
Post No. 8896
Date uploaded in London – – 6 NOVEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Compiled by Kattukutty
பழி யார் மீது???
தங்க நகை இல்லாமல்
தங்கைக்கு
திருமணம் என்றேன்
தங்கை
மறுத்து விட்டாள்
xxxxx

வரதட்சிணை இல்லாமல்
எனக்கு
திருமணம் என்றேன்
என் தாய்
மறுத்து விட்டாள்
xxxx
பெண் குழந்தை
ஒன்று போதும் என்றேன்
என் மனைவி
மறுத்து விட்டாள்
xxxx
பெண்ணுக்கு பெண்ணே
எதிரி என்றால்
பழி எங்கள் மீதா ??? – இ. ராமசாமி , கோட்டக்கரை
xxxx
வர தட்சிணை
மனைவியாகும் போது
கொடுத்தவள்,
மாமியாராகும்போது
வாங்கினாள் – முல்லைப்பூ அ.முருகையன் பாப்பா நாடு
xxxxx

அம்மாவின் துணையோடு
வரதட்சிணை வில்லெடுத்து
ஆசை அம்பெறிந்தான்
அந்த வேட்டைக்காரன்
அங்கம் நிறைய
தங்க நகைகளோடு
வலையில் விழுந்தது
ஒரு பெண் மான்!!! – கருணாகர பல்லவன்
xxxx
ஜாதி
விவாகத்திற்கு
கேட்பது
விபசாரியிடம்
கேளாதது – மா.சுப்பிரமணியன், சென்னை-84
கருவிலும்
கல்லறையிலும்
இல்லாத
வார்த்தை – க.சுவிதா, சென்னை- 4
xxxxxx

பெண் –நடிகையாக
அன்று கதையை
வைத்து சினிமா
இன்று சதையை
வைத்து சினிமா – உத்திராட்ச மணி, தாயார் தோப்பு
பெண்களும்
சேர்ந்து நடித்தனர்
ஆனால்
பார்ப்தென்னவோ
ஆண்கள் மட்டுமே – முகவை முத்துசாமி ,தொண்டி
உடையைக் குறைத்து
சுவருக்கு உடை
கொடுத்தாள்
போஸ்டராக – சி.என்.கணேசன் பெத்தூர்
இவள் உண்டானாலும்
தப்பு
குண்டானாலும்
தப்பு – வி.சி.கிருஷ்ண ரத்னம் காட்டாங்குளத்தூர்
xxxxxx

பெண் –விதவையாக
இளம் விதவை
பூச்சூடினாள்
பொம்மைக்கு – எல்.ரவி, செ. புதூர்
விதவைக்கு
வேலை கிடைத்தது
மல்லிகைப் பூ தோட்டத்தில்
மலர் பறிக்க – தீன தயாளன், ஓடைப்பட்டி
மலையாய் குவிந்த
எந்தக் கலர் சேலையும்
பிடிக்கவில்லை
குங்குமம் போன பிறகு -ஆங்கரை பைரவி,இலால் குடி
முகர்ந்தவனுக்கு
மூச்சுப் போனதால்
முல்லைப் பூவுக்கு
முக்காடு – ஐ.ஜெய் கணேஷ் நாகர் கோவில் – 2
வண்ண ரோஜாக்களுக்கு
நடுவில் வெள்ளை ரோஜா
கலர்சாயம் பூச
யாருமில்லையோ??? – சி.முட்லூர் செல்வ குமார் சென்னை-15
விதி
கொடுத்த
விவாக ரத்து – காரை தமிழ் செல்வன்
அடப்பாவிகளா
கைம்பெண்ணை
வெள்ளாடை கட்டச்
சொல்கிறீர்கள்
மல்லிகையும்
முல்லையும்
வெள்ளைதானே
அதை சூடிக்கச்
சொல்லாததேன்??? – குடந்தை கி.மனோகரன்
பூவைக்குள்
பூகம்பம்
பூ வைக்க
தடை
விதவை – செருவை.வே.சேகர்,ஓசூர்
வாழ்க்கைப் பாதையில்
விபத்துக்குள்ளான
உணர்ச்சியுள்ள ஊர்தி – கே. ராஜா, பாவக்கல்
சமுதாய மாலையில்
உதிர்ந்து
சடங்குச் சாக்டையில்
மிதக்கின்ற
பூக்கள் – விடியல் விரும்பி, சென்றாம் பாளையம்
பூக்களை
இழந்த
செடிகள் – மு.முத்துக்கிருஷ்ணன், கொங்கணாபுரம்
இனி கடல்
தேவையில்லை
உப்பு தயாரிக்க
எங்கள் கண்ணீரே
போதும் – பி. கவிச்செழியன், திருவையாறு 23
xxxxxxxxx

பெண் – விலை மாதாக
வாழ்வதற்காக
வாழ்க்கையை
இழந்தவர்கள்- சுமன் லடசுமணன்,சாயல்குடி
xxxx
காசு வாங்கினால்
விலை மாது
காசு கொடுத்தால்
கல்யாணப் பெண் – நீரோடை சந்தானம், தூத்துக்குடி
xxxx
வாழ்க்கையில்
தடம் புரண்ட
சரக்கு ரயில் – பி.என். ஜெய்சங்கர், திருவாரூர்
xxxx

தோகை விரிக்கக்
கூட
தொகையை
எதிர்பார்க்கும்
விசித்திர மயில் – தமிழவன், பாகலூர்
xxxx
தெருவோரம்
நிற்கும்
தபால் பெட்டி – ஆர்.சி.சந்திர மணி ஊத்துக்குளி ராயப்பட்டி
xxxx
வாழ்க்கைப் புயலில்
சிக்கி
தரை தட்டிய
கப்பல். – பி.என் .ஜெய்சங்கர்,திருவாரூர்
tags–
பெண், விதவை, பல கோணங்களில்

****