சங்கப் புலவர் மாமூலனார் ரிக் வேதத்தை ‘காப்பி’ அடித்தாரா? (Post 10,029)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,029

Date uploaded in London – 28 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மாமூலனார் என்ற சங்கப் புலவர் காலத்தினால் மிகவும் முந்தியவர் என்று கருதுவோரும் உண்டு. காரணம் என்னவெனில் இவர் தமிழ் நாட்டின் மீது மௌரியர் படையெடுத்து வந்ததைக் குறிப்பிடுகிறார். ஆயினும் இந்தக் கட்டுரையில் நாம் காணப்போவது வேறு விஷயம் ஆகும். அகநானூற்றுப் பாடலில் இவர் ஒரு அபூர்வ விஷயத்தை உவமையாகக் கையாள்கிறார் . இதை எகிப்திலும் ரிக் வேதத்திலும் காண முடிகிறது. இவர் பழங்காலப் புலவர் என்பதற்கு இதுவும் சான்றாக அமையலாம்.

அகநானூறு பாடல் 101

1. களிற்றியானை நிரை

பாடல்: 101 (அம்மவாழி)

அம்ம வாழி, தோழி! ‘இம்மை

நன்றுசெய் மருங்கில் தீதுஇல்’ என்னும்

தொன்றுபடு பழமொழி இன்றுபொய்த் தன்றுகொல்?-

தகர்மருப்பு ஏய்ப்பச் சுற்றுபு சுரிந்த

சுவல்மாய் பித்தைச் செங்கண் மழவர் 5

வாய்ப்பகை கடியும் மண்ணொடு கடுந்திறல்

தீப்படு சிறுகோல் வில்லொடு பற்றி,

நுரைதெரி மத்தம் கொளீஇ, நிரைப் புறத்து,

அடிபுதை தொடுதோல் பறைய ஏகிக்,

கடிபுலம் கவர்ந்த கன்றுடைக் கொள்ளையர், 10

இனம்தலை பெயர்க்கும் நனந்தலைப் பெருங்காட்டு,

அகல் இரு விசும்பிற்கு ஓடம் போலப்,

பகலிடை நின்ற பல்கதிர் ஞாயிற்று

உருப்பு அவிர்பு ஊரிய சுழன்றுவரு கோடைப்

புன்கான் முருங்கை ஊழ்கழி பன்மலர், 15

தண்கார் ஆலியின், தாவன உதிரும்,

பனிபடு பன்மலை இறந்தோர்க்கு,

முனிதகு பண்புயாம் செய்தன்றோ இலமே! 18

xxxxx

அகல் இரு விசும்பிற்கு ஓடம் போல 

பகலிடை நின்ற பல்கதிர் ஞாயிற்று

என்பதன் பொருளை மட்டும் எடுத்துக் கொள்வோம்

4 முதல் 11 வரிகளில் மழவர்கள், இருமல் வராமல் இருப்பதற்காக,  வாயில் புற்று மண்ணை அடக்கிக்கொண்டு , தீ அம்புகளுடன் சென்று பசுமாடுகளைக் கவர்ந்து கொண்டுவந்து பங்கிட்டுக் கொள்ளுவர் என்ற பொருள் வருகிறது

இதையும் ரிக் வேதத்தில் பல இடங்களில் காணலாம்; மறைத்து வைக்கப்பட்ட ஆநிரைகளை மீட்க இந்திரன் உதவியதாகப் பல பாடல்களில் காண்கிறோம்

11 முதல் 15 வரிகளில்

அகன்ற வானமாகிய கடலில் இயங்கும் தோணி போல் பகற்போதில் நின்ற பல கதிர்களையுடைய  கதிரவனுடைய வெப்பம் விளங்கிப் பரவச்  சுழன்று வரும் மேல் காற்றால் முருங்கை மலர்ப் பூக்கள் உதிரும். அது கார் கால ஆலங்கட்டி மழை போல இருக்கும் . இந்த சூழ்நிலையில் பல மலைகளையும் தாண்டிச் சென்ற தலைவருக்கு நான் வெறுக்கத்தக்க செயல் எதையும் செய்யவில்லையே!

