கால்களை இழந்தும் காட்டு வளம் காப்பவர் (Post No.4761)

Date: 19 FEBRUARY 2018

 

Time uploaded in London- 5-49 am

 

WRITTEN by S NAGARAJAN

 

Post No. 4761

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

 

 

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் 11-12-2017லிருந்து 20-12-2017 முடிய காலையில் சுற்றுப்புறச் சூழ்நிலை சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பிய உரைகளில் ஏழாவது உரை

 

  1. கால்களை இழந்தும் காட்டு வளம் காப்பவர் ச.நாகராஜன்

 

புதைபடிமங்கள் மூலம் கால நிர்ணயம் செய்த ஆராய்ச்சியாளர் ரிச்சர்ட் லீகி (Richard Leakey),  எந்த நிலையிலும் மனம் தளரக் கூடாது என்பதை நிரூபித்து, அனைவருக்கும் உத்வேகம் ஊட்டும் வாழ்க்கை வரலாற்றைக் கொண்டவர். இப்போது அவருக்கு வயது 73.

 

 ஆப்பிரிக்காவில் பிறந்த லீகி பிரமாதமான கல்வி அறிவைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் அவரது நுணுகிய ஆய்வுத் திறனும் அர்ப்பணிப்பு மனோபாவமும் அவர் பெயரை ஆப்பிரிக்காவின் ஒவ்வொரு இல்லமும் கொண்டாடும் பெயராக ஆக்கியது.

 

   கோபி ஃபோரா என்ற இடத்தில் அவர் தனது ஆய்வுகளை ஆரம்பித்தார். இந்த ஆய்வு 30 லட்சம் வருடங்களுக்கு முன்னர் இருந்த புதை படிமங்களைக் கண்டுபிடிக்க இவருக்கு உதவியது. பழங்காலத்திய 400 எலும்புகளை இவர் சேகரித்தார். இதன் மூலம் மனித குல வரலாற்றைப் பற்றிய முக்கிய தகவல்கள் கிடைத்தன.

 

     1974ஆம் ஆண்டு நேஷனல் ம்யூஸியம்ஸ் ஆஃப் கென்யாவின் டைரக்டராக அவர் நியமிக்கப்பட்டார்.

ஆப்பிரிக்காவில் தந்தத்திற்காக யானைகளைச் சுட்டுக் கொல்லும் நபர்கள் அதிகரிக்கவே யானைகளின் எண்ணிக்கை பாதியாக அதாவது ஆறு லட்சமாகக் குறைநதது.

‘கொல்ல வருபவரைக் கண்டவுடன் சுடு என்ற கடுமையான ஆணையைப் பிறப்பித்து யானைகளைக் காத்தார் லீகி.

1989இல் கென்யாவின் ஜனாதிபதி டேனியல் அராப் மொய் இவரை கென்யா வைல்ட்லைப் சர்வீஸின் தலைவராக ஆக்கினார்.

 

இந்தப் பதவியை அவர் ஏற்றுக் கொண்டது அனைவருக்கும் ஆச்சரியத்தைத் தந்தது.

 

ஏனெனில் அவருக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருந்தது.

இந்த உடல் உபாதை எல்லாம் லீகியை ஒன்றும் செய்யவில்லை. சரியாக காலை 4 மணிக்கு எழுந்து தன் ஆய்வுப் பணியை ஆரம்பிப்பார். தனது விமானத்தைத் தானே ஓட்டிச் செல்வார்.

 

காட்டு வளத்தைச் சுரண்டுவதில் இருந்த ஊழலை அவர் ஒழித்துக் கட்டினார். வனத்துறை ஊழலில் ஈடுபட்டிருந்த சுமார் 1700 பேர்களைத் தைரியமாக அவர் களையெடுத்தார்.

1993ஆம் ஆண்டு ஒரு விமானத்தை லீகி ஓட்டுகையில் அது கீழே விழுந்து விபத்திற்குள்ளானது. அதில் அவர் கால்கள் இரண்டும் நசுங்கிப் போயின. இரண்டும் அறுவைச் சிகிச்சையில் அகற்றப்பட்டன.

 

அவருக்கு செயற்கை அவயவங்கள் பொருத்தப்பட்டன. மீண்டும் செயலாற்றலுடன் உழைக்க ஆரம்பித்தார்.

2013இல் அவருக்கு ஐஸக் அஸிமாவ் விஞ்ஞான விருது வழங்கப்பட்டது.

 

இன்று உலகில் வன வளத்தையும் வன விலங்குகளையும் காக்க வேண்டும் என்று மிக்க ஆர்வத்துடன் செயல்படும் அனைவரும் ரிச்சர்ட் லீகியை உத்வேகமூட்டும் முன் மாதிரியாகக் கொண்டு இயங்குகின்றனர்.

இதுவே அவரது வாழ்க்கையில் அவருக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்!

