லத்தின் மொழிக் கவிஞர் வர்ஜில் (Post.9711)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9711

Date uploaded in London – –9 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

VIRGIL

(70 – 19 BC)

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த புகழ்மிக்க ரோமானிய கவிஞர் வர்ஜில் VIRGIL

ஏனீட் (AENEID) என்ற காவியத்தின் கர்த்தா இவர்.

     ஸிசால்பின் என்னுமிடத்தில் இவர் பிறந்தார். இவரது தந்தை குடியானவர் என்று தோன்றுகிறது. மிலன் நகரிலும் ரோமாபுரியிலும் இவர் கல்வி கற்றார். சிறுவயதிலேயே கிரேக்க கவிஞர்கள் வாழ்க்கையைப் பயின்ற அவருக்கு வாழ்நாள் முழுவதும் கவிதை எழுதுவது தொழி லானது. ‘நமக்குத் தொழில் கவிதை; இமைப்பொழுதும் சோராதிருத்தல்’ என்ற பாரதியின் வாக்கு இவர் வாழ்க்கையில் உண்மையானது

வர்ஜில் லத்தின் மொழிக்  கவிஞர்; மிகவும் கூச்சம்முடையவர். ஏனைய ரோமானியப் பெரும்புள்ளிகளைப் போல ராணுவத்திலோ அரசியலிலோ ஈடுபட்டவரல்ல. இருந்தபோதிலும் இவரது நண்பர்கள் மூலம் நாட்டு நடப்புகளை அறிந்தார். அவை இவரது கனிதைகளில் எதிரொலித்தன.

VIRGIL மூன்று பெரிய நூல்களை லத்தின் மொழியில் எழுதினார். அவை THE ECLOGUES, THE GEORGICS, THE ANENEID என்பன.

ECLOGUES என்ற நூலில் இயற்கை, நாட்டுப்புறம் தொடர்பான கிராமிய பாடல்களைக் காணலாம். கி மு 42 – கி மு 37க்கு இடைப்பட்ட காலத்தில் மலர்ந்த கவிதைகள் அவை. வர்ஜில் VIRGILக்கு முதல்  வரிசையில் இடம்பெற்றுக் கொடுத்தவை இவை. சிறிது காலத்திற்கு ரோமானிய அரச வட்டாரத்திற்கு நெருக்கமாகி இருந்த இவர் ரோமில் வாழ்ந்தார். பின்னர் தெற்கு இதாலியிலுள்ள CAMPANIAவுக்குச் சென்று தனது வாழ்நாள் இறுதிவரை நேப்பிள்ஸ் NAPLES நகரில் தங்கினார்.

பண்ணைத்தொழில் பற்றிய இவரது கவிதைகள் கி மு 37 – கி மு 30க்கு இடைப்பட்டவை. என்ற நூலில் இவை உள்ளன.

கி மு 30 முதல் இறுதிநாள் வரையுள்ள காலத்தில் இவர் படைத்ததுதான் AENEID காவியம்.

ஹோமரின் காவியங்கள் அவரது நடையில் பிரதிபலிப்பதைக் காணமுடிகிறது.

AENEID  நூலில் 12 காண்டங்கள் உண்டு. TROY நகர வீழ்ச்சிக்குப் பின்னர் AENEASக்கு என்ன ஆகியது என்பதை விளக்கும் காவியம் இது.

கி மு 19-இல் அவர் இதை எழுதி முடிக்கவில்லை. கிரேக்க நாட்டில் மூன்றாண்டுகள் தங்கி இதை முடிக்க எண்ணியிருந்தார். ஆனால் பயணம் துவங்கிய சிலநாட்களில் நோய்வாய்ப்பட்டார். இதாலிக்குத் திரும்பினார். BRINDISI என்னுமிடத்தில் உயிர்நீத்தார்.    

–subham—

Tags – வர்ஜில், ஏனிட் , லத்தின் மொழி , கவிஞர்

கம்பன் கவி இன்பத்தில் வம்பு-2 (Post No.4296)

Written by S.NAGARAJAN

 

 

Date:13 October 2017

 

Time uploaded in London- 6–08 am

 

 

Post No. 4296

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

வர்ஜிலையும், ஹோமரையும், மில்டனையும் வம்பிக்கிழுக்க வேண்டாமே! – 2

.நாகராஜன்

 

4

இனி அடுத்து கவிதா ரஸிகரான வ.வெ.சு. ஐயர் எப்படி வர்ஜில், ஹோமர், கம்பன், வால்மீகி, கம்பன் ஆகியோரின் கவிதையை ரஸித்தார் என்று பார்ப்போம்.

