லட்சம் புதிர்கள் – 10 (Post No.7892)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7892

Date uploaded in London – – 28 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

லட்சம் புதிர்கள் – 9 கட்டுரை எண் 7492 வெளியான தேதி 25-1-2020

லட்சம் புதிர்கள் – 10 (101 முதல் 150 முடிய)

ச.நாகராஜன்

கேள்விகள் :

ராமாயணம்

101) ராமாயணத்தை இயற்றியவர் யார்?

102) ராமாயணத்தில் மொத்தம் எத்தனை ஸ்லோகங்கள்?

103) புத்திரர்களைப் பெற தசரதன் செய்த யாகம் எது?

104) ராமாயண காலத்தில் சரயு நதி – அதன் இன்றைய பெயர் என்ன?

105) கைகேயியுடன் அவர் அரண்மனையிலிருந்து கூடவே வந்த பணிப்பெண்ணின் பெயர் என்ன?

106)மஹரிஷி வால்மீகியின் பூர்வ பெயர் என்ன?

107) வேடனாக இருந்து ரிஷியாக மாறியவர் யார்?

108) ராமாயணம் எந்த யுகத்தில் நடந்தது

109) வாலி, சுக்ரீவரின் தந்தை பெயர் என்ன?

110) ராமாயணம் எந்த சந்தத்தில் இயற்றப்பட்டுள்ளது?

111) வசிஷ்டர் ஆஸ்ரமத்தில் இருந்த பசுவின் பெயர் என்ன?

112) ஜனக மன்னரின் இயற் பெயர் என்ன?

113) அசோகவனத்தின் இன்னொரு பெயர் என்ன?

114) லக்ஷ்மணனைக் காப்பாற்ற அனுமன் கொண்டு வந்த மருந்தின் பெயர் என்ன?

115) ராமாயணத்தின் இன்னொரு பெயர் என்ன?

116) இன்று வியாச நதி என்று அழைக்கப்படும் நதி ராமாயண் காலத்தில் என்ன பெயரில் அழைக்கப்பட்டது?

117) லங்கையில் ராவணனின் குல தெய்வம் எங்கு வைக்கப்பட்டிருந்தது?

118) ராமாயண காலத்தில் லவபுரம் என்று அழைக்கப்பட்ட நகரத்தின் இன்றைய பெயர் என்ன?

119) ராவணன் சுக்ரீவனுக்கு அனுப்பிய தூதனின் பெயர் என்ன?

120) எட்டாவது வசுவின் பெயர் என்ன?

121) தசரத மன்னரை அழைக்க அயோத்திக்கு ஜனகர் அனுப்பிய மந்திரியின் பெயர் என்ன?

122) ராமாயணம் மொத்தம் எத்தனை காண்டங்கள்?

123) ராமாயணத்தில் பெரிய காண்டம் எது?

124) ராமாயணத்தில் சிறிய காண்டம் எது?

125) அமராவதி நகரின் அரசன் யார்?

126) இந்திரனின் யானையின் பெயர் என்ன?

127) அஸ்வமேத யாகத்தில் குதிரையின் நெற்றியில் கட்டப்பட்டிருக்கும் பத்ரத்தின் பெயர் என்ன?

128) சமுத்திரம் கடையப்பட்ட போது வெளி வந்த மணி எது?

129) குபேரனின் யானையின் பெயர் என்ன?

130) சமுத்திரத்தைக் கடைந்த போது வெளி வந்த விஷத்தின் பெயர் என்ன?

131) வருணனின் யானையின் பெயர் என்ன?

132) யமனின் யானையின் பெயர் என்ன?

133) ராமரின் கதையை கருடனுக்குச் சொன்ன காகத்தின் பெயர் என்ன?

134) கலஹப்ரியர் என்று எந்த மஹரிஷிக்குப் பெயர்?

135) சஞ்ஜீவினி மூலிகையை அனுமார் எடுத்து வந்த போது தூக்கி வந்த மலையின் பெயர் என்ன?

136) மஹரிஷி விஸ்வாமித்திரர் உடலுடன் சொர்க்கத்திற்கு அனுப்பிய மன்னனின் பெயர் என்ன?

137) கல்லாகப் போகக் கடவது என்று மனைவியை சபித்த முனிவரின் பெயர் என்ன?

138) சூரியனை பழம் என்று நினைத்து உண்ணச் சென்றவர் யார்?

139) யமனுடன் போர் புரிந்த ராக்ஷஸன் யார்?

140) ராம பட்டாபிஷேகத்தின் போது ஐந்து புனித நதிகளிலிருந்து நீர் கொண்டு வந்தவர் யார்?

141) ராவணனை தன் அக்குளில் ஆறு மாதங்கள் வைத்திருந்த வீரன் யார்?

142) விஸ்வாமித்திரர் ராமனை அழைக்க வந்த போது அவரிடம் தசரதன் தன் வயது எவ்வளவு என்று சொன்னார்?

143) பத்தாயிரம் வீரர்களை ஒரே சமயத்தில் எதிர் கொள்ள வல்ல வீரனின் பெயர் என்ன?

144) ராமாயணத்தில் மொத்தம் எத்தனை காண்டங்கள் உள்ளன?

145) ராமாயணத்தில் மொத்தம் எத்தனை ஸர்க்கங்கள் உள்ளன?

146) ஒரே சமயத்தில் லக்ஷ்மணன் எத்தனை அம்புகளை விட வல்லவ்ன்?

147) வால்மீகிக்கு அந்தப் பெயர் ஏன் வந்தது?

148) இந்திரஜித்தின் இயற்பெயர் என்ன?

149) இந்திரஜித்திற்கு அந்தப் பெயர் ஏன் வந்தது?

150) சீதைக்கு ஜானகி என்ற பெயர் எப்படி வந்தது?

விடைகள் :

101) வால்மீகி மஹரிஷி 102) 24000 103) புத்ரகாமேஷ்டி 104) ககரா (Ghagara) 105) மந்தரை 106) ரத்னாகரர் 107) வால்மீகி 108) த்ரேதா யுகம் 109) ரிக்ஷராஜன் 110) அனுஷ்டுப் 111) சுரபி 112) ஷீரத்வஜன் 113) ப்ரமத வனம் 114) சஞ்சீவினி மூலிகை 115) புலஸ்த்ய வதம் அல்லது தசானனன் வ்தம் 116) விபாஷா 117) அசோக வனம் 118) லாகூர் 119) ஷுக் 120) சவித்ரா 121) சுதாமன் 122) ஏழு 123) யுத்த காண்டம் 124) ஆரண்ய காண்டம் 125) இந்திரன்

126) ஐராவதம் 127) ஜய பத்ரம் 128) கௌஸ்துப மணி 129) ஹிம்பந்த்ர 130) ஆலகாலம் 131) சௌமனஸ் 132) மஹாபத்மம் 133) காகபுஷுண்டி 134) நாரதர் 135) த்ரோண கிரி 136) திரிசங்கு 137) கௌதமர் 138) ஹனுமான் 139) ராவணன் 140) ஜாம்பவான் 141) வாலி 142) 60000 வருடங்கள் 143) அதிரதி

144) 7 145) 500 146) 500 147) அவர் தவம் செய்த போது அவர் புற்றினால் மூடப்பட்டதால் 148) மேகநாதன் 149)  இந்திரனை ஜெயித்ததால் 150) ஜனகரின் புதல்வி என்பதால்.

tags — லட்சம் புதிர்கள் – 10

***