முனிவர்கள் விஞ்ஞானிகளா ? பூமியின் வேகம் எப்படித் தெரிந்தது ?(Post.10,538)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,538

Date uploaded in London – –    7 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இந்துக்கள் எவ்வளவு பெரிய மேதைகள் என்பதற்கு ஒரு குட்டிக்கதை உண்டு .

சதுரங்கம் எனப்படும் CHESS செஸ் விளையாட்டைக் கண்டுபிடித்தவர்கள் இந்துக்களே என்பதை உலகமே ஒப்புக்கொண்டுவிட்டது. இதில் இருவேறு கருத்துக்கு இடமே இல்லை. ஒரு முனிவர், ஒரு அரசனிடம் சென்று இந்த அற்புதமான விளையாட்டைச் சொல்லிக் கொடுத்தார். நாள் தோறும் நாற்படைகளுடன் கதைக்கும் மன்னனுக்கு வியப்பிலும் வியப்பு! அன்பரே நீங்கள் என்ன கேட்டாலும் தருகிறேன் என்றான் மன்னன்.

முனிவர் சிரித்துக் கொண்டே , அப்படி ஒன்றும் அதிகம் வேண்டாம். இதோ நான் கற்பித்த செஸ் போர்டில் 64 கட்டங்கள் உள்ளன. முதல் கட்டத்தில் ஒரு அரிசி, அடுத்தகட்டத்தில் 2, அடுத்த கட்டத்தில் 4 என்று இரட்டித்துக் கொண்டே போங்கள் ; 64 கட்டங்களில் எவ்வளவு அரிசி இருக்குமோ அது போதும் என்றார் முனிவர்.

 பூ இவ்வளவுதானா ! இதோ உடனே தருகிறேன் என்றான் மன்னன்.

முனிவர் மீண்டும் சிரித்தார். 32 கட்டங்கள் தாண்டுவதற்கு முன்னர் அவன் நாட்டிலுள்ள கோடிக்கணக்கான மூட்டைகளைக் கொண்டுவந்தாலும் போதாது என்பது பல நாட்களுக்குப் பிறகு புரிந்தது.

நீங்களும் 64 கட்டம் உள்ள ஒரு செஸ் போர்டில் முதல் கட்டத்தில் ஒரு பைசா காசு வையுங்கள். பின்னர், 2, 4, 8, 16 என்று அதிகரித்துக் கொண்டே போங்கள் . உலக மஹா பணக்காரர் ஆகி விடுவீர்கள் !

XXXX

பூமி சூக்த ஆராய்ச்சிக் கட்டுரை – PART 7

அதர்வண வேதம் (அ .வே.) பூமி சூக்தத்தில் உள்ள  63 மந்திரங்களில் 16 மந்திரங்களைக் கண்டோம். மேலும் காண்போம். இதோ வேத கால முனிவர்களின் அபார அறிவை விளக்கும் பகுதிகள் :–

மந்திரம் 17

பூமியைத்  தருமமே தாங்கி நிற்கிறது; நாங்கள் அவள் மீது நடக்கிறோம்; அவள் எங்கள் மீது கருணை மழை பொழியட்டும் ; அவள் விளைச்சல் மிகுந்தவள் ; தாவரங்களின் ,மூலிகைகளின் தாய் ; அவள் உறுதியாக நிற்கிறாள்

இந்த அற்புதமான மந்திரம் நமக்கு அரிய பல செய்திகளைத் தருகிறது. இந்த உலகம் நிலை நிற்கக் காரணம் தனக்கென வாழாத மக்கள்  இருப்பதுதான்  என்றும் பழியைக் கண்டு அஞ்சும் மக்கள் இருப்பதால் தான் என்றும் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி புறநானூற்றில் பாடியது  இந்த வேதக்  கருத்துதான் . வேத கால புலவன் ஒரே சொல்லில் தர்மம், ருதம் என்று அடக்கிவிட்டான். தாவரங்களும் மூலிகைகளும் , விளைச்சலும் மிக்க பூமி என்பதைப் படிக்கையில் பசுமை மிக்க காடுகள் நிறைந்த, இயற்கை வனப்புமிக்க அழகிய பூமியைக் கவிஞன் நம் மனக் கண் முன் காட்டுகிறான்.

மந்திரம் 17

விஸ்வஸ்வம் மாத ரமோஷதீனாம்  த்ருவாம் பூமிம் ப்ருதிவீம்  தர்மணா த்ருதாம்

சிவாம் ஸ்யோனாமனு சரேம விஸ் வஹா –17

Xxx

மந்திரம் 18

பூமாதேவியே , நீ மஹத்தானவள்; உன்னுடைய வேகமும் , நடுக்கமும் குலுங்கலும் மஹத்தானது .. பலம் வாய்ந்த இந்திரன் உன்னைப் பிழையின்றி பாதுகாக்கிறான்.ஓ பூமியே , எங்களைத் தங்கம் போல ஜொலிக்கச் செய்வாயாகுக. எவரும் என்னை வெறுக்கக் கூடாது

பூமியின் நடுக்கம் என்னும் பூகம்பம் EARTHQUAKE குறித்து சங்கத் தமிழ் பாடல்களிலும் பிற சம்ஸ்க்ருத புஸ்தககங்களிலும் உள . ஆனால் பூமியின் ‘மஹான் வேகம்’ GREAT SPEED என்ற சொல் ஊன்றி ஆராய வேண்டியவிஷயம் .

சைன்டிபிக் அமெரிக்கன் SCIENTIFIC AMERICAN என்ற புகழ்பெற்ற அறிவியல் பத்திரிக்கை சொல்கிறது :–

பூமி அதன் அச்சில் தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் வேகம் மணிக்கு 1000 மைல் .

பூமி, பிற கிரஹங்களைப் போலவே சூரியனையும் சுற்றுகிறது. அப்போது பூமியின் வேகம் மணிக்கு 67,000 மைல்.

சூரியன் எல்லா கிரஹங்களையும் துணைக்கிரஹங்களையும் இழுத்துக்கொண்டு பால்வெளி மண்டலத்தை வலம் வருகிறது. அப்போது அதன் வேகம் மணிக்கு 4,90,000 மைல்

எப்படி பூமியின் வேகம் பற்றி அதர்வண வேதப்  புலவன் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் பாடினான்? இந்த வேகம் என்ற ஒரு சொல்லை மட்டும் வைத்துக்கொண்டு நான் வியாக்கியானம் செய்யவில்லை. பிரபஞ்சத்தில் உள்ள பூமி முதல் எல்லாவற்றுக்கும் வடிவம் வட்டமே என்று அறிந்து OVAL, GLOBULAR, CIRCLE அண்டம் (முட்டை) என்றும் வானில் சுற்றும் சூரியன், சநதிரன் , குரு ஆகியவற்றுக்கு ஈர்ப்பு விசை இருப்பதை அறிந்து கிரஹ GRIP, GRAB, GRAVITY என்ற சொல்லை பயன்படுத்தினான். எப்படி மிகப்பெரிய கிரகத்துக்கு குரு (வியாழன், ஜுபிட்டர் ) என்று பெயரிட்டான் என்பதை மனைதிற்கொண்டு இதை ஆராய வேண்டும். . முனிவர்கள் மாபெரும்  விஞ்ஞானிகள் !!

இப்போது கடைசி இரண்டு வரிகளைப் பார்ப்போம்.

