கற்பு பற்றி வள்ளுவர், வால்மீகி , கம்பர், ஷேக்ஸ்பியர், மநு! (Post No.10,664)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,664

Date uploaded in London – –    16 FEBRUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சிறைகாக்குங் காப்புஎவன் செய்யும் மகளிர்

நிறைகாக்குங் காப்பே தலை – குறள் 57

பெண்களை பலவகையான காவலுக்கு இடையே சிறைவைப்பது என்ன பயனைத் தரும்?  தம் 

கற்பு நெறியால் தம்மைத் தாமே காத்துக் கொள்ளும் காப்புதான் சிறப்புடைய காவல் ஆகும் .

பெண்களை என்ன காவலில் வைத்த்தாலும் பலன் தராது. அவர்களுடைய கற்புதான் அவர்களைக் காக்கும். இந்தக் கருத்து வால்மீகி ராமாயணம், உலகின் முதல் சட்ட நூலான மனு ஸ்ம்ருதி, ஷேக்ஸ்பியரின் நாடகம் , கம்பராமாயணம் ஆகியவற்றிலும் வருகிறது. ஆயினும் வால்மீகியும் மனுவும் இதை அப்படியே சொல்லியிருக்கிறார்கள்.

வால்மீகி சொல்கிறார் ,

न गृहाणि न वस्त्राणि न प्राकारास्तिरस्क्रियाः |

नेदृशा राजसत्कारा वृत्तमावरणं स्त्रियः ||

ந க்ருஹானி ந வஸ்த்ரானி ந ப்ரகார ஸ்திரஸ்க்ரியாஹா

நேத்ருசா ராஜஸத்காரா வ்ருத்தமாவரணம் ஸ்திரியஹ

இதன் பொருள் :

வீடோ , அணியும் உடைகளோ,வீட்டைச் சுற்றி எழுப்பப்படும் காவல் மதில்களோ , கதவுகளோ அல்லது அரசர்கள் கொடுக்கும் விருதுகளோ ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பாக இராது .அவளுடைய ஒழுக்கமே (கற்பு) அவளைப் பாதுகாக்கும் கேடயம் ஆகும் — யுத்த காண்டம், அத்தியாயம் 114

Xxx

மானவ தர்ம சாஸ்திரத்தில் மநுவும் இதையே சொல்கிறார்,

பெண்களை ஆண்கள் , ஒரு வீட்டுக்குள் காவலில் வைப்பது அவர்களைக் காக்காது; பெண்மணிகள், தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வதே நல்ல பாதுகாப்பு ஆகும் – மநு ஸ்ம்ருதி 9-12

अरक्षिता गृहे रुद्धाः पुरुषैराप्तकारिभिः ।

आत्मानमात्मना यास्तु रक्षेयुस्ताः सुरक्षिताः ॥ ९.१२॥

அரக்ஷிதா க்ருஹே ருத்தாஹா புருஷைராப்தகாரிபிஹி

ஆத்மானமாத்மனா  யாஸ்து ஸுரக்ஷிதாஹா

“நம்பிக்கை மிக்க ஆண்களைக் காவல் காக்கவைத்தாலும்” அது அவர்களைக் காக்க முடியாது என்பதையும் மநு சேர்த்துச் சொல்லியுள்ளார். அவர்களிடம் மனக் கட்டுப்பாடு , கற்பு நெறி, இல்லாவிடில் இது சாத்தியமாகாது என்று உரைகாரர்களும் உறுதிப்படுத்துகின்றனர்.

XXXX

ஸம்ஸ்க்ருத , தமிழ் இலக்கியங்களில் கற்பு என்பதை ஒரு முக்கிய பண்பாகக் கருதி நிறைய பாடல்களை எழுதிச் சேர்த்துள்ளனர். அருந்ததி என்னும் கற்பரசியை சங்கத் தமிழ் நூல்களும் வேத இலக்கியங்களும் போற்றிப் பாடியுள்ளன . இப்படிப்பட்ட ஒரு பண் பையோ , மாதரசியையோ மேலை நாட்டு இலக்கியத்தில் காண்பது அரிதிலும் அரிது. ஆயினும் நாடக மன்னன் ஷேக்ஸ்பியர் தனது நாடகம் ஒன்றில் டயானா DIANA  என்னும் கத பாத்திரம் வாயிலாக சொல்லுவதைப் படியுங்கள்

டயானா

என்னுடைய மானம் ஒரு மோதிரம் ;

என் கற்புதான் எங்கள் வீட்டின் ஆபரணம்

அது என் முன்னோர்களிடமிருந்து வந்தது

……….

இழப்பதற்கு அரியது

All is well that ends well, Act 4, Scene 2

Xxx

கம்பனும் கற்பு பற்றி, சீதையின் கற்பு பற்றி , அது எப்படி அவளைக் காக்கும் என்பதை குறைந்தது இரண்டு இடங்களில் காட்டுகிறான் . சீதையை தூக்கிச் செல்லும் ராவணனை தடுக்க முயன்று வெட்டுப்பட்ட ஜடாயு என்னும் பறவை அரசன், அடடா இவள் ராவணனால் சிறை வைப்படப்போகிறாளே என்ன ஆகுமோ என்று புலம்புகிறான். பின்னர் தன்னைத் தானே தேற்றிக்கொண்டு கவலைப்பட ஒன்றுமில்லை; சீதையின் கற்பு அவளைக் காக்கும் என்று சொல்கிறான்

3560.  பரும் சிறை இன்னன பன்னி உன்னுவான்;

அருஞ்சிறை உற்றனளாம் ” எனா மனம்

பொரும் சிறை அற்றதேல் பூவை கற்பு எனும்

இரும் சிறை இறாது ‘என இடரும் நீங்கினான்.

ஆரண்ய காண்டம் சடாயு உயிர்நீத்த படலம்

பூவை – நாகண வாய்ப்பறவை போல மொழியுடைய சீதை 

Xxx

சுந்தர காண்டத்தில் மற்றோர்  காட்சி ,

ராவணனின் அரண்மனை படுக்கை அறை , அந்தப் புரம் எல்லாவற்றிலும் சீதையைத் தேடும் அனுமன், அசோகவனத்தில் ஒரு மரத்தின் அடியில், அரக்கிகளின் காவலுக்கு  இடையில் சீதையைக் கண்டவுடன் வியக்கிறான் : அற்புதம், அற்புதம் ! இவள் இங்கே மானபங்கம் ஆகாமல் இருந்ததற்கு ஜனகன் செய்த பூர்வ ஜென்ம புண்ணியம் காரணமா?அல்லது தர்மம் இவளை இதுவரை காத்து உதவியதா? அல்லது சீதையின் உயரிய கற்பு நெறிதான் அவளைக் காத்து நிற்கிறதா?  ஒப்பற்ற காட்சி;  எது காரணம் என்பதை என்னைப் போன்றவர் உரைக்கவும் இயலுமோ என்று கம்பன் பாடி முடிக்கிறான்.

5143. 

தருமமே காத்ததோ ? சனகன் நல் வினைக்

கருமமே காத்ததோ? கற்பின் காவலோ ?

அருமையோ !அருமையே ! யார் இது ஆற்றுவார் ?

ஒருமையே, எம்மனோர்க்கு, உரைக்கற்பாலதோ ?

-சுந்தர காண்டம் , காட்சிப் படலம்

Xxxx

ஆக கற்பு நெறியின் சிறப்பை வால்மீகி முதல் கம்பன் வரை கண்டோம். நாலடியார், பழமொழி ஐம்பெரும் காப்பியங்களிலும் நிறைய குறிப்புகள் உள .

–சுபம் —-

tags-  கற்பு , வள்ளுவர், வால்மீகி , கம்பர், ஷேக்ஸ்பியர், மநு, 

திருவான்மியூர் ஆலயம் அறிவோம் (Post No.10,366)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 10,366

Date uploaded in London – –   22 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 21-11-2021 அன்று ஒளிபரப்பான உரை!

திருவான்மியூர்

நீதி நின்னை அல்லால் நெறி யாதும் நினைந்து அறியேன்

ஓதீ நால்மறைகள் மறையோன் தலை ஒன்றினையும்

சேதீ சேதம் இல்லாத திருவான்மியூர் உறையும்

ஆதீ உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே!

திருஞானசம்பந்தர் திருவடி போற்றி!

ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

    ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது  சென்னை நகரின் தென் பகுதியில் அமைந்துள்ளதும் ஆதி கவியான வால்மீகி பெரும் தவத்தை இயற்றிய தலமுமான திருவான்மியூர் திருத்தலம் ஆகும். இங்கு தான மருந்தீஸ்வரர் சிவாலயம் அமைந்துள்ளது.

இங்கு ஸ்வயம்பு லிங்கமாக அமைந்துள்ள இறைவனின் திருநாமம் : ஸ்ரீ மருந்தீஸ்வரர் அல்லது பால்வண்ண நாதர்

அம்மன் : திரிபுரசுந்தரி, சொக்க நாயகி

ஸ்தல வ்ருக்ஷம் : வன்னி மரம் 

தீர்த்தம் : சிவபிரானின் சடையிலிருந்த கங்கையிலிருந்து சிந்திய ஐந்து துளிகள் இங்கு ஐந்து தீர்த்தங்களாக உருவெடுத்துள்ளன. ஆலயத்தின் கிழக்குக் கோபுரத்திற்கு அருகே சித்திரை குளம் என்ற இந்திரனுக்கு நற்கதி அளித்த புனலையும் காணலாம்.

