கொல்லுவோருக்கு ‘பெரிய வீரன்’ பட்டம் கொடுப்பார்கள். ஆனால் இந்தியாவில் “புலன் ஐந்தும் வென்றான் தன் வீரமே வீரம்” என்று அவ்வையார் பாராட்டுவதை இரண்டு மஹாவீரர்கள் (மஹா வீர அனுமன், சமண தீர்த்தங்கரர் மஹாவீரர் ) பற்றிய கட்டுரையில் தந்தேன்.

ராமனிடம் ஐந்து விதமான வீர குணங்கள் உள்ளன. இவைகளைப் பின்பற்ற ஒருவனுக்கு மஹா வீரம் தேவை. ஏனெனில் கஷ்ட திசையில் மாட்டிக் கொண்ட நல்லவர்களும் கூட, எளிதில் வழுக்கி விழ வாய்ப்பு உண்டு. ஆனால் ராம பிரானோ எவ்வளவு இடர்ப்பாடுகள் வந்த போதிலும் தர்மத்தின் வழியையே கடைப் பிடித்தான். அதனால் அவனிடம் ஐந்து நற்குணங்கள் இருப்பதாகப் புலவர் பெருமக்கள் போற்றுவர்:-

rama-travel

தியாக வீரம்

கைகேயியின் வசப்பட்ட தசரதன் சொல்லிய சொல்லுக்காக, அந்த சத்ய பராக்ரமன் ராமன், தனக்குக் கிடைக்கவேண்டிய பெரும் அரச பதவியைத் தியாகம் செய்தான். இதைவிடப் பெரிய தியாகம் உளதோ! அப்பா, அம்மாவை எதிர்த்து போர்கொடி தூக்குவோம் என்று சூளுரைத்த லெட்சுமணனை அமைதிப்படுத்தி அவனையும் தன் வழிப்படுத்தினான்.

 

தயாவீரம்

வேடர் குலத் தலைவனான குகனையும், குரங்கினத் தலைவனான சுக்ரீவனையும், அரக்கர் குல விபீஷணனையும் தனது சஹோதரர்களாக ஏற்றான். சாதி, குல வேற்றுமைகளை மிதித்து நசுக்கிய முதல் மாவீரன் அவன். எல்லோரிடமும் தயை என்னும் இரக்கம் காட்டினான். சபரிக்கு மோட்சம் கொடுத்தான். மாபெரும் தவறு இழைத்த அஹல்யைக்கு சாப விமோசனம் அளித்தான்.

 

வித்யாவீரம்

அவனுடைய விவேகம், வித்யா வீரம் எனப்படும். போர்க்களத்தில் ஆயுதங்களை இழந்த இராவணனைக் கொல்லாது “இன்று போய் நாளை வா” — என்று இயம்பினான். சீதையை ஒப்படைத்தால் உயிர்ப்பிச்சை போடுவதாகக் கூறினான். ஒரு வண்ணான் சொன்ன சொல்லை மதித்து, தனது மனைவியின் தூய்மையை, கற்பினை நிலநாட்ட அவளை பூக்குழி இறங்க உத்தரவிட்டான். ஜனநாயகக் கொள்கைகளை நடைமுறைப்படுத்திய முதல் தலைவன் அவன். இராமன் இருக்கும் இடத்தில் காமன் இரான்.

 

பராக்ரமவீரம்

21 தலை முறை க்ஷத்ரிய மன்னர்களை அழித்த பரசுராமனையும் வெற்றி கொண்டு தனது பராக்ரமத்தை நிலநாட்டினான் ராமன். ஏழு மராமரங்களை ஒரே அம்பினால் துளைத்ததோடு, ஏழு கோடி அவுணர்களையும் அழித்தொழித்தான். ராவண சம்ஹாரம், அவனது வீர பராக்ரமத்துக்கு முத்தாய்ப்பாக அமைந்தது.

தர்மவீரன்

“இந்த இப்பிறவியில் சிந்தையாலும் இருமாதரைத் தொடேன்” என்று புதுநெறி புதுக்கிய நாயகன் அவன். எல்லா அரசர்களும் பல மனைவியரை மணக்க, சீதையைத் தவிர வேறு ஒரு பெண்ணை சிந்தையாலும் தொடாதவன் அவன். சத்திய நெறி தவறாதவன்

அவன் ஸ்ருதபாஷி= உண்மை விளம்பி

அவன் மிதபாஷி = குறைவாகப் பேசுபவன்

அவன் ஹித பாஷி = இனிமையான சொற்களையே நவில்வான்

பூர்வபாஷி = சிறிதும் தலைக் கனம் இல்லாமல் தானே வலியச் சென்று நலம் விசாரிப்பவன்.

 ராமன்

இதோ அவனைப் புகழும் பாடல்:

பஞ்சவீரா:சமாக்யாதா ராம ஏவ து பஞ்சதா

ரகுவீர இதி க்யாத: சர்வ வீரோப லக்ஷண:

 

வாழ்க இராமபிரான் திரு நாமம்! வளர்க அறம்!!