
COMPILED BY KATTUKKUTY
Post No. 8911
Date uploaded in London – – 10 NOVEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
வார்த்தை பழசு, அர்த்தம் புதுசு!!!
Compiled by Kattukutty
தாய் – எந்த குற்றத்தையும் மன்னித்து விடும் நீதி மன்றம்.
தாய்/ தகப்பன் – காதலர்களின் இதயங்களை மாற்றும் டாக்டர்கள்!!!
பட்டம் – படித்தவர்கள் கையில் மட்டுமல்ல படிக்காதவர் கையிலும்!!!
மனச்சாட்சி – மனிதனை நெறிப் படுத்தும் உள் துறை அமைச்சர்.
மனம் – 1) மனித கம்ப்யூட்டரின் “டிஸ்க்”
2) ஆ(சா)பாசம் நிறைந்த ஆழ்கிணறு.
புதுக் குறள் – கற்க கசடற கற்பவை கற்ற பின்
வாங்குக அப்பாவிடம் வசை.

லிப்ஸ்டிக் – வறுமையின் நிறம் மட்டுமல்ல இந்த
வாய் “மை”யின் நிறமும் சிவப்புதான்!!!
பிப்ரவரி – ஆங்கிலத் தாயின் குறை நாள் குழந்தை!!!
காந்தி – பிராந்திக் கடையில் காந்தி !!! ரூபாய் நோட்டாக !!
காந்தி அஞ்சல் தலை – எத்தனை குத்துக்கள் உன்முகத்தில்…..
இறந்தும் நிரூபிக்கிறாய் நீ அஹிம்ஸாவாதி என!!!

சுதந்திரம் – வாங்கவும் உயிர் போனது, வாங்கியும் உயிர் போகிறது…..
லஞ்சம் – தன் மானம் அடமானம் வைக்கப் பட்டு பெறப்படும
சன்மானம்……
பிச்சை – அரசியல்வாதியாக கையேந்தினால் “நிதி”
அன்னிய நாட்டில் நம்நாடு கையேந்தினால் “கடன் ஒப்பந்தம்”
ஆன்மீகவாதி கையேந்தினால் “அருள் உதவி”
அப்பாவி கையேந்தினால் “பிச்சை”
தேர்தல் வாக்குறுதி – I S I முத்திரை முத்திரை குத்தப்பட்ட
அப்பட்டமான “பொய்”!!!
வானம்
அரசியல்வாதியால் வாங்க முடியாத “புறம் போக்கு”இடம்!!!
பயிரிட முடியாத பாலை!!!
அழகு
ஆர்ப்பாட்டம் இல்லாத அசத்தல் !!!
கண்ணும் மனமும் கலந்து வழங்கும் தீர்ப்பு!!!
ஆடவரை அலைக்கழிப்பதெற்கென்றே ஆண்டவனால் பெண்ணுக்குஅளித்த வரப்ரசாதம்!!!
ஆணவம்,அகம்பாவம்,ஆபத்து,அகால அழிவு, என்னும் அருமைக்
குழந்தைகளின் தாய்!!!!
ஓர் அமைதியான ஏமாற்றுதல் !!!
நம்மிடம் இருப்பது, ஆனால் நமக்கு மட்டும் தெரியாதது
இதயத்தின் முகவரி, உணர்வுகளின் வாசல்!!
மவுனம்
மவுனம் சம்மத்திற்கு அறிகுறி,
சிலர் மவுனம் சமாதிக்கு அறிகுறி!!!
கண்ணீர் – அட விழிகளுக்குக் கூட வியர்வையா????
நதி – மலைக்குத் தப்பி கடலுக்கு இரையானது!!!!
காதல் – உள்ளத்தை அள்ளித் தா என்றேன், அவள்,
உன்னிடம் உள்ளதை அள்ளித் தா என்றாள்!!!!
இணைந்தால் பந்தல், பிரிந்தால் கந்தல்……
அவள் ஜோடி சேர்ந்தாள், எனக்கு தாடி சேர்ந்தது!!!

காதல் கடிதம் – அன்பே, என் இதயத்தை கடனாக இதோ அனுப்பி
உள்ளேன். வட்டியாக ஒரு முத்தத்தை அனுப்பு …..
அன்பே, என் இதயத்தை விற்று நீ சுவாசிப்பதற்காக தென்றலை
வாங்கினேன், ஆனால் நீ என் காதலை விற்று ஒரு கணவனை
வாங்கிக் கொண்டாயே???
காதல் திருமணம் – வந்தது ஒருபந்தம், பிரிந்தது பல சொந்தம் !!!
ஏமாற்றுபவன் தூண்டில் போட, ஏமாந்து சிக்கியது ஒரு மீன்!!!
தாவணி – பருவ வயலுக்கு பாவை போட்டாள் வேலி !!!
பருவம் வந்தது, உருவம் தந்தது !!!
தாடி – அவளை நினைத்து கண்ணீரில் முளைத்த செடி…….
முத்தம் – காதல் சாம்ராஜ்யத்தின் “ராஜ முத்திரை” !!!
புன்னகை – நண்பா அவள் சிரிக்கிறாள்,
தாடி வளர்க்கப் போவது நீயா, நானா ???
பெண் – இளமையில் இனிப்பு, முதுமையில் கசப்பு…….
ஜன்னல் – முன்பெல்லாம் வீட்டில், இப்போது ஜாக்கெட்டில்!!!
மஞ்சள் – பாவைக்கு அழகு, பத்திரிக்கைக்கு ஆபாசம்!!!
நகம் – பெண்களின் வெட்கத்திற்கு மருந்து !!!
வீடு – வயது வந்த பெண்களுக்கு சிறைச்சாலை……..

tags — வார்த்தை, பழசு, அர்த்தம், புதுசு
***