சூரியனை வானத்தில் செல்லும் படகு என்று வருணிப்பதை ரிக் வேதத்திலும் எகிப்திலும் மட்டுமே காணலாம். தமிழ், சம்ஸ்க்ருத இலக்கியங்களில் ‘ஓராழித் தேருடையோன் , 7 குதிரைகள் பூட்டிய ஒரு சக்கர தேர் உடையவன்’ என்றே பெரும்பாலும் வருணிப்பர். இவ்வாறு ஆகாயத்தில் செல்லும் படகு என்பது, மாமூலனார் வேதம் கற்ற பார்ப்பான் என்பதைக் காட்டுகிறது.

xxxx

எகிப்தில்

எகிப்தில் சூரிய தேவனை ‘ரா’ (Ra, Re) என்ற பெயரில் வணங்குகின்றனர். இந்துக்களைப் போலவே மூன்று வடிவில் வணங்குகின்றனர். ரிக் வேதம் முழுதும் அக்கினியையும், சூரியனையும் மூன்று எண்ணுடன் தொடர்பு படுத்துகின்றனர். 1.மின்னல், 2.அக்கினி, 3.சூரியன் என்பது ஒரு விளக்கம் . எகிப்தில் காலையில் குழந்தை அல்லது கேப்ரி என்றும் பகலில் ரா ஹரக்தி என்றும் மாலையில் ரா ஆதம் என்றும் சூரிய தேவனை வழிபடுகின்றனர். பிராமணர்களும் இதே போல மூன்று வேளைகளில் சூரியனை தினமும் இன்றும் வழிபடுகின்றனர்.

‘ரா’ என்ற பெயரே சம்ஸ்க்ருத வேர்ச் சொல் – ‘ஒளி’- என்பதிலிருந்து வந்ததே .

இரவு  நேரத்தில் அது ஒரு படகில் பயணம் செய்து இறந்தோர் வாழும் உலகத்தைக் கடப்பதாகவும் அப்போது  தீய ஆவிகளிடமிருந்து சூரியனை நல்ல ஆவிகளும் சேத் (Seth)  என்னும் தெய்வமும் காப்பதாகவும் எகிப்திய புராணம் கூறும் .

xxxx

ரிக் வேதத்தில்

ரிக் வேதத்தில் பல கடவுளரைப் புகழும் போது வானத்தைக் கடலாகவும் அந்த தேவதையை படகு அல்லது கப்பலாலாவும் வருணிக்கின்றனர். வேதம் படித்த ,மாமூலனார் இந்த ‘ஐடியா’வை ரிக் வேதத்தில் இருந்து எடுத்து சூர்ய தேவனுக்குச் சூட்டினார் போலும் .

இதோ ரிக்வேதப் பாடல்:-

RV.1-46-7

துதிகளான கடலின் மீது எங்களைக் கடத்திச் செல்ல கப்பலைப் போல வாருங்கள் .

இது அஸ்வினி தேவர்களை நோக்கி ரிஷி பிரஸ் கண்வ காண்வன் பாடியது

திருவள்ளுவர் கடலை நீந்திக் கடப்பது பற்றிப் பாடுகிறார்.(பிறவிப்  பெருங்கடல்………..). வேதம் முழுதும் கப்பல் அல்லது படகில் கடப்பது பற்றியே வருகிறது. அதிலும் வானத்தை- ஆகாயத்தை — கடலாக வருணிப்பது வேதத்தில் பல இடங்களில் வருகிறது.

xxx

My old articles –

Tagged with எகிப்திய அதிசயங்கள் -14 – Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › எ…

  1.  

4 Mar 2017 — எகிப்திய அதிசயங்கள் -14 (Post No.3689) … மற்றொன்று சூரியனின் படகு என்றும் …


Tagged with வட திசை -2 – Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › வ…

  1.  