இத்தலத்தைப் பற்றிய புராண வரலாறு பிரசித்தி பெற்ற ஒன்று. ஒரு சமயம் காமதேனு வசிஷ்ட மஹரிஷியிடம் சற்று அவமரியாதையாக நடந்து கொண்டது. அதனால் கோபம் கொண்ட வசிஷ்டர், “நீ பூலோகத்தில் பசுவாகப் பிறப்பாயாக” என்று சாபமிட்டார்.தன் தவறை உணர்ந்து வருந்திய காமதேனு சாப விமோசனம் அருளுமாறு வசிஷ்டரை வணங்கிக் கேட்க, அவர், “திருவான்மியூரில் எழுந்தருளியுள்ள மருந்தீஸ்வரரை வணங்கி அவருக்குத் தினமும் பால் அபிஷேகம் செய்து வா, உனக்கு சாப விமோசனம் ஏற்படும்” என்றார். அதன்படியே காமதேனுவும் தினமும் சிவலிங்கத்தின் மீது பாலாய்ப் பொழிந்து அபிஷேகம் செய்து வந்தது. சாப விமோசனமும் பெற்றது. பால் பொழிவினால் வெண்மையாக லிங்கம் காட்சி அளிக்க அவர் பால்வண்ன நாதர் என்ற பெயரைப் பெற்றார். மூலவர் சுமார் ஒன்றரை அடி உயரத்துடன் சற்றே சாய்ந்த தோற்றத்துடன் காட்சி அளிக்கிறார். வேட்டையாட வந்த சதயூ மன்னனிடமிருந்து தப்பிச் சென்ற காமதேனுவின் குளம்புகள் ஈசனின் மீது பட்டது. அந்த வடுவை இன்றும் ஈசனிடம் காணலாம்.

இத்தலம் பற்றிய இன்னொரு புராண வரலாறும் உண்டு.

கயிலை மலையில் சிவ பார்வதி திருமணம் நடக்கும் போது அனைவரும் அங்கு கூடவே வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்தது. உடனே அதை சமன் செய்ய தென்புலம் செல்லுமாறு ஈசன் அகத்தியரிடம் கூறவே அகத்தியரும் தென் புலம் வந்தார். அவருக்குத் தனது கல்யாண கோலத்தை இங்கு வன்னி மரத்தடியில் ஈசன் காட்சி அளித்தார். அத்துடன் அகஸ்திய மஹரிஷிக்கு இறைவன்  உலகில் உள்ள அனைத்து வகையான நோய்களைப் பற்றியும் அதைத் தீர்ப்பதற்கான மூலிகைகள் மற்றும் மருந்துகள் பற்றியும் கூறி அருள் பாலித்தார். ஆகவே தான் இங்குள்ள இறைவன் மருந்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

ஆதி காவியமான ராமாயணத்தை இயற்றிய வால்மீகி மஹரிஷி நாரதரிடம் முக்திப் பேறுக்கான வழி கேட்க அவர் இங்கு வந்து அவரைத் தவம் புரியச் சொன்னார். அவருக்கும் வன்னி மரத்தடியில் ஈசன் தரிசனம் தந்து அருள் பாலித்தார். இன்னொரு தகவலின் படி மார்க்கண்டேய மஹரிஷி வால்மீகி முனிவரை எங்கு அவர் இறைவனின் அசரீரியைக் கேட்கிறாரோ அங்கு அவருக்கு முக்தி கிடைக்கும் என்று சொல்ல வால்மீகி மஹரிஷி இங்கு வரும் போது அவருக்கு “நான் இங்கு உள்ளேன்” என்ற அசரீரி கேட்கவே இங்கேயே அவர் தவம் புரிந்து முக்தி அடைந்தார். அவரது பெயரால் இந்த இடம் திரு வால்மீகிநகர் என்று ஆனது. காலப்போக்கில் மருவி திருவான்மியூர் ஆயிற்று.

ஒரு முறை சூரிய பகவானுக்குப் பல அசுரர்கள் தொல்லை தரவே அவரால் தனது பணியைச் சரிவரச் செய்ய முடியவில்லை. ஆகவே அவரே நேராக இங்கு வந்து ஈஸ்வரனைத் துதிக்க அவரது தொல்லை ஒரு முடிவுக்கு வந்தது. அவர் மாலை நேரத்தில் தொழுவதற்கு வசதியாகவே இங்குள்ள லிங்கம் மேற்குப் பார்த்து இருப்பதாக ஐதீகம்.

சுமார் ஒரு ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது இந்த பிரம்மாண்டமான கோவில். ஆலயத்தின் கிழக்கில் ஏழு நிலை இராஜகோபுரமும் அதையடுத்து 5 நிலை கோபுரமும் மேற்கில் 5 நிலை கோபுரமும் உள்ள இந்தத் திருக்கோவிலில் பக்தர்கள் நெடுஞ்சாலையைப் பார்த்து அமைந்துள்ள மேற்கு வாயில் வழியே உள்ளே செல்கின்றனர். கிழக்கு கோபுரத்தின் வழியாக உள்ளே சென்றவுடன் வலது புறத்தில் பிரசித்தி பெற்ற 36 தூண்கள் கொண்டுள்ள தியாகராஜ மண்டபம் உள்ளது. இங்கு தியாகராஜர் பத்ர பீடத்தில் அமர்ந்து தரிசனம் தருகிறார். கிழக்கு வெளிப் பிரகாரத்தில் வலது புறம் திரிபுரசுந்தரி தனி சந்நிதியில் தெற்கு நோக்கி நான்கு கரங்களுடன் காட்சி தந்து அருள் பாலிக்கிறார். அவரது இரு கரங்கள் அங்குச பாசங்களை ஏந்தியுள்ளன. மற்ற இரு கரங்கள் அபய முத்திரைகளைப் பெற்றுள்ளன. கிழக்கு வெளி பிரகாரத்தில் விநாயகர், சுப்ரமண்யர் சந்நிதிகள் உள்ளன.நாயன்மார்கள்,தொகையடியார்கள் நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார் உள்ளிட்ட பலரையும் இங்கு தரிசித்து வணங்கலாம்.

இத்தலத்தில் திருஞானசம்பந்தர் இரு பதிகங்களையும் அப்பர் பிரான் ஒரு பதிகத்தையும் பாடி அருளியுள்ளனர். அருணகிரிநாதர் ஒரு திருப்புகழ் பாடலைப் பாடியுள்ளார். திருவான்மியூர் தல புராணம் இத்தலம் பற்றிய ஏராளமான திவ்ய வரலாறுகளை எடுத்துரைக்கிறது.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் மருந்தீஸ்வரரும் திரிபுரசுந்தரியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.              

திருநாவுக்கரசரின் அருள் வாக்கு இது:                                                                                                                      ஆதியும் அரனாய் அயன் மாலுமாய்ப்

பாதி பெண் உரு ஆய பரமன் என்று

ஓதி உள் குழைந்து ஏத்த வல்லார் அவர்

வாதை தீர்த்திடும் வான்மியூர் ஈசனே!

நன்றி, வணக்கம்!                                  

***

tags- மருந்தீஸ்வரர், திருவான்மியூர், வால்மீகி

கம்பன் கவி இன்பத்தில் வம்பு-3 (Post No.4299)

Written by S.NAGARAJAN

 

 

Date:14 October 2017

 

Time uploaded in London- 5–31 am

 

 

Post No. 4299

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

வர்ஜிலையும், ஹோமரையும், மில்டனையும் வம்பிக்கிழுக்க வேண்டாமே! – 3

.நாகராஜன்

 

6

அரவிந்த இலக்கியம் பெரிய கடலைப் போன்றது. அதில் நீந்திக் கரையேற முடியுமா? முடியாது.

அரவிந்தர் (1872-1950) கிங்ஸ் காலேஜ், கேம்பிரிட்ஜில் படித்தவர்.1893இல் இந்தியாவிற்குத் திரும்பியவுடன் அவர் பரோடா காலேஜில் ஆங்கில, பிரெஞ்சு இலக்கியத்தைக் கற்பித்தார்.

வால்மீகி, ஹோமர், மில்டன் பற்றி அவர் ஏராளமான அருமையான கருத்துக்களைச் சொல்லி இருக்கிறார். அவற்றில் ஓரிரண்டு கருத்துகளை மட்டுமே இங்கு பார்க்க முடியும் – இடம் கருதி!

அரவிந்தர் நூல்கள் அனைத்தையும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அன்பர்கள் சிறிது நேரம் ஒதுக்கி அவர் இந்திய பண்பாட்டைப் பற்றி என்ன சொல்கிறார் என்று படித்து மகிழலாம்.

இந்தியக் கலை, இந்திய இலக்கியம் பற்றிய அவரது அருமையான கருத்துக்களை The Renaissance in India and other Essay on Indian Culture என்ற நூலில் காணலாம்.

விண்ணை அளக்கும் கம்பீரமான வார்த்தைகளால் அவரது புகழாரத்தைப் படிக்கும் போது உள்ளம் குளிர்கிறது.

அதில் இலக்கியம் பற்றிய மூன்றாவது கட்டுரையில் ஆரம்பத்திலேயே திருவள்ளுவர், கம்பன் உள்ளிட்ட கவிஞர்களைப் பெருங்கவிஞர்கள் வரிசையில் சேர்க்கிறார்.

பின்னர் அவர் கூறுவது:

The pure literature of the period is represented by the two great epics, the Mahabharata, which gathered into its vast structure the greater part of the poetic activity of the Indian mind during several centuries, and the Ramayana.

 

 

These two poems are epical in their motive and spirit, but they are not like any other two epics in the world, but are entirely of their own kind and subtly different from others in their principle.

 

It is not only that although they contain an early heroic story and a transmutation of many primitive elements, their form belongs to a period of highly developed intellectual, ethical and social culture, is enriched with a body of mature thought and uplifted by a ripe nobility and refined gravity of ethical tone and therefore these poems are quite different from primitive edda and saga and greater in breadth of view and substance and height of motive — I do not speak now of aesthetic quality and poetic perfection — than the Homeric poems, while at the same time there is still an early breath, a direct and straightforward vigour, a freshness and greatness and pulse of life, a simplicity of strength and beauty that makes of them quite another kind than the elaborately constructed literary epics of Virgil or Milton, Firdausi or Kalidasa.