கம்பன் கவிதை என்ற தொகுப்பு நூல் பிரமாதி (1939), பங்குனி 8,9,10 ஆகிய நாட்களில் காரைக்குடியில் நடைபெற்ற கம்பன் திருநாளில் வெளியிடப்பட்டது. அதில் முதல் கட்டுரையாக ‘கம்ப ராமாயண ரசனை’ என்ற தலைப்பில் வ்.வெ.ஸுப்ரஹ்மண்ய ஐயர் எழுதிய கட்டுரை இடம் பெற்றுள்ளது. வ.வெ.சு, ஐயரின் கம்பராமாயண ரசனை நூலை தில்லி தமிழ்ச் சங்கமும் பின்னாளில் வெளியிட்டது.

102 பக்கங்கள் உள்ள அந்த நூலில் சில பகுதிகளை மட்டும் இங்குக் காண்போம்.

5

வ.வே.சு. ஐயரின் கட்டுரை, அவரது சொற்களில் :

இது மாத்திரமில்லை, கம்ப ராமாயணமானது ஹோமர் எழுதிய இலியாதையும், விர்க்கிலீயன் எழுதிய ஏனயிதையும், மில்டனுடைய சுவர்க்க நஷ்டம் என்ற காவியத்தையும், வியாஸ பாரதத்தையும், தனக்கே முதல் நூலாக இருந்த வால்மீகி ராமாயணத்தையும் கூட பெருங் காப்பிய லட்சணத்தின் அம்சங்களுள் அநேகமாய் எல்லாவற்றிலும் வென்று விட்டது என்று சொல்லுவோம். இவ்விமரிசனத்தைத் தொடர்ந்து வாசிப்போருக்கு எமது இவ்வபிப்ராயத்தை மெய்ப்பிக்க முயலுவோம்.  (பக்கம் 4)

கவிதை என்னும் அணங்கு இலக்கண வித்துவானைத் தந்தையென மதித்து அவனை அணுகாள். தார்க்கிகளைச் சகோதரன் என்று பாவித்து அவனை நெருங்காள். வேதாத்தியயனம் செய்தவனை (யும், சந்தத்தையே கவனிப்பவனையும்) விட்டுச் சண்டாளர்களிடம் நின்று ஓடுகிறவர்கள் போல ஓடியே போய் விடுகிறாள்.; மீமாம்சையை ஆராய்பவனை நபும்ஸகன் என்று நினைத்து அவமதித்து விடுகிறாள்; காவியாலங்கார சாஸ்திரமறிந்தவனைக் கண்டதும் அவனையே தன் கொழுநனாகப் பாவித்து அவனைச் சேருகிறாள்…….. வால்மீகியைச் சாமானிய கவியாக நாம் பாவிக்கவில்லை. உலகத்திலுள்ள முதல் ஏழெட்டு மகா கவிகள் என்று கணக்கிட்டு எந்த ஜாதி அறிஞர் எண்ணினாலும் அந்தக் கணக்கில் வால்மீகியின் பெயரைச் சேர்க்காதிருக்க முடியாது. எமது சொந்த அபிப்ராயத்தில் உலகத்தின் ஒரு தனிக் காவியம் என்று சொல்லத் தகுந்தது கம்பராமாயணம் தான் என்றும், வால்மீகி ராமாயணம் அதற்கு அடுத்த ஸ்தானத்தை வகிக்கும் என்றும் சொல்லுகிறோம்.   (பக்கம் 10,11)

ஹோமர் எழுதிய ஒதூஸியத்தில் வரும் குக்ளோப உபாக்கியானம், விர்க்கீலியனுடைய ஏனையத்தில் வரும் ஹார்ப்பியரின் செய்தி, ஆகிய இவைகளோடு தான் இந்த விராதன் கதையையும் இக்காண்டத்தின் கடைசியில் வரும் அயோமுகியின் கதையையும் ஒப்பிடலாகும். (The episode of Polyphemus the Cyclops in the Odyssey of Homer and the account of the Harpius in Virgil’s Eneid.) (பக்கம் 14)