***

 

காட்டு வளம் காத்து வரும் ரிச்சர்ட் லீகி! (Post No.4367)

Written by S.NAGARAJAN

 

 

Date: 5 NOVEMBER 2017

 

Time uploaded in London- 6-07 am

 

 

Post No. 4367

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

3-11-2017 தேதியிட்ட பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் வெளியாகியுள்ள (ஏழாம் ஆண்டு 37வது) கட்டுரை

 

 

கால்களை இழந்தும் ஆராய்ந்தவர் – காட்டு வளம் காத்து வரும் ரிச்சர்ட் லீகி!

 

 

 ச.நாகராஜன்

 

 

எந்த நிலையிலும் மனம் தளரக் கூடாது என்பதை நிரூபிக்கும் புதைபடிமங்கள் மூலம் கால நிர்ணயம் செய்த ஆராய்ச்சியாளர் ரிச்சர்ட் லீகி அனைவருக்கும் உத்வேகம் ஊட்டும் வாழ்க்கை வரலாற்றைக் கொண்டவர். (Richard Leaky – பிறப்பு 19-12-1944; இப்போது வயது 73)

 

 

லீக்கி ஆப்பிரிக்காவில் பிரமாதமான கல்வி அறிவைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் அவரது நுணுகிய ஆய்வுத் திறனும் அர்ப்பணிப்பு மனோபாவமும் அவர் பெயரை ஆப்பிரிக்காவின் ஒவ்வொரு இல்லத்திலும் கொண்டாடப்படக் கூடிய பெயராக ஆக்கியது.

 

 

லீகியின் தந்தையும் தாயும் படிமப் பாறைகள் பற்றிய துறையில் ஈடுபட்டிருந்தவர்களே. சிறு வயதிலேயே லீகி பறவைகள், மிருகங்கள் ஆகியவற்றை விற்க ஆரம்பித்தார். நாளடைவில் வன்விலங்குகள், வனப் பாதுகாப்பு ஆகியவற்றின் மீது அவருக்கு ஆர்வம் அதிகரித்தது.

1967ஆம் ஆண்டு நைரோபியில் ருடால்ப் ஏரியின் மீது அவர் பறந்து செல்லும் போது எரிமலைப் பாறைகளைக் கீழே கண்டார்.

 

அந்த இடத்தில் ஆய்வு நடத்தினால் பழங்காலப் படிமப் பாறைகள் கிடைக்கும் என்று அவருக்குத் தோன்றியது.

 

 

   கோபி ஃபோரா என்ற இடத்தில் அவர் தனது ஆய்வுகளை ஆரம்பித்தார். இந்த ஆய்வு 30 லட்சம் வருடங்களுக்கு முன்னர் இருந்த புதை படிமங்களைக் கண்டுபிடிக்க இவருக்கு உதவியது. பழங்காலத்திய 400 எலும்புகளை இவர் சேகரித்தார். இதன் மூலம் மனித குல வரலாற்றைப் பற்றிய முக்கிய தகவல்கள் கிடைத்தன.

 

 

பிபிசியில் இவரது டாகுமெண்டரி தொடரான ‘தி மேகிங் ஆஃப் மேன்கைண்ட் ( The Making of Mankind) என்ற தொடர்

 அவரைப் புகழேணியின் உச்சத்தில் கொண்டு சென்றது.

 

 

     1974ஆம் ஆண்டு நேஷனல் ம்யூஸியம்ஸ் ஆஃப் கென்யாவின் டைரக்டராக அவர் நியமிக்கப்பட்டார்.

ஆப்பிரிக்காவில் தந்தத்திற்காக யானைகளைச் சுட்டுக் கொல்லும் நபர்கள் அதிகரிக்கவே யானைகளின் எண்ணிக்கை பாதியாக அதாவது ஆறு லட்சமாகக் குறைநதது.

‘கொல்ல வருபவரைக் கண்டவுடன் சுடு என்ற ஆணையைப் பிறப்பித்து யானைகளைக் காத்தார் லீகி.

 

1989இல் கென்யாவின் ஜனாதிபதி டேனியல் அராப் மொய் இவரை கென்யா வைல்ட்லைப் சர்வீஸின் தலிவராக் ஆக்கினார்.

இந்தப் பதவியை அவர் ஏற்றுக் கொண்டது அனைவருக்கும் ஆச்சரியத்தைத் தந்தது.

 

ஏனெனில் அவருக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருந்தது. 1980இல் அவரது சகோதரரும் அரசியல்வாதியுமான பிலிப் தனது சீறுநீரகத்தைத் அவருக்குத் தந்து உதவினார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் பத்து ஆண்டுகள் பிலிப் தன் சகோதரருடன் முகம் கொடுத்துப் பேசியதே இல்லை. அப்படி ஒரு பகை. என்றாலும் அவருக்கு ஒரு பாதிப்பு என்றவுடன் ஓடி வந்து உதவினார்.

 

இந்த உடல் உபாதை எல்லாம் லீகியை ஒன்றும் செய்யவில்லை. சரியாக காலை 4 மணிக்கு எழுந்து தன் ஆய்வுப் பணீயை ஆரம்பிப்பார். தனது விமானத்தைத் தானே ஓட்டிச் செல்வார்.