 

 

This peculiar blending of the natural breath of an early, heroic, swift and vigorous force of life with a strong development and activity of the ethical, the intellectual, even the philosophic mind is indeed a remarkable feature; these poems are the voice of the youth of a people, but a youth not only fresh and fine and buoyant, but also great and accomplished, wise and noble.

This however is only a temperamental distinction: there is another that is more far-reaching, a difference in the whole conception, function and structure.

 

அடுத்து உலக கவிஞர்களை நுணுகி ஆராய்ந்த அவர் வால்மீகி, வியாஸர், ஹோமர், ஷேக்ஸ்பியர் ஆகிய நால்வரை முதல் வரிசையில் வைத்தார்.

அடுத்து இரண்டாவது வரிசையில் தாந்தே, காளிதாஸர், Aeschoylus, Sophocles, வர்ஜில், மில்டன் ஆகியோரை வைத்தார். கதே மட்டும் மூன்றாம் வரிசை இடத்தைப் பெற்றார்.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

Vyasa and Valmiki, Foundations of Indian Culture, Talks with Nrod Baran உள்ளிட்ட பல நூல்களை அன்பர்கள் படித்தால் இலக்கிய சிகரத்தில் ஏறலாம்; கம்பன், வால்மீகி, வர்ஜில், ஹோமர், மில்டன் ஆகியோர் பற்றிய அவர் கருத்துக்களை அறியலாம். இது ஒரு தனி நூலுக்குரிய ஆய்வாக அமைகிறது என்பதால் இந்த அளவில் இதை முடித்துக் கொள்வோம்.

7

மில்டனின் கவிதைத் திறத்தை மெச்சுவோர் இருளைப் பற்றி வர்ணிக்கும் அவனது அருமையான சொற்றொடரான, ‘Palpable darkness’ – தொட்டு உணரலாகும் இருட்டு என்பதை மேற்கோளாகக் காட்டுவர்.

கம்பனது காவியத்திற்கு வருவோம்.

ஆரணிய காண்டத்தில் மாரீசன் வதைப் படலத்தில் (வை.மு. கோபாலகிருஷ்ணமாசாரியர் பதிப்பு) வரும் செய்யுள்களைப் பார்ப்போம். (138 முதல் 142 முடிய உள்ள பாடல்கள்)

சீதை மேல் மையல் கொண்ட ராவணன் ‘கன்னக் கனிய இருள் தன்னை பார்ப்போம். சூரியனை விட சந்திரன் சுடுகிறான்’ என்று கூறி சந்திரனை வரவழைக்கிறான். “நீ நீங்கு” என்றவுடன் இருள் வருகிறது.

அது எப்படி இருந்தது?

“ஆண்டப் பிறை நீங்கலும் எய்தியது அந்தகாரம்           தீண்டற்கு எளிதாய்ப் பல தேய்ப்பன தேய்க்கலாகி           வேண்டில் கரபத்திரத்து ஈர்த்து விழுத்தல் ஆகிக்        காண்டற்கு இனிதாய்ப் பல கந்து திரட்டல் ஆகி”

என்று ஆரம்பித்து இன்னும் மூன்று பாடல்களில் இருளை வர்ணிக்கிறான்.

அடுத்த பாடலில் ‘அம்பும் அனலும் நுழையா கன அந்தகாரத்து’ என்று வர்ணிக்கிறான்.

அதாவது பாணமும் அக்கினியும் உள்ளே சென்று பிளக்க முடியாத அடர்ந்த இருள் என்று வர்ணிக்கிறான்.

தீண்டற்கு எளிதாக – தொட்டு உணருவதற்கு எளிதாக இருந்த இருள், அம்பும் அனலும் நுழையா கடும் அடர் இருளாக மாறியது.

மில்டனை விட ஒரு படி மேல் சென்று எப்படி தண்ணீர் அடர்த்தியான ஐஸ்கட்டி போல ஆகிறதோ அது போல இருள் கெட்டியான கட்டி ஆகி விட்டதாகக் கூறுகிறான்.

எப்படிப்பட்ட வர்ணனை?

புராணம் கூறும் கிருஷ்ண சரித்திரத்திற்கு வருவோம்.

தனது குருவின் இறந்த புதல்வனை மீட்க கிருஷ்ணனது சஹஸ்ர கோடி சூர்யனுக்குச் சமமான சுதர்ஸன சக்கரம் அடரத்த இருளே குகை போல (கெட்டியாக, அடர்த்தியாக) இருந்ததை ஊடுருவிச் சென்றது என்பதைப் படிக்கிறோம்.

(இந்த உவமையைப் பல காலும் படித்து மகிழ்ந்து பிரமித்திருக்கிறேன்.)

ஆக காவியம் இயற்றிய் இரு பெரும் கவிஞர்களின் ம்னோ சஞ்சாரம் பற்றி அறிய இருள் பற்றிய இந்த உவமை வெளிச்சம் தருகிறது இல்லையா?

இப்படி நுணுகிப் படித்து மகிழ்ந்தால் பல முத்துக்களைப் பெறலாம்.

8

திரு ஆர்.நஞ்சப்பா அவர்களும் திரு டிஎஸ்கே ரகு அவர்களும் பதிவு செய்த கருத்துக்களினால் டாக்டர் எஸ்.ராமகிருஷ்ணன், வ.வே.சு.ஐயர், மஹ்ரிஷி அரவிந்தர் உள்ளிட்டோரின் நூல்களை மீண்டும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மகிழ்ச்சி.

அன்பர்களுக்கு எனது நன்றி.

****

இது வம்புத் தொடர் அல்ல; கரும்புத் தொடர் என்று ஆகி விட்டது. இத்துடன் தொடர் நிறைவுறுகிறது.

 

 

 

பெண்கள் குரங்குகள்! மஹாபாரதம் விசித்திர தகவல்! (Post No.3647)

Written by London swaminathan

 

Date: 18 FEBRUARY 2017

 

Time uploaded in London:- 5-38 am

 

Post No. 3647

 

 

Pictures are taken from various sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

பெண்களே அவசரப்பட்டு, கோபப்படாதீர்கள்!

திரவுபதியின் அழகை ஒப்பிடும்போது, நீங்கள் எல்லோரும் ……………….

 

திரவுபதியின் அழகை வருணிக்க வந்த வியாசர் மற்ற எல்லாப் பெண்களையும் குரங்கு ஆக்கிவிட்டார்!

 

“அழகான திரவுபதியைப் பார்க்கும்போது மற்ற எல்லாப் பெண்களும், பெண் குரங்குகள் (மந்தி) போலத் தெரிகின்றனர்”-மஹாபாரதம் 3-251-3

 

ஏதாம் த்ருஷ்ட்வா ஸ்த்ரியோ மேந்யா யதா சாகாம்ருகஸ்த்ரியஹ

 

திரவுபதி எல்லோரையும் விடப் பேரழகி என்று சொல்லி நிறுத்தி இருக்கலாம். ஆனால் வியாசர் ஒருபடி மேலே சென்றுவிட்டார். ஒருவேளை இது அந்தக் கால தமாஷாக இருந்திருக்கலாம். ஏனெனில் கம்ப ராமாயணத்திலும் இப்படி கொஞ்சம் தமாஷ் வருகிறது.

 

சூர்ப்பநகை ராமனை மயக்கப் பார்க்கிறாள். ராக்ஷசியான சீதையை ஒதுக்கிவிட்டு என்னைத் திருமணம் செய்துகொள் என்கிறாள். இராமனுக்கு ஒரே சிரிப்பு! இது என்னடா? ஈயம் பித்தளையைப் பார்த்து இளித்த கதையாக இருக்கிறதே! என்று எண்ணி, அவர் என் தம்பியிடம் போய்க் கேள் என்று சூர்ப்பநகையை அனுப்பிவிடுகிறார். லெட்சுமணனோ கோபக்காரர். ஒரே வெட்டாக மூக்கை வெட்டி விடுகிறான். அப்பொழுதும் சூர்ப்பநகை விடுவதாக இல்லை. ஏ, ராம! உன் தம்பியிடம் எனக்காக கொஞ்சம் சிபாரிசு செய்யக்கூடாதா?

“எனக்கு மூக்கு இல்லையே என்று நீ நினைக்கலாம். அட இடையே இல்லாத பெண்ணுடன் நீ வசிக்கவில்லையா! அது போல உன் தம்பியும் மூக்கே இல்லாத பெண்ணுடன் வசித்தால் என்னவாம்!”

 

 

பெருங்குலா உறு நகர்க்கே பெயரும் நாள்

வேண்டும் உருப்பிடிப்பேன் அன்றேல்

அருங்கலாம் உற்று இருந்தான் என்னினும் ஆம்

இளையவந்தான் அரிந்த நாசி

ஒருங்கு இலா இவளோடும் உறைவெனோ

என்பானேல் இறைவ ஒன்றும்

மருங்கு இலாதவளோடும் அன்றோ நீ

நெடுங்காலம் வாழ்ந்தது என்பாய்

–ஆரண்ய காண்டம், சூர்ப்பநகைப் படலம்

 

பொருள்:

பெரிய கொண்டாட்டம் மிக்க அயோத்தி நகருக்கு நீங்கள் திரும்பிச் செல்லும்போது, நீ ங்கள் விரும்பும் உருவத்தை நான் எடுத்துக்கொள்வேன். இப்போது உன் தம்பி தணிக்க முடியாத கோபம் கொண்டவனாக இருந்தாலும், அறுக்கப்பட்ட மூக்கு உடைய இவளோடு நான் வாழ்வேனா என்று கூறலாம். அப்படிச் சொன்னால், தலைவனே (ராமா) நீ இடையே இல்லாத பெண்ணொடு  நீண்டகாலம் வாழ்ந்து வருகிறாய்; அதை அவனுக்கு எடுத்துச் சொல்லி அமைதி அடையச் செய்!”