“எங்களைத் தங்கம் போல ஜொலிக்க வை” என்று புலவன் இறைஞ்சுகிறான். தங்கத்தின் மதிப்பை அறியாதார் உலகில் இல்லை. உலகம் முழுதும் அரசசாங்க வங்கிகளில் ஒவ்வொரு நாடும் குவித்து வைப்பது தங்கக் கட்டிகள்தான் .உலகின் மிகப் பழைய நூலான ரிக்வேதத்தில் நூற்றுக் கணக்கான இடங்களில் தங்கம் வருகிறது. ரிக் வேத கால மக்கள் மிகவும் செல்வ செழிப்பில் திகழ்ந்த விவசாயிகள். தானியம், குதிரை, பசு மாடுகள், தங்கம், வீடு, சபை பற்றிய குறிப்புகள் அவர்கள் நாகரீகம் மிக்கவர்கள் , நகர வாழ் மக்கள் என்பதைக் காட்டுகிறது. மேலும் ஒரே மந்திரம், இந்திரன் இருபது மன்னர்களை வென்றதாகச் சொல்லி, 5, 6 மன்னர்களின் பெயர்களையும் சொல்கிறது !

சொர்ணம், ஹிரண்யம், என்ற சொற்களை நாம் இன்றும் பயன்படுத்துகிறோம். 16 வகைத் தானங்களில் ஹிரண்ய தானத்தை தமிழ்க் கல்வெட்டுகளும் செப்புகின்றன. சொர்ணம் என்ற பெயரை இன்றும் பெண்கள் பெயர்களில் காண்கிறோம்.

இதிலுள்ள “மஹா” என்ற சொல் மூலம் ஐரோப்பிய மொழிகளில் மெகா MEGA புகுந்தது.

ஓஷதி என்ற சொல்லை ஓளஷதம் / அவுடதம் என்று இன்றும் தமிழ் மருத்துவ நூல்கள் புகலும் .

கடைசி வரிதான் மிகப் பிரமாதமான வரி !

என்னை யாரும் வெறுக்க வேண்டாம். ராமலிங்க சுவாமிகளும்  ‘திருவருட்பா’வில் இதை இறைவனிடம் வேண்டுகிறார். நான் யாரையும் சீ , நாயே பேயே என்று திட்டக்கூடாது என்று இறைவனிடம் கெஞ்சுகிறார் ; “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடும் அன்பு” நம்மிடம் இருந்தால் நம்மை யாரும் வெறுக்க முடியாது அல்லவா?

நாம் சிலரைக் கண்டதும் காதல் கொள்கிறோம் . சிலரை காரணம் இல்லாமல் வெறுக்கிறோம். பிள்ளைப் பேறு கூட இல்லாத எம்.ஜி.ஆர் . MGR என்ற நடிகரைக் காண்பதற்காக பல லட்சம் பெண்கள் இரவு மூன்று மணி வரை பொதுக்கூட்ட அரங்கில் காத்திருந்ததை நாம் படித்து இருக்கிறோம். அவரை வீட ஆண் அழகன் உலகில் இல்லையா? இதற்கெல்லாம் ஜாதகமே காரணம். நம் பூர்வ புண்ய பாபம் நம்மை நிழல் போல தொடர்ந்து வரும் என்பது ஆன்றோர் வாக்கு. ஆக நம்மை வெறுக்காமல் இருக்க நாம் யாரையும் வெறுக்காமல் இருக்கவேண்டும். இதை வள்ளுவன் குறளிலோ , வள்ளளாரின் பாடலிலோ காண்பதில் வியப்பில்லை. பூமி சூக்தத்தின் இடையில் இதை நுழைத்தானே வேதப் புலவன், அவனைத்தான் பாராட்டவேண்டும்

மந்திரம் 18

மஹத் சதஸ்தம்  மஹதீ பபூவித  மஹான் வேக ஏஜதுர்வேபதுஷ்டே

மஹான்ஸ்வேந்த்ரோ  ரக்ஷத்ய ப்ரமாதம்

ஸா நோ பூமே ப்ரரோச்ய  ஹிரண்யஸ்யேவ ஸம்த்ருசி  மா நோ த்விக்ஷத கஸ்சன

  ஈயென்று நானொருவரிட நின்று கேளாத
        
இயல்பு மென்னிட மொருவரீ
        
திடுவென்ற போதவர்க் கிலையென்று சொல்லாம
        
லிடுகின்ற திறமும் இறையாம்
    
நீயென்று மெனைவிடா நிலையும் நானென்று முன்
        
னினை விடா நெறியு மயலார்
        
நிதியொன்று நயவாத மனமு மெய்ந்நிலை நின்று
        
நெகிழாத திடமு முலகில்


    
சீயென்று பேயென்று நாயென்று பிறர்தமைத்
        
தீங்கு சொல்லாத தெளிவும்


        
திரமொன்று வாய்மையும் தூய்மையும் தந்துநின்
        
திருவடிக் காளாக்கு வாய்
    
தாயொன்று சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
        
தலமோங்கு கந்த வேளே
        
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
        
சண்முகத் தெய்வ மணியே– திருவருட்பா

தொடர்ந்து காண்போம் அடுத்த கட்டுரையில் ………..

To be continued……………………

tags-  ஈயென்று நானொரு, முனிவர்கள், விஞ்ஞானி, பூமி,வேகம்

சைக்கியாட்ரி விஞ்ஞானி கண்ட சாயிகியாட்ரி! (Post No.9524)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9524

Date uploaded in London – –  –24 APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

ஸ்ரீ சத்ய சாயி பாபா சமாதி தினம் : 24 ஏப்ரல். அவர் மலரடி பணீவோம்!

சைக்கியாட்ரி விஞ்ஞானி கண்ட சாயிகியாட்ரி!

ச.நாகராஜன்

1

டாக்டர் சாமுவேல் சேண்ட்விஸ் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு சைக்கியாட்ரிஸ்ட். உளவியல் நிபுணர். ஸ்ரீ சத்ய சாயி பாபாவைப் பற்றிய ஏராளமான அதிசயமான செய்திகளைக் கேட்ட அவர் நேரடியாகப் பாபாவைப் பார்த்து விடத் தீர்மானித்தார்.

நான் சென்றேன், கண்டேன், வெல்லப்பட்டேன் என்பது தான் அவரது கதையாக ஆனது.

தனது அருமையான அனுபவங்களை Sai Baba The Holy Man… and the

 Psaychiatrist  என்ற புத்தகத்தில் அவர் எழுதியுள்ளார். இந்தப் புத்தகம் 1975ஆம் ஆண்டு வெளி வந்தது.

அதில் பாபா எங்கும் இருக்கிறார் என்ற அபூர்வ உண்மையைத் தன் அனுபவத்தால் அவர் கண்டார்.

அதில் விஞ்ஞானத்தையும் கடந்த அவதார புருஷரின் மஹிமையை இப்படிக் கூறுகிறார்:-

Amazing! Unbelievable! Unthinkable! The most mind-blowing, extraordinary experience – as if the most far-fetched science were actually seen to be true.” (page 47)

பகவான் பாபாவின் அன்றாடச் செயல்களையும் அற்புதங்களையும் நேரடியாக அனுபவித்த அவர் எழுதுகிறார்:

I am witnessing here no abstract college argument or cerebral debates about whether or not God exists. I am seeing concrete evidence of such reality.”

240 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தில் நாம் பெறும் பாபாவின் உபதேசங்கள் நம்மை உய்விக்க வல்லவை.

