Written by S Nagarajan
Date: 23 February 2016
Post No. 2566
Time uploaded in London :– 6-12 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
வேதவழி
வேத பிராயம் நூறு வயதை எட்டிய பெரியோர்! -1
ச.நாகராஜன்
மனிதருக்கு வேதம் வகுத்த ஆயுள் நூறு.
ஜீவேம சரத சதம்- நூறு ஆண்டுகள் வாழ்வோமாக என்று தினமும் ஆரோக்கியத்தையும் ஆயுளையும் அருள வேண்டி சூரியனைத் துதிப்பது பண்டைய காலத்திலிருந்து ஹிந்து சமூகத்தில் இருந்து வரும் பழக்கம்.
இப்படி வேதம் வகுத்த நெறிகளின் படி வாழ்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட வயதைத் தாண்டியோர் ஏராளம். அவர்கள் அனைவரையும் பற்றிய விரிவான சரித்திரம் நம்மிடம் இல்லை; ஏனெனில் அதை ஒரு அற்புதம் என்று அப்படி வாழ்ந்தவர்கள் நினைக்கவே இல்லை.
ஆனால் நூறில் பாதியை எட்டுவதையே அதிசயமாகப் பார்க்கும் இந்தக் காலத்தில் அப்படிப்பட்ட மகான்களை நினைப்பதும் அவர்கள் வாழ்க்கை முறையை உன்னிப்பாக கவனித்துப் பார்ப்பதும் உத்வேகம் அளிக்கும்.
இந்த வகையில் சமீப காலத்தில் வாழ்ந்த சிலரைப் பற்றியேனும் அறிந்து கொள்வது வேதநெறிக்கு நாம் கொடுக்கும் மரியாதையாகும்.
முதலில் நால்வரைப் பார்ப்போம்.
காஞ்சி காமகோடி ஜகத்குரு சங்காராசாரியார் (ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர சரஸ்வதி – 68 பீடாதிபதி)
பண்டிட் ஸ்ரீபத் தாமோதர சாத்வலேகர்
யோகி ஸ்ரீ கிருஷ்ணமாசாரியா
நிரோத்பரன்
சமீபகாலத்தில் வாழ்ந்த இந்த நால்வரில் ஒருவர் ஜகத்குரு.உலக நன்மையை வேண்டி தன் ஆயுளை அர்ப்பணித்த பெரும் அருளாளர்.
இன்னொருவர் வேத வாழ்க்கையை வாழ்ந்து காட்டி நூறு வயதை எட்டியவர். பண்டிட் ஸ்ரீபத் தாமோதர சாத்வலேகர்
இன்னொருவர் ஹிந்து வாழ்க்கை முறை கற்பிக்கும் யோகத்தைக் கற்று அதன்படி வாழ்ந்தால் நூறு வயதை சுலபமாக எட்டலாம் என்று நிரூபித்த யோகாசாரியர் – யோகி ஸ்ரீகிருஷ்ணமாசாரியார்.
மஹரிஷி ஒருவரை அண்டி அவரின் அணுக்க பகதராக இருந்து அவர் கூறிய யோக முறைப்படி வாழ்ந்தால் நூறையும் தாண்டலாம் என்று நிரூபித்தவர் அரவிந்த மஹரிஷியுடன் நீண்ட காலம் இருந்த் அணுக்கத் தொண்டர் நிரோத்பரன்!
இந்த நால்வரும் நமக்காக விட்டுச் சென்ற அன்புரைகளும் அறிவுரைகளும் ஏராளம்.
ஏராளமான சொற்பொழிவுகள். ஏராளமான நூல்கள்! ஏராள்மான இரகசியங்களைச் சுட்டிக் காட்டி அன்பர்களுக்குத் தந்த அருளுரைகள்.
இவையெல்லாம் நல்ல வேளையாக தொகுக்கப்பட்டுள்ளன.
தேடி ஓடி நாட வேண்டியது ஒன்று தான் நம் வேலை.
நாலவரைப் பற்றியும் இந்தச் சிறு குறுந்தொடரில் அறிமுகம் செய்து கொள்வோம்! – தொடரும்
You must be logged in to post a comment.