தமிழன் கண்ட 3 அற்புத “மை” (Post No.10,608)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,608

Date uploaded in London – –    29 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தமிழ் வழி ……………………… தனீ…………………..வழீ……………………

தமிழன் கண்ட 3 அற்புத “மை”

வாய்மை, உண்மை, மெய்மை  — மூன்றும் அற்புதமான சொற்கள். ஸம்ஸ்க்ருதத்தில் ஸத்யத்திற்கு (TRUTH) இப்படி மூன்று அற்புத சொற்கள் இல்லை

உள்ளத்தால் பொய்யாது வாழ்வது உண்மை ;

வாயால் பொய் சொல்லாது , தீங்கு செய்யாது வாழ்வது வாய்மை ;

உடலால் தீங்கு செய்யாது வாழ்வது மெய்மை ;

இவை அற்புதமான சொற்கள்; தமிழனின் கண்டு பிடிப்பு. மனோ , வாக், காயம் (THOUGHT, WORD AND DEED)  ஆகிய மூன்றிலும் பொய்யாது வாழ்வது இந்துக்களின் சிறப்பு. இதை இன்றும் கூட பிராமணர்கள் தினமும் மூன்று முறை சொல்லும் சந்தியா வந்தனத்தில் கடைசியில் சொல்கிறார்கள். ஆனால் இதற்கான விசேஷ சொற்களை — வாய்மை, உண்மை, மெய்மை — என்பதை திருக்குறளிலும் சங்க இலக்கியத்திலும் மட்டுமே காணலாம்.

(வாய்மை, உண்மை என்ற இரண்டு சொற்களை வள்ளுவர் பல இடங்களில் பயன்படுத்துகிறார். மெய்மை என்பது சங்க இலக்கியமான ஐங்குறு நூற்றில் வருகிறது ; தொல்காப்பியத்தில் வரும் ‘மெய்மை’ இலக்கணம் பற்றியது )

வாய்மை விஷயத்தில் வள்ளுவனின் கருத்து தனிச் சிறப்பு உடைத்து. பொய்யும் கூட உண்மைதான்; அது நன்மை விளைவிக்கு மாயின் !!

உண்மையும் கூட தப்புதான்; அது தீமை  விளைவிக்குமாயின்!!!

இதை முன்னரே மஹாபாரதக் கதைகள் மூலம்  விளக்கிவிட்டதால் இன்று பிரஸ்தாபிக்கப்போவது இல்லை.

நம்மில் பலர்க்கு உள்ளத்தில் ஒரு கேள்வி எழும் ; குமர குருபரர், சகல கலாவல்லி மாலை பாடினார் – அற்புதம் நிகழ்ந்தது .

அபிராமி பட்டர் அந்தாதி பாடினார் – அமாவாசையன்று சந்திரன் உதித்தது.

ஆதி சங்கரர் , ஏழை பாப்பாத்தி வீட்டு வாசலில் நின்று , தாயே, இப்படி ஒரு வறுமையா, இந்தப்பெண்மணிக்கு, என்று கதறி, கனக தாரா ஸ்தோத்திரம் பாடினார் . அந்தப் பார்ப்பனப் பெண்மணியின் வீட்டில் தங்க நெல்லிக்காய் மழை பெய்தது .

அதெல்லாம் சரி ! இதை நானும் உள்ளன்போடு பாடுகிறேனே! ஏன் அற்புதம் நிகழ்வதில்லை என்று நம்மில் பலர் ஐயுறுகிறோம்.

ஒரே விடைதான் ! நமக்கு ‘திரிகரண சுத்தி’ இல்லை.

மனம், வாக்கு, உடல்/காயம் மூன்றும் உண்மையைக் கடைப்பிடிப்பதில்லை. நம்முடைய எண்ணங்களை காகிதத்தில் எழுதிப் படித்தால் நமக்கே வெட்கமாக இருக்கும். எழுதத் துணியவும் மாட்டோம்.. அதே போல கடும் சொற்களை, கொடும் சொற்களை வாயாலும் மனதாலும் வீசி எறிகிறோம். கடவுள் என்ன முட்டாளா? நம்மிடம் அவர் ஏமாந்து போக?

