லபிஸ் லசூலி Lapis lazuli நீலக்கல் (Wikipedia)
Written by London swaminathan
Date: 22 FEBRUARY 2017
Time uploaded in London:- 16-59
Post No. 3660
Pictures are taken from various sources; thanks.
contact; swami_48@yahoo.com
எகிப்தில் இந்தியாவின் தாக்கம், துவக்க காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளது. இதற்கு மறுக்க முடியாத ஆதாரமாக விளங்குவது நீலப் பாறை (லபிஸ் லசூலி) ஆகும். எகிப்தியர்களுக்கு மிகவும் பிடித்தது நீலம். தங்கள் நாட்டின் நதிக்கே நீலம் என்ற சம்ஸ்கிருதப் பெயரைச் சூட்டி மகிழ்ந்தனர். நீல ( niila= Nile) என்பதை ஆங்கிலத்தில் எழுதி அதை நைல் என்று திரித்துவிட்டனர். ஆயினும் முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா? இன்றும் ஆங்கிலத்திலும் ப்ளூ நைல்(BLUE NILE) நதி என்றே சொல்லுவர்.
நீலம் என்ற விலைமதிப்புமிக்க Sapphire-க்கு அடுத்த படியாக உபயோகத்தில் உள்ளது லபிஸ் லசூலி (LAPIS LAZULI) எனப்படும் நீலப் பாறை ஆகும். இதை பவளம் போல வெழுமூன வழு வழு என்று பாலிஷ் செய்தால் சலவைக்கல் போல வழுவழுப்பாகிவிடும்.
எகிப்தியர்களுக்கு இந்தக் கல் மீது ஒரு அலாதிப் பிரியம்; இதை பாரதத்திலிருந்து இறக்குமதி செய்து, மன்னர் கிரீடம் முதல் பொம்மைகள் வரை எல்லாவற்றுக்கும் பயன்படுத்தினர். இதை சிந்து வெளி மக்களும் பயன் படுத்தியதை எனது ஆராய்சிகட்டுரையில் ஏற்கனவே எழுதியுள்ளேன்.
இந்தக் கல் கிடைக்கும் இடங்கள் இப்பொழுது ஆப்கனிஸ்தான் நாட்டிலும் பாகிஸ்தான் நாட்டிலும் உள்ளன. ஆனால் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்தியர் இதைப் பெற்றபோது இவ்விரு இடங்களும் அப்போது உலகிலேயே பெரிய நாடான பாரதத்துக்குள் இருந்தன. சந்திரகுப்த மௌர்யன் ஆட்சிக் காலத்தில்கூட — 2400 ஆண்டுகளுக்குமுன் – இவை பாரதப் பேராசின் ஒரு பகுதியே!
லபிஸ் லசூலி (Lapis lazuli) கிடைக்கும் இடங்கள்:
படக்க்ஷான் (Badkshan) – ஆப்கனிஸ்தான்
குவெட்டா (Quetta) – பாகிஸ்தான்
எகிப்து நாடு, இவ்விரு இடங்களிலிருந்து தொலைவில் இருந்தாலும், இந்திய வணிகர்கள் இதை ஈரான் வழியாக கொண்டு சென்றனர்.
எகிப்திய மன்னர்கள் தங்கள் பெயரை எழுத சதுரக் கட்டதைப் ( SEREKH) பயன்படுத்தினர். இதை செரிக் என்பர். இது சார்க்க (Saarka) என்ற சம்ஸ்கிருதச் சொல்லின் திரிபாக இருக்கலாம். “சூரியன் தொடர்புடைய” (Sa+ Arka) என்று பொருள்; மன்னர் தன்னை ஹோரஸ் (சோரஸ்= சூர்ய= சோலார்; Horus=Sorus=Solar= Suurya) என்ற சூரியக் கடவுளின் பிரதிநிதியாகக் கருதினார். மேலும் இது தென்மேற்கு ஆசியாவில் (South West Asia) உருவானதாக எகிப்தியவியலாளர் (Egyptologists) கூறுவர்.
இந்துக்கள்தான் வட்டம், சதுரம் போன்ற வடிவங்களை வைத்து சொற்களை உருவாக்கினர் பூஜ்ய (வட்டம்) என்றால் புனிதத்துக்குரிய என்று பொருள். சதுரம் என்றால் புத்திசாலி என்று பொருள்; யார்கொலோ சதுரர்? என்று மாணிக்கவாசகர் சிவபெருமானைக் கிண்டல் செய்கிறார். சதுரா என்று கடவுளை பஜனைப் பாடல்களில் புகழ்வர். சதுரத்திலிருந்து உருவான சாதுர்யம், சாதுர்யமான என்ற சொற்களை நாம் இன்றும் பயன்படுத்துகிறோம். எவ்வகையில் பார்த்தாலும் இது இந்துக்கள் உருவாக்கியதே.
Goddess Hathor (Hindu name Savitr)
மேலும் தென்மேற்கு ஆசிய கட்டிடக்கலை அம்சங்களும் எகிப்தில் காணப்படுகின்றன. பிரமிடுகள் கட்டுவதற்கு முன் மஸ்தபா (Mastaba) என்பப்படும் செங்கல் சமாதிகளி ல்தான் எல்லோரையும் புதைத்தனர். இவை கி.மு.3500 முதல் சுமேரியாவில் (Mesopotamia) காணப்படுகின்றன. பின்னர்தான் கருங்கல் கட்டிட பிரமிடுகள் தோன்றின.
தெற்கே உதித்த நாகரீகம்
எகிப்திய நாகரீகம் மேல் எகிப்து எனப்படும் தெற்கு எகிப்தில் தோன்றியது. பின்னர்தான் நைல் நதி சங்கமம் ஆகும் கடற்பகுதிவரை — வட பகுதி வரை பரவியது. இதை கீழ் எகிப்து என்பர். தெற்கில் முதல் முதலில் எல்-படாரி el-Badari, எல்-அம்ரா el-Amra, நகாதா Naqada என்ற மூன்று விதமான தோற்றுவாய்களைக் காணலாம். எப்போதாவது எகிப்துக்கு ஆபத்து வந்தாலோ, கலாசாரம் கீழ்நோக்கிச் சென்றாலோ உடனே- பழைய கலாசாரம் தஞ்சம் புகுந்த இடம் தென்பகுதிதான்.
தமிழுக்குத் தென் பாண்டி நாடு எப்படிக் காவலனாக இருந்ததோ அது போல எகிப்திய பண்பாட்டுக்கு தென் எகிப்து காவலனாக இருந்தது. ஆயினும் தொடக்க காலத்திலேயே எகிப்துக்குள் வெளிநாட்டினர் குடியேறினர். அதனால்தான் இந்த நாட்டுகே மிஸ்ர (கலப்பட) தேசம் என்று பெயர் என்பதை முதல் கட்டுரையிலேயே விளக்கினேன்.
அடுத்த கட்டுரையில் ஒவ்வொரு வம்ச (Dynasty wise) அரசு பற்றிய சுவையான விஷயங்களைக் காண்போம்.
எனது பழைய ஆரய்ச்சிக் கட்டுரை:–
Indus Valley to Egypt: Lapis lazuli Export! | Tamil and Vedas
https://tamilandvedas.com/2014/09/06/indus-valley-to-egypt-lapis-lazuli-export/
6 Sep 2014 – Afghanistan and Pakistan, parts of ancient Bharat were the main sources for this stone, says the archaeologists. The contact between Egypt and the Hindu kings of Turkey and Syria is well documented. … Egypt and Sumer had jewellery made up of lapis lazuli blue stones from 2500 BCE……………..
–Subham–