 

மகாகவிகளெல்லாம் இத்தகைய மகா சந்தர்ப்பங்களில் பிரகிருதி மனித உணர்ச்சியோடு நடப்பது போல எழுதுவது சகஜமாயிருப்பது என்பது குறிப்பிடத்தக்கது. இலியாதின் 30-வது சருக்கத்தில் ஹோமர் பின்வருமாறு பாடுகிறார்:

“போர்க்கடவுள் துரோயா மீது வட்டமிட்டுக் கொண்டு தன் பயங்கரமான உருவத்தைப் ப்யற்காற்றாலும் மழை வேகத்தாலும் போர்த்தி மறைத்துக் கொண்டு, அத்துரோயாவின் உன்னதமான கோபுரங்களின் மீது நின்று கர்ஜித்துத் தன் வேகத்தைத் துரோயா நெஞ்சில் ஊற்றினான்.”

“பூதேவி புண்பட்டாள்; முடிவு வந்துற்றதென்று பகுதியாளும் தான் நிற்கும் அனைத்துப் பொருள்களினும் உயிர்த்துக் கொண்டு பொருமினாள், துடித்தாள் “ –

“Earth felt the wound and nature from her seat

Sighting through all her works, gave signs of woe

That all was lost” என்று மில்தனும் கற்பித்தெழுதுகிறான். எந்த ஜாதியினராயினும் பெருங் கவிகளின் இதயத்தில் ஒரே  மகாநாதம் ஒலிக்குமன்றோ? (பக்கம் 37)

 

உபாக்கியானங்கள் அமைப்பதில் ஹோமரைத்தான் – அவனும் இலியாதைப் பாடுகையில்தான் மிக சாமர்த்தியசாலி என்னலாம். அவன் எழுதிய ஒதூஸியம் என்னும் காவியத்தை உண்மையாக மகா காவியமென்று சொல்லக் கூடாது. அதை அநேகமாக உபாக்கியானங்களின் சேர்க்கையென்று சொல்லுவதே முறையாகும். ஆனால் இலியாதிலுள்ள அவனுடைய உட்கதைகள் சிறியனவாயும் அவய்வயங்களுக்கு அளவில் பொருத்தமாயும் இருக்கின்றன. கதையும் உபாக்கியானங்களும் ஒன்றோடொன்று பின்னிக்கொண்டு, கதைக்கு இடைஞ்சற்படுத்தாமல் பெரும்பாலும் எடுக்க முடியாதனவாய் இருக்கின்றன. ராமாயணத்தில் உபாக்கியான அமைப்பு இலியாதின் அமைப்புக்குத் தாழ்ந்ததன்று. (பக்கம் 39)

 

இவ் யுத்தகாண்டம்  ஒன்று மாத்திரம் அளவில் மேனாட்டுப் பெரிய மகா காவியங்களுக்கு ஏறத்தாழச் சரியாக இருக்கிறது. சாதாரணப் பதிப்புகளில் யுத்த காண்டத்தில் 4,358 விருத்தங்கள் காணப்படுகின்றன. இலியாதில் 15,693 அறுசீர் வரிகளே இருக்கின்றன என்று கணக்கிடுகிறார்களாதலால் கம்பனது யுத்த காண்டம் இலியாதை விடப் பெரியதாகவே இருக்கிறது. அவ் இலியாதில் உள்ள சகல சுவைகளையும் இக் காண்டத்தில் நாம் காணலாகும். (பக்கம் 53)

 

போரை வர்ணிப்பதில் ஹோமரே தான் சிறந்த கவி என்று மேனாட்டு ஆசிரியரின் கூற்றுக்களைக் கண்டும், ஹோமரின் உத்கிருஷ்டமான யுத்த வர்ணனைகளைப் படித்துப் பார்த்தும் நாம் மயங்கிப் போய், ஹோமரின் போர்ச் சித்திரங்களை விட உயர்ந்த சித்திரங்கள் கிடையா என மதித்திருந்தோம். ஆனால் கம்ப ராமாயணத்தின் யுத்த காண்டத்தைப் படித்துப் பார்த்ததும், கம்பன் போர் வர்ணனையில் ஹோமருக்குத் தாழ்ந்தவனில்லை என்றும், சில இடங்களிலும் சில விஷயங்களிலும் ஹோமரது போர் வர்ணனையை வென்றிருக்கிறானென்றும் கண்டு கொண்டோம். ஹோமரில் ஓர் குற்றம் இங்கு எடுத்தற்பாலது….. (பக்கம் 60)

