

Post No. 10,109
Date uploaded in London – 19 September 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சோமரசம் பற்றிய அபூர்வ தகவல்கள் -4
இந்த நாலாவது பகுதி கடைசி பகுதியாகும். ரிக் வேதத்திலுள்ள 9-97 துதியில் 58 மந்திரங்கள் / பாடல்கள் உள்ளன . கடைசி 14 மந்திரங்களின் சுருக்கம் பின்வருமாறு :–
சோமன் அனைத்தையும் காண்பவன்; தேரில் இருப்பவன்; சத்தியமான பலமுள்ளவன்.
வேகமாகச் செல்பவன் .அறிஞன்
தேன் ; இனியவன் சத்தியமான துதியின் இலக்கு
மனோ வேகம் (Faster than Light)
மனத்தைப் போல வேகம் உடைய அஸ்வினி தேவர்களிடமும் வாயு தேவன் இடத்திலும், மித்ரா வருணர்களிடத்திலும் வஜ்ராயுதம் ஏந்திய இந்திரனிடத்திலும் சோமம் பாயட்டும் .
சோமனே! எங்களுக்கு அழகிய ஆடைகள், நன்றாகக் கறக்கும் பசுக்கள், போதும் போதும் என்று சொல்லும் அளவுக்குத் தங்கம், தேர்களுக்குத் தகுந்த குதிரைகளை அளிப்பாயாகுக

நாங்கள் ரிஷிகள் ஆகவேண்டும்
சோம ரசமே! நீ சுத்தமாகும்போது, வானத்திலுள்ள செல்வத்தையும் பூமியிலுள்ள செல்வத்தையும் அளிக்க வேண்டுகிறோம். செல்வம் சம்பாதிக்கும் ஆற்றலைக் டு; ஜமதக்கினி போல ரிஷித் தன்மையையும் எங்களுக்கு அளிக்க வேண்டுகிறோம்.
சிவப்பாகவும் வேகமாகவும் அறிவு நிறைந்தவனும் ஆன இந்திரன் எங்களுக்கு புதல்வர்களைத் தர வேண்டும் .
60,000 செல்வம்
புகழுடையோய் , நன்றாகப் புகழ்மிக்க இடத்திலே பெருகு . பகைவர்களைத் தோற்கடித்து 60,000 செல்வங்களைப் பெறுவதற்கு நீ பழ ம் காய்த்துக் குலுங்கும் மரத்தை உலுக்கினாய்..
அம்பு மழையும் பகைவர்களின் தோல்வியும் எங்களுக்கு சுகம் தருகின்றன குதிரைப் போரிலும் மல்யுத்தத்திலும் பகைவர்களை வெல்வோம் .
நீ பகைவர்களைப் படுக்கச் செய்தாய் .
பகைவர்களையும் போற்றாதோரையும் விலக்கு.
நீ பகன் ; மூன்று வழிகளில் சல்லடை வழி யாகச் செல்கிறாய்.தானங்களை வாரி வழங்குபவன்; நீ செல்வனை முந்தும் செல்வன்
உலகை அறிந்தவன்; பூமியின் அரசன்.
தேவர்கள் , பணத்துக்காகப் பாடும் புலவர்களைப் போல உன் புகழ் பாடுகின்றனர்
சோமனே , சுத்தமாகும் உன்னோடு சேர்ந்து போரிலே மிகுந்த செல்வத்தை அடைவோமாகுக ; மித்திரனும் வருணனும் அதிதியும் சிந்துவும், பூமியும் வானமும் எங்களுக்குச் செல்வ மழை கொட்டட்டும்
58 மந்திரங்களின் சுருக்கம் முடிந்தது .
xxxx
என்னுடைய கருத்துக்கள்

