Post No. 10,239
Date uploaded in London – 21 OCTOBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
முந்திய கட்டுரையில், 10-101 துதியில் முதல் மூன்று மந்திரங்களைக் கண்டோம்.
முன்பு கூறியது போலவே வேதத்தை பல்வேறு வழிகளில் விளக்க முடியும். இங்கே வேள்வி என்பது விளை நிலமாக உருவகப்படுத்தப்ப ட்டுள்ளதாக உரைகாரர்கள் உரைப்பர் ; தமிழிலும் அறக்கள வேள்வி ,மறக்கள வேள்வி உண்டு. சம்ஸ்க்ருதத்திலும் , குறிப்பாக பகவத் கீதையில் நாம் பல விதமான யாகங்களை / வேள்விகளைக் காண்கிறோம். ஞான யக்ஞம், தபோ யக்ஞம் என்று பல வகை உண்டு. எல்லாவற்றுக்கும் உவமை சொல்லும்போது அக்காலத்தில் மக்களுக்கு நன்கு தெரிந்த விஷயங்களை உவமையாக சொல்லுவது கவிகளின் மரபு. இங்கு உவமையாக வரும் விவசாயத்தை நாம் காண்கிறோம் .
xxx
இதோ நாலாவது மந்திரம்
தேவர்களிடமிருந்து சுகத்தை விரும்பும் கவிகளான தீரர்கள் ஏர்களை இணைக்கிறார்கள் ; நுகங்களை தனியாக வைக்கிறார்கள்.
இங்கே வேள்வி எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் விவசாயம் என்ற கருத்து தொனிக்கிறது. அதாவது விவசாயம் வேள்விக்கு இணையானது.
இதை திரு வள்ளுவனும் உழவு என்னும் அதிகாரத்தில் சொல்கிறான்
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை. -குறள் 1031:
“உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது.”
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.- குறள் 1032:
“உழவு செய்ய முடியாமல் உயிர் வாழ்கின்றவர், எல்லாரையும் தாங்குவதால், உழவு செய்கின்றவர் உலகத்தாற்கு அச்சாணி போன்றவர்.”
xxx
இதோ 5-வது மந்திரம்
“வாளிகளை அவற்றின் இடத்திலே வரிசையாக வையுங்கள்; அவற்றை கயிற்றோடு கட்டுங்கள் ; சீக்கிரம் வற்றாத , முழுதும் நிரம்பிய, நல்ல கிணற்றிலிருந்து தண்ணீரை இறைப்போம்” .
எல்லவற்றிலும் பன்மையைப் (Plural We ) பயன்படுத்துவதால் எப்படி பிராமணர்கள் குழுவாக இருந்து வேள்வி செய்கிறார்களோ அதே போல வேளாண்மையும் பலர் கூடி நடத்துவது .
ஆகையால் இதைப் பலர் கூடிப் பாடும் உழவர் பாட்டுக்கு ஒப்பிட்டாலும் தகும் இதை விவசாயப் பாட்டு என்றும் வேள்விப் பாட்டு என்றாலும் தகும் .
ஆறாவது மந்திரம் முந்திய மந்திரம் போன்றதே. ‘நான் அதைச் செய்கிறேன்’ என்று உதாரணம் காட்டுகிறார்.
xxx
7 -வது மந்திரம்
“இங்கு குதிரைகளைக் கவனியுங்கள்; தேரைத் தயார் செய்யுங்கள் சூரர்கள் பருகும் பானமுள்ள தொட்டியை இறையுங்கள்” – என்பது போருக்குத் தயாராகும் வீரர்களுக்கு- க்ஷத்ரியர்களுக்கு – கட்டளை என்று கொள்ளலாம். நால் வருணத்தாரையும் ஒப்பிட்டு, ஆயத்தப்படுத்தும் பாட்டு இது என்று கொள்ளலாம் என்பது என் கருத்து.