தொடர்ந்து ஹோமரின் மீதான குற்றத்தை வ்.வெ.சு. ஐயர் விரிவாக விளக்குகிறார்.

மொத்தத்தில் சுவையான நூல்.

கம்பனின் காவியத்தை சிகரத்தில் நிறுத்தும் நேர்மையான விமரிசனம்.

அனைவரும் படிக்க வேண்டிய அற்புதமான நூல்.

கட்டுரையை முடிக்க வேண்டுமென்று நினைத்தாலும் அரவிந்த ரிஷியின் கருத்துக்களைப் பார்க்கவில்லை என்பதால் அடுத்த கட்டுரை தொடரும். அத்துடன் இந்த விமரிசனம்  பற்றிய தொடர் முடியும்.

***

 

வர்ஜில், ஹோமர், மில்டனைப் புகழக் காரணம் என்ன? (POST No.4272)

Written by S.NAGARAJAN

 

 

Date: 5 October 2017

 

Time uploaded in London- 5-35 am

 

Post No. 4272

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

Russian stamp for English Poet John Milton

 

கம்பன் கவி இன்பம் :கே.என்.சிவராஜ பிள்ளையின் கம்பராமாயண கௌஸ்துப மணிமாலை (கட்டுரை எண் 5)

24-9-17 அன்று வெளியான கட்டுரை எண் 4239-இன் தொடர்ச்சியாக இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

 

வர்ஜில், ஹோமர், மில்டனைப் புகழக் காரணம் என்ன -வால்மீகி, கம்பரைத் தெரியாததால் தான்!

 

ச.நாகராஜன்

 

கம்ப ரஸிகர் கே.என்.சிவராஜ பிள்ளையின் இனிய பாக்களைத் தொடர்ந்து பார்ப்போம்:.

 

பாடல் 11

குமுத வாயிற் குழவி மிழற்றுறும்

அமுத தாரை இனிதென் றசைத்தஅவ்

விபுதன் நூலொடு மெய்ப்ப்ல கைக்கணே

சமனில் நின்று தயங்கத் தகுவது

 

பொருள்: குமுத மலர் போலும் இதழ்களுடைய சிறு குழந்தைகள் குழறும் கொச்சைச் சொற்கள் குழலினிலும், யாழினிலும் இனிமையுடையனவென்று கூறிய தெய்வப்புலவர் திருவள்ளுவ நாயனார் செய்துள்ள தமிழ் மறையாகிய குறளோடு சங்கப் பலகையிற் சமனாக நிலவி நிற்கத் தகுதி வாய்ந்துள்ளது இக் கம்ப ராமாயண மகா காவியம்.

குறிப்பு: கம்ப ராமாயணம் இயற்றப்பட்ட காலத்திற்கு முன்னே கடைச்சங்கம் இறந்து போயினமையால் இந்நூல் சங்கப்பலகை ஏறாதொழிந்தது எனக் கூறல்

மிகையாகாது.

Greek Poet Homer on coin

பாடல் 12

அங்கம் சேரும் அவயவ சாலத்துள்

துங்கம் சேரொண்மை சூட்டும் முகமன்றே;

திங்கள் போலும் முகத்திற் கெழில்நிலம்

தங்கச் செய்வ சலச விழியரோ

 

பொருள்: ஓர் உடலைச் சேர்ந்த உறுப்புக் கூட்டத்தில் அவ்வுடலுக்கு அழகைத் தருவது முகமே ஆகும். சந்திரன் போல ஒளிரும் அம்முகத்திற்கும் அழகைப் பொழிவன ஆங்குத் தாமரை மலர் போல் விகசிக்கும் இரண்டு விழிகளுமேயாம்.

