‘பர்தா’ ஒழிக – பாரதியார் முழக்கம் (Post No.10,653)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,653

Date uploaded in London – –    12 FEBRUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி! – பெண்கள்
திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்;
வல்லி யிடையினையும் ஓங்கி முன்னிற்கும் – இந்த
மார்பையும் மூடுவது சாத்திரங் கண்டாய்;
வல்லி யிடையினையும் மார்பிரண்டையும் – துணி
மறைத்தத னாலழகு மறைந்த தில்லை;
சொல்லித் தெரிவ தில்லை, மன்மதக்கலைமுகச்
சோதி மறைத்துமொரு காதலிங் குண்டோ? 1

ஆரியர் முன்னெறிகள் மேன்மை யென் கிறாய் – பண்டை
ஆரியப் பெண்களுக்குத் திரைகள் உண்டோ?
ஓரிரு முறைகண்டு பழகிய பின் – வெறும்
ஒப்புக்குக் காட்டுவதிந் நாண மென்னடீ?
யாரிருந் தென்னை யிங்கு தடுத்திடுவார் – வலு
வாக முகத்திரையை அகற்றி விட்டால்?
காரிய மில்லையடி வீண் பசப்பிலே – கனி
கண்டவன் தோலுரிக்கக் காத்தி ருப்பனோ? 2- பாரதியார்

தற்காலத்து தமிழ் உலகின் மிகப் பெரிய கவிஞன் பாரதியார் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை. அவர் மாபெரும் தமிழ் அபிமானி, தேச பக்தர், சர்வ சமய புரவலர், இந்து மத போற்றுநர் என்பதிலும் எவருக்கும் ஐயமில்லை. ஏசுவையும், புத்தரையும், முகமது நபியையும் பாராட்டிப் பாடல்களும் இயற்றினார் என்பது எல்லோரும் அறிந்த உண்மை. அவருக்கு பர்தா , முகத்திரை பிடிக்காது. ஏனெனில் இது வேத காலப் பெண்களிடத்தில் கிடையாது. இது அவர் சொல்லும் செய்தி; நான் செய்யும் விமர்சனம் அல்ல.

வேத வாழ்வைக் கடைபிடிக்க வேண்டும்; பெண்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என்று தற்காலத்தில் பாடிய முதல் கவிஞனும் பாரதிதான் .

பாரதியின் படலைப் படிப்பதற்கு முன்னர் இன்னொரு விஷயத்தையும் கவனிப்போம். இந்தியாவின் புராதனப் பெண்கள் சிலைகள் சாஞ்சி, பர்ஹுத் , அமராவதி முதிய இடங்களில் உள்ளன. அவைதான் பெண்களின் பழைய சிலைகள். அதாவது 2300 ஆண்டுகள் பழமையானவை. அதற்கு முன்னர் இலக்கிய வருணனைகளிலும் முகத்திரை கிடையாது. கல்யாண சடங்குகளின் போது முதல் தடவையாக பெண்ணைப் பார்க்கும்போது SUSPENSE சஸ்பென்ஸ், வியப்பு,வேடிக்கை, கேளிக்கை இருக்க வேண்டும் என்பதற்காக திரைக்குப் பின்னர் உட்கார வைத்து திரையைத் திறந்தனர்.

நமது வீட்டில் சின்னக் குழந்தைகளுடன் கண்ணாமூச்சி விளையாடும்போது கூட இப்படி ஒளிந்து கொண்டு முகத்தைக் காட்டினால் அது பெரிதாகச் சிரிக்கும்; ஆனந்தம் அடையும். அது போல பெண்ணை மஹத்தாக அலங்கரித்து திடீரென்று காட்டும்போது, முன்னர் பார்த்த பெண் இவள்தானா அல்லது புதிய தேவதையா என்று மணமகன் வியப்பான் . இந்த விஷயம் ரிக் வேத 10-85 கல்யாண மந்திரத்தில் தெளிவாக உள்ளது. நீயே மஹாராணி என்று அந்த மந்திரம் பெண்ணைப் புகழ்கிறது .

இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். உலகில் மிகப்பழமையான ஓவியங்கள் நமக்கு எகிப்தின் பிரமிடுகளில், ஏனைய கட்டிடங்களிலும் கிடைக்கின்றன. அவர்களும் பர்தா அணியவில்லை . சங்கத் தமிழ் நூல்களிலும், கோவில் சிலைகளிலும் பர்தா கிடையாது. அஜந்தா, சித்தன்னவாசல், தஞ்சசைக் கோவில் ஓவியங்களிலும் பெண்கள் பர்தா அணியவில்லை.

முஸ்லீம்கள்  ஏன் அணிந்தார்கள் என்றால் சவூதி அரேபியா போன்ற பாலைவனத்தில் (DESERT SAND STORMS) வாழ்ந்த பெண்கள் தங்களை மணற் புயல் காற்றிலிருந்து காப்பதற்காக அதை அணிந்தனர். முஸ்லீம்கள் வாழ்ந்த துருக்கியில் பர்தா கிடையாது.

பல இனத்தவரும் பர்தா அணிவதாக வைத்துக் கொள்வோம். ஒருவருடைய முகக் குறிப்பைவைத்தது அவர்களுடைய எண்ணங்களை அறிய வாய்ப்பே இல்லாமல் போய்விடும். இது பள்ளி ஆசிரியர்கள் , வாடிக்கையாளரை  சந்திக்கும் பொறுப்பில் உள்ளவர்களுக்கு பெரிய சங்கடத்தை விளைவிக்கும். ஆக PRACTICAL பிராக்டிகல் ஆகப் பார்த்தாலும், விஞ்ஞான SCIENTIFIC  முறையில் பார்த்தாலும் பர்தா  தேவை இல்லை.