2 Oct 2020 — சூரியன் மறையும் இருண்ட திசை; … சூரியனை வானத்தில் ஓடும் படகு/ ஓடம் என்ற …

–subham—

tags-  மாமூலனார், அகநானூறு பாடல் 101,சூரியன், படகு, வானம், ரிக் வேதம் 

ஆகாயத்தில் இருந்து வைரக்கற்கள் விழுவது உண்மையே! (Post No.7490)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7490

Date uploaded in London – 24 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

இது இத்தொடரில் வைரங்கள் பற்றிய பத்தாவது கட்டுரை.

வெளியான தேதி-   மார்ச் – ஏப்ரல் 2000, May- June 2000

பத்திரிக்கையின் பெயர்- ஜெம்மாலஜியும் ஜோதிடமும்

கட்டுரைத் தலைப்பு –  ஆகாயத்தில் இருந்து வைரக்கற்கள் விழுவது உண்மையே!

இதில் இரண்டு பகுதிகள் உள்ளன.

1.வானத்தில் இருந்து விழும் விண்கற்களில் (METEORITES) வைரம் இருப்பது உண்மைதான்

2.இரண்டாவது கட்டுரையில் லண்டனில் உள்ள வைர வியாபார தலைமையகம் சி.எஸ்.ஓ. ( CSO) பற்றியது. இரண்டும் 20 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய கட்டுரைகள்.

இன்று உலகில் எவ்வளவோ  மாறுதல்கள் நிகழ்கின்றன. ஆனால் வைரத்தின்  விலையோ, தங்கத்தின் விலையோ குறைந்ததாக வரலாறே இல்லை!

பொதுவாக வானத்தில் இருந்து பூமியில் விழும் கற்களுக்கு வெளிநாடுகளில் ஏக கிராக்கி. சென்ற ஆண்டு நியூ சைன்டிஸ்ட்  (NEW SCIENTIST) அறிவியல் பத்திரிகை நடத்தும் கண்காட்சிக்கு போயிருந்தேன்.முதல் கடையே விண்கற்களை விற்கும் கடைதான் . உள்ளே நுழைந்த ஒரு சில நிமிடங்களுக்குள் ஒருவர் இரண்டு குட்டிக்கற்களை 140 பவுனுக்கு (  £140-00) விலைக்கு வாங்கியது கண்டு வியந்தேன். வைரம் இல்லாத கற்களுக்கே இவ்வளவு விலை என்றால் வைரம் இருந்தால் எவ்வளவு மதிப்பு என்பதை நாமே ஊகிக்கலாம். நீங்களும் வயற்காடுகளில், அந்த இடத்துக்குச சம்பந்தமில்லாத மின்னும் கற்கள் கிடைத்தால் பத்திரப்படுத்துங்கள். அதன் விலை பற்றிய கேட்டலாக்குகள் (Catalogue) வெப்சைட்டில் உள்ளன. என்னிடம் பழைய கேட்டலாக் உள்ளது  .

tags வைரக் கற்கள், விண்கற்கள், ஆகாயம், சி.எஸ் ஓ , தலைமையகம் , வானம்

தானம் செய்தால் வானம் திறக்கும்-புறநானூறு (Post No.4395)

Written by London Swaminathan 

 

Date: 14 NOVEMBER 2017

 

Time uploaded in London- 7-46 am

 

 

Post No. 4395

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

புறநானூற்றுப் புலவர்  ஏணிச்சேரி முடமோசியாரும், அறநெறிச் சார ஆசிரியர் முனைப் பாடியாரும் சொல்லுவர்:

 

“தானம் செய்தால் வானம் திறக்கும்”.

 

வானம் என்ற சொல்லைத் தமிழ்ப் புலவர்கள் இரு வகையில் பயிலுவர்:

வானம் = மழை

வானம் = சொர்க்க லோகம் , இந்திர லோகம்

 

மாபெரும் சம்ஸ்கிருத அறிஞனான திருவள்ளுவன் பகவத் கீதை பாணியில் (16-1) யாத்த தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம், வானம் வழங்காதெனின் (குறள் 19)” என்னும் இடத்தில் வானம் என்பது மழையைக் குறிக்கும்; வள்ளுவன் தானம், தவம் என்னும் சம்ஸ்கிருதச் சொற்களை பகவத் கீதை ‘ஸ்டைலில்’ 19, 295 ஆகிய எண்ணிட்ட குறள்களில் பயன்படுத்துவான். சம்ஸ்கிருத ஸ்லோகக்ங்களில் இது நூற்றுக் கணக்கான இடங்களில், குறிப்பாக கீதையில், சேர்ந்தே பயிலப்படும் சொற்கள்; நிற்க