 

பாடல் 13

பாஷை மாதர் பலருளும் இன்னிசை

ஓசை மாதர் உறும்தமிழ் ஒண்டொடி

வாச வாண்முகம் வாய்ந்த விழியுகம்

ஏசில் ராமன் கதைகுறள் என்பவே

 

பொருள்: குற்றமற்ற ராமன் கதை, குறள் என்னும் இரண்டு நூல்களையும், உலகத்தில் நின்று நிலவும் அநேக பாஷைகள் என்னும் அழகிய மாதர்கள் குழுமிய கூட்டத்தில் இனிய ஒலியின்பத்தாற் சொல்லோசையின் அழகு இத்தன்மைத்தென விளக்கிக் காட்டும் தமிழாய அணங்கின் முகத்தில் இன்பாய வாசத்தையும் அறிவாய ஒளியையும் ஊட்டி இலகும் இரண்டு விழிகளென்னச் சொல்லலாம்.

 Poet from Italy -Virgil

பாடல் 14

காவி யன்றக விஞர்பூங் கானரு

காவி யன்றழ காரலர் தூவுமங்

காவி யன்றரு வன்றேஇத் தென்கவி

காவி யமணம் கான்றொளிர் கற்பகம்

 

பொருள்: (கால தேச வேற்றுமையாலும், மொழி வேற்றுமையாலும், பல்வேறு கவித்துறை வேற்றுமையாலும்) பல தொகுதியாகச் சேர்ந்து நிற்கும் கவிஞராம் காக்கள் நிறைந்திருக்கும் அழகிய மொழி ஆரண்யத்திற்கு அடுத்துத் தங்கி அழகிய மலர்களைத் தூவி விளங்கி நிற்கும் ஒரு பெரிய தருவென இவ்வெழிற்கலைஞனை யான் ஒப்பிடேன்; இக்காட்டில் நின்றும் மிக்க தூரத்தில் காவிய மணம் எக்காலத்தும் வீசிக் கொண்டு நிற்கும் ஒரு நிகரில் கற்பகத் தருவென்றே அவனை யான் சொல்லத் துணிவேன்.

 

பாடல் 15

நாமகள் அருள் நண்ணும் வரகவி

ஹோமர் வர்ஜில் மில்ற்றன் என்ன ஓதுவார்

வாமமார் வடதேச வான்மீகர் தென்

சீமையத் தமிழ்க் கம்பர்த் தெரியலார்

 

பொருள்: ஸரஸ்வதி கடாக்ஷம் பெற்று விளங்கும் வரகவிகள் ஹோமர், வர்ஜில், மில்ற்றன் என்னும் மூவரே என்று மேற்றிசையோர் கூறுகின்றனர். ஆனால் அவர் அங்ஙனம் கூறுவதற்குக் காரணம் வடதேசத்தில் அழகிய ஆரியப் புலவனாம் வான்மீகியையும் தென் தேசத்தில் இனிய தமிழ்க்கவியரசனாம் கம்பனையும் அறியாமையேயன்றி வேறன்று.

**

மேலே உள்ள அழகிய ஐந்து பாக்களில் கம்பனைப் பற்றிய கவிஞரின் உன்னதமான புகழாரத்தைக் காண்கிறோம்.

குறளுக்குச் சமமாக சங்கப் பலகையில் ஏறும் தகுதி பெற்றது கம்ப ராமாயணம்.

 

உடலுக்கு அழகு முகம்.முகத்திற்கு அழகு இரு விழிகள். அப்படிப்பட்ட விழிகளாக குறளும் கம்ப ராமாயணமும் திகழ்கின்றன.

உலகில் பல மொழிகள் உண்டு; ஒலியின்பம் மீதுற இனிய  சொல்லோசையால் அழகுறத் திகழும் இன்ப வாசம், அறிவு ஒளி என்னத் திகழும் இரு கண்கள் அல்லவா அவை!

 

 

காட்டில் விளங்கும் பெரியதொரு மரம் என இவனை நான் ஒப்பிட மாட்டேன். ஆனால் நினைத்ததை எல்லாம் தரும் கற்பக மரம் என்றே கூறுவேன்.