 

மெல்லிடையாள் என்று பெண்களைப் புகழ்வதை இந்திய இலக்கியத்தில் மட்டுமே காணலாம். தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும்– இமயம் முதல் குமரி வரை, பெண்கள் வருணனை ஒரே மாதிரியாக இருக்கும் ஏனேனில் இது ஒரே பண்பாடு.

 

உன் மனைவிக்கு இடையே இல்லை என்பதை புகழ்ச்சியாகவே கொள்வர். எந்தப் பெண்ணையாவது பார்த்து நீ குண்டாக — பருமனாக — இருக்கிறாய் என்று சொன்னால் அவருக்குக் கோபம் வருவதோடு நம் மீது வெறுப்பும் வந்துவிடும். ஆனால் இங்கே இடையில்லாத சீதையுடன் மூக்கறுந்த சூர்ப்பநகை தன்னை ஒப்பிடுவது அந்தக் கால ஜோக் (தமாஷ்)

வால்மீகி நகைச்சுவை

கம்ப ராமாயணத்திலும் வால்மீகி ராமாயணத்திலும் சூர்ப்பநகை படலம் முழுதும் நகைச்சுவை அதிகம் இருக்கும். இதோ வால்மீகியிலிருந்து ஒரு பகுதி மட்டும்:-

 

ராமன் சூர்பநகையை நிராகரிக்கும்போது நான் ஏற்கனவே கல்யாணமானவன். உன்னையும் கட்டிக்கொண்டால் சக்களத்தி சண்டையை என்னால் தாங்க முடியாது! என் தம்பிதான், உனக்குச் சரியான ஆள். இன்னும் திருமண சுகம் அனுபவிக்காதவன்! என்று தமாஷ் செய்கிறான். லெட்சுமணன் சொல்லுகிறான்: நானோ என் அண்ணனைச் சார்ந்து வாழும் “அடிமை”. என்னிடத்தில் என்ன சுகம் காணப்போகிறாய். கொள்ளை அழகு பிடித்தவளே என் அண்ணன் இராமனிடமே செல் என்று தள்ளிவிடுகிறான்.

 

இவ்வாறு சூர்ப்பநகைப் படலத்தை கிண்டலும் கேலியும் நிறைந்ததாக, உலகின் இரு பெரும் புலவர்கள் வருணித்துள்ளனர். அந்தப் பகுதிகளை நகைச்சுவை உணர்வுடன் படிக்க வேண்டும்!

 

–சுபம்–

நிலமகள் ஏன் அழுதாள்? புறநானூற்றில் ஒரு புதிர்! (Post No.3617)

Written by London swaminathan

 

Date: 8 FEBRUARY 2017

 

Time uploaded in London:- 9-28 am

 

Post No. 3617

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

புறநானூற்றிலும் ஏனைய சங்க இலக்கிய நூல்களிலும் நிறைய புலவர்களுக்கு சம்ஸ்கிருதப் பெயர்கள்! அவர்களில் ஒருவர் பெயர் மார்க்கண்டேயனார். அவர் பாடிய பாடல் எண் 365. அவர் ஒரு விநோதச் செய்தியைச் சொல்கிறார். பூமா தேவி அழுதாளாம். ஏன் அழுதாள்? நான் ஒரு விலைமாது போல இருக்கிறேனே! எல்லா அரசர்களும் என்னிடம் வந்து போகின்றனரே! ஒருவரும் நிலைப்பதில்லையே!

 

 

பூமாதேவிக்கு மகளும் கிடையாது! இது ஏன்? இந்தப் புதிருக்கு வால்மீகி ராமாய ணத்தில் பதில் உள்ளது!

 

முதலில் புறநானூற்றுப் பாடலையும் அதன் பொருளையும் காண்போம்; பின்னர் வால்மீகியின் பதிலைக் காண்போம்; இந்தப் பாடல் ஆரிய-திராவிட வாதம் பேசும் புரட்டர்களுக்கும் பேதிலிகளுக்கும் செமை அடி கொடுக்கும் பாடல்!

மயங்கு இருங்கவிய விசும்பு முகன் ஆக,

இயங்கிய இருசுடர்க்கண் என, பெயரிய

வளி இடை வழங்கா வழக்கு அரு நீத்தம்,

வயிரக் குறட்டின் வயங்கு மணி ஆரத்துப்

பொன் அம் திகிரி முன் சமத்து உருட்டி

பொருநர்க் காணாச் செருமிகு முன்பின்

முன்னோர் செல்லவும், செல்லாது, இன்னும்

விலைநலப் பெண்டிரின் பலர் மீக்குற

உள்ளேன் வாழியர், யான்’ எனப் பல் மாண்

நிலமகள் அழுத காஞ்சியும்

உண்டு உரைப்பரால், உணர்ந்திசினோரே

—பாடல் 365, மார்க்கண்டேயனார்

 

பொருள்:-

“வான்முகத்திலே சூரியனும் சந்திரனும் இரண்டு கண்களாகக் கொண்டு, இடையே காற்று நிலவும் இந்த நிலமகளாகிய (பூமாதேவி) என்னை விட்டுவிட்டு, மணி ஆரம் பொருந்திய, வெற்றியில் சிறந்த பல அரசர்களும் போய்விட்டார்கள். நானோ அவர்களுடன் போகாது, மற்றவர்கள் எல்லோரும் என்னை இகழ்ந்து பேசுமாறு விலைமாதர் போல வாழ்கின்றேனே என்று பூமாதேவியும் அழுகின்றாள். இது உலக வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்தோரின் கூற்று. ஆகையால் தலைவனே! புகழ்தரும் செயல்களைள மட்டும் செய்வாயாக!”

 

பாடலை எழுதியவர் பெயரும் சம்ஸ்கிருதம்; பாடலில் உள்ள சொற்கள் பலவும் சம்ஸ்கிருதம்; படலின் பொருளும் புராணக் கருத்துகள்!

 

சூரியனும் சந்திரனும் கண்கள் என்பதும், பூமியைத் தாய் என்று சொல்வதும், அரசர்கள்ப அவர்களுடைய கணவர்கள் என்பதும்  புராணத்தில் உள்ள கருத்துகள்.

 

அடுத்ததாக நிலமகள் ஏன் இப்படி அழுதாள் என்பதும் வால்மீகி ராமாயணத்தில் உள்ள விஷயமாகும்.

 

வால்மீகி ராமாயணத்தில், பால காண்டத்தில் 36-ஆவது அத்தியாயத்தில் கீழ்கண்ட கதை உள்ளது:-

விஸ்வாமித்திரர் சொல்கிறார்: உமாவும் மஹாதேவனும் திருமணம் ஆகி நீண்ட காலமாகியும் குழந்தை பிறக்கவில்லை. தேவர்கள், பிரம்மாவின் தலைமையில் சென்று, மஹாதேவனை (சிவன்) வேண்ட, அவருடைய விந்து பூமியில் விழுந்தது. பூமி தனியாக, அதைத் தாங்க மாட்டாமையால் அக்னி தேவனும் வாயு தேவனும் ‘சர’ என்ற வனத்தையும் ‘ஸ்வேதா’ என்ற மலையையும் உருவாக்கி அதில் விந்துவை விழச் செய்தனர். அதிலிருந்து ‘சர’ வணன் என்னும் கார்த்திகேயன் தோன்றினான்.

 

உமாவுக்குக் கோபம் வந்தது. என் மூலம் குழந்தை உருவாகாமல் ‘சர’  ‘வன’த்தில் தோன்றச் செய்ததால், தேவர்களே உங்களுக்குக் குழந்தைகளே பிறக்காது. பூமாதேவியே நீயும் உதவியதால் உனக்கு கணவர்களாக அரசர்கள் வந்து செல்வார்கள். ஆனால் உனக்கும் மகன் என்று எவனும் இருக்க மாட்டான்.”

 

இந்த வால்மீகி ராமயணக் கதையையே புறநானூற்றுப் புலவர் குறிப்பிடுகிறார்.

புறநானூற்றின் மிகப்பழைய பாடல் என்று கருதப்படும் இப்பாடலில் இவ்வளவு புராண விஷயங்களும் சம்ஸ்கிருதச் சொற்களும் இருக்குமானால் சங்க காலத்தில் மக்கள் எந்த அளவுக்கு இந்துமதத்தில் பற்றுக் கொண்டிருந்தனர் என்பது விளங்கும். அது மட்டுமல்ல உலகின் மிகப்பெரிய நாடாக விளங்கிய பாரதத்தின் 15 லட்சம் சதுர மைல் பரப்பில் இக்கருத்து நிலவியது என்றால் ஆரிய- திராவிடம் பேசுவோர் இந்திய விரோதிகள், இந்து மதத் துரோகிகள் என்பதில் இனியும் ஐயப்பாடு உளதோ?

 

-Subahm–

உலகின் அதிசய நூல் யோகவாசிஷ்டம் ! (Post No.2874)

yoga vasista

 

Article written by S.NAGARAJAN

 

Date: 7 June 2016

 

Post No. 2874

 

Time uploaded in London :–  5-19 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Contact swami_48@yahoo.com

 

 

உலகின் அதிசய நூல் யோகவாசிஷ்டம் !

 

ச.நாகராஜன்

 14_Yoga-Vasistha_1

உலகில் மிக அதிசயமான நூல் எது என்று யாரேனும் ஒருவர் கேட்டால் தயங்காமல் விடையைக் கூறி விடலாம் – அப்படிப்பட்ட மிக அதிசயமான நூல் யோகவாசிஷ்டம் என்று!