வள்ளுவன் பல இடங்களில் “எல்லா உயிர்களும் கை கூப்பித் தொழும்”  என்று நமக்கு சொல்கிறான்.கோபம், காமம் லோபம்/பேராசை/பிறர் பொருள் நயவாமை ஆகிய மூன்றையும் விட்டால் அற்புதங்கள் செய்ய முடியும் என்கிறான். நம்மால் முடிகிறதா?

இந்தக் கட்டுரை யார் இந்த திரிகரண சுத்தியை- மனம், சொல், நடத்தை — ஆகியவற்றைக் கண்டுபிடித்தார்?? என்பது பற்றியது.

இது ஜராதுஷ்ட்ரர் / ஜொராஸ்டர் ஸ்தாபித்த பார்ஸி மதத்திலும் உளது. அவரது காலம் கி.மு 600ஆ அதற்கு முன்னமா என்பது கேள்விக்குறியாக நிற்கிறது. ஆனால் வேதத்திலும் கீதையிலும் இது தெளிவாக உள்ளது.

இதோ குறிப்புகள்

பகவத் கீதையில்

18-15

சரீர வாங் மனோபிர் யத் கர்ம ப்ராரபதே என்ற வரியில் உடல், சொல், மனது மூன்றும் குறிப்பிடப்படுகிறது .

தம்மபதத்தில் புத்தரும் இதைச் சொல்கிறார் . பிராமணர் பற்றிய 26ஆவது அத்தியாயத்தில் புத்தர் சொல்கிறார் “. எவன் ஒருவன் மனதாலும், வாக்காலும், செயலாலும் பாவம் செய்யவில்லையோ , திரிகரணங்களிலும் கட்டுப்பாட்டுடன் இருக்கிறானோ அவனையே நான் பிராமணன் என்பேன்”.

மனு ஸ்ம்ருதி இதை மேலும் ஒரு படி மேலே தூக்கிச் செல்கிறது.(12-9)

உடலால் பொய்யாக வாழ்பவன், அடுத்த ஜன்மத்தில் மரம் செடிகொடிகளாக, கல், மண்ணாக பிறக்கிறான் ;

வாக்கால் பொய்யாக வாழ்பவன் பறவைகளாக, மிருகங்களாகப் பிறப்பான்;

எண்ணங்களில் பொய்மை உடையவன் மிகவும் கீழ்த்தரமான பிறவிகளாக (கடைசி ஜாதி) மாறுகிறான்

xxxx

பார்ஸி மதத்தில் திரிகரண சுத்தி

பார்சி மதத்தில் 3 நல்ல குணங்கள்

ஹுமதா , ஹுக்தா ,ஹ்வர்ஷ்டா = ஸு மதி , ஸு உக்த , ஸு வரிஷ்ட

பாரசீக மொழியில் ‘ஹ’ என்பது ஸம்ஸ்க்ருதத்தில் ‘ஸ’ என்பதாகும்.

இதனால்தான் நம்மை சிந்து நதி மக்கள் என்று சொல்லாமல் ஹிந்து என்றழைத்தனர் .

இதற்கெல்லாம் மூலம் யஜுர் வேதத்தில் உள்ளது:-

யன் மனஸா த்யாயதி தத் வாச்சா வததி

யத் வாச்சா வததி தத் கர்மா கரோதி

ஒருவனுடைய எண்ணத்தில் உதிப்பது வாக்காக மலர்கிறது ;அதையே அவன் செயலாகச் செய்கிறான்.

மஹாபாரதம், கருட புராணம் முதலியவற்றில் இது  வந்தாலும் வேதத்தில் வருவதே முதலில் வந்தவை.