மேலை நாட்டினர் கவிஞர்கள் என்றால் ஹோமர்,வர்ஜில், மில்டன் ஆகிய மூவர் மட்டுமே கவிஞர்கள் என்று கூறுகின்றனர். ஏனெனில் அவர்கள் வடதிசைப் புலவனான வான்மீகியை அறிய மாட்டார். தென் திசைப் புலவனாகிய கம்பனை அறிய மாட்டார்.

Homer on Greek Stamp

 

இவர்களை அறிந்திருந்தால் அந்தக் கவிஞர்களின் நிலை என்ன ஆகுமோ

 

இப்படி அழகுற உலகளாவிய ஒரு சஞ்சாரத்தை மேற்கொண்டு வான்மீகியையும் கம்பனையும் உலக கவிஞர்கள் வரிசையில் முன்னணியில் நிறுத்தி அவர்கள் தகதிக்குத் தக்கபடி தர வேண்டிய மரியாதையை கவிஞர் சிவராஜ பிள்ளை அழகுத் தமிழில் தருகிறார்.

 

கம்ப ரஸிகரின் பாடல்கள் தொடரும்

***

 

சம்ஸ்கிருத மொழி அதிசயங்கள்!

yogaveshti,indus style

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1498; தேதி 19 டிசம்பர், 2014.

ஒவ்வொரு மொழியிலும் பல அதிசயங்கள் இருக்கத்தான் செய்யும். தமிழில் 12 உயிர் எழுத்துக்களில் ஒன்றான ‘’ஔ’’ என்னும் எழுத்தில் ஒரு சொல் கூட சங்க இலக்கியத்தில் இல்லை! சங்க இலக்கியத்துக்கு பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னால் வந்த திருக்குறளிலும் இல்லை. நாம் அறிந்த ஔவையார் என்ற புலவர் பெயரையும் அவ்வையார் என்றே அக்காலத்தில் எழுதினார்கள். தமிழில் பல எழுத்துக்களுக்கு தேவையே இல்லை என்பதை வேறு ஒரு கட்டுரையில் பட்டியல் போட்டுக் காட்டியுளேன். இன்னும் பல அதிசயங்கள் தமிழ் மொழியில் உண்டு. அதைத் தனியே காண்போம்.

சம்ஸ்கிருத மொழி அதிசயங்கள் பற்றி மோனியர் வில்லியம்ஸ் என்ற அறிஞர் என்ன கூறுகிறார் என்று பாருங்கள்:
“எண்ணிக்கையில் அதிகமான நூல்களைப் படைத்தது மட்டும் நம்மை வியப்பில் ஆழ்த்தவில்லை. அவர்களுடைய நூல்களின் நீளத்தைப் பாருங்கள்! வர்ஜில் என்ற புகழ் பெற்ற கவிஞரின் ‘’ஏனிட்’’ என்னும் நூலில் 9000 வரிகள்! கிரேக்க நாட்டின் முதல் காவியமான – ஹோமர் எழுதிய — இலியட்டில் 12,000 வரிகள். அவரே எழுதிய மற்றொரு காவியமான ஆடிஸியில்15,000 வரிகள்! ஆனால் இந்துக்களின் மஹாபாரதத்திலோ இரண்டு லட்சம் வரிகள்! இத்தோடு அதன் பிற்சேர்க்கையான ஹரிவம்சத்தைச் சேர்த்தால் இன்னும் அதிகமாகும்!

அவர்களுடைய இலக்கியத்தில் உள்ள ஞானம், இயற்கை அழகு, குடும்பத்தினர் இடையே நிலவும் அன்பு, வாத்சல்யம், நீதி போதனை ஆகிய எதிலுமே கிரேக்க, ரோமானிய (லத்தீன்) காவியங்களுக்கு அவை சளைத்தவை அல்ல”.

ஹெர்மன் ப்ரமோபர் என்பவர் ஜெர்மானிய அறிஞர் — அவர் கூறுகிறார்: “நமக்குத் தெரிந்த ஐரோப்பிய மொழிகளில் கிரேக்க மொழிதான இலக்கியச் செறிவுடைய வளமான மொழி. ஆனால் அதில் ஒரு வினைச் சொல் 68 வடிவங்கள் எடுப்பதை நாம் அறிவோம். அது கண்டு வியக்கிறோம். சம்ஸ்கிருதத்தில் ‘’க்ரு’’ (செய்ய) என்ற வினைச் சொல் 336 வினை வடிவங்களை உடையது! இதில் இன்னும் எவ்வளவோ சேர்க்க முடியும். அவைகளைச் சேர்க்காமல் 336.

athithi devo bhava

உபநிஷத்துகள் பற்றி மூவர் எழுதிய ஆங்கிலப் புத்தகத்தில் சம்ஸ்கிருத மொழியீன் ஆழத்தை அளந்து காட்டுகின்றனர்.