கல் சக்கரம், வாளிகள் முதலியன அக்கால பாசனக் கிணறுகளை நம் மனக் கண் முன்னே கொண்டு வருகிறது .
xxx
எட்டாவது மந்திரம்
இங்கு க்ஷத்ரியர்களுக்கான கட்டளை வருகிறது
வீ”ரர்களுக்குத் தேவையான கஞ்சித் தொட்டிகளை தயார் படுத்துங்கள்.
அவர்களுக்குத் தேவையான கவசங்களைத் தையுங்கள்;
இரும்புக் கோட்டைகளைக் IRON FORTS கட்டுங்கள்;
அதிலுள்ள பலவீனமான பகுதிகளை வலுப்படுத்துங்கள்”
படைத் தலைவர்களுக்கான அருமையான கட்டளை இது . இரும்புக் கோட்டையே அமைத்தாலும் அதிலுள்ள பலவீனங்களை (Weak Points) அகற்ற வேண்டும் .
IRON FORTS OR METAL FORTS????
இப்போது இங்கு வேறு ஒரு விஷயமும் அம்பலம் ஏறுகிறத
வேத கால இந்துக்களிடம் இரும்பு (AYAS = IRON) இருந்தது; சிந்து சமவெளியில் இரும்பு இல்லை என்பது ஒரு சா ரார் வாதம். இந்த மந்திரத்திலும் ஏனைய மந்திரங்களிலும் இரும்புக் கோட்டை பற்றி வருகிறது. சிந்து சமவெளியை ஆரியர்கள் அழித்து இருந்தால் ஆரியர்களுடைய இரும்பு வாள்கள், கோட்டைகள் எங்கே?
உண்மையில் ‘அயஸ்’ என்பது பொதுவாக ‘உலோகம்’ என்றும், இடத்தைப் பொறுத்து இரும்பா, பித்தளையா, வெண்கலமா, தாமிரமா என்றும் பயன்படுத்தப்படுகிறது வள்ளுவரே ‘பொன்’ என்பதை இரும்பு என்றும் தங்கம் என்றும் பயன்படுத்துகிறார். நாமும் இப்போது கூட பொற்சிலை = தங்கச் சிலை; ‘ஐம்பொன்’ FIVE METAL விக்ரகம் = 5 வெவ்வேறு உலோகங்களால் ஆன விக்ரகம் என்று எல்லா உலோகங்களுக்கும் பொன் என்பதை உபயோகிக்கிறோம்
ஆக இரும்பு பற்றி வாதிடுவோர் வாதம் உளுத்துப்போன வாதம் .
xxx
ஒன்பதாவது மந்திரம்
பசு வளர்ப்பு பற்றியது. நிறைய பால் தரும் பசுக்களை ஆண்டாள் ‘வள்ளல் தரும் பசுக்கள்’ என்பார் திருப்பாவையில் ; ஆக பசு வளர்க்கும் இடையர் தொழிலும் இங்கே பேசப்படுகிறது. வேதம் முழுதும், தேவாரம், திருவா சகம் , திவ்யப் பிரபந்தம், திரு மந்திரம் முழுதும் பசுவும் பால்கறத்தலும் அடையாள பூர்வ Symbolic மொழியாக, உருவகமாகப் பயன்படுவதை அடியார்கள் அறிவர்.