இதை முஸ்லீம்களே முன்வந்து செய்தால் இன்னும் அழகாக இருக்கும். இதற்காக ஒரு கோர்ட், ஒரு இயக்கம், ஒரு சட்டம் தேவை இல்லை.

அவர்கள் சமய விழாக்களில் பங்கு கொள்ளும்போது அவர்கள் வழக்கப்படி செய்யலாம். அதற்குத் தடை ஏதுமில்லை. ஆக வரலாற்று ரீதியிலும் கிரேக்க, ரோமானிய, எகிப்திய , சீன, இந்து கலாசாரங்களில் பர்தா கிடையாது.

சிலர் ரிக் வேதத்தில் உள்ள 10,552 மந்திரங்களில் இரண்டே மந்திரங்களைக் காட்டி ஏதோ பர்தா இருந்ததாக சொல்ல முனை ன்றனர் . அந்த 8-33 மந்திரத்தின் அடிக்குறிப்பிலேயே கடைசி மூன்று மந்திரங்கள் புரியவில்லை ‘எசகு பிசகாக’ உள்ளது என்று எழுதிவைத்துள்ளனர்.

ரிக்வேதம் முழுதையும் மொழிபெயர்த்த ஜம்புநாத அய்யர் எழுதியுள்ளதை படியுங்கள் :–

8-33-17

ஸ்திரீயினுடைய மனம் கட்டுக்கடங்காதது ; அவளுடைய மனத்  திட்பம் அற்பமாயிருக்கிறது என்று இந்திரன் சொன்னான்.

8-33-18

(17க்கும் 19க்கும் சம்பந்தமில்லாத விஷயம் )

இந்திரனுடைய இரண்டு குதிரைகள் அவனுடைய ரதத்தை வேகமாக இழுக்கின்றன. தேரின் தண்டம் – இணைக்கும் கட்டை — இரண்டு குதிரைகளின் மீது உள்ளன.

8-33-19

உன்னுடைய கண்களைக் கீழே செலுத்தவும்; மேலே பார்க்காதே; கால்களை இருகச் சேர்த்துக் கொள்ளவும் உன் ஆடை மறைத்திருப்பதைக் காணாமல் இருப்பார்களாக.. ஏனெனில் நீ பிராமணனாய்  இருந்து — ஆணாக இருந்து — ஸ்திரியானாய்

இதற்கு ஜம்பு நாத அய்யர் எழுதிய அடிக்குறிப்பு :-

16 முதல் 19 வரையான பாடல் தெளிவாக இல்லை . முந்தைய பாடல்களுடன் தொடர்பும் தெரியவில்லை . 16, 18 இரண்டும் ஒரு பெண் படுவது. 17 ஒரு மனிதன் கூறுவது. 19 இந்திரன் ஆசங்கனிடம் கூறுவது. இந்த ஆசங்கன் கடவுளால் பெண்ணாக மாறுமாறு சபிக்கப்பட்டு பின் ஆணாக மாறினான் என்று ஒரு கதை உண்டு.

ஆக இது பர்தா பற்றியது அல்ல. ஒரு ஆண் பெண்ணாக மாறி மீண்டும் ஆணாக மாறும்போது உடை பற்றிச் சொன்ன விஷயம். இது பர்தாதான் என்று சாதிப்பார் ஆண் -பெண் – ஆண் ஆனதையும் நம்புகிறார்களா ? பகிரங்கமாகச் சொல்லட்டுமே. அது சரி இப்படி ஓவியமோ சிலையோ பர்தாவுடன் 2300 ஆண்டுகள்ளாக இல்லையே .

XXXXX

கண்ணம்மா என் காதலி –3

தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி ! பெண்கள்

திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்

வல்லி இடையினையும் – ஓங்கி முன்னிற்கும் – இந்த

மார்பையும் மூடுவது சாத்திரம் கண்டாய்

ஆரியர் முன்னெறிகள் மேன்மை யென்கிறாய்

ஆரியப் பெண்களுக்கு திரைகள் உண்டோ?

ஆக பாரதியார் சொல்லுவதே சரி. இது தில்லித் துலுக்கர் செய்த வழக்கம்

கண்ணம்மா ஏன் முத்திரையுடன் வந்தாள் ? என்று ஒரு கேள்வி எழலாம். ; துலுக்கர் படையெடுப்பின்போது அவர்கள் இந்துப் பெண்கள் மீது நடத்திய தாக்குதலை வீர சிவாஜி பாடலிலும், குரு கோவிந்த் சிம்மன் பாடல்களிலும் பாரதியார் விரிவாகப் பாடி சாடுகிறார். ஆகவே கண்ணம்மா (வடக்கத்திய ராஜபுதன பெண் அல்லது கோபியர் தலைவி ராதா) வை அவர் வடக்கத்திய பெண்ணாக கற்பனை செய்வதே “பர்தா முறை ஒழிக” என்ற கருத்தை விளக்கவே என்று சொன்னால் மிகையாகாது. பாடல் முழுதும் அவர் பிரஸ்தாபித்த ஒரே வழக்கம் பர்தா – முகத் திரைதான்!

-சுபம்-

பர்தா, முகத் திரை, பாரதியார், தில்லித் துருக்கர், வழக்கமடி,பெண்கள்