இறுதியாக இந்த சைக்கியாட்ரி நிபுணர், சைக்கியாட்ரியின் இறுதி லட்சியமே மதம் காண விழையும் கடவுளே என்று கூறி சாயிபாபாவினுடனான தனது அனுபவத்தை ‘சாயிகியாட்ரி என்று கூறி வியக்கிறார். (பக்கம் 190)

2  

இதே போல மனிதர்களைச் சுற்றி இருக்கும் ஒளிவட்டம் எனப்படும் அவுராவைத் தன் ஊனக் கண்களாலேயே பார்க்கும் வல்லமையைத் தன் அனுபவத்தால் கொண்ட பாரனோவ்ஸ்கி என்ற அமெரிக்க விஞ்ஞானி பாபாவைப் பார்த்து வியந்தார்.

“பாபாவின் உடலிலிருந்து வெளிவரும் இளஞ்சிவப்பு வண்ணம் கொண்ட அவுரா வானத்தை ஊடுருவுகிறது. அவர் நடக்கும் போது அந்த ஒளிவட்டமும் செல்கிறத். அவரை “நடமாடும் அன்பின் திருவுருவம்” – Love Walking On Two Feet – என்றே கூறுவேன்” என்றார்.

3  

டாக்டர் பகவந்தம் பாபாவின் அணுக்கத் தொண்டர். அரசுக்கு விஞ்ஞான ஆலோசகர் என்ற பெரும் கௌரவத்தைக் கொண்டவர். அவர் பாபாவின் முன்னால் இருக்கும் போது விஞ்ஞானத்தை மீறிய பாபாவின் அற்புதச் செயல்களைக் கண்டு வியந்தார்.

பகவந்தத்தின் மகன் டாக்டர் ராமகிருஷ்ணா பிஹெச்.டி பட்டம் பெற்றவர். பெங்களூர் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸில் ஏரோநாடிகல் எஞ்சினியரிங் துறையில் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஒரு நாள் பகவான் பாபா, ராமகிருஷ்ணாவையும் அவரது நான்கு நண்பர்களையும் அழைத்துக் கொண்டு வெளியில் காரில் சென்றார். மதிய உணவு நேரம். அனைவரும் அதைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பிததனர். பாபா அனைவரிடமும் அவரவருக்கு என்ன பழம் பிடிக்குமோ அதை நினைத்துக் கொள்ளச் சொன்னார். ஆளுக்கு ஒரு பழத்தை நினைத்துக் கொண்டனர். ஒருவர் மாம்பழம். இன்னொருவர் ஆப்பிள். இன்னொருவர் ஆரஞ்சு இப்படி ஆளுக்கு ஒரு பழம்! பாபா காரை நிறுத்தச் சொன்னார். சாலை ஓரத்தில் இருந்த ஒரு மரத்தைக் காட்டி, “அந்த மரத்தில் உங்களுக்குத் தேவையான பழங்களைப் பறித்துக் கொள்ளுங்கள் என்றார்.

அனைவரும் அந்த மரத்தின் அருகே விரைந்தனர். என்ன ஆச்சரியம்! அந்த மரத்தின் கிளைகளிலிருந்து காம்புடன் கூடிய பழங்கள் – அவர்கள் நினைத்த அதே பழங்கள் – தொங்கிக் கொண்டிருந்தன. அனைவரும் பறித்தனர். உண்டனர்!

இந்த சம்பவத்தை டாக்டர் சாமுவேல் சேண்ட்விஸ் அப்படியே தனது நூலில் பதிவு செய்துள்ளார். (பக்கம் 224- Sai Baba The Holy Man… and the Psaychiatrist)

இப்படி நூற்றுக் கணக்கான அரிய சம்பவங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இப்படி உலகின் ஆகச் சிறந்த விஞ்ஞானிகள் ஒரு புறமும், பெரிய மகான்கள் ஒரு புறமும், அறிஞர் பெருமக்கள் ஒரு புறமும், கலைஞர்கள் ஒரு புறமும், சாமான்ய மக்கள் ஒரு புறமும் பாபாவை அணுகி அவரது அற்புத இறையாற்றலைக் கண்டு வியந்தனர்.

5

பாபாவின் அருள் வாக்கு மிக எளிமையானது.

மானவ சேவையே மாதவ சேவை என்கிறார் அவர்.

“இறைவன் லக்ஷ்மி நாராயணனாகவும் தரித்ர நாராயாணனாகவும் இரு உருவங்களைக் கொண்டுள்ளான். பெரும்பாலானோர் தங்களது வளத்திற்காக லக்ஷ்மி நாராயணனையே வழிபடுகின்றனர்.

ஆனால் தரித்ர நாராயணனாக இருக்கும் ஏழைகளுக்குச் செய்யும் சேவையை சிலரே தேர்ந்தெடுக்கின்றனர். அவர்களுக்கு உணவளித்தால் அவர்கள் பெரிதும் திருப்தி அடைகின்றனர். அவர்களுக்குச் செய்யும் சேவை வீணாகாது. அதுவே சாதனையின் உயரிய வடிவம் ஆகும் – இதுவே அவரது அருள் வாக்கு!

(Sathya Sai Speaks Vol 18 – Seva Is the highest Sasjana – பகவான் பாபா சென்னையில் 25-1-1985 அன்று ஆற்றிய உரையில் கூறியது).

பகவான் காட்டிய சேவை வழியில் நடப்போம். உயர்வோமாக!

***

 tags- சைக்கியாட்ரி, விஞ்ஞானி , சத்ய சாயி பாபா,  சமாதி தினம்

மரபணு விஞ்ஞானிக்குத் தன் மரபணு ரகசியம் தெரியாத விசித்திரக் கதை! (4662)

Date: 26 JANUARY 2018

 

Time uploaded in London- 6-59 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4662

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

(என் வாசகர்கள் தமிழர்கள்= நல்லவர்கள்; தன் மனைவி, மகன்கள், கணவர்கள் , ஆளும் அரசாங்கத்தினர் ஆகியோர் தன்னிடம் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணுவோர் என் எழுத்துக்களைத் திருட மாட்டார்கள். எழுதியவர் பெயருடன் பகிர்வார்கள்; பிளாக் பெயரை நீக்க மாட்டார்கள்)

 

 

பாக்யா 26-1-2018 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஏழாம் ஆண்டு 49வது) கட்டுரை!

 

மரபணு விஞ்ஞானிக்குத் தன் மரபணு ரகசியம் தெரியாத விசித்திரக் கதை!

 

 

ச.நாகராஜன்

 

 

 

 

“மரபணு பற்றிய விதிகள் அவற்றை நீங்கள் அறிய மறுத்தாலும் கூட உங்களுக்கும் அது பொருந்தும்!” – ஆலிஸன் ப்லோடென்

 

இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் பிரபல விஞ்ஞானிகளில் பெரிதும் போற்றப்பட்டு வருபவர் மரபணு சம்பந்தமான பெரிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்த பெரும் விஞ்ஞானி சர் பால் நர்ஸ்! (Sir Paul Nurse).

 

முக்கியமாக கான்ஸர் வியாதி குணமாகக் கூடியதே என்பதை அவர் சொல்லும் போது உலகமே ஆறுதல் அடைகிறது. மருத்துவத்திற்கான 2001ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசை அவர் மற்ற இரு விஞ்னானிகளுடன் கூடச் சேர்ந்து பெற்றுக் கொண்டார்.

பிரிட்டனைச் சேர்ந்த நர்ஸ் 1949ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் தேதி பிறந்தவர். இப்போது அவருக்கு வயது 69.