இதோ மேலும் சில வேத மேற்கோள்கள் –

யச் சக்ஷுசா  மனஸா யச்ச வாச்சா உபாரிம –அதர்வண  வேதம் 6-96-3

யன்மே மனஸா  வாச்சா கர்மணா வா துஷ்க்ருதம் க்ருதம் –தைத்ரீய ஆரண்யக 10-1-12

உபநிஷதங்களை சாக்ரடீஸூம் அவரது சீடரான பிளாட்டோவும் நன்கு படித்தமைக்குப் பல சான்றுகள் உண்டு. பிளாட்டோவும் இந்த திரிகரண சுத்தியைக் குறிப்பிடுகிறார்.

–SUBHAM—

TAGS —  வாய்மை, உண்மை, மெய்மை, வேதத்தில், பார்ஸி மதம், , தமிழன், அற்புத “மை”

மனது இரண்டு வகைப்படும்! (Post No.2835)

Abstract Businessman has a Moral Dilemma.

Article written by London swaminathan

 

Date: 24 May 2016

 

Post No. 2835

 

Time uploaded in London :–  9-08 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

good_and_bad

மனோ ஹி த்விவிதம் ப்ரோக்தம் சுத்தம் சாசுத்தமேவ

அசுத்தம் காமசங்கல்பம் சுத்தம் காமவிவர்ஜிதம்

–அம்ருதபிந்து உபநிஷத்

மனது இரண்டு வகையானது; ஆசைகள் நிறைந்திருந்தால் அது அசுத்தமானது; அதாவது எபோதும் ஏதாவது ஒன்றின் மீது விருப்பம் கொண்டு அதையே நாடித் தேடி ஆடி ஓடி காலம் கழிப்பது. ஆசைகளை அறவே ஒழித்தால் அது சுத்தமானது; இதற்கு நம் நாட்டு சாது சந்யாசிகள், முனிவர்கள், மகான்கள் எடுத்துக் காட்டு. அவர்கள் ஆசையை அறவே ஒழித்து, பேரின்பத்தில் வாழ்ந்தார்கள்.

இதே கருத்தை வள்ளுவனும் இயம்புவதைப் படித்து இன்புறலாம்:–

தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது

வாய்மை வேண்ட வரும் (குறள் 364)

பொருள்: தூய்மை எனப்படுவது எந்தப் பொருளிடத்தும் ஆசை கொள்ளாதிருத்தல்; அந்த நிலை வாய்மையை நாடுவோருக்கு தானாக வந்து சேரும்.

 

ஆசையே துன்பத்திற்குக் காரணம் – என்பது புத்தர் பிரானின் முக்கியப் பொன்மொழி.

“ஆசை என்னும் காட்டை அழியுங்கள்; ஒரு மரத்தை மட்டுமல்ல.ஏனெனில் அந்தக் காட்டில்தான் அபாயமே உள்ளது. அந்தக் காட்டிலுள்ள மரங்களை வெட்டி, அதன் கீழ் வளர்ந்துள்ள புதர்களையும் அழியுங்கள். பிக்ஷுக்களே! அப்படிச் செய்வீர்களானால் நீங்கள் விடுதலை (நிர்வாண) பெறுவீர்கள்”.

–தம்மபதம் 283

 

ஆங்கிலத்திலும் ‘ஆசை உள்ளவனுக்கு அமைதி இல்லை’, ‘உயர்ந்த மனிதர்கள் உன்னத ஆசை கொள்வர்’ என்றெல்லாம் பழமொழிகள் உண்டு

Desire has no rest

Humble hearts have humble desires

He that desires but little has no need of much.

Good Choice, Bad Choice Road Sign with blue sky and clouds.

இந்து மதத்தில் ரிஷிகள் அழகான ஒரு உவமை சொல்லுவர்:–

“ஆசைக்கு அணை போடமுடியாது. யாரேனும் ஒருவர் அப்படி நினைத்தால் நெய்யைக் கொண்டு தீயை அணைப்பதற்குச் சமம்; அதாவது ஆசையை நிறவேற்ற, நிறைவேற்ற, புதுப்புது ஆசைகள் எழும், தேவைகள் வரும்.

