Written by S.NAGARAJAN
Date:16 October 2017
Time uploaded in London- 7–29 am
Post No. 4305
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
மஹாபாரதச் செல்வம்
விதுரர் கூறும் விதுர நீதி – 5
ச.நாகராஜன்
7
பெண்களிடம் அதிக மோகம்
சூதாட்டம்
வேட்டையாடுதல்
குடி
கடுஞ்சொல்
கொடிய தண்டனை
வீண் செலவு
இந்த ஏழையும் அரசன் விலக்க வேண்டும்.
(மற்றவர்களும் இதை விலக்க வேண்டும் என்பது உள்ளடங்கிய பொருள்)
8
வலியச் சென்று பிராமணர்களைத் திட்டுதல்,வெறுத்தல்
பிராமணர்களால் விரோதிக்கப்படுதல்
பிராமணர்களின் பொருளைக் கவர்தல்
பிராமணர்களைக் கொல்ல விரும்புதல்
பிராமணர்களைத் திட்டுவதில் மகிழ்ச்சி அடைதல்
பிராமணர்களைப் புகழும் போது துக்கமடைதல்
செய்ய வேண்டிய காரியங்களில் அவர்களை நினைக்காமல் இருத்தல்
அவர்கள் யாசிக்கும் போது பொறாமை அடைதல்
ஆகிய் எட்டும் ஒரு மனிதன் அடையும் நரகத்திற்கு முன் அறிகுறிகள்.
அறிவுடைய மனிதன் இந்த எட்டு வித தோஷங்களையும் நீக்க வேண்டும்.
*
நண்பர்களுடைய சேர்க்கை
அதிகமான பண வரவு
தனது பிள்ளை தன்னைத் தழுவிக் கொள்ளுதல்
தம்பதிகள் ஒற்றுமையுடன் இன்பம் அனுபவித்தல்
சரியான சமயத்தில் பிரியமான சல்லாபம்
தன்னுடைய கூட்டத்தார்களுடைய மேன்மை
நினைத்த பொருளை அடைதல்
ஜன சமூகத்தில் மரியாதை
இந்த எட்டும் மகிழ்ச்சிக்கு வெண்ணெய் போன்றவனவாகக் காணப்படுகின்றன.
*
அறிவு
நற்குடிப் பிறப்பு
அடக்கம்
கல்வி
பாராக்கிரமம்
மிதமான வார்த்தை
சக்திக்குத் தக்கபடி தானம்
செய்ந்நன்றி அறிதல்
ஆகிய எட்டும் குணங்களும் மனிதனை பிரகாசிக்கச் செய்கின்றன.
9
ஒன்பது துவாரங்களை உடையதும்
வாதம், பித்தம், கபம் என்ற மூன்றையும் தூணாக உடையதும்
சப்தம் முதலிய ஐந்து சாட்சிகளுடன் கூடியதும்
ஜீவன் வசிக்கின்றதுமான இந்த உடல் ஆகிய வீட்டின் தத்துவத்தை எவன் ஒருவன் அறிகிறானோ
அவனே சிறந்த அறிவாளி.
10
பத்துப் பேர்கள் தர்மத்தை அறிகிறதில்லை.
ஓ! திருதாக்ஷ்டிரனே! அவர்கள் யார் என்பதைத் தெர்நிது கொள்ளும்.
கள் குடித்தவன்
அஜாக்கிரதை உடையவன்
பைத்தியம் பிடித்தவன்
களைப்புற்றவன்
கோபக்காரன்
பசியுள்ளவன்
அவசரப்படுகின்றவன்
கஞ்சன்
பயங்கொண்டவன்
காமவெறி பிடித்தவன்
ஆகிய பத்து பேரும் தர்மத்தை அறியார். ஆகையால் பண்டிதனானவன் இந்த விஷயங்களில் விழக் கூடாது.
****