உலகிற்கே மரபணு பற்றிய ஏராளமான உண்மைகளைத் தெரிவித்த இந்த விஞ்ஞானியின் சொந்த வாழ்க்கையில் அவரது மரபணு பற்றிய விஷயம் பெரிய ரகசியமாக அமைந்தது தான் விசித்திரம்.

 

பெரிய மர்ம நாவல் போல அவரது வாழ்க்கை வரலாறு இருக்கிறது.

 

இதை அவரே ஒப்புக் கொள்கிறார். டிக்கன்ஸ் நாவலையும் தோற்கடிக்கும் அளவு அவரது வாழ்க்கை மிக்க சுவையான மர்மம் நிறைந்த ஒன்று.

 

அமெரிக்காவில் ராக்ஃபெல்லர் பல்கலைக் கழகத்திற்கு அவர் தலைவர் ஆனார். சுமார் மூன்று ஆண்டுகள் அமெரிக்காவில் வசித்த அவர் அமெரிக்க குடியுரிமை பெற கிரீன் கார்டை வாங்க ஒரு விண்ண்பத்தை சமர்ப்பித்தார். ஆனால் அது அமெரிக்க ஹோம்லேண்ட் செக்யூரிடி பிரிவால் நிராகரிக்கப்பட்டுத் திருப்பி அனுப்பப்பட்டது.

 

திகைத்துப் போன அவர் ஏன் என்று கேட்டார்.

அந்தப் பிரிவோ அவரது பிறப்புச் சான்றிதழில்  தந்தை பெயரும் தாயின் பெயரும் இல்லை என்று பதில் கூறியது.

இவ்வளவு தானே என்று நினைத்த நர்ஸ், ஒரு முழு பெர்த் சர்டிபிகேட்டை அனுப்புமாறு பிரிட்டன் ஜெனரல் ரிஜிஸ்டர் அலுவலகத்திற்கு வேண்டுகோள் விடுத்தார். பின்னர் நிம்மதியாக இரு வார விடுமுறை எடுத்துச் சென்று விட்டார்.

திரும்பி வந்தவர் தன் செயலாளரிடம், ‘இப்போது எல்லாம் சரியாக ஆகி விட்டதல்லவா’ என்று கேட்டார்.

“ஊஹூம்” என்று சொன்ன அவர் பிரிட்டனிலிருந்து வந்த பெர்த் சர்டிபிகேட்டை அவரிடம் நீட்டினார். அதில் தாயார் என்பதற்கு நேராக அவரது சகோதரியின் பெயர் இருந்தது. தகப்பனார் என்பதற்கு நேராக ஒரு கோடு -டேஷ் – மட்டும் இருந்தது.

தகப்பனார் இல்லாத ஆளா நான் என்று வியப்புற்றார் நர்ஸ்.

உலகிற்கே மரபணு பற்றி விளக்கம் அளிப்பவர் தன்  மரபணு பற்றித் தெரியாமல் திகைத்தார்.

 

அவரது மனைவி என்ன திகைப்பு என்று கேட்டு விஷயத்தைப் புரிந்து கொண்டு ஆராய ஆரம்பித்தார்.

பின்னர் கூறினார்,”நீங்கள் தந்தை தாய் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் உண்மையில் உங்கள் தாத்தாவும் பாட்டியுமே. நீங்கள் உங்கள் சகோதரி என்று நினைத்துக் கொண்டிருபபவர் தான் நிஜத்தில் உங்கள் தாயார்!”

திகைத்துப் போன நர்ஸால் பதில் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

 

அவரது தந்தையும் தாயும் உயிருடன் இல்லை.

சகோதரியும் உயிருடன் இல்லை.

அவர் வாழ்ந்த வீடு பெரிய அத்தையின் வீடு. அந்தப் பெரிய அத்தையும் உயிருடன் இல்லை.

என்ன செய்வது?

பெரிய அத்தையின் பெண் உயிருடன் வாழ்கிறார். உடனடியாக அவரைத் தொடர்பு கொண்டார்.

“உனது வாழ்வில் ஒரு மர்மம் இருக்கிறது” என்று கூறிய அவர் “நீ பிறந்த போது எனக்கு 11 வயது. உனது தாயார் 17 வயதிலேயே கர்ப்பமானாள். கர்ப்பமானவுடன் அவரை இங்கு கொண்டு வந்து விட்டனர். நீ பிறந்தாய். உன்னை உன் தாத்தாவும் பாட்டியும் கொண்டு சென்று வளர்க்க ஆரம்பித்தனர். உன் அம்மாவை உனது சகோதரி என்று சொல்லி விட்டனர். இதை யாரிடமும் சொல்லக் கூடாது என்று ரகசிய பிரமாணமும் செய்ய வைத்தனர்.

 

உன் தாயார் பின்னர் திருமணம் செய்து கொண்டு மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். இது தான் நடந்த கதை” என்றார் அவர்.

 

இப்போது உலகப் பெரும் விஞ்ஞானியின் தலை சுழன்றது.

அப்போது தனது தந்தை யார்?

உறவுகள் எல்லாம் இப்போது அவருக்கு மாறிப் போனது.

அப்பா என்று கூப்பிட்டு வந்தவர் தாத்தா ஆனார். அம்மா என்று அழைத்தவர் பாட்டி ஆனார். சகோதரி மிரியம் இப்போது அம்மா ஆகி விட்டார்.

 

சகோதரர்கள் என்று நினைத்தவர்கள் இப்போது மாமன்மார் ஆகி விட்டனர். ஒரே குளறுபடி உறவுமுறையில்!

“நான் என்ன செய்வது? நான் ஒரு மோசமான மரபணு விஞ்ஞானி இல்லை. எனது குடும்பத்தினர் தான் என் மரபணு பற்றிய விஷயத்தை 50 ஆண்டுகளுக்கும் மேலாக இரகசியமாக வைத்து விட்டனர்!” என்கிறார் நர்ஸ்!

 

அவரது சகோதரி மிரியம் – இப்போது ரகசியம் தெரிந்து விட்ட நிலையில் அவரது அம்மாவாகி விட்ட மிரியம் – திருமணம் செய்து கொண்ட போது அவரது கணவரை ஒரு கையிலும் குழந்தை நர்ஸை ஒரு கையிலும் பிடித்துக் கொண்டு எடுத்துக் கொண்ட போட்டோ நர்ஸின் நினைவுக்கு வந்தது.

தன் சொந்த அம்மா பிரியப் போகிறார் என்பதைத் தாங்க முடியாமல் தானோ என்னவோ அன்று நடந்த நிகழ்வு ஒன்றைச் சொன்னார் நர்ஸ். திருமண ஸ்பெஷல் கேக் வைத்திருந்த குட்டி மேஜையின் அடியில் புகுந்த நர்ஸ் அதன் காலை வாரி விட வெடிங் கேக் கீழே விழுந்து உடைந்து போனது. இது ஒரு சகுனமோ என்னவோ என்கிறார் நர்ஸ்.

 

தனது டி என் ஏ சாம்பிளையும் குடும்ப உறுப்பினர்களின் டி என் ஏ சாம்பிள்களையும் சோதனைக்கு அனுப்பியும் நர்ஸால் ஒன்றும் புதிதாகக் கண்டு பிடிக்க முடியவில்லை.