“சம்ஸ்கிருதத்தில் 800 வேர்ச் சொற்கள் இருக்கின்றன. அவைகளை அறிந்துவிட்டால் அவை மூலம் உருவாகும் நூற்றுக் கணக்கான சொற்களை அறிய முடியும். ஒரு எடுத்துக் காட்டு ‘’ராம’’ என்ற சபத்துக்கு வேரான ‘’ரம்’’, ரம்யதி என்பதை எடுத்துக் கொண்டால் அமைதியாக இரு, ஆனந்தமாக இரு, ஓய்வாக இரு, இன்பமாக இரு, மற்றவர்களுக்கு ஆனந்தம் கொடு,காதல் செய், விளையாடு, இன்பம் ஊட்டு, சாந்தமாக இரு, நிறுத்து, அசையாமல் நில் எனப் பல பொருள் தொனிக்கும்.

இதை எப்படி எல்லாம் பயன்படுத்த முடியும் என்பதற்குக் கீழே உள்ள எடுத்துக் காட்டைப் பாருங்கள்:
மூஷ் என்றால் திருடு என்று பொருள். மூஷிகம் என்றால் எலி. எல்லாப் பொருட்களையும் திருடிச் செல்லும் பிராணி. மூஷிக ரதி என்றால் பூனை என்று பொருள். இதில் ரம் என்ற இணைப்பு இருக்கிறது அதாவது எலியைத் தடுத்து நிறுத்தும் பிராணி அல்லது எலியினால் மகிழ்ச்சி கொள்ளும் பிராணி என்று பல பொருள் சொல்லலாம்—மூஷிக+ரதி.

இதையே ஆன்மீக விஷயங்களில் கூடப் பயன்படுத்தலாம். மூசிக என்பது ஆத்மா. மூஷிகரதி என்பது ஆன்மஞானம் பெற்றவன்.

இதையே வேத மந்திரங்களுக்கும் நாம் பயன்படுத்திப் பார்க்கலாமம். வேத மந்திரங்களின் பொருள் ஒரு மட்டத்தில் ஏதோ எலி, பூனை கதை சொல்லுவது போல இருக்கும். அதன் அடையாள பூர்வ அர்த்தமோ ஆன்மீக ரகசியமாக இருக்கும். அதன் மந்திர சப்தமோ, மந்திர ஒலியினால் வரும் பலன்களைக் கொடுக்கும்.

four vedas

வேத கால மொழி பல ‘’மறை’’கள் (ரகசியங்கள்) நிறைந்தவை. அது மட்டுமல்ல சொல்லின் இலக்கணம் முக்கியமல்ல. அந்தச் சொல்லுக்கு என்ன என்ன பொருள் என்று பார்த்தால் பக்கம் பக்கமாக எழுத முடியும். அந்தக் காலத்தில் குருகுல வாசத்தில் குரு தனது சீடர்களுக்கு இந்த ரகசியங்களை அவரவர் தராதரம் அறிந்து போதிப்பார்.

