‘எழுதாத மறையளித்த எழுத்தறியும் பெருமான்’- சேக்கிழார் (Post No.8383)

INDUS-SARASVATI RIVER CIVILIZATION

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8383

Date uploaded in London – 22 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

‘எழுதாத மறையளித்த எழுத்தறியும் பெருமாள்’—பெரிய புராணம் பாடல் 1605, சேக்கிழார்

BRAHMI INSCRIPTION, PUGALUR, TAMIL NADU

எழுதாத மறையளித்த எழுத்தறியும் பெருமானைத்

தொழுது ஆர்வம் உற நிலத்தில் தோய்ந்து அங்கம் எலாம்

முழுது ஆய பரவசத்தின் முகிழ்த்த மயிர்க்கால் மூழ்க ,

விழுதாரை கண்பொழிய , விதிர்ப்புற்று விம்மினார் – 1605, பெரிய புராணம்

வட திசை நோக்கி பயணம் செய்த திருநாவுக்கரசர் பல இடங்களுக்கு யாத்திரை செய்த பகுதி இது. திருவொற்றியூயூர் , திருப்பாசூர் , திருவாலங்காடு ஆகிய இடங்களை அப்பர் தரிசித்ததை வருணிக்கையில் சிவ பெருமானை ‘எழுதாத வேதம் என்னும் மறையை அளித்தவர்’ என்று சொல்லிவிட்டு சிவன் ‘எழுத்தறியும் பெருமான்’ என்று பாடிப்பரவுகிறார்’.

சிவன்தான் மொழிகளைத் தோற்றுவித்தவர். உலக மொழிகளுக்கு எல்லாம் தாயான சமஸ்கிருதத்தையும் தமிழ் மொழியையும் தோற்றுவித்தவர் .

ஆதிசிவன் பெற்றுவிட்டான் — என்னை

ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்

வேதியன் கண்டு மகிழ்ந்தே — நிறை

மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்”

என்று பாரதியாரும் பாடுகிறார்

சிவன் தோற்றுவித்ததாலேயே சம்ஸ்கிருத மன்னனான அகத்தியனை சிவன், இமய மலையில் இருந்து அனுப்பி, தமிழுக்கு இலக்கணமும்  எழுதவைத்தார். சிவனின் உடுக்கை ஒலி யிலிருந்து எழும்பிய 14 மாஹேஸ்வர சூத்திரங்களில் இருந்து பாணினி உலகப் புகழ்பெற்ற அஷ்டாத்யாயியியை எழுதியதை எல்லோரும் அறிவர்.

SANSKRIT- TAMIL GRANTHA

இந்துக்களுக்கு எழுதத் தெரியுமா ? எப்போதிலிருந்து அவர்களுக்கு எழுதத்தெரியும் ? என்பது வெள்ளைத் தோல் அறிஞர்கள்  வெகு காரசாரமாக விவாதித்த விஷயம். குறிப்பாக சிந்து-சரஸ்வதி நதி தீர நாகரிகம் கண்டுபிடிப்பதற்கு முன்னர் விவாதிக்கப்பட்ட விஷயம். அப்போதும் கூட அவர்கள் வாதத்தில் பசை இல்லை என்பதை கோல்ட்ஸ்டக்கர் (Theodor Goldstucker) போன்ற அறிஞர்கள் எடுத்துக் காட்டினர்.

சிந்து -சரஸ்வதி நதி தீர நாகரிக எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டு சுமார் 100 ஆண்டுகள் ஆகும் தருவாயில் அவை எழுத்துக்களே அல்ல, வெறும் படங்கள்தான் என்று சிலர் சொன்னவுடன் பெரும் புயல் எழுந்ததையும் நாம் அறிவோம். அத்துறையில் பெயர்பெற்ற அறிஞர்கள் அவை எழுத்துக்களே என்று நிரூபித்தனர்.