 

உலகின் தலை சிறந்த விருதான நோபல் பரிசைப் பெற்றவர்; உலகின் தலை சிறந்த பல்கலைக் கழகங்கள் தந்த அறுபதுக்கும் மேற்பட்ட கௌரவ டாக்டர் பட்டங்கள்  பெற்றவர்; ஏராளமான விருதுகளைப் பெற்றவர். – அதைத் தனியே எழுதினால் ஒரு புத்தகமாகவே ஆகி விடும்!-  அப்படிப்பட்ட ஒரு விஞ்ஞானிக்கு – மரபணு ஞானிக்குத் – தன் சொந்த வாழ்க்கை பற்றிய மர்மம் ஒரு விசித்திரமான விஷயமாக ஆகி விட்டதை விதியின் கொடுமை என்று சொல்வதா?

 

தன் தந்தை ஒரு சர்வீஸ்மேனாக இருக்கலாம் என்று சொல்லிக் கொள்கிறார் அவர்.

 

அவரது வாயால் வந்த உண்மைகளை உலகின் தலை சிறந்த பத்திரிகைகள் பெரிதாக வெளியிட்டன.

 

சிலரது வாழ்க்கை விசித்திரமானது மட்டுமல்ல; மர்மமானதும் கூட என்பதற்கு நல்ல ஒரு உதாரணம் சர் பால் நர்ஸ்!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

விண்வெளி வீ ரர்களிலேயே மிகவும் துணிச்சல்காரர் என்ற பெயரெடுத்த ஜான் யங் தனது 87ஆம் வயதில் 5-1-2018 அன்று மரணமடைந்தார்.

 

அவரைப் பற்றிய ஏராளமான சம்பவங்களை நினைவு கூறும் விண்வெளி ஆர்வலர்கள் தங்கள் துக்கத்தை இணையதளத்திலும் பத்திரிகைகளிலும் பதிவு செய்து கொண்டே இருக்கின்றனர். 1972இல் ஏப்ரல் மாதம் சந்திரனில் இறங்கிய அபல்லோ 16 விண்கலத்தின் கமாண்டராக இருந்தவர் யங். சந்திரனின் ஆராயப்படாத புதிய பகுதியில் தனது ல்யூனார் ரோவரை இயக்கி சாதனை படைத்தார். சுமார் 200 பவுண்ட் எடையுள்ள சந்திரக் கற்களைக் குவித்தார்.

 

அவரைப் பற்றிய சுவையான சம்பவங்கள் பல உண்டு.

24-9-1930 இல் பிறந்த அவர் அமெரிக்க ஜனாதிபதி கென்னடியின் ‘சந்திரனுக்கு மனிதன் செல்ல வேண்டும்’ என்ற உரையைக் கேட்டு உத்வேகம் அடைந்தார். நாஸாவில் சேர்ந்தார். 42 ஆண்டுக் காலம் பணியாற்றினார். 6 முறை விண்வெளிக்கு ஏகினார்.

நாஸாவில் அவர் சேர்ந்தவுடன் உடா என்ற இடத்தில் உள்ள தியோகால் தொழிற்சாலையில் ராக்கட்டின் இயக்கத்தைச் சோதனை செய்யும் போது ராக்கட் பூஸ்டர் பயங்கர சத்தத்துடன் சீறிப் பாய்ந்து அனைவரையும் பயமுறுத்தியது. அவரது சகாவும் அவருடன் விண்வெளியில் பின்னர் கூடப் பறந்தவருமான கிப்பன் என்பவர் அவரை நோக்கி, “ என்ன யங், இந்த மாதிரி ராக்கட்டுகளில் ஒன்றில் பறக்க ஆசைப் படுகிறீர்களா?” என்று கேட்டார்.

அதற்கு உடனே யங், “ஒன்றென்ன, இரண்டில் பறக்க ஆசைப்படுகிறேன்” என்று பதிலளித்தார். அப்படியே விண்வெளியில் பறந்தும் காண்பித்தார்.

 

சந்திரனுக்கு மட்டும் மனித்ன் போனால் போதாது, இதர கிரகங்களுக்கும் சென்று கால் ஊன்ற வேண்டும் என்பதே மனித குலத்திற்கு அவர் அளித்த செய்தி. அவருக்கு அஞ்சலி செலுத்துவதில் நாமும் இணைவோமாக!

***

 

 

 

காளிதாசன் கவிஞனா? விஞ்ஞானியா? (Post No.3445)

b6570-magnet

Research Article Written by London swaminathan

 

Date: 13 December 2016

 

Time uploaded in London:-16-54

 

Post No.3445

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

 

உலகப் புகழ்பெற்ற கவிஞன் அவனுடைய ஏழு சம்ஸ்கிருதப் படைப்புகளில் கொடுத்த 1200+ அற்புதமான உவமைகளை உலகமே அறியும். உலகத்திலேயே அதிகமான, பொருத்தமான உவமைகளைப் பயன்படுத்தியதால் “உவமைக்கு காளிதாசன் என்ற  பொன்மொழி உண்டாயிற்று. அவனுடைய 1200க்கும் மேற்பட்ட உவமை, உருவக, உத்திகளில் 200 ஐ சங்க காலத் தமிழ்ப் புலவர்கள் பின்பற்றியதால் காளிதாசன் கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்தவன் என்று என்னுடைய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் நிறுவியுள்ளேன்.

 

இப்பொழுது அவன் தந்த வியத்தகு அறிவியல் உண்மைகளை அலசுவோம்:

 

காளிதாசன் பேசாத பொருளே இல்லை. அவனைப் போல இலக்கிய நயமும், என்சைக்ளோபீடியா போன்ற அறிவு வீச்சும் காண்பதற்கரிது.

 

இரண்டு விஷயங்களை காளிதாசன் எப்படிச் சொன்னான் என்பது இன்று வரை எவருக்கும் புரியவில்லை.

 

குமரசம்பவம் என்னும் காவியத்தில் முதல் பத்துப் பாடல்களில் இமய மலையின் அற்புத அழகை வருணிக்கும் போது அதை உலகத்தின் அளவுகோல் (ஸ்கேல்/ ரூலர்) என்கிறான். இன்று நவீன வசதிகள் இருப்பதால் அதை 1500 மைல் நீளம் உடையது என்பதை நாம் அறிவோம். அது விண்வெளியிலிருந்து தெரியும் விஷயங்களில் ஒன்று என்று விண்வெளிக் கப்பல் விட்டதால் அறிகிறோம். காளிதாசன் கி.மு முதல் நூற்றாண்டில், அதாவது 2000 ஆண்டுகளுக்கு முன் வசித்தவன். எப்படி இது இவ்வளவு நீளமானது? உலகின் அளவுகோல் என்று தெரிந்தது? என்பது வியப்பான விஷயமே. தென் அமெரிக்காவிலுள்ள ஆண்டீஸ் மலை சுமார் 4000 மைல் நீளமிருந்தாலும் அதெல்லாம் உலகின் பழைய நாகரீகம் இல்லாத இடங்களில் இருக்கிறது.

ஆனால் இமயமலையோ உலகின் முக்கிய நாகரீகங்களுக்கு இடையில் இருக்கிறது. வேறு யாரும் சொல்லாத விஷயத்தை அவன் போகிற போக்கில் சொல்லிச் செல்லுகிறான்.