ரிக் வேதத்தில் 24 பிரிவுகள் இருந்தன. வியாசர் என்னும் மாபெரும் அறிஞர் அவை அழிந்து வருவது கண்டு, வருத்தப்பட்டு அவற்றைக் காப்பாற்ற முயன்றார். பெரிய ‘’கம்பெனி எக்ஸிகியுட்டிவ்’’ மாதிரி திட்டம் எல்லாம் போட்டு, நான்கு உலக மகா அறிஞர்களை அழைத்து வேதத்தை நான்காக வகுத்து அவைகளைப் பாதுகாக்கும் பொறுப்பைக் கொடுத்தார். அப்படியும் நமக்குக் கிடைத்தது ரிக்வேதத்தின் ஒரே பிரிவு மட்டும்தான். பெரும்பகுதி அழிந்துவிட்டன. அந்த ஒரு பகுதியைக் கூட எவராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. அவ்வளவு பழமையானது — ரகசியங்கள் நிறைந்தது. சுமேரிய ஜில்காமேஷ் காவியம் போல எளிமையானது அல்ல. அதைப் போல சுவையில் மட்டமானதும் அல்ல. ரிக் வேத மந்திரங்கள் 10,000-க்குமேல் இருக்கின்றன. ரிக் வேத துதிகளின் எண்ணிக்கை 1028. சில துதிகளில் ஒரு மந்திரம் மட்டும் உண்டு. அதிகமாக ஒரே துதியில் 58 மந்திரங்கள் இருப்பதையும் காணலாம்.

ரிக்வேதம் தவிர வேறு மூன்று வேதங்களும் இருக்கின்றன. ஏறத்தாழ 20 வெளிநாட்டு அறிஞர்கள் இவைகளை மொழி பெயர்க்கிறேன் என்று வந்து திக்கு முக்காடித் திணறிப் போனதை அவர்கள் மொழிபெயர்ப்பு என்னும் ‘’தமாஷைப்’’ படிப்பவர்களுக்கு விளங்கும். ஒரு சொல்லை ஒருவர் மரம் என்றால் மற்றொருவர் நதி என்பார். இன்னும் ஒருவர் இது இராக்கதர் என்பார். இன்னும் ஒருவர் இது பொருளே விளங்காத பிதற்றல் என்பார். இன்னும் ஒருவர் படி எடுத்தவர் பிழை செய்திருக்கலாம், அந்தச் சொல்லுக்குப் பதில் இந்தச் சொல்லைப் போட்டால் எப்படி இருக்கிறது? என்று இடைச் செருகல் செய்வார். வேத மொழி பெயர்ப்புகளை அருகருகே வைத்துக் கொண்டு ஒப்பீட்டுப் பார்ப்பவர்களுக்கு நிறைய ‘’ஜோக்’’குகள் கிடைக்கும்.

classical skt

அந்தக் காலத்தில் இவர்கள் காசியில் உள்ள பண்டிதர்களை அழைத்தபோது வேதத்தின் புனிதத்தை உணர்ந்தவர்கள் மொழிபெயர்க்க உதவிசெய்ய மறுத்துவிட்டனர். பிராமணர்களில் மூன்றாந்தர ஆட்கள், காசுக்காக ஆசைப்பட்டு இவர்களுக்கு அரைக்குறை அர்த்தத்தைச் சொல்ல, ஆங்கிலமும் தெரியாமல் உளர, அவர்கள் சம்ஸ்கிருதமும் தெரியாமல் திணற, எல்லாம் கோளாறாகப் போயிற்று.

இப்பொழுது அமெரிக்காவில் சில புதுரக அறிஞர்கள் தோன்றியுள்ளனர். வேதத்தில் எதை எடுத்தாலும் ‘’செக்ஸ்’’ என்று சொன்னால் நன்றாகப் புத்தகம் விற்கும் என்று ஒரு சிலர் எழுதி பெரிய புத்தகக் கம்பெனிகள் மூலம் அவைகளை ஏற்றுமதி செய்கின்றனர். இன்னும் சிலர் இந்து மதத்தில் குழப்பம் விளைவிக்க வேண்டும் என்று ‘’சமுத்ரம்’’ என்றால் அது ‘’கடல்’’ அல்ல, அது வெறும் குளம், ‘’புரம்’’ என்றால் சிந்து சம்வெளிக் ‘’கோட்டை’’கள் என்றெல்லாம் தத்துப் பித்து என்று எழுதி வருகின்றனர். இவர்கள் எல்லார் வங்கிக் கணக்குகளிலும் சேரும் பணம் எங்கே இருந்து வருகிறது என்பதைப் பார்த்தால் இவர்களின் பின்னால் இருக்கும் ஆட்களையும் சூழ்ச்ச்சிகளையும் சதிகளையும் நாம் அறியலாம்.

வெற்றி எட்டும் திக்கும் எட்ட கொட்டு முரசே!
வேதம் என்றும் வாழ்க வென்று கொட்டு முரசே! — பாரதி