ரிக் வேதத்தில் வரும் எல்லா துதிகளிலும் இந்திரன், மித்திரன், வருணன், அக்கினி, சோமன் முதலிய பெயர்களை நீக்கிவிட்டு ‘கடவுள்’ என்ற ஒரு சொல்லை போட்டால் அர்த்தம் நன்கு விளங்கும்.
இந்தத் துதியில் அவர்கள் ‘சோமனே!’ என்றும் சொல்லும் இடத்தில் எல்லாம் ‘கடவுளே!’ என்று போட்டால் பொருள் விளங்கும்; வீடு வாசல், மனைவி மக்கள், நில புலன்கள், வண்டி வாகனங்கள் , பசுமாடுகள் , குதிரைகள் ,போரில் வெற்றி, பொன்னும் மணியும் தருக என்று வேண்டுகின்றனர்.
இவற்றைப் படிப்போர் சோம ரசம் என்பது போதை தரும் மருந்து அல்ல என்பதை தெள்ளிதின் உணர்வார்கள்.
‘அறிவு கொடு’ என்று வேண்டுவது மட்டுமல்லாமல் ‘ரிஷிகள் போல ஆக வேண்டும்’ என்றும் வேண்டுகின்றனர். அதிகாலை 4 மணிக்கு எழுந்து தீயை வளர்த்து அதற்கு முன்னால் அமர்ந்து கொண்டு எங்களுக்கு ‘ஒளியைத் தந்து அறிவைப் பெருக்கு’ என்று வேண்டுவோர் குடிகாரர்களும் அல்ல ; போதை மருந்து சாப்பிடுவோரும் அல்ல.
சோமம் என்னும் மூலிகை அபூர்வ ஆற்றலையும் சக்தியையும், இன்பத்தையும், உற்சாகத்தையும் கொடுத்தது என்பதை நாம் அறிகிறோம்.
கஞ்சா , அபினி, மதுபானம் போல போதை தரும் ஒரு வஸ்துவாக இருந்திருப்பின் 5000, 6000 வருடங்களாக ‘எழுதாமல் நினைவு மூலம் மட்டும் பாதுகாத்த’ இந்தப் பாடல்கள் நமக்கு வந்து சேர்ந்தே இராது.
எல்லாவற்றுக்கும் மேலாக இன்று இந்த வேத மந்திரங்களை ஓதுவோரின் ஒழுக்கம் நமக்கு பெரிய, அரிய சாட்சியாக விளங்குகின்றது. சோமம் என்னும் குளிகை பற்றி மேல் நாட்டோர் எழுதியதெல்லாம் பொய்யுரை என்பதற்கு ஒரே ஒரு துதிப்பாடலைத்தான் காட்டினேன். இதில் 58 பாடல்களே/மந்திரங்களே உள்ளன.
ரிக் வேதத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேலான துதிகளில் 10,000 மந்திரங்களுக்கும் மேலாக இருக்கின்றன. இவைகளில் சோமம் பற்றிய குறிப்புகள் ஆயிரத்துக்கும் மேலாக இருக்கின்றன. இந்திரன் பற்றிய துதிகளில் சோமம் பற்றி கட்டாயம் இருக்கும். இவைகளை ஒட்டுமொத்தமாகத் தொகுத்தால் சோமம் பற்றிய தெளிவான காட்சி கிடைக்கும். இது கிளர்ச்சியையும் மகிழ்ச்சியையும், இன்பத்தையும், உற்சாகத்தையும் உண்டாக்கியது போலவே அறிவையும் ஆற்றலையும் பலத்தையும் செல்வ வளத்தையும் கொடுத்ததை ரிக் வேதம் தெளிவாகக் காட்டுகிறது
RV.9-97 துதியைப் பாடியவர்கள் — மைத்ரா வருணி வசிஷ்டன், வாசிஷ்ட இந்திர பிரதிமதி, வாசிஷ்ட வ்ருஷகணன் , மன்யு, உபமன்யு, வியாக்ரபாதன், சக்தி, கர்ண சுருதி, மிருடீகன் , வசுக்கிரன், பராசர சாக்தியன் , ருத்ச ஆங்கிரசன் ஆகியோர் ஆவர். இதில் ராமாயண கால முனிவர்கள் பெயர்கள் வருவதால் இது ரிக் வேத காலத்தின் கடைசி பகுதியாகும் என்பது பலரின் கருத்து.

–subham–
tags- சோமரசம்-4 அபூர்வ தகவல்கள்-4, ரிஷிகள் , ரிக் வேதம்