 

இவனுடைய பூகோள அறிவுக்கு இது மட்டும் சான்றல்ல. ஈரான் நாட்டில் தேன் அடை போல தாடி வைத்திருக்கும் பாரசீகர் முதல், இந்தோநேஷியத் தீவுகளில் கிடைக்கும் வாசனைத் திரவியங்கள் வரை இவன் காவியத்தில் உள்ளன. தமிழ்நாடு-கர்நாடகத்திலுள்ள சந்தனமரப் பாம்பு முதல் பாண்டியன் – அகஸ்தியன் உறவு வரை பேசுகிறான். சங்கத் தமிழ் இலக்கியத்தில் கூட அகத்திய-பாண்டியன் உறவு பேசப்படவில்லை!

 

 

இவன் சொன்ன இரண்டாவது விஷயம் இமய மலை விஷயத்தைவிட வியப்பானது. விமானம் ஓட்டப் பயிற்சி செய்யும் பைலட் PILOTடுகள் முதல்தடவை பறக்கும்போதும் தரை இறங்கும் போதும் பயந்து விடுவார்கள். பூமியில் விமானம் வேகமாகத் தரை இறங்கும்போது நம் மீது வெகு வேகமாக மோத வருவது போல பூமி நம்மை நோக்கி விரைந்துவரும். இந்தக் காட்சியை காளிதாசன் வருணிக்கிறான். அவனுக்கு எப்படி இந்த அனுபவம் கிடைத்தது? மேலும் இது பற்றியும் மனதினால் இயங்கக் கூடிய விமானம் பற்றியும் பேசுவதால் அவனுடைய காலத்தில் இதுபற்றி நிறையபேருக்கு நல்லறிவு இருந்திருக்கவேண்டும்.

 

ae12d-gems

ஒளிவிடும் மரங்கள், பறவைகள் குடியேற்றம், இரும்பை இழுத்துக் கவரும் காந்தம், சூரிய ஒளியைக் குவித்து நெருப்பு உண்டாக்கும் சூரியகாந்தக் கல் (உருப்பெருக்காடி), பலூனில் பறத்தல் ஆகியவற்றைப் பற்றியும் பாடுகிறான்.

 

உலகில் இன்று ஏதாவது ஒரு நாட்டிற்குப் போக வேண்டும் என்றால் அந்த நாடு அல்லது நகரம் பற்றிய TOURIST GUIDE டூரிஸ்ட் கைட்-ஐ விலைக்கு  வாங்குவோம். இதை வெளியிட பிரபல கம்பெனிகள் இருக்கின்றன. உலகின் முதல் டூரிஸ்ட் கைட் TOURIST GUIDE  காளி தாசனின் மேக தூதம்தான். நூற்றுக்கும் மேலான பாடல்களில் “மேகமே நீ இதைப் பார் அதைப்பார்” என்று வருணிக்கிறான். அதே போல இலங்கையிலிருந்து சீதையை விமானத்தில் அழைத்துவரும்போது ராமன் வாயிலாக திமிங்கிலம் முதலியவற்றை வருணிக்கிறான். சைபீரியாவிலிருந்து வரும் பறவைகள் இமயமலை மீது பறக்க முடியாது. ஏனெனில் 20000 அடிக்கு மேல் உயரமுடையது. அவை எல்லாம் நீதி பாஸ் என்னும் கணவாய் வழியாக இந்தியாவுக்குள் நுழையும். இதையெலாம் பாடுகிறான் நம் கவிஞன்! இவனுடைய இலக்கிய நயத்தையும் சாகுந்தல நாடகத்தின் இனிமையையும் உலகம் அறியும். ஆனால் இவனுக்கு எல்லா துறைகளிலும் அறிவு இருந்தது; அவன் சகல கலா வல்லவன் என்பது பலருக்கும் தெரியாது.

 

திருமணமாகி புதுவீட்டுக்குச் செல்லும் பெண்ணுக்கு அவன் சொல்லும் அறிவுரை சாகுந்தலத்தில் உள்ளது . இவனுக்கு சைகாலஜியும் (Psychology)  தெரியும் என்பதற்கு அதுவே சான்று.

 

இரத்தினக் கற்கள், நகைகள், தங்கம், வெள்ளி, முத்து, பவளம் பற்றியும் இவன் பாடுகிறான்.(இவை பற்றியெல்லாம் தனித் தனி கட்டுரைகளை இதே பிளாக்கில் ஐந்து ஆண்டுகளாக வெளியிட்டதால் இங்கு குறிப்புகளை மட்டும் கொடுக்கிறேன்). காளிதாசனைப் படிக்காத ஒருவனுக்கு இந்திய இலக்கியம் பற்றியோ பண்பாடு பற்றியோ பேச 100 சதவிகித அருகதை கிடையாது. 50 முதல் 60 சதவிகித அருகதையே. இதையே நான் வட இந்தியர்களுக்கும் சொல்லுவேன். நீங்கள் காளிதாசனையும் வால்மீகியையும் வியாசனையும் படித்தாலும் சங்கத் தமிழ் இலக்கியத்தையும் அதற்குப்பின் வந்த திருக்குறள்- சிலப்பதிகாரம் ஆகிய இரண்டையும் படிக்காதவரை உங்கள் அறிவு 50 முதல் 60 சதவிகிதமே என்று சொல்லுவேன்.

a7747-best2bbird2bmigration

 

கீழேயுள்ள குறிப்புகளைக் கொண்டு நீங்களே நான் சொன்ன விஷயங்களை ஆராயலாம்:–

 

ரகுவம்சம்- Rv

குமார சம்பவம்- KS

மேகதூதம் -Mega

விக்ரம ஊர்வசீயம்- VU

மாளவிகா அக்னிமித்ரம் – MA

அபிஞான சாகுந்தலம் – AS

ருது சம்ஹாரம் – RS

 

விமான இயல்

Sakuntalam Act 1—9 (Read my article: Did Kalidasa fly in a space shuttle? Posted on 12 Sept.2014)

Sakuntalam Act 7—7/10; Ks2-45;Rv 13-68;13-76;13-79;14-20

 

 

பறக்கும் பலூன்

Rv 16-68

 

வானத்திலுள்ள மூவழிப்பாதை

 

Flight path Rv 13-18, 13-19

xxx

Picture saved with settings embedded.

விண்வெளி இயல்

பால்வெளி மண்டலம் (Milky way) Rv 13-2; 1-78; KS 4-37;1-28; Rv 12-85

 

Chitra constellation Rv 1-46, 13-76, 17-35 pole star 18-34;

Comet KS 2-32; AS 4; Mars vu 5-3

Pusya star Rv 18-32;

Venus KS 3-43;

Stars KS 2-19; RV 7-2;

Meteor Rv 16-83; 14-53;

Algol/Arundhati in Ursa Major Constellation: Rv 1-56

Rohini and Moon:AS 7-22; 3-12; VU 3-4; RV 14-40

 

xxx

பறவைகள் குடியேற்றம்

Kalidasa’s references of swan, cranes and Himalayan geese: Mega. 11,23, 59, 70,81.

Vikra. IV 2,3,4,6,20;31,32,33,3441,54

BIRD MIGRATION :Vikra IV 14 to 17

Kumara. 1-30 (Hamsa mala)

Ragu. IV 19,VIII 59, XIII-33, XVI 33, 56, XVII-75

Malavika.II-2

Rv 1-41

 

xxxx

நிலவியல் Geography and Geology

 

KS 1-10 (Description of the beautiful Himalayas)

Sub marine Fire (Vadamukagni/Badava:- AS 3-3; Rv 9-82; 11-75; 13-4;13-7.