பத்தாவது மந்திரத்தில் மேலும் பல டெக்னிக்கல் சொற்கள் Technical Jargon வருகின்றன. இது சோம பான தயாரிப்புக்கும் பொருந்தும்; தேர்த் தொழில், விவசாயத்துக்கும் பொருந்தும்; கோடாரி, மரப் பா ண்டம் , கம்பு, கச்சு ஆகியன பேசப்படுகின்றன. பத்து விரல்கள், அடிக்கடி சோம பான தயாரிப்பில் வருகிறது
xxx
11 ஆவது மந்திரம்
இங்கு இரண்டு மனைவிகளைக் கட்டிக்கொண்டு கஷ்டப்படும் ஒரு மனிதனின் உவமை (Two Wives) வருகிறது. ஒரு சிலர், இரு நுகங்களின் நடுவிலே மாட்டிக்கொண்டு சுமைகளை இழுக்கும் வண்டியையும் மற்றும் சிலர், குதிரை வண்டியையும் உவமிக்கின்றனர். இது சுவையான உவமை. ஒரு பெண்ணிடம் மாட்டிக்கொண்ட கணவனின் பாடே பெரும்பாடு; இரண்டு பெண்டாட்டிக்காரன் கதையைச் சொல்லவும் தேவையா ! இது போன்ற உவமைகள் காரணமாக இதை நான் உழவர் பாட்டு வகையிலேயே சேர்க்கிறேன் . ஆனால் இதை பாடும் புலவர் சோம யாகம் செய்யும் பிராமணப் புலவராக இருக்கக்கூடும்
மாமிச உணவு பற்றி ‘புலன் அழுக்கற்ற அந்தணாளன்’ கபிலன் பாடிய பாடல் குறித்தும், மாமிச உணவு பற்றி காளிதாசன் படைத்த பிராமண விதூஷகன் (Comedian காமெடி நடிகர்) பற்றியும் வாதப் பிரதிவாதங்கள் உண்டு. பிராமணர்கள் மாமிசம் சாப்பிட்டனர் என்பதற்கு இதை சிலர் எடுத்துக் காட்டுவர். உண்மையில் தங்களுடைய பல்வேறு துறை அறிவைக் காட்டவும் மற்றவர்களுக்கு சுவையூட்டவும் இப்படிப் பாடுவார்கள்; அது போலவே ஒரு வேதப் பிராமணன் இந்த உழவர் பாட்டை எட்டுக்கட்டி இருக்கலாம் !
இதை எழுதும்போது ‘ரெட்டை வால் குருவி’
(இரட்டைவால் குருவி) என்கிற தமிழ்த் திரைப்படம் நினைவுக்கு வருகிறது.
xxxx
கடைசி மந்திரம் (12 ஆவது )
இங்கு ஒரு வினோதமான விஷயம் வருகிறது. நிஷ்ட்டிக்ரி என்ற பெண்ணின் பெயர் அது. இதற்கு பொருள் எழுதியோர் தன எதிரியை விழுங்கும் பெண் என்கிறார்கள். அத்தோடு நில்லாமல் இந்திரனின் தாய் என்றும், அவள் ‘அதிதி’ என்றும் சொல்கின்றனர். எனக்கு இது சரியாகத் தோன்றவில்லை. அதிதி என்பவள் ‘எல்லையற்ற கருணை உடையவள்’ என்றும் ‘கடவுளர் அனைவருக்கும் தாய்’ என்றும் புகழப்படுகிறாள். எதிரிகளை, மற்ற பெண்ணை, விழுங்குபவள் என்று வேறு எங்கும் சொல்லப்பட வில்லை .
காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் சுட்டிக்காட்டியது போல இந்திரன் என்பது ஒருவர் பற்றியது அல்ல என்பதை நாம் ஏற்கவேண்டும். மன்னர், தலைவர் என்பதே இதன் பொருள். ஆரியர், இந்திரர் போன்ற சொற்களுக்கு வெள்ளைக்காரர்கள் தவறான பொருள் கற்பித்தது போலவே நி ஷ்டிக்ரீயையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி விட்டார்களோ!!!????
xxx
எனது உரை
இந்த துதி உழவர் பாட்டே என்பது என் துணிபு; இதில் வேள்வியும் சோமமும் வேளாண்தொழிலுக்கு உவமையாகக் கொள்ளப்பட்டாலும் வேளாண்மை என்பதை வேதகால இந்துக்கள் அறிந்து இருந்தனர்; அவர்கள் நாடோடிகள் அல்ல என்பது உறுதி ஆகிறது. இப்படிப்பட்ட கவிதையிலும் ‘ரெட்டை வால் குருவி’ என்னும் காமெடி அம்சத்தையும் புலவர் நுழை த்திருப்பது படித்து இன்புதற்குரியது .
அடுத்த கட்டுரையில், நாலாவது மண்டலத்தில் வரும் விவசாயக் கவிதையைக் காண்போம் .
தொடரும் ………………………………..
tags- உழவுக்கும் தொழிலுக்கும் 3, ரெட்டை வால் குருவி