 

உலகில் மனித மனதில் சிக்கலான பல கேள்விகள் எழுந்து கொண்டே இருக்கின்றன. அறிஞர்களாலும் கூட சரியாகப் பதில் சொல்ல முடியாத கேள்விகள்!

 

 

தகுதியான மனிதன் என்று சொல்லக் கூடியவன் யார்?

 

மனித முயற்சியின் பலன் என்ன?

 

கடவுள் ஒருவரை சொர்க்கத்திற்கோ அல்லது நரகத்திற்கோ அனுப்பி விட முடியுமா?

 

விதி என்று ஒன்று உண்டா?

 

விதி என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன?

 

மனித வாழ்க்கையைக் கடக்க உள்ள வழிகள் எவை?

 

நல்லவர்களின் சகவாசம் நமக்கு எவற்றைத் தரும்?

 

காலம் என்பது என்ன?

 

கற்பனை என்பது என்ன?

 

உலகம் என்பது என்ன?

எண்ணம் என்ன செய்யும்?

மனிதனின் மரணம் எத்தனை வகைப்படும்?

முக்தி என்பது உண்டா? இருப்பின். அது எத்தனை வகைப்படும்?

இந்த உலகில் வாழ்ந்து கொண்டே முக்தி அடைய முடியுமா?

விழிப்புணர்வு, கனவு இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

விசார மார்க்கம் என்றால் என்ன?

அதனால் அடையும் பயன்கள் என்ன?

கேள்விகள் முடிவற்றவை.

பல அறிவாளிகளும் தங்கள் மனதிற்கேற்றபடி பதிலைத் தந்திருக்கின்றனர்.

ஒன்றை இன்னொன்று மறுக்கும்; ஏளனம் செய்யும்.

இவற்றில் எது உண்மை?

 

 

இப்படிப்பட்ட சிக்கலான கேள்விகளுக்கு அருமையாக பதிலைச் சொல்கிறது யோக வாசிஷ்டம்.

“அறியாமையைப் போக்க இதைப் போன்ற இன்னொரு சாஸ்திரம் இல்லை !” என்று இந்த சாஸ்திரத்தின் முதல் பகுதியிலேயே சொல்லப்படுகிறது.

அது உண்மை தான் என்பதை நூலைத் தொடர்ந்து படித்தால் அறியலாம்.

 

 

எளிமையான சம்ஸ்கிருத பதங்கள். அனைத்தும் அருமையானவை.

32000 ஸ்லோகங்கள்!

 

 

வாழ்நாளில் ஒரு முறையேனும் சில பகுதிகளேனும் படிக்க வேண்டிய நூல். ஒரே ஒரு ஸ்லோகத்தை ஊன்றிப் படித்தால் கூட படித்த அளவுக்கு அது அறியாமையைப் போக்கும்.

அரிய உதாரணங்கள். நல்ல  கதைகள். புத்திக்கு வேலை தரும் சுவையான சம்பவங்கள். சொற்கோவைகள்.

 

 

இப்படி இதன் புகழைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

எந்த நாட்டவருக்கும் பொதுவான நூல் இது.

வசிஷ்டர் ராமருக்குக் கூறும் அரிய உபதேசக் கோவை இது. இதை இயற்றியவர் வால்மீகி.

 

 

இதைப் படித்துப் பார்த்தால் படிப்பதற்கே ஒரு பாக்கியம் செய்திருக்க வேண்டும் என்பது புரியும்.

அதிர்ஷ்டசாலிகள் அழைக்கப்படுகிறார்கள் இதைப் படிக்க!

படிக்க ஆரம்பித்தால் படித்தவர்கள் மேலே கூறியவற்றை விட இன்னும் அதிகமாகப் புகழ்வார்கள்!

 

நூல் பற்றிய மேலும் சில விவரங்கள் அடுத்த கட்டுரையில்!

***********

  

வால்மீகி ராமாயணத்தில் 3462 உவமைகள்!

valmiki2

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1491; தேதி 16 டிசம்பர், 2014.

சம்ஸ்கிருதத்தில் உவமைகள் இல்லாத காவியங்கள் குறைவு. வால்மீகி ராமயணத்தில் 3462 உவமைகள் இருப்பதாக அந்த உவமைகளைத் தொகுத்தளித்த ஆராய்ச்சியாளர் எம்.எம்.பாடக் கூறுகிறார்.

அப்பய்ய தீக்ஷிதரின் உவமை பற்றிய ஸ்லோகத்தை பரிதிமாற்கலைஞர் என்ற பெயர்கொண்ட பேராசிரியர் வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி தமிழில் அழகாக மொழிபெயர்த்துள்ளார்:–

உவமை என்னும் வலருங் கூத்தி
பலவகைக் கோலம் பாங்குறப் புனைந்து
காப்பிய அரங்கிற் கவின்பெறத் தோன்றி
யாப்பு அறி புலவர் இதயம்
நீப்பு அறு மகிழ்ச்சி பூப்ப நடிக்குமே.

பொருள்:–உவமை என்பவள் ஒப்பற்ற நாட்டிய மங்கை. அவள் பலவேறு கோலங்களைக் கொண்டு காவியம் என்னும் மேடையிலே அழகுபொலியத் தோன்றி, பாட்டின் சுவையை அறியும் ரசிகர் மனத்தில் நீங்காத இன்பம் மலர நடிக்கிறாள்
(காளிதாசன் உவமைகள் —- என்னும் நா.வரதஜுலு நாயுடு எழுதிய புத்தகத்தில் இருந்து எடுத்தது)

கம்பன் அவனது ராமாயணத்தில்

எப் பெண்பாலும் கொண்டு உவமிப்போர் உவமிக்கும்
அப்பெண்தானே ஆயினபோது இங்கு அயல்வேறோர்
ஒப்பு எங்கே கொண்டு எவ்வகை நாடி உரை செய்வோம்

—என்பான். எல்லோரும் உவமைக்குப் பயன்படுத்துவது சீதை என்னும் பேரழகியை— குணத்தில் பெண்மைக்கெல்லாம் இலக்கணம் வகுத்தாளை – அப்படிப்பட்ட சீதையை நான் எதைக் கொண்டு உவமை சொல்ல முடியும் – என்று கம்பன் வியக்கிறான். சீதைக்கு உவமை சீதையே!
Valmiki's-Ramayana-

உலகின் மிகப் பழைய நூலான ரிக்வேதத்திலேயே ‘’உபமா’’ என்ற சொல் இருப்பதாக (5-34-9; 1-31-15) வேதத்தை ஆராய்ந்தோர் (ஆர்.எஸ்.டே) கூறுவர். கி.மு. 800-க்கு முன் வாழ்ந்த யாஸ்கர் என்பவர் கார்க்யர் எழுதிய இலக்கணப் புத்தகத்தில் ‘’உபமா’’ என்பதன் இலக்கணம் வரையறுக்கப்பட்டதை மேற்கோள் காட்டுவார்.

மஹாபாரதத்தில் 232 பொருட்கள் அல்லது உபமானங்கள் மீண்டும் மீண்டும் ஒப்பிடப்படுவதால் 2299 ஸ்லோகங்களில் அவை திரும்பத் திரும்ப வருகின்றன என்று மஹாபாரத உவமைகள் பற்றிய ஆய்வுகள் (ராம் கரன் சர்மாவின் நூல்) காட்டுகின்றன. உவமைகளின் எண்ணிக்கையில் முதலிடம் வகிப்பவர் இந்திரன். 247 முறை ஒப்பிடப்படுகிறார். பிரம்மா, விஷ்ணு, சிவன் போன்ற தெய்வங்கள் வேத கால தெய்வங்களான இந்திரன், சூரியன், அக்னி, யமன் ஆகியோருக்கும் பின்னரே வருவதால் (எண்ணிக்கையின் படி), மஹாபாரதம் மிகவும் பழைய நூல் என்பது தெளிவாகும்.

புராணங்களில் சிவனையும், விஷ்ணுவையும் பெரிய தெய்வங்கள் எனக் கொண்டாடுவர். அதற்கும் முந்தியவை ராமாயண மஹாபாரதம் என்பது உவமை ஆராய்ச்சியில் தெளிவாகிறது.

உலகத்திலேயே காளிதாசன் போல உவமைகளைத் திறம்படப் பயன்படுத்திய கவிஞன் எவனும் இலன். இதனால் ‘’உபமா காளிதாசஸ்ய’’ — என்ற சொற்றொடர் வழங்குகிறது. உவமைக்கு காளிதாசன் என்பது இதன் பொருள். அவனுடைய ஏழு படைப்புகளில் ஆயிரத்துக்கும் மேலான உவமைகளைப் படுத்தியதால் இந்தப் பெயர் என்பதல்ல. தகுந்த இடத்தில் தகுந்த உவமைகளைக் கையாண்டதே அவன் சிறப்பு.

abhijnanasakuntalam

காளிதாசன் புள்ளிவிவரம்

உலகப் பெரும் கவிஞர்களின் பட்டியலில் இடம்பெறும் கவிஞர்களில் காளிதாசனும் ஒருவன். அவனுடைய உவமைகளை ஆராய்ந்தோர் தரும் பட்டியல் இதோ:
காளிதாசர் பயன்படுத்திய உவமைகள் –1250
ஏழு நூல்களில் பயன்படுத்திய சொற்கள் – 40,000 -க்கு மேல்!
அவருடைய ஏழு படைப்புகளில் மூன்றுக்கு மட்டும்
எழுதப்பட்ட உரைகள் – 93
ரகு வம்சத்தில் இவன் வரலாறு
சொல்லும் அரசர்களின் எண்ணிக்கை – 29

நாடகம், கவிதை, காவியம், சிறு நூல்கள் எனப் பல எழுதி ஷேக்ஸ்பியருக்கும் மேலான இடம் பிடித்த இந்தியன். ஈரான் முதல் இந்தோநேசியா வரை வருணித்தவன் காளிதாசன். அது மட்டுமல்ல மேக தூதம் என்னும் பயண நூல் மூலம் உலகின் முதல் ‘’டூரிஸ்ட் கைடு’’ என்னும் பெயரையும் பெற்றான். இவனுக்கு இணையான கவிஞன் இதுவரை இந்தியாவில் தோன்றியது. இனி தோன்றப் போவதும் இல்லை! இல்லை. பாரதியால் புகழப்பட்ட கவிஞன்!