 

 

காட்டு வளத்தைச் சுரண்டுவதில் இருந்த ஊழலை அவர் ஒழித்துக் கட்டினார். வனத்துறை ஊழலில் ஈடுபட்டிருந்த சுமார் 1700 பேர்களைத் தைரியமாக அவர் களையெடுத்தார்.

1993ஆம் ஆண்டு ஒரு விமானத்தை லீகி ஓட்டுகையில் அது கீழே விழுந்து விபத்திற்குள்ளானது. அதில் அவர் கால்கள் இரண்டும் நசுங்கிப் போயின. இரண்டும் அறுவைச் சிகிச்சையில் அகற்றப்பட்டன.

 

அவரை ஜனாதிபதி மொய் மருத்துவமனைக்குச் சென்று பார்த்து, “உங்களுக்காக நான் இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்றார்.

 

அதற்கு லீகி, “ எனக்காக பிரார்த்தனை செய்ய வேண்டாம். அதற்குப் பதில் கென்யா வனவிலங்குகள் சர்வீஸில் கிடப்பில் போடப்பட்டிருக்கும் திட்டங்கள் செயலாற்றப்பட உதவி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

அவருக்கு செயற்கை அவயவங்கள் பொருத்தப்பட்டன. மீண்டும் செயலாற்றலுடன் உழைக்க ஆரம்பித்தார்.

2013இல் அவருக்கு ஐஸக் அஸிமாவ் விஞ்ஞான விருது வழங்கப்பட்டது.

 

 

அவரது செயலூக்கம் மிக்க வாழ்க்கையால் கவரப்பட்ட பிரப்ல நடிகை ஏஞஜலினா ஜூலி அவரது வாழ்க்கை வரலாறு பற்றிய டாகுமெண்டரி ஒன்றைத் தயாரிக்கப் போவதாக சென்ற ஆண்டு (2016இல்) அறிவித்து அந்தப் படத்தின் ஷூட்டிங் கென்யாவிலேயே நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

 

   இன்று உலகில் வன வளத்தையும் வன விலங்குகளையும் காக்க வேண்டும் என்று மிக்க ஆர்வத்துடன் செயல்படும் அனைவரும் ரிச்சர்ட் லீகியை உத்வேகமூட்டும் முன் மாதிரியாகக் கொண்டு இயங்குகின்றனர்.

இதுவே அவரது வாழ்க்கையில் அவருக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்!

 

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் . . ..

 

பிரிட்டனைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானியான ஜேம்ஸ் ஜூல் (James Joule- 1818-1889) பல கண்டுபிடிப்புகளைக் கண்டவர். தனது விஞ்ஞானக் கருவி இல்லாமல் அவர் எங்கேயும் வெளியில் செல்ல மாட்டார்.

1847இல் 29ஆம் வயதில் அவர் திருமணம் செய்து கொண்டார். ஹனிமூனுக்காக நயாகரா நீர்வீழ்ச்சிக்குச் செல்ல ஏற்பாடானது.

அப்போதும் கூட தனது ஆய்வுக் கருவியான தெர்மாமீட்டரை அவர் கூட எடுத்துச் சென்றார்.

அவரது நோக்கம் நயாகரா நீர்வீழ்ச்சியில் நீர் விழும் போது மேலே இருக்கும் நீருக்கும் கீழே விழுந்திருக்கும் நீருக்கும் உஷ்ணநிலையில் வேறுபாடு இருக்கிறதா என்று ஆராய்வது தான்.

ஹனிமூனின் போது நயாகராவில் நடந்த ஆய்வை வைத்து அவர் கடவுள் இருக்கிறார் என்ற முடிவுக்கு வந்தார்.

 

 

இதை செயிண்ட் ஆன்ஸ் சர்ச்சில் (St. Ann’s Church) அவர் ஆற்றிய சொற்பொழிவு ஒன்றில் தீர்க்கமாக அறிவித்தார்.

 

 

காற்று வீசும் போது ஏற்படும் உராய்வினாலும் நீரில் எழும் கிளர்ச்சியினாலும் உருவாகும் வெப்ப அளவினால் பைபிளில் ஜெனிஸிஸில் கூறப்படும் கருத்துக்கள் உண்மை என்று ஆகிறது. கடவுளின் சக்தி ஓரிடத்தில் சேமிக்கப்படுகிறது என்பது உறுதியாகிறது. ஆகவே கடவுள் இருக்கிறார் என்றார் அவர்.

 

(He explained that the measure of the mechanical equivalent of heat created by the friction of the wind and agitation of the water gives experimental proof for the story of genesis as described in the Bible, to the effect that  God’s powers have been conserved),.

 
நயாகரா நீர்வீழ்ச்சியில் ஜூல் மட்டும் பரிசோதனைகளை நடத்தவில்லை. அமெரிக்க விஞ்ஞானி மேயர், ஸ்காட்லாந்தைச் சேர்ந்த மாக்ஸ்வெல் உள்ளிட்ட ஏராளமான விஞ்ஞானிகள் நயாகரா நீர்வீழ்ச்சியின் மேலே உள்ள நீருக்கும் கீழே விழுந்த நீருக்கும் உள்ள வேறுபாடுகளைப் பற்றி பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டது ஒரு சுவையான தகவல்!

***