‘வீடு வாங்கலியோ வீடு’! ‘பிளாட் வாங்கலியோ பிளாட்’ ! (Post No.8477)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8477

Date uploaded in London – 9 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.  And pictures are only representational; may not be connected to the story.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வீடு வாங்கலியோ வீடு!  பிளாட் வாங்கலியோ பிளாட் !

‘வீடு வாங்கலியோ வீடு , பிளாட் வாங்கலியோ பிளாட்’- என்று கூவி விற்கும் அளவுக்குப் போய்விட்டது இன்றைய ‘ரியல் எஸ்டேட் பிஸினஸ்’ (Real Estate Business) ! பலர் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடி ஒளிகிறார்கள் . வாரம் ஒரு முறை ஒரு பக்க விளம்பரம். 

சீரியல் நடிகைகளும் , சில நடிகர்களும் மத்தியான வேளையிலும் சரி, இரவு வேளையிலும் சரி ,கதறிக் கதறி, அடி வயிற்றிலிருந்து, (அவர்கள் நிழலைப் பார்த்தாலே தெரிகிறது அவர்கள் வெயிலில் நின்றுகொண்டு போஸ் தருவது) பேசுவதைக் கேட்டால் பரிதாபமாக இருக்கிறது.

சரி,  டீ.வி, காட்சிக்கு வருவோம்.

ஒருவரைப் பார்த்து அழகான நடிகை கேட்கிறாள்

உங்கள் பெயர் ?

அவரும் பதில் சொல்கிறார் – என் பெயர் ……..

எதற்காக இங்கே வீடு வாங்குகிறீர்கள் ?

நான் …… ஊரிலிருந்து ……. ஊருக்குப் பஸ்ஸில் போகையில் ‘அழகான மரங்கள், தென்றல் காற்று, , பக்கத்திலேயே ரயில்வே ஸ்டேஷன், பஸ்  ஸ்டாண்டு’ (இதைச் சொல்லும்போதே முகத்தில் வேர்வை வடிய பக்கத்தில் உள்ளவரிடம் துண்டை வாங்கி  முகத்தைத் துடைத்துக்  கொள்கிறார் ) இவைகளை பார்த்து இந்த இடத்துக்கு வந்தேன் . இந்த போர்டையும் (Board) கண்டேன் (உடனே போர்டை சில நிமிடங்களுக்கு காட்டுவார்கள்).

இந்த ஓனரிடம் (owner) 4 பிளாட்டுகள் வாங்கி விட்டேன் .

டி .வி. நடிகை (ஆச்சர்யத்துடன்) என்ன ….. 4 ……… பிளாட்டுகளா ?

ஆமாம். ஒன்று எனக்கு; இரண்டு பிளாட்டுகள் என் பையனுக்கும், பெண்ணுக்கும். நாலாவது பிளாட் என் மச்சினனுக்கு  .

(அடடா, என்ன அண்டப்புளுகு; ஒரு பிளாட் நமக்கு வாங்குவதற்குள் மூச்சுத் திணறி, நாக்கு வெளியே வந்து விடுகிறது. இவர் மச்சினனுக்கு வேறு வாங்கி விட்டாராம்).

நடிகை – உங்கள் அருகில் நிற்பவர் யார்?

ஓ , இவரா, இவர் என் நண்பர் . சும்மா, பிளாட்டுகளைக் காட்ட அழைத்து வந்தேன். அவரோ இந்த இடத்தைப் பார்த்த மாத்திரத்தில், செல் போனை எடுத்தார். சொந்தக் காரரிடம் பேசி 8 பிளாட்டுகள் ‘புக்’ செய்து அட்வான்ஸ் தொகையும் அனுப்ப ஏற்பாடு செய்துட்டார்.

உடனே காமிரா டெலிவிஷன் நடிகையை நோக்கி திரும்புகிறது ; அவர் சொல்கிறார்.

ஒரு விஷயம் சொல்ல மறந்து விட்டேன். இந்த இடத்தில் ஒரு சதுர அடி ரூ. 2000. ஆனால் நாங்கள் 50% டிஸ்கவுன்ட்டில் (Discount) ரூ.1000குத்  தருகிறோம் . அது மட்டுமா? 4 பிளாட்டுகள் வாங்கினால் ஒரு பிளாட் இலவசம். கிட்டத்தட்ட எல்லா பிளாட்டுகளும் ‘புக்’ ஆகிவிட்டன. இன்னும் ஒரு சில பிளாட்டுகளே பாக்கி!

நீங்கள் எப்போ த வரப்போகிறீர்கள்?  இதோ எங்கள் விலாசம் —

………..

……….

…………

பின் கோடு –  பூஜ்யம், பூஜ்யம் பூஜ்யம் …..

புரிகிறதா?

உங்களுக்கும் ‘பூஜ்யம்’ தான்

நீங்களும் சிந்திக்கத் துவங்கி இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

tags – ags – வாங்கலியோ ,பிளாட் ,வீடு

–subham–