Lot of references about rivers, especially Ganga and Yamuna

 

a99ba-iaf2bplane

xxxx

இரத்தினக் கற்கள்

 

Cat’s eye RS 2-15; Coral  RS 6-16; Conch shell RS 3-4; Crystal Purva Megam 54; Emeralds/Rubies-Rv 13-53; Gems-PM 15, KS 1-38, KS 5-43, KS 5-45, Rv 1-4, Rv 3-18, Rv 10-30, Rv 11-59, Rv 11-68, RV 17-63, VU 2-99, MA 5-18, AS 2-7, AS 2-10, AS 6-6, Sapphire Rv 18-42; Pearl Rv 6-7, UM 46, KS 1-44, KS 3-53, KS 6-6KS 7-89, Rv 6-28, Rv 9-44,Rv 13-54, Rv 16-18; Rubies KS 3-53; Sun stone Rv 11-21; Moon stone VU 5-11; Ivory PM 62

 

லென்ஸ் Magnifying Glass (Lens)

Sun stone Rv 11-21; AS 2-7

 

நாகரத்தினம் (Cobra Jewel)

KS 2-38, 5-43; RV 13-12, 6-49, 11-59, 11-68, 17-63, 10-7, 13-12, 17-63

RS 1-20,

xxxx

 
காந்தம் Magnet –

Rv-18-63; KS 2-59;

xxx

 

சுற்றுப்புற சூநிலையியல் Environmental concern

Don’t Cut even a poisonous tree

KS 2-55

xxxx

 

 

ஒளிவிடும் தாவரம் Bio Luminescent Plants-

KS 1-10; Rv 9-70

 

 

உள்ளவியல்/ மனவியல் Human psychology

Advice to newlyweds: AS 4-20; 4-21;4-22

xxx

 

—Subham—

பேய்களை ஆராய்ந்த விஞ்ஞானி (Post No 2563)

la-parapsicologa-y-sus-pr

Written by S Nagarajan

 

Date: 22  February 2016

 

Post No. 2563

 

Time uploaded in London :–  8-59 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

19-2-16 பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை.

 

பேய்களை ஆராய்ந்த விஞ்ஞானி ஹான்ஸ் பெண்டர்!

.நாகராஜன்

 

 

hans-bender-2

சந்தேகப் பேர்வழிகள் ஏன் சந்தேகப்படுகிறார்கள் என்றால், அவர்களுக்கு இன்னும் இது போன்ற ஒரு அனுபவம் கிடைக்கவில்லையே அதனால் தான்!

                                 – ஜேஸன் ஹாஸ்

சாதாரணமாக இயற்பியல், இரசாயனம்,உயிரியல், மருத்துவம் போன்றவற்றில் ஆய்வுகள் நடத்திய விஞ்ஞானிகளைப் பற்றி உலகம் நன்கு அறியும். ஆனால் பேய்கள், ஆவிகள் உலகம் போன்றவற்றை ஆராயும் விஞ்ஞானிகளுக்கு விளம்ப்ரமும் கிடைக்காது, பரிசுகளும் கிடைக்காது. இது நிதர்சனமான உண்மை. என்றாலும் பல விஞ்ஞானிகள் தங்கள் ஆர்வம் காரண்மாக இப்படிப்பட்டவற்றை ஆராய்வது உண்டு.

 

அப்படிப்பட்டவர்களுள் பேயை முறைப்படி ஆராய்ந்து ஏராளமான ஆவணங்களை உருவாக்கிய ஒரே விஞ்ஞானி என்ற பெருமையைப் பெறுபவர் ஹான்ஸ் பெண்டர் (Hans Bender) என்ற  ஜெர்மானிய விஞ்ஞானி ஆவார். (பிறப்பு 5-2-1907 மறைவு 7-5-1991). ஜோதிடத்திலும் இவருக்கு அதிகம் ஈடுபாடு உண்டு. அவரது நண்பரான தாமஸ் ரிங்குடன் ஜோதிடம் கேட்காமல் இவர் எந்த விஞ்ஞான மற்றும் சொந்தக் காரியங்களில் ஈடுபடுவதில்லை.

 

இவர் ஆராய்ந்த பேய் கேஸ்களில் உலகப் புகழ் பெற்ற ஒரு கேஸுக்கு ரோஸென்ஹெய்ம் கேஸ் என்று பெயர்.

 

 

பவேரியாவின் தெற்குப் பகுதியில் ரோஸென்ஹெய்ம் என்ற நகரில் சிக்மண்ட் ஆடம் என்ற ஒரு வக்கீல் வாழ்ந்து வந்தார். அவர் அலுவலகத்தில் 1967ஆம் ஆண்டு திடீரென்று அமானுஷ்யமான பல காரியங்கள் நடக்க ஆரம்பித்தன.

அரண்டு போன அவர் விஞ்ஞானி ஹான்ஸ் பெண்டரை நாடினார்.

 

அலுவலகம் வந்த பெண்டர் என்ன நடக்கிறது என்று கேட்டார். அந்த அலுவலகத்தில் நான்கு போன்கள் உண்டு. திடீர் திடீரென போன் அழைப்புகள் ஒலிக்கும். ஆனால் போனை எடுத்தால் மறுமுனையில் பதிலே வராது.  போனில் ஏதோ பழுது இருக்கிறதென்று நினைத்து ஆடம் எல்லா போன்களையும் புதிதாக மாற்றினார். ஆனால் மர்மமான போன் அழைப்புகள் தொடர்ந்தன. உடனே டெலிபோன் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டார். அங்கிருந்த எஞ்ஜினியர்கள் வந்து எல்லா வயர்களையும் ஆராய்ந்து அனைத்தும் சரியாகவே இருக்கின்றன என்று உறுதிபடத் தெரிவித்தனர்.

 

ஜெர்மனியில் 0119 என்ற நம்பர் அனைத்து அழைப்புகளையும் துல்லியமாகக் குறித்து எத்தனை நிமிடங்கள் பேசப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கும், இதை டாக்கிங் க்ளாக் (TALING CLOCK)  என்று அழைப்பர்.

 

இந்த பேச்சைக் குறிக்கும் கடிகாரத்தின் படி ஆடம்ஸுக்கு பில் அனுப்பப்பட்டது. அவர் அரண்டு போனார். அதாவது ஒரு நிமிடத்திற்கு அவர் 6 ‘கால்’களைப் பேசுவதாகத் தெரிவிக்கப்பட்டது! யாராலும் செய்ய முடியாத ஒரு அரிய காரியம் இது! ஒரு எண்ணை டயல் செய்து அடுத்தவர் மறுமுனையில் எடுக்கும் காலத்தைச் சற்று கவனித்தாலே நிமிடத்திற்கு ஆறு கால்களை யாராலும் பேச முடியாது.

1967 அக்டோபரில் கட்டிடத்தில் உள்ள பல்புகளும் பல்புகள் பொருத்தப்பட்டிருந்த அலங்காரக் கூடுகளும் ஆட ஆரம்பித்தன. திடீரென 90 டிகிரிகள் அவை திரும்பும்!

 

உடனே மீண்டும் மின் இணைப்பு சரி பார்க்கப்பட்டது. ஒரு வோல்டேஜ் மீட்டரும் புதிதாக பொருத்தப்பட்டது. பெரிய அளவிலான வோல்டேஜ் மாறுதல்கள் ப்யூஸை போக்கி விடும். ஆனால் அப்படி ஒன்றும் நிகழவில்லை!  அங்கிருந்த போட்டோகாப்பி மெஷினிலிருந்து மின்சாரம் கசிய ஆரம்பிக்கவே மின் இணைப்பையே துண்டித்து விட்டு ஜெனரேட்டர் மூலமாக மின் சக்தி பெறப்பட்டது. ஆனால் அப்போதும் இவை தொடர்ந்தன.