ஆப்கானிஸ்தான் முதல் இலங்கை வரை அசோகர் ஏராளமான கற்பாறைகளிலும் தூபிகளிலும் புத்தர் பெருமானின் பொன்மொழிகளை பொறித்தார் என்பதையும் உலகம் அறியும்.. எழுதப் படிக்கத் தெரிந்தோர் இமயம் முதல் கண்டி வரை இருந்ததால்தான் அவர் இப்படிச் செய்தார். உலகின் மிகப் பெரிய பரப்பு முழுதும் பிராமி எழுத்து வழங்கியதை அசோகர் நமக்குக் காட்டிவிட்டார்.

அசோகருக்கு ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர் பாணினி என்றும் அவருக்கு எழுத்தே தெரியாது என்றும் வாதிட்ட மாக்ஸ்முல்லர் ஒரு முட்டாள் என்பது நமக்கு யாரும் சொல்லாமலேயே விளங்குகிறது . சிந்து-சரஸ்வதி கால எழுத்துக்கள் கிமு 2500 காலத்தியவை. ஆக அன்று முதல் இன்றுவரை எழுத்துள்ளது.

ஆயினும் வேதத்திலும் பாணினியின் புஸ்தகத்திலும் எழுத்து இல்லையே என்று 200 ஆண்டுகளுக்கு முன்னர் பசப்பிய மாக்ஸ்முல்லர்களுக்கும் அப்போதே பதில் கொடுக்கப்பட்டது.

வேதங்களைக் கற்பிப்பது மட்டும் வாயமொழியாகத்தான் கற்பிக்க வேண்டும் என்ற கொள்கை இன்றுவரை பின்பற்றப்பட்டு வருகிறது. இதை பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணன் பாடிய குறுந்தொகைப் பாடலிலும் ‘எழுதாக் கற்பு’ என்ற வருணனையால் அறிகிறோம். அதாவது ‘எழுதாமல்தான் கற்க வேண்டும்’ ; எழுத்துக்கள் இருந்தபோதிலும் இப்படிச் செய்ததை அடிக்கோடிட்டுக் காட்டுகிறார். அதையே சேக்கிழார் பெருமானும் சொல்வதைக் காண்கிறோம்.

ORIGIN OF SCRIPT

எழுதாக் கற்பினின் சொலுள்ளும்

பிரிந்தார்ப் புணர்க்கும் பண்பின்

மருந்துமுண்டோ மயலோ விதுவே

-குறுந்தொகை , 156, பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணன்

பாணிணிக்கு எழுத்து தெரியாது. அவர் அசோகருக்கு 200 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்தபோதிலும் அவருக்கு எழுத்துத் தெரியாது என்பதெல்லாம் நகைப்புக்குரியது என்பது அசோகர்  இமயம் முதல் முதல் பாறைகளில் எழுத்துக்களைப்பை பொறித்ததிலிருந்து தெரிகிறது.

முட்டாள், முரண், மாக்ஸ்முல்லர்

SINDI-HINDI

ஆனால், மாக்ஸ்முல்லர் (Max Muller) எழுதிய ‘வடமொழி வரலாறு’ என்னும் புஸ்தகத்திலேயே முன்னுக்குப்பின் முரணாக அவர் உளறுவதை கோல்ட்ஸ்டக்கர் போன்றோர் எடுத்துக் காட்டினர் .

‘லிபிகார’ 3-2-21 என்று பாணினியே ‘எழுத்தர்’ பற்றிப் பேசுகிறார். அவரை அடுத்து வந்த , அசோகருக்கு முந்திய கௌடில்யரும் அர்த்த சாஸ்திரத்தில் ‘மன்னன் என்பவன் எண் , எழுத்து ஆகிய இரண்டையும் கற்க வேண்டும்’ என்கிறார். அர்த்த சாஸ்திரமும், வாத்ஸ்யாயனர் எழுதிய காம சாஸ்திரமும் ‘சங்கேத மொழி’ (Coded language) என்னும் ரஹஸ்ய எடுத்து முறையையும் குறிப்பிடும். அது மட்டுமல்ல . கி.மு 520ஐ ஒட்டிய பெஹிட்ஸன் (Behitsun Inscription) பாரஸிக கல்வெட்டில் திபி DIPI என்று சொல்லப்படுகிறது. லிபிLIPI என்பதை பார்சிக்கள் திபி/DIPI என்பர். (D=L)