 

நாம் சொல்ல வந்த விஷயத்தைக் காண்போம். தானம் செய்தால் வானம், அதாவது சொர்க்க லோகம் திறந்து இருக்குமாம்!~

 

அறநெறிச் சாரம் என்னும் நீதி நூலில் முனைப்பாடியார் புகல்வது யாதெனின்,

ஒன்றாகநல்லது உயிரோம்பல் ஆங்கதன்பின்

நன்றாய்ந்தடங்கினார்க் கீத்துண்டல் – என்றிரண்டும்

குன்றாப் புகழோன் வருகென்று மேலுலகம்

நின்றது வாயில் திறந்து

 

–அறநெறிச்சாரம்

பொருள்:-

ஒன்றாகநல்லது உயிரோம்பல் = அறங்களில் சிறந்தது பிற உயிர்களைப் பாது காப்பது ஆகும்

 

ஆங்கு அதன் பின்  நன்கு ஆய்ந்து அடங்கினார்க்கு ஈத்து உண்டல்= ஞான நூல்களைக் கற்று, மனம் போன வழியில் செல்லாமல், அடக்கத்துடன் வாழ்வோருக்கு உணவு கொடுத்தல் மற்ற ஒரு சிறந்த தர்மம்; பிறகு தானும் உண்ணுதல் வேண்டும்.

 

என்ற இரண்டும் குன்றாப் புகழோன்= இவ்விரு தர்மங்களால் புகழ்பெற்று விளங்குபவர்களை

வருக என்று வாயில் திறந்து மேல் உலகம் நின்றது =  வருக வருக என வரவேற்பதற்காக சொர்க லோகம் அதன் வாயில் கதவுகளைத் திறந்து வைத்துக்கொண்டு காத்திருக்கின்றது.

 

அதாவது மாலையைக் கையில் வைத்துக்கொண்டு இந்திரனும் அப்சரஸ் அழகிகளும் மேள தாளத்துடன் காத்து  நிற்பர் என்பதாம்!

இந்திர லோகத்தில் டமாரம்!

ஆய் அண்டிரனை உறையூர் ஏணிச்சேரி முடாமோசியார் பாடிய புறநானூற்றுப் பாடலில் (241)

 

திண்தேர் இரவலர்க்கு, ஈத்த, தண் தார்,

அண்டிரன் வரூ உம்என்ன, ஒண்தொடி

வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள்,

போர்ப்புறு முரசம் கறங்க,

ஆர்ப்பு எழுந்தன்றால், விசும்பினானே

 

சுருக்கமான பொருள்:

வறுமையில் வாடியோருக்கு அள்ளி, அள்ளித் தந்த ஆய் அண்டிரன் (அஜேந்திரன்) இறந்தவுடன் அவனை வரவேற்க இந்திர லோகத்தில், இந்திரன் கோவிலில், முரசுகள் முழங்கினவாம். வச்சிரத் தடக்கை நெடியோன் கோயில் என்பதற்கு பழைய உரைகாரர்கள் இந்திரலோகம் (சொர்க்கலோகம்) என்றே பொருள் கண்டுள்ளனர். பூமியில் உள்ள இந்திரன் கோயிலன்று.

 

அதாவது, பூமியில் தானம் என்னும் புண்ணிய கருமத்தைச் செய்தால் அவர்களை வரவேற்க இந்திரன் காத்திருப்பானாம்; அதுவும் எப்படி? ‘பாண்டு வாத்திய’க் குழுவுடன் வாசலில் நிற்பானாம்!

புற நூலுக்குப் பின் தோன்றிய அறநெறிச் சாரத்தில் முனைப்படியாரும் இதே கருத்தைச் சொல்லும் போது நம் ஐயமெல்லாம் பறந்தோடிப் போகின்றது.

 

–Subham, Subham–