 

அனைத்தும் விசித்திரமாக இருந்தன. இவை அனைத்தையும் பொறுமையாகக் கேட்ட பெண்டர் தன் ஆராய்ச்சியைத் தொடங்கினார். நாளின் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே இவை நிகழ்வதை அவரது குறிப்பேடுகள் சுட்டிக் காட்டின.  தற்செயல் ஒற்றுமை போல ஆன்னி மேரி என்ற இளம் பெண் அங்கிருக்கும் போது மட்டுமே இவை நிகழ்ந்தன.

 

அவள் உள்ளே வந்தவுடன் இந்த அமானுஷ்ய செயல்கள் ஆரம்பிக்கும். அவள் சென்ற பின்னர் இவையும் நின்று விடும். ஆன்னியை விசாரிக்க ஆரம்பித்தார் பெண்டர். அவள் ஒரு உணர்ச்சிகரமான பெண் என்பதையும் தனது எஜமானனைக் கண்டால் அவளுக்கு அறவே பிடிக்காது என்பதையும் அறிந்தார் பெண்டர்.

 

1967 டிசம்பர் மற்றும் 1968 ஜனவரியில் இந்த அமானுஷ்ய செயல்கள் தீவிரமாக அதிகரித்தன. சுவரில் தொங்கும் காலண்டரின் பக்கங்கள் தாமாக டர்ரென்று கிழிந்து விழுந்தன! சுவரிலே தொங்கும் வண்ண ஓவியங்கள் தாமாகவே திரும்பிக் கொண்டன. 400 பவுண்டு எடையுள்ள ஓக் மரத்திலான ஒரு அலமாரி – சாதாரணமாக யாராலும் அசைக்கக் கூட முடியாதது –  சில அடிகள் தானாகவே நகர்ந்தது. ஆனால் கீழே பொருத்தப்பட்டிருந்த லினோலியம் சேதமடையாமல் புத்தம் புதிதாக அப்படியே இருந்தது. மேஜை டிராயர்கள் தாமாகவே திறந்து கொண்டன. பின்னர் டப்பென்று சத்தத்துடன் மூடிக் கொண்டன!

 

இதெயெல்லாம் படமாகவும் பிடித்தார் பெண்டர். அன்னி மேரி அந்த வேலையிலிருந்து நின்றவுடன் அனைத்து அமானுஷ்ய செயல்களும் நின்றன!

 

தான் சேகரித்த ஏராளமான ஆவணங்கள் மூலமாக இந்த அமானுஷ்ய செயல்கள் அனைத்தும் மர்மமான ஒரு ஆவியின் வேலை தான் என்று பெண்டர் கூறினார்.  அன்னி மேரியின் வெறுப்பும் எளிதில் உணர்ச்சி வசப்படும் தன்மையும் அவர் இருக்கும் போது அவர் மூலமாக இந்த சக்திகள் தூண்டப்பட்டன என்றும் அவர் கூறினார்.

 

இந்த கேஸைப் போல அறிவியல் ரீதியிலான ஆவணங்களுடன் கூடிய கேஸ் வேறொன்றும் இல்லை என்ற புகழுடன் படமாக பிடிக்கப்பட்ட கேஸும் இது தான் என்பதும் ஹான்ஸ் பெண்டருக்கு புகழை அள்ளித் தந்தது. 84 வயது வரை வாழ்ந்த பெண்டர் தன் வாழ்நாள் இறுதி வரை இந்த பேய் ஆராய்ச்சியை விடவில்லை!

IMG_3431

அறிவியல் அறிஞர் வாழ்வில்.. ..

ஆங்கிலேய பிரபுக்கள் பலர் கூடியிருந்த கூட்டம் ஒன்றில் ஒரு விஷயத்தின் மீது அலர்ஜியாக கடும் வெறுப்பைக் கொண்டிருக்க முடியுமா என்பதைப் பற்றிய பேச்சு வந்தது. இயற்பில விஞ்ஞானியான ஜிம்மர்மேன் (Zimmermann)  அப்படி இருப்பது ஒரு வகையான வியாதி என்று கூறினார். அங்கிருந்த பார்படோஸ் என்ற நகரின் கவர்னரின் மகனான வில்லியம் மாத்யூஸ் அப்படிப்பட்ட ஒரு வியாதி கொண்டிருப்பவர். அவருக்கு சிலந்தி என்றாலே அலர்ஜி. ஜிம்மர்மேன் அதைச் சுட்டிக் காட்டிய போது அனைவரும் சிரித்தனர. அதெல்லாம் ஒரு வியாதியே கிடையாது என்றனர். உடனே அதை நிரூபித்துக் காட்ட விஞ்ஞானி விழைந்தார். மனதில் எழும் இந்த வெறுப்பை ஒரு இயந்திர விளைவால் நிரூபிக்க முடியும் என்பது அவர் முடிவு.

அங்கிருந்தவர்களில் ஒருவரான லார்ட் ஜான் மர்ரே என்பவரை கறுப்பு நிற மெழுகில் ஒரு சிலந்தியைச் செய்யச் செய்தார். அந்தச் சிலந்தியை அனைவரும் பார்க்கும் படி செய்து விட்டு அவர் வெளியே சென்றார்.

 

பின்னர் திரும்பி வருகையில் தன் கையில் மெழுகிலான சிலந்தியை வைத்துக் கொண்டு கையை மூடியவாறே உள்ளே நுழைந்தார்.

 

அவரது மூடிய கையைப் பார்த்தவுடன் வில்லியம் மாத்யூஸின் கண்கள் சிவந்தன. நரம்புகள் புடைத்தன. மிகுந்த கோபத்துடன் ஆவேசமாக தன் இடையிலிருந்த கத்தியை உருவினார். அந்த சிலந்தியை அவர் கொண்டு வருவதாக எண்ணிய மாத்யூஸ்  மர்ரே மீது பாயப் போனார்.

நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த அனைவரும் அவர் மீது பாய்ந்து கத்தியைப் பிடுங்கினர்.

 

மாத்யூஸிடம் அவர் பார்த்தது மெழுகிலான ஒரு பொம்மை சிலந்தி தான் என்பதையும் மேஜை மீது வைக்கப்பட்ட சிலந்தியை அவரே தொட்டுப் பார்க்கலாம் என்றும் அனைவரும் கூறினர்.

வேகமாகத் துடித்த அவர் நாடித் துடிப்பு கொஞ்சம் கொஞ்சமாக சீரானது. சுயநிலைக்கு அவர் மெதுவாகத் திரும்பினார். ஆனால் சிலந்தியைத் தொட மறுத்து விட்டார்.சிலர் இன்னும் கொஞ்சம் மெழுகை எடுத்து அவர் முன்னாலேயே சிலந்தியைச் செய்து காட்டினர்.

 

இது போல அவரும் பொம்மையினால் சிலந்தியைச் சிறிது சிறிதாச் செய்து பார்த்து பின்னர் நிஜ சிலந்தியைப் பார்த்தால் அவரது அருவருப்பு போய் விடும் என்று ஜிம்மர்மேன் ஆலோசனை கூறினார்.

நமது ஊரில் கரப்பான்பூச்சியைக் கண்டால் அருவறுப்பு அடையாத பெண்கள் உண்டா என்ன?

******