 

சம்ஸ்கிருதத்திலும் இதற்கிணையான பழமொழிகள் இருக்கின்றன:–

ஆசா துக்கஸ்ய காரணம் = ஆசையே துன்பத்திற்குக் காரணம்

ஆசாவதிம் கோ கத: = ஆசைக் கடலின் கரையைக் கண்டவர்கள் யார்?

கால: க்ரீடதி கச்சத்யாயுஸ்தபி ந முஞ்சத்யாசாவாயு: (மோகமுத்கரா) = காலமோ ஓடுகிறது, வயதோ ஆகிறது, ஆனால் ஆசையின் பிடி தளரவே இல்லை.

 

இதை தமிழிலும் அழகாகச் சொல்லுவர்—

“மீசை நரைத்தாலும் ஆசை நரைப்பதில்லை”.

 

மேலே கண்ட, தூய்மையையும் ஆசையின்மையையும் முடிச்சுப் போடும் சம்ஸ்கிருத ஸ்லோகமும் வள்ளுவன் குறளும் பாரதீய சிந்தனையின் ஒற்றுமையைக் காட்டி நிற்கின்றது.

 

–சுபம்–

உண்மை, வாய்மை, மெய்மை (சத்யம்) பற்றிய பொன்மொழிகள்

National-Emblem

Article No. 2049

Written by London swaminathan

Swami_48@yahoo.com

Date : 7  August  2015

Time uploaded in London : – 10-17

 

உள்ளத்தால் பொய்யாது ஒழுகுவது உண்மை

சொல்லால் பொய்யாது ஒழுகுவது வாய்மை

உடலால் பொய்யாது ஒழுகுவது மெய்மை!

தமிழர்களைப் போல இவ்வளவு தெளிவாக மனம், மொழி, மெய் ஆகியவற்றின் தூய்மையை விளக்கியவர் எவருளர்?

 

காயேன, வாசா, மனஸேந்த்ரியைர்வா என்று சொல்வதை – த்ரிகரண சுத்தியை – மிக அழகாக விளக்கிவிட்டனர் தமிழர்கள்!

 

இனி சம்ஸ்கிருத, தமிழ் பொன் மொழிகலைக் காண்போம்:

 

அஸ்வமேத சஹஸ்ராத் ஹி சத்யமேவ விசிஷ்யதே – மஹாபாரதம் & ஹிதோபதேசம்

ஆயிரம் அஸ்வமேத யாகங்களை விட சத்யமே சிறந்தது. (உண்மையைக் கடைப் பிடிப்பவன், 1000 யாகங்களைச் செய்வதால் கிடைப்பதைவிடக் கூடுதல் பலன் பெறுவான்)

Xxx

வாய்மை எனப்படுவது — தீமை இலாத சொலல்: குறள் 291

Xxx

உண்மை பேசுவோருக்கு வேறு அறம் தேவைப்பாடாது – குறள் 297

xxx

அசத்யம் ஜன ரஞ்சனம்

பொய் பேசுவது ஜனரஞ்சகம் ஆக இருக்கும் (இறுதியில் கெடுதியை விளைவிக்கும்)

Xxx

பொய்மையும் வாய்மை ………. நன்மை பயக்கும் எனின் –குறள் 292

xxx

நாஸ்தி சத்யாத் பரம் தானம், நாஸ்தி சத்யாத் பரம் தப:  – மஹாபாரதம்

உண்மையை விட உயர்ந்த தானம் இல்லை; உண்மையை விட உயர்ந்த தவம் இல்லை

Xxx

vaymaiyee

தன் நெஞ்சறிவது பொய்யற்க – குறள் 293

xxx

 

நாஸ்தி சத்யாத் பரோ தர்மோ நான்ருதாத் பாதகம் பரம் – மனுஸ்ம்ருதி, மஹாபாரதம்

உண்மையை விட பெரிய தவம் இல்ல; பொய்யைவிட பெரிய பாதகம் (தீங்கு) இல்லை

Xxx

வாய்மை மொழியின் தவத்தொடு தானம் செய்வாரின் தலை – குறள் 295

xxx

 

சச்சாசச்ச வசஸீ பஸ்ப்ருதாதே –அதர்வ வேதம்

உண்மையும் பொய்யும் போட்டி போடும் வசனங்கள்

(அதாவது தர்ம – அதர்மப் போராட்டம் காலாகாலமாக நடைபெறும்)

 

Xxx

சத்யம் கண்டஸ்ய பூஷணம் – சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

கழுத்திற்கு அணிகலன் உண்மை விளம்பல்!