வடமொழி அறிஞர்களும், நாணயங்கள் சிலைகளை ஆராய்ந்த டாக்டர் சிவராமமூர்த்தி போன்றோரும் இவன் கி. மு. முதல் நூற்றாண்டிலோ அதற்கு முன்னரோ வழ்ந்ததை உறுதிபடக் கூறுவர். காலத்தாலும் முந்திய கவிஞன்!

காளிதாசனின் ரகுவம்சத்தைப் பின்பற்றி இலங்கை வரலாற்று நூலுக்கு மஹாவம்சம் என்று பெயரிட்டனர். காளிதாசனின் உவமைகளை காதா சப்த சதி என்னும் பிராக்ருத நூலில் ஊர் பேர் தெரியாத கவிஞர்கள் அப்படியே கையாண்டனர் (களவாடினர்!)

சங்க இலக்கியத்தில் காளிதாசனின் 200-க்கும் மேலான உவமைகள் இருப்பதை நான் எனது ஆராய்ச்சிக் கட்டுரைகளில் எழுதி வருகிறேன். காளிதாசன், விக்ரமாதித்தன் என்ற புகழ் பெற்ற மன்னன் காலத்தில் வாழ்ந்த மாபெரும் கவிஞன். கி.மு. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த விக்ரமாதித்தன் கி.மு 56-ல் அவன் பெயரில் ஒரு சஹாப்தத்தையே துவங்கிய பெருமை உடையவன். சகரர், யவனர், ஹூணர்களை ஓட ஓட விரட்டியவன்.

மேற்கூறிய தகல்களை உவமைகள் பற்றிய மூன்று ஆங்கில ஆராய்ச்சி நூல்களில் இருந்து திரட்டினேன்.
dr nagaswami

தொல்காப்பியத்தில் உவம இயல்

உவமை என்பது சம்ஸ்கிருதத்தில் ‘’உபமா’’ எனப்படும். தொல்காப்பியரும் கூட இதைத் தமிழ்ப் படுத்தி உவமம் என்கிறார். உவம இயல் என்றே தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் ஒரு பிரிவு இருக்கிறது. அதில் அவர் 38 உவம உருபுகளைப் பட்டியல் இட்டுள்ளார். அதில் நிறைய உருபுகளை சங்க இலக்கியத்தில் கூடக் காண முடியவில்லை. நமக்கு எல்லோருக்கும் தெரிந்த உவம உருபு ‘’போல’’ என்பதாகும். ரோஜா மலர் போல இதழ், ஆப்பிள் பழம் போலக் கன்னம் என்றெல்லாம் சினிமா வசனங்களில் கேட்கிறோம். ஆனால் தொல்காப்பியர் தரும் பட்டியலைப் பாருங்கள்:–

அன்ன, அங்க, இறப்ப, உறழ, என்ன, எள்ள ஏய்ப்ப, ஒன்ற, ஒடுங்க, ஒப்ப, ஒட்ட,ஓட, கடுப்ப, கள்ள, காய்ப்ப, தகைய, நடுங்க, நந்த, நளிய, நாட, நிகர்ப்ப, நேர, நோக்க, புல்ல, புரைய, பொருவ, பொற்ப, போல, மதிப்ப, மருள, மறுப்ப, மான, மாற்ற, வியப்ப, விளைய, வீழ, வென்ற, வெல்ல. இதில் 14 உருபுகள் சங்க இலக்கியத்தில் காணப்படவில்லை. என்றும் சங்க இலக்கியத்தில் 28 கூடுதல் உவம உருபுகள் பயன்படுத்தப்பட்டன என்றும் டாக்டர் ரா.சீனிவாசன் சங்க இலக்கியத்தில் உவமைகள் என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.

15FR-_TOLKAPPIYAM__1120361e

–சுபம்–

ஆன்ம ஞானம் பெற அதிசுலபமான அதிசய வழி!

yv1
Post No. 1035; Dated 11th May 2014.

By ச.நாகராஜன்

விளங்காத மர்மம் விளக்கும் அரிய நூல்!

ஆன்மீக நாட்டம் உடைய ஒவ்வொரு மனிதனின் மனத்திலும் தோன்றும் விடை காண முடியாத கேள்விகள் ஏராளம். இந்தப் பிறவியின் மகத்துவம் என்ன, ஏன் இப்படி ஒரு வாழ்க்கை தனக்கு அமைந்தது, விதியா,முயற்சியா எது மேலோங்கும், இறப்புக்குப் பின்னர் எங்கே போகப் போகிறோம், மறு ஜென்மம் உண்டா, புண்யம் எது,பாவம் எது, எப்படி வாழ்ந்தால் ஆன்ம ஞானம் கிடைக்கும் இத்யாதி கேள்விகள் ஏராளம். விடை தான் தெரியவில்லை. இந்தக் குறையை நீக்க வல்ல ஒரு அற்புதமான நூல் ‘’யோக வாசிஷ்டம்’’. ஒவ்வொரு மர்மமான கேள்விக்கும் ஆணித்தரமாக நேரடியாக பதிலைத் தருவதில் இதற்கு நிகரான இன்னொரு நூல் இல்லை என்றே சொல்லலாம்.

அதனால் தானோ என்னவோ உயரிய ஞானம் உடைய அறிஞர்கள் பலரும் இதில் உள்ள கருத்துக்களைப் பிரதிபலித்துத் தங்கள் நூல்களில் கருத்துக்களை எழுதியுள்ளனர்.ஜேம்ஸ் ஆலன், அன்னி பெஸன்ட், பெர்க்ஸன், பால் ப்ரண்டன், அலெக்ஸாண்டர் கானான்,சர் ஜேம்ஸ் ஜீன்ஸ்,வில்லியம் ஜேம்ஸ், சி.இ.எம்.ஜோட், ஆலிவர் லாட்ஜ், ஷோப்பன்ஹோவர், டபிள்யூ.ஆர்.இஞ்ஜே உள்ளிட்ட நூற்றுக்கணக்கான அறிஞர்கள் யோக வாசிஷ்ட கருத்துக்களை வார்த்தைக்கு வார்த்தை நேரடியாக அப்படியே தெரிவித்துள்ளனர்.

விதி என்பது இல்லவே இல்லை!

தைவம் நாம ந கிஞ்சன் (விதி என்று ஒன்றும் இல்லை- 2-5-18)
தைவம் ந வித்யதே (விதி என்பது இல்லவே இல்லை- 2-8-13)
மூடை: ப்ரகல்பிதம் தைவம் (மூடர்களால் உருவாக்கப்பட்ட தே விதி – 2-8-16) என்று இப்படி அடித்துச் சொல்லும் யோக வாசிஷ்டம் மனிதனின் செயல்களே அவனுக்குப் பின் விளைவுகளை ஏற்படுத்துகிறது. அதுவே விதி என்று சொல்லப்படுகிறது என்று விளக்குகிறது.

yv2

நீடித்திருக்கும் வியாதிக்கு இப்போது மருந்து சாப்பிட்டால் எப்படிஅது தீருமோ அதே போல முந்தைய கருமங்களின் தீய விளைவுகளை இப்போதைய நல்ல கர்மங்களால் மாற்ற முடியும் என்று விளக்கி மனித குலத்திற்கே பெரும் ஆறுதல் செய்தியை அது தருகிறது!
மனமே எல்லாம் என்று கூறி அதைச் செம்மைப் படுத்தி நல்ல எண்ணங்கள் மூலம் உயரிய நிலையை அடைய முடியும் என்பது
யோக வாசிஷ்டம் தரும் அற்புத செய்தி!

பிறப்பு,இறப்பு,கர்ம பலன்கள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களை விளக்கும் இந்த நூல் எப்படிப்பட்ட வழிகளின் மூலம் அருமையான ஆன்ம ஞானத்தை அடைந்து உலகியல் துன்பங்களிலிருந்து விடுதலை பெறலாம் என்ற ரகசியத்தையும் சுலபமாக விளக்குகிறது.

அதிசய வழிகள் நான்கு

இதற்கான அதிசய வழிகள் நான்கு!

சந்தோஷ: சாதுசங்கஸ்ச விசாரோத்ய சமஸ்ததா I
ஏத ஏவ பவாப்யோத்யாவுபாயாஸ்தரணே ந்ருகாம II (2-16-18)

சந்தோஷம் (எப்போதும் திருப்தி), நல்லோர் இணக்கம் (சாதுக்களுடன் சேர்தல்),விசாரம், அமைதி –இவையே மனிதருக்கு உலகம் என்னும் சாகரத்தைக் கடக்கும் வழிகளாகும். இதை எளிதாக நான்கு ‘ஸ’காரங்களாக ஸந்தோஷம், ஸத் சங்கம், ஸத் விசாரம், ஸமஸ்தம் என்று நினைவில் கொ:ள்ளலாம்.

