WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,551
Date uploaded in London – – 11 JANUARY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பூமி சூக்த ஆராய்ச்சிக் கட்டுரை – 9
நான் திருமணப் பெண் போல மணக்க வேண்டும் – புலவன் வேண்டுகோள்
மந்திரம் 21
(பாடல் 21;)- அ .வே.12-ஆவது காண்டம் ; முதல் துதி)
அக்னிவாசாஹா ப்ருதிவ்யஸித ஜூஷ்விஷிமந்தம் ஸம்சிதம் மா க்ருணோது — 21
பொருள் 21
கனலை அணிந்துள்ள கருமையான அங்கங்களை உடைய பூமி எனக்கு அறிவு ஒளியை கொடுப்பாளாகுக; என் அறிவை கூர்மை ஆக்குவாளாகுக -21
எனது கருத்துக்கள் :_
21- கிட்டத்தட்ட காயத்ரீ மந்திரத்தின் பொருள்தான் இது. எனது அறிவை பிரகாசம் ஆக்கு; கூர்மை ஆக்கு என்று புலவர் வேண்டுகிறார். காயத்ரீ மந்திரத்தை மொழிபெயர்த்த பாரதியாரும்
“செங்கதிர்த் தேவன் ஒளியைத் தேர்ந்த்து தெளிகின்றோம்.
அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடந்துக” –என்றே பாடுகிறார்.
இன்னும் ஒரு இடத்தில் ஒளி படைத்த கண்ணினாய் வா வா, உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா என்று பாடுகிறார்.. வேதத்தில் இருந்து பெறப்பட்ட கருத்தே அது.
XXX
பூம்யாம் தேவேப்யோ தததி யக்ஞம் ஹவ்யமரங்க்ருதம்
பூம்யாம் மனுஷ்யாம் ஜீவந்தி ஸ்வதயான்னேன மர்த்யாஹா
ஸா நோ பூமிஹி ப்ராணமாயுர் ததாது ஜரதஷ்டிம் மா ப்ருதிவீ க்ருணோது – 22
பொருள் 22
எந்த பூமியில் தேவர்களுக்கு மக்கள் அவியையும் யக்ஞத்தையும் அலங்காரங்களுடன் அளிக்கிறார்களோ , எங்கு மக்கள் உண்டும் குடித்தும் வாழ்கிறார்களோ , அந்த பூமாதேவி எங்களுக்கு நல்ல சுவாசக் காற்றையும் , நீண்ட ஆயுளையும் அளிப்பாள் ஆகுக; நாங்கள் கிழவர்கள் ஆகும் வரை வாழவேண்டும் –22
எனது கருத்துக்கள்
யாக மேடை, யூப ஸ்தம்பம் ஆகியவற்றை அலங்கரித்த செய்தி
ரிக் வேதத்திலேயே வருகிறது. மணப்பெண்ணின் அலங்காரம் பற்றி கல்யாண மந்திரத்தில் வருகிறது .ஒரு குழந்தையை தாயார் அலங்கரிப்பது போல அலங்கரி யுங்கள் என்ற உவமை RV 9-104-1 மந்திரத்தில் வருகிறது. பெண்கள் நகை அணிந்த காட்சிகளும் உலகின் மிகப்பழைய நூலில் வருவதால், வேத கால மக்கள் மஹத்தான நாகரீகத்தில், செழிப்புடன் வாழ்ந்ததை அறிகிறோம்..