Xxx

 

சத்யம் ப்ரூயாத் ப்ரியம் ப்ரூயான்ன ப்ரூயாத்சத்யமப்ரியம்

ப்ரிய ச நான்ருதம் ப்ரூயாதேஷ தர்ம சநாதன: — மனுஸ்ம்ருதி

 

உண்மையே பேசு

இனிமையே பேசு

இனிமையற்றதை, உண்மையே ஆனாலும், சொல்லாதே

அதற்காக இனியது என்று கருதி பொய் பேசாதே

இதுவே எக்காலத்துக்கும் பொருந்தும் சநாதன தர்மம் (இந்து மதத்தின் அடிப்படைக் கோட்பாடு) – மனுஸ்மிருதி

 satya b w

Xxx

உலகத்தார் உள்ளத்துள் எலாம் உளன் – உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் — குறள் 294

xxx

 

சத்யம் வை சக்ஷு:, சத்யம் ஹி ப்ரஜாபதி: — சதபத ப்ராஹ்மணம்

உண்மையே கண்கள், உண்மையே தோற்றுவாய்

 

Xxx

சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு — குறள் 299

Xxx

சத்யமேவ ஜயதே நான்ருதம், சத்யேன பந்தா விததோ தேவயான: — முண்டகோபநிஷத்

 

வாய்மையே வெல்லும், பொய்மை வெல்லாது. உண்மையே சொர்கத்தை அடைவதற்கான பாதை, திறவுகோல் (இது தான் இந்திய அரசு, தமிழ் நாடு அரசு சின்னங்களில் உள்ள வாசகம்)

Xxx

 

புறந்தூய்மை நீரான் அமையும், அகந்தூய்மை வாய்மையால் காணப்படும் — குறள் 298

xxx

 satya1

சத்யம் ஸ்வர்கஸ்ய சோபானம் – மஹாபாரதம்

உண்மையே சுவர்கத்தின் மாடிப்படிகள்

 

Xxx

சத்யஸ்ய நாவ: சுக்ருதம் அபீ பரன் – ரிக் வேதம்

உண்மையெனும் படகுகள் நல்லோரைக் கரை சேர்க்கும்

Xxx

 

பொய்யாமை அன்ன புகழில்லை — குறள் 296

Xxx

 

சத்யான்ன ப்ரமதிதவ்யம் – தைத்ரியோபநிஷத்

உண்மை பேசுவதை ஒரு போதும் அலட்சியம் செய்யாதே

Xxx

சத்யேன தார்யதே ப்ருத்வீ , சத்யேன பபதே ரவி: — மனுஸ்ம்ருதி, சாணக்ய நீதி

இந்த பூமியே உண்மையினால்தான் நிலைபெற்று நிற்கிறது, இந்த சூரியன் உண்மையின் அடிப்படையிலேயே ஒளிருகிறது

 

Xxx

சத்யேன உத்தபிதா பூமி: —  ருக் வேதம், அதர்வ வேதம்

உண்மைதான் பூமியைத் தாங்கி நிற்கிறது.

 satya2

Xxx

ஹிரண்மயேன பாத்ரேன சத்யஸ்யாபிஹிதம் முகம் – ஈஸாவாஸ்யோபநிஷத்

பொன்மயமான பாத்திரத்தினால் உண்மையின் முகம் மூடப்பட்டுள்ளது.

Xxx

வாய்மையை விடச் சிறந்த தர்மம் எனக்குத் தெரியாது – குறள் 300

 

–சுபம்–