சந்தோஷம்
விஷயங்களில் ஆசையில்லாது, சந்தோஷமாக (திருப்தியுடன் ) இருக்கும் ஒருவனுக்கு பெரும் சக்திகள் (வளங்களும் கூட) ஒரு அரசனிடம் இருக்கும் ஏவலாள்கள் போலக் காத்துக் கிடக்கும் என்பதை உறுதியாக யோக வாசிஷ்டம் தெரிவிக்கிறது. எவ்வளவு அரிய செய்தி இது!

நல்லோர் இணக்கம்
மனதில் இருக்கும் இருளை சாதுக்கள் அகற்றுவர்.சூரிய ஒளி போன்ற ஞானத்தைத் தருவர். தர்மங்கள் செய்வதாலும்,புனிதத்தல யாத்திரை மேற்கொள்வதாலும் விரதங்களாலும் மதச் சடங்குகள் மற்றும் யாகங்களாலும் என்ன பயன், ஒருவன் சாதுக்களுடன் சேர்ந்து இருக்கும் போது!

விசாரம்
நான் யார்? (கோஹம்)உலகில் பிறப்பு என்ற தோஷம் எப்படி வந்து சேர்ந்தது?( கதமயம் தோஷ: சம்ஸாராக்ய உபகத: 2-14-50) இப்படி தர்க்கரீதியாக விசாரம் செய்வதே விசாரம்!

சமஸ்தம்
அனைத்து உயிர்களிடமும் நட்பாக இருந்தால் உயரிய ஆன்மா தன்னைத்தானே சுத்தப்படுத்துகிறது (ஸ்வயம் ஏவ ப்ரஸீததி)
ஆக இந்த நான்கு வழிகளில் எந்த ஒரு வழியை மேற்கொண்டாலும் இறை சக்தி அருளைப் பாலித்து பெரும் வளங்களைத் தந்து முக்தியை நல்கும் என யோக வாசிஷ்டம் அறுதியிட்டு உறுதி கூறுகிறது.
yv3

ராமர் வசிஷ்டரிடம் கேள்விகள் கேட்க பிரம்ம ரிஷி வசிஷ்டர் பதில்களைத் தீர்க்கமாக அளிக்கிறார். அதுவே ஒரு லட்சம் சுலோகங்கள் கொண்ட யோக வாசிஷ்ட நூலாக அமைகிறது.இன்று நமக்குக் கிடைத்திருக்கும் ஸ்லோகங்கள் 32000 தான்!

அதி சுலப வழி விசாரமே

மேலே கூறிய நான்கு வழிகளில் மிக சுலபமான வழியாக ரமண மஹரிஷி கூறுவது, ‘நான் யார் என்று இடைவிடாது உன்னேக் கேள்வி கேள்! அனைத்து மர்மங்களும் தானே பிடிபடும்’ என்பதே!
எப்போதும் திருப்தி, நிஜமான உயரிய பண்புகள் உள்ள சாதுக்களை நாடுதல், அனைத்து உயிர்களிடமும் சமத்துவம் என்பதெல்லாம் பலருக்கும் கடைப்பிடிக்க சற்று சிரமமான வழிகள். ஆனால் எங்கிருந்தாலும் எந்த நேரத்திலும் சற்றும் செலவின்றி ஆண், பெண் யாரானாலும் அந்தஸ்து பேதமின்றி நாடு,இனம்,மொழி தாண்டி சுலபமாக செய்யக்கூடியது விசாரமே!

அதனால் தான் அவர், ஆன்ம வித்தை உரை என்ற அற்புதமான பாடலில் பல்லவி, அனுபல்லவி ஐந்தே ஐந்து சரணங்களில்

“ஐயே!அதி சுலபம் – ஆன்மவித்தை
ஐயே! அதி சுலபம் “ என்று கூறி விளக்குகிறார்.
பொருள் பொதிந்த அடுக்குமொழித் தமிழ்க் கவிதை வரிகளைப் இந்தப் பாடலில் படித்தால் மஹரிஷி ஒரு மஹாகவியும் கூட என்பதை உணர்ந்து விடலாம்!
na's BD

சரணங்களின் கடைசி வரிகளைப் பார்ப்போம்:-
பொய் உருவான அகங்காரத்தை நான் யார் என்ற இடைவிடாத கேள்வி மூலம் ஒழித்து விட்டால்,

“சுயமான்மா விளங்குமே;இருள் அடங்குமே;இடர் ஒடுங்குமே; இன்பம் பொங்குமே” என்றும்,

மாம்சமான சரீரத்தை நான் என்று எண்ணாமல் நான் யார்? இடம் எது என்று விசாரிப்பதால்,
“இதய குகையுள் தானாய்த் திகழும் ஆன்ம ஞானமே; இதுவே மோனமே; ஏக வானமே” என்றும்

உண்மை சொரூபத்தை உணர்ந்து விட்டால் பின் அறிவதற்கு என்ன இருக்கிறது? “தன்னைத் தன்னில்” உணர்ந்து விட்டல்,
“தன்னுள் மின்னும் ஆன்ம பிரகாசமே; அருள் விலாசமே,அக விநாசமே; இன்பவிகாசமே” என்றும் ,

கர்மங்களின் கட்டு அவிழ,
“இம்மார்க்கம் மிக்கு எளிது! .. .. சும்மா அமர்ந்திருக்க அம்மா! அகத்தில் ஆன்ம ஜோதியே; நிதானுபூதியே: இராது பீதியே; இன்ப அம்போதியே” (இன்ப அம்போதி –ஆனந்தக் கடல்) என்றும்,

அண்ணாமலையானைக் காண அவன் அனுக்ரஹம் வேண்டும்,
“உள் நாடு உளத்து ஒளிரும் அண்ணாமலை என் ஆன்மா காணுமே; அருளும் வேணுமே: அன்பு பூணுமே: இன்பு தோணுமே”
என்றும் அற்புதமான சிறிய ஐந்து வரிப் பாடல்கள் ஐந்தின் மூலம் விளக்குகிறார்.

யோக வாசிஷ்டம் கூறும் அதிசய வழிகள் நான்கில் அதிசுலபமான ‘நான் யார்’ என்ற விசார வழியை அனுபூதியாக உணர்ந்தவர் மஹரிஷி ரமண மகான்! அனைவரையும் உய்விக்க எண்ணும் அருளுடன், “ஐயே! அதி சுலபம் ஆன்ம வித்தை” என்று அவர் கூறும் போது யோக வாசிஷ்டத்தின் உண்மைக் கூற்றையும், அதை மெய்ப்பிக்கும் மஹரிஷியின் மாண்பையும் எண்ணி எண்ணி நம் மெய் சிலிர்க்கும்!
அவருடன் இணைந்து அதி சுலபம் ஆன்ம வித்தை என்று பாடியவாறே நான் யார் என்ற விசார மார்க்கத்தை மேற்கொண்டு சம்சார சாகரத்தைக் கடந்து விடலாம்! அப்போது … ..

“சுயமான்மா விளங்குமே;இருள் அடங்குமே;இடர் ஒடுங்குமே; இன்பம் பொங்குமே”
yv5

ஆன்மீக மாத இதழ் ஞான ஆலயம் ஜூலை 2013 இதழில் வெளியான கட்டுரை

(This article was written by my brother S Nagarajan: swami)

Contact swami_48@yahoo.com

அதிசயத் தமிழ் முனிவர் / புலவர் வால்மீகி

சங்க இலக்கியத்தில் பல புரியாத புதிர்கள் உண்டு. உ.வே.சாமிநாத அய்யராலும் விடை காண முடியாத புதிர்களுக்கு இப்போது விடை கிடைத்துவிட்டது. சங்க இலக்கியத்தில் இந்து மதக் கடவுள் பெயர் இல்லாத நூலெதுவும் இல்லை. சங்க இலக்கியத்தில் சம்ஸ்கிருத சொல் இல்லாத நூல் எதுவும் இல்லை. சங்க இலக்கியப் புலவர்களுக்கு சிந்து சமவெளி என்பது தெரியாது, சிந்து நதி தெரியாது. ஆனால் கங்கையையும் இமயமலையையும் புனித நதி, மலை என்று போற்றிப் புகழ்ந்து தள்ளி இருக்கிறார்கள். சேரன் செங்குட்டுவன் இரண்டு முறை கங்கை நதிக்குச் சென்றான். ஒரு முறை கண்ணகி சிலைக்கு அபிஷேகம் செய்யவும் அதற்கு முன் அவனுடைய அம்மா சொர்ணாவை புனித நீராட்டவும் சென்றான்.

 

சங்க இலக்கியத்தில் திராவிட என்ற சொல்லே கிடையாது. ஆரிய என்ற சொல் உயர் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இனத்தைச் சுட்டும் எந்த ‘விஷ’மும் ‘விஷம’மும் கிடையாது. ஆனால் நாட்டைப் பிரித்தாள வந்தோரும் மதத்தைப் பரப்பி நாட்டைச் சீர்குலைக்க சதி செய்தோரும் பரப்பிய ‘’ஆரிய திராவிட’’ வாதத்தால் பல உண்மைகள் மறைக்கப்பட்டன. முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கவும் முடியாது. முழுச் சூரியனை மேகங்கள் மறைக்கவும் இயலாது.

 

சங்க இலக்கியத்தில் மூன்றில் ஒரு பங்கு பாடல்களை இயற்றியோர் கபிலர், பரணர் போன்ற எண்ணற்ற பிராமணப் புலவர்கள் என்பதை முன்னரே எழுதிய நீண்ட ஆங்கிலக் கட்டுரையில் ‘’நோ பிராமின்ஸ், நோ டமில்ஸ்’’ ‘’NO BRAHMINS, NO TAMIL’’=இல் காணவும்.