xxx
மந்திரம் 23
யஸ்தே கந்தஹ ப்ருதிவி ஸம்பபூவ யம் பிப்ரத்யோஷ தயோ யமாபஹ
யம் கந்தர்வா அப்சரஸ் ச பேஜிரே தேன மா ஸுரபிம் க்ருணு மா நோ த்விக்ஷத கஸ்சன -23
ஓ பூமியே உன்னிடமிருந்து மண் வாசனை வருகிறது.; உன்னிடம் தாவரங்களும் , மூலிகைகளும் நீரும் வாசனையுடன் மிளிர்கின்றன ; கந்தர்வர்களும், அப்சரஸ்களும் அவற்றைப் பகிர்கிறார்கள் அந்த இனிமையை எனக்கும் அருள்வாயாகுக; என்னை எவரும் வெறுக்கமால் இருக்கட்டும் -23
எனது கருத்துக்கள்
மண் வாசனை என்பது நல்ல ஒரு கருத்து. கிராமப் புறத்தில் வாழ்வோருக்கு இது நன்கு தெரியும். ரிக் வேதம் முழுதும் கந்தர்வர்கள், அப்ஸரஸ்களை வருணிக்கும்போது அவர்களை வாசனை மிகுந்தவர்கள் என வருணிக்கின்றனர். கந்தம் Good Smell இருப்பதால்தான் அவர்களை கந்தர்வர்கள் என்று அழைக்கிறோம். மேலும் அப்சரஸ் என்றால் சென்ட், பெர்ப்யூம் Scent, Perfume என்றும் பொருள்; அவர்களுடைய பெயர்கள் அனைத்தும் பூக்களின் பெயர்கள்; செடிகளின் பெயர்களே என்றும் வியாக்கியானங்கள் உள்ளன. கந்தர்வர்கள் 6333 பேர் உள்ளதாக ஒரு அதர்வண வேத துதி பாடுகிறது. அவர்கள் ஆடல், பாடலில் வல்லவர்கள்; பெண்களிடத்தில் பிரியம் உள்ளவர்கள்; தேவர்களுக்கு சோம ரசம் தயாரிப்பவர்கள். ஆடல்-பாடல் கலைகளுக்கே காந்தர்வ வேதம் என்றே பெயர்; புராணங்களில் இவர்கள் பற்றி நிறைய கதைகள் உள்ளன. அப்ஸரஸ் கள் என்னும் அழகிகள் அவர்களுடைய மனைவியர். இந்தப் பின்னணியை நோக்கும்போது இந்தப் புலவன் அத்தைகைய இனிமையை நன்மணத்தை எனக்கும் கொடு என்று வேண்டுவது ஏன் என்பது புரிகிறது .
Xxx

மந்திரம் 24
யஸ்தே கந்தஹ புஷ்கரமாவிவேச யம் சஞ்ஜப்ருஹு ஸுர்யாயா விவாஹே
அமர்த்யாஹா ப்ருதிவி கந்தமக்ரே மா ஸுரபிம் க்ருணு மா நோ த்விக்ஷத கஸ்சன -24
பொருள் 24
உன்னுடைய எந்த நல்ல மணம் தாமரைப்பூவில் நுழைந்ததோ, எந்த மணத்தை வைத்து திருமணப் பெண் சூர்யாவை கந்தம் உள்ளவராக ஆக்கினார்களோ அந்த இனிமையான மணத்தை எனக்கும் அளிப்பாயாகுக .; என்னை எவரும் வெறுக்கமால் இருக்கட்டும் -24
எனது கருத்துக்கள்
மந்திரம் 24-ம் இதையே மேலும் விளம்புகிறது . இந்தியாவின் தேசீய மலர் தாமரை Lotus. தேவியர் அனைவரும் வீற்றிருப்பது தாமரை; தமிழில் மலர் (பூ) என்றாலே தாமரை. வேதத்தில் நூற்றிதழ் தாமரை என்ற சொற்றோடர் உளது. அதை சங்க இலக்கிய பாடலிலும் காண்கிறோம். அத்தகைய தாமரை மலர் மணமும் உன்னுடையதே என்று புலவன் பூமியைப் போற்றுகிறான்.
இந்த 24 ஆவது மந்திரத்தில் சூர்யாவின் வாசனை வருகிறது. அவள்தான் முன் உதாரணமான மணப்பெண் Exemplary Bride ; ரிக் வேதம் 10-85 ஆவது துதியில் நீண்ட கல்யாண மந்திரம் உளது. அதில் சூர்யாவை காண்கிறோம். அதர்வண வேதத்தில் அந்தக் கல்யாண மந்திரத்தோடு கூடுதல் மந்திரங்களை சேர்த்துள்ளார்கள் ; மணப் பெண் அலங்கா ரம் பற்றி இந்துக்களுக்குச் சொல்லத் தேவையே இல்லை. இந்து மதம் போல நாலு நாள் திருமணச் சடங்கு உலகில் வேறு எங்கும் இல்லை. மலர்களும் மணப் பெண்ணும் ஒன்று என்னும் அளவுக்கு அவள் மீது வாசனை மலர்கள் இருக்கும். இது தவிர சந்தனம் , குங்குமம், கஸ்தூரீ என்று கூடுதல் வாசனையும் இருக்கும். அதையெல்லாம் நினைவு கூறும் புலவன் எனக்கும் அந்த மணமும் இனிமையும் கிடைக்கட்டும் என்கிறான். இவ்வளவு இருந்தால் அவனை வெறுப்பாரும் இருப்பாரோ !! பூமியை வெறுப்பாரும் இல்லை ; மணப் பெண்ணை விரும்பாதவ ரும் இல்லை !!!
ரிக் வேத கல்யாண மந்திரம் குறித்தும், அகநா நூறு கல்யாணப் பாடல்கள் 86, 136 குறித்தும் முன்னரே விரிவாக எழுதியுள்ளேன்.
தொடரும் …………………………….
xxx
tags–திருமணம், வாசனை, மணப்பெண் , கல்யாணம் , பூமிஸூக்தம்-9