மாடுகளின் சொந்தக் காரர்கள் தங்களுடைய மாடுகளைக் கண்டுபிடிக்க அவற்றின் காதுகளில் அடையாளக் குறியிடுவர் . இது பற்றிக் கதைக்கும் பாணினி, எட்டு/அஷ்ட, ஐந்து/ பஞ்ச என்ற எண் குறியீடுகளையும் சுட்டிக்காட்டுகிறார்  (6-3-115).

‘யவனானி’ என்று பாணினி சொல்லுவது ‘யவன லிபி’யைக் குறிக்கும் என்று வார்த்திகா எழுதிய காத்ஸ்யாயனார் சொல்கிறார். அவரையும் பாணினியையையும் சமகாலத்தவர் என்று எழுதிவிட்டு மற்றொரு பக்கம் பாணிணிக்கு எழுத்தே தெரியாது என்று சொல்லும் மாக்ஸ்முல்லரை கோல்ட்ஸ்டக்கர் கிழித்தெறிகிறார்.

(‘யவன’ என்பதை பாரஸீகர்களைக் குறிக்க காளிதாசர் பயன்படுத்துகிறார். ‘யவன’ என்பதை ரோமானியர்களைக் குறிக்க சங்கப் புலவர்கள் பயன்படுத்துகின்றனர். 1500-க்குப் பின்னர் முஸ்லிம்களைக் குறிக்க ‘யவன’ பயன்படுகிறது இது தெரியாமல் வெளிநாட்டார் செய்த குழப்பம் கொஞ்ச நஞ்சமல்ல. யவனானி என்பது கிரேக்க எழுத்து என்றும் பாரஸீக எழுத்து என்றும் இரு தரப்பு வெள்ளைத் தோல் அறிஞர்கள் மோதினர்)

கோட்ஸ்டக்கர் , வேத காலத்திலேயே எழுத்துக்கள் இருந்தன என்று வாதிடுகிறார்.

வேதத்தில் உள்ள ‘ரிபு’ என்னும் தெய்வத்திடமிருந்துதான் எழுத்து என்ற சொல் –லிபி– உருவானது என்று ஏகபர்ட் ரிக்டர் உஷனஸ் (Egbert Richter Ushanas) என்ற அறிஞர் காட்டுகிறார். கிரேக்க மொழியில் எழுத்து என்ற சொல் கிராஃபின் (Graphein) ஆகும். ரிபு – ராஃப்-  கிராஃப் – க்ளிப் – லிபி (Ribhu= Rabh= Graph= Glyph= Lipi) என்பதெல்லாம் ஒன்றுடன் ஒன்று (Cognate words) தொடர்புடைத்து.

ரிக் வேதத்தில் உள்ள காஹ்/முங்கு Gah , ரி/ஓடவிடுRi, ரூ /நகர் ( R) த்து ஆகியன எல்லாம் எழுத்தின் மூலச் சொல் என்பது அவரது வாதம்

ரைட் WRITE என்ற ஆங்கிலச் சொல்லுக்கும்  ‘எழுத்து’ என்ற தமிழ்ச் சொல்லுக்கும் இடையேயான ஒற்றுமையையும் நாம் காண முடிகிறது

டபிள்யூ = w/எ

ஆர் ஐ =  ri/ழு

டி ஈ = te/த்து

Tags – எழுதாத மறை, எழுதாக் கற்பு, மாக்ஸ்முல்லர், கோல்ட்ஸ்டக்கர் , எழுத்து, ரிபு

INDUS-SANSKRIT

—subham–