 

தமிழ் கலாசாரம் வேறு, வடக்கத்திய கலாசாரம் வேறு என்று பிரசாரம் செய்தவர்களுக்கு காஞ்சி பரமாசார்ய சுவாமிகள், அவருக்கே உரித்தான எளிய நடையில் ,அன்பான மொழியில், அழகான தமிழில் பதில் கூறியுள்ளார்: தமிழில் உள்ள மிகப்பழைய சொற்களான வேள்வி, அந்தணர், மறை போன்ற சொற்கள்– இவை எல்லாம் நீண்ட காலமாக இந்த மண்ணிலேயே நிலைத்து நின்றதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யமுனை நதிக்கு தொழுனை என்ற பெயர் இருப்பது, தமிழ் மன்னர்கள் ராஜ சூயம், அஸ்வமேதம், சோமயாகம் செய்தது ஆகியனவும் குறிப்பிடத் தக்கது.

 

(காளிதாசனும் சங்கத் தமிழ் இலக்கியமும் என்ற பொருளில் நான் எழுதிய ஆறு ஏழு கட்டுரைகளிலும் வாகனங்கள் பற்றி எழுதிய பத்து ஆராய்ச்சிக் கட்டுரைகளிலும் சிந்து சமவெளி பற்றிய எனது பல கட்டுரைகளிலும் இவைகளைச் சுட்டிக் கட்டியுள்ளேன்).

 

இந்திய கலசாரம் இமயம் முதல் குமரி வரை 2000 ஆண்டுகளாக ஒன்றே. வான் புகழ் வள்ளுவன், முதல் குறளிலேயே அகரம், உலகம், ஆதி, பகவன் என்று பல சம்ஸ்கிருத சொற்களைப் பயன்படுத்துவதையும் அதிகாரத்துக்கு அதிகாரம் சம்ஸ்கிருத சொற்களை விடாமல் பயன்படுத்துவதையும் ‘’வள்ளுவன் ஒரு சம்ஸ்ருத அறிஞன்’’ என்ற கட்டுரையில் எழுதிவிட்டேன்.

தமிழ் மன்னர்கள் மூன்று பேரும் 2000 ஆண்டுகளாக இடைவிடாமல் சண்டை போட்டு சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுவிட்டார்கள். இதற்காக இவர்களை வேறு வேறு இனம் என்று யாரும் சொல்லவில்லையே!! குறிஞ்சி முதலான ஐவகை நிலங்களுக்கும் வெவ்வேறு ஜாதி, கடவுள் பெயரைச் சொல்லி இருக்கிறோம், இதனால் வெவ்வேறு இனம் ஆகிவிட முடியாதே. கோவில்பட்டி கடலை மிட்டாய், மணப்பாறை முறுக்கு, திருநெல்வேலி பெட்டி வெல்லம், அல்வா, மதுரை மல்லிகை போல நாடு முழுதும் ஒரு சில இடங்களில் ஒரு சில சிறப்புகள் இருக்கும். ரிக்வேதத்தில் போர் இருந்தால் அதெல்லாம் இனச் சண்டை, தமிழ் இலக்கியத்தில் போர் இருந்தால் அதெல்லாம் உள்வீட்டுச் சண்டை என்றெல்லாம் எழுதி நம் எல்லோரையும் முட்டாளாக்கிவிட்டார்கள் ‘’அறிஞர்கள்’’!

 

நான் வாழும் பிரிட்டன் ஆந்திர பிரதேசம் அளவுடையதே. அங்கும் ஐரீஷ், ஸ்காட்டிஷ், வெல்ஷ், இங்கிலீஷ் என்று நாலு கலாசாரங்கள் இருக்கின்றன. இவர்களில் திராவிட, ஆரிய வாதத்தை யாரும் புகுத்தவில்லையே. மேம்போக்கான வேறுபாடுகள் உலகில் இல்லாத இடம் இல்லை. இல்லவே இல்லை!!!

 

சங்கப் புலவர் பெயர்களில் பலருடைய பெயர்கள் சம்ஸ்கிருதப் பெயர்கள்: தாமோதரன், கேசவன், விஷ்ணு தாசன் (விண்ணந்தாயன்), உத்தரா, ஆருத்ரா, ருத்ரன், கௌசிகன், ஆத்ரேயன், பிரம்மா, சங்க வருணன், காமாக்ஷி (காமக்கண்ணி), மஹாதேவன் (மாதேவன்), தேவன் ,ஸாஸ்தா (சாத்தன்), மஹா சித்ரன் (பெருஞ்சித்திரனார்), மஹாபத்மன் (பெரும்பதுமனார்), கபிலர், பரணர், பூதப்பண்டியன், மஹா தேவி (பெருந்தேவி), பிரம்ம தத் (யாழ் பிரமதத்தன்)— இப்படி ஏராளமான பெயர்கள் உள்ளன. அத்தனையும் கொடுக்க இடம்போதா. எனது முந்தைய கட்டுரைகளைக் காண்க.

 

பிராமணர் கோத்ரங்களான கௌசிக, ஆத்ரேய, கவுண்டின்ய, காவ்ய (காப்பியனார், தொல் காப்பியனார்) ஆகியனவும் இருக்கின்றன. கோபாலன் (கோவலன்), மாதவி, மஹா (தண்ட) நாயகன் (மாநாய்க்கன்), மஹா சாஸ்தா (மாசாத்தன்), பராசரன், தட்சிணாமுர்த்தி ஆகிய பெயர்களை சிலப்பதிகாரதில் பார்க்கிறோம். மணிமேகலையில் முழுக்க முழுக்க சம்ஸ்கிருத பெயர்களே.

 

வால்மீகி மர்மம்

சங்க இலக்கியத்தில் மிகவும் பழைய பகுதி புறநானூறு. இதில் 358–ஆவது பாடலை இயற்றியவர் வால்மீகி (வன்மீகனார், வான்மீகனார் என்று எழுதப்பட்டுள்ளது). யார் இந்த வால்மீகி என்று தெரியாமலேயே இருந்தது. இவரும் உலகப் புகழ்பெற்ற ராமாயணப் புகழ் வால்மீகி போலவே தவத்தின் பெருமையைப் பாடி இருக்கிறார். துறவறமே பெரிது, இல்லறம் அதற்குப் பக்கத்தில் கூட வரமுடியாது. யார் வேண்டாம் என்று சொல்லி ஒதுங்குவார்களோ அவளிடம் தான் லெட்சுமி தேவி ஒட்டிக்கொள்வாள். யார் பற்று வைத்திருக்கிறார்களோ அவர்கள் மீது லெட்சுமி தேவிக்குப் பற்று இராது. உலகம் நிலயற்றது. ஒரே நாளில் ஏழு மன்னர்களைக் கண்டது இந்த உலகம் என்று தத்துவ விஷயங்களைக் கூறியுள்ளார். இவர் ராமாயண வால்மீகியாக இருக்கலாம் என்று கூட சில அறிஞர்கள் கருதினர். அனால் உண்மையில் வால்மீகி என்பது ஒரு கோத்திரப் பெயர்.

வால்மீகி கோத்திரத்தில் பிறந்த எல்லோரும் அப்பெயரைவைத்துக் கொள்ளமுடியும். இது போதாயன ஸ்ரௌத சூத்திரத்தில் உள்ளதை பி.எல்.பார்கவா எழுதிய ‘’புராணத்தில் வரலாற்றுச் செய்திகள்’’ என்ற நூலில் எழுதியிருக்கிறார். கீழே ஆங்கிலப் பகுதியில்  இருப்பது அவருடைய வாசகம்:

 

The following note was copied by me on 5th May 2002 from the book ‘’Retrieval of History from Puranic Myths’’ by P.L.Bhargava (available at SOAS LiBrary, University of London):

 

Pravaradhyaya of the ancient Baudhayana Srauta Sutra (800 to 400 BC) mentions Valmiki as a Gotra in the Vatsa Paksha of the family of Bhrgu. This name thus could be borne by other persons of this gotra and this is proved by tha fact that we learn from the Taitriya Pratisakhya of a Phoenician Valmiki who was different from the famous poet Valmiki.’’

 

ராமாயணம் எழுதிய வால்மீகி கொள்ளைக்காரனாக இருந்து—முனிவராகவும், உலக மஹா கவிஞராகவும் மாறினார். அவர் ராம ராம என்று செபித்து தவம் செய்த காலத்தில் அவர் மீது புற்று வளர்ந்தது. கறையான் புற்றுக்கு வன்மீகம் என்று சம்ஸ்கிருதத்தில் பெயர். அதன் காரணமாக அவர் வால்மீகி என்று பெயர் பெற்றார். ஆனால் புறநானூற்று வால்மீகி அவர் பிறந்த குலம், கோத்திரம் காரணமாகப் பெயர் பெற்றார்.

 

பிற்காலத்தில் பல முனிவர்களும் சித்தர்களும் இதே பெயரில் இருந்து சித்தி அடைந்திருக்கிறார்கள். எட்டுகுடியில் ஒரு வால்மீகியின் சமாதி இருக்கிறது. அவர்கள் எழுதிய பாடல்களே அவர்களைப் பிற்காலத்தியவர் என்று காட்டிக் கொடுத்துவிடுகிறது. திருவாரூர், சங்கரன்கோவில், குடவாசல், திருவெற்றியூர், காஞ்சீபுரம் இப்படிப் பல கோவில்களில் வன்மீகநாதர் சந்நிதியும், திரு உருவங்களும் உண்டு. இவை எல்லாம் வன்மீகர் என்பது எவ்வளவு பொதுவாகப் புழங்கப்பட்ட பெயர்கள் என்பதற்குச் சான்று பகரும். ஒருவேளை ராமாயண வால்மீகியின் மீது அன்பு கொண்டு அவர் பெயரையே பலரும் சூட்டிக் கொண்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

 

படங்கள் வெவ்வேறு பிளாக்குகளில் இருந்து எடுக்கப்பட்டன.நன்றி.