ஆலயம் கட்டுவதனால் ஏற்படும் பலன்கள்! விபூதி மஹிமை (Post.10,198)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,198

Date uploaded in London – 11 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

புராணத்துளிகள் மூன்றாம் பாகம்-அத்தியாயம் 13 கட்டுரை எண் 10004 வெளியான தேதி

22-8-2021

புராணத்துளிகள் : மூன்றாம் பாகம் – அத்தியாயம் 14

(46 முதல் – 50 முடிய)

ச.நாகராஜன்

46. ஆலயம் கட்டுவதனால் ஏற்படும் பலன்கள்!

அக்னி தேவதை கூறுகிறது:
நான் இப்போது வாசுதேவர் மற்றும் இதர தேவதைகளுக்கு ஆலயம் அமைப்பதன் பலன்களைக் கூறுகிறேன்.

கடவுளரின் கோவில்களை அமைக்க ஒருவர் ஆசை கொண்டால் அவருக்கு ஆயிரம் பிறவிகளில் அவர் செய்த பாவம் போய்விடும். யாருக்கு ஆலயம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் உதிக்கிறதோ அவர்களுக்கு நூறு பிறவிகளில் செய்த பாவம் நீங்கி விடும். ஸ்ரீ கிருஷ்ணருக்கு கோவில் அமைப்பதை அங்கீகரிக்கும் ஒருவரும் அவரது பாவங்களிலிருந்து விடுபடுவதோடு அச்சுத (விஷ்ணு) லோகத்திற்குச் செல்வார். ஹரிக்கு கோவில் ஒன்றை அமைக்கும் ஒருவர் அவரது ஒரு லட்சம் மூதாதையருக்கு சென்ற காலத்திலும் எதிர்காலத்திலும் விஷ்ணு லோகத்தை அளிக்கிறார். விஷ்ணுவிற்குக் கோவில் கட்டும் ஒருவர் அவரது மூதாதையரின் ஆவிகள் விஷ்ணு லோகத்தில் தங்கள் பாவங்கள் அனைத்தும் நீங்கப் பெற்று மிகவும் கௌரவிக்கப்பட்டவர்களாய் அங்கேயே இருக்கின்றனர். தேவதைக்கு கோவில் அமைக்கப்படும் போது அப்படி அமைப்பவருக்கு பிராமணரைக் கொன்ற பாவம் உள்ளிட்ட அனைத்தும் போய் விடும்.

அக்னி புராணம் அத்தியாயம் 38- ஸ்லோகம் 1 முதல் 5 முடிய

47. நவநிதிகள் யாவை?

பத்ம, மஹாபத்ம, மகர, கச்சப, குமுத, நந்த, பத்ம, சங்க, பத்மினி ஆகிய இவையே நவ நிதிகளாகும்

 அக்னி புராணம் அத்தியாயம் 41 – ஸ்லோகம் 14

48 விபூதி தாரண மஹிமை

நாராயணர் கூறுகிறார்:

ஒரு நாளாவது ஒருவன் பஸ்மம் (திருநீறு/விபூதி) தரிப்பானாயின் அவனுக்குண்டாகும் புண்ணிய பலத்தைச் சொல்கிறேன், கேட்பாயாக:- என்னவெனில்  அவன் மஹாபாதகங்களைச் செய்திருப்பின் அவைகளும் வேறு பாதகங்களும் நசித்துப் போகும். இது சத்தியம்! சத்தியம்! சந்தேகமில்லை.

முக்தி என்னும் ஸ்திரீயை வசீகரம் செய்து கொள்ள வேண்டியவனுக்கு சிவலிங்கம், ருத்திராக்ஷம், பஞ்சாக்ஷரம், பஸ்மம் என்னும் இவைகள் ஔஷதங்களாம். பஸ்மோத்தூளனமுள்ளவன் மூர்க்கன் ஆனாலும் பண்டிதன் ஆனாலும் அவன் எவ்விடத்தில் புசிக்கின்றானோ அவ்விடத்தில் ரிஷபக் கொடியை உடைய பரமேஸ்வரன் தேவி ஆகியோரோடு புசிக்கிறான்

தேவி பாகவதம்,பதினொன்றாம் ஸ்கந்தம் அத்தியாம் 13

49. கிருஷ்ணர் தருமருக்கு சிவபூஜை பற்றிக் கூறியது!

பசியுடன் வந்த துர்வாஸ முனிவரை கிருஷ்ணரின் அருளால் திருப்திப் படுத்தி அனுப்புகிறார் தர்மர்.

துர்வாஸ முனிவர் திருப்தியுடன் தர்மரை விட்டு அகன்றவுடன் தருமர் கிருஷ்ணனின் பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார்.

“கிருஷ்ணா, உன் அனுக்ரஹம் மட்டும் இல்லாதிருந்தால் என் நிலைமை மோசமாகப் போயிருக்கும். துர்வாஸரிடம் சாபம் பெறுவதைக் காட்டிலும் அவர் வருவதற்குள் உயிரை விட்டிருப்பேன்” என்றார்.

உடனே கிருஷ்ணன், “ தருமா! சிவபெருமானுடைய அனுக்ரஹம் தான் காரணம். துவாரகையில் இருக்கும் போது உபமன்யு முனிவர் எனக்குச் சிவ பூஜையை உபதேசித்தார்.வடுக கிரியில் ஏழு  மாதம் தீக்ஷை பெற்று சிவபூஜை செய்து தியானித்தேன். சிவனும் எனக்கு தரிசனம் தந்து சத்ருக்களை வெல்லும் சக்தியை அளித்தார். நீங்களும் சிவபூஜை செய்யுங்கள். அவர் அனுக்ரஹத்தால் உங்களுக்கு வரும் துன்பங்கள் பனி போல நீங்கும். எனக்கு அருள் புரிந்ததன் காரணமாக சிவபிரான் அங்கே வில்வேஸ்வரர் என்ற பெயரில் எழுந்தருளியிருக்கிறார்” என்றார்

  • சிவ புராணம் அர்ஜுனன் பாசுபதாஸ்திரம் பெறும் அத்தியாயம்

50. ஆதிசைவர் தோற்றம்!

சைவர்கள் ஏழு வகையானவர்கள் ஆவர்.

  1. அநாதி சைவர் 2) ஆதி சைவர் 3) மஹான சைவர் 4) அநு சைவர் 5) அவாந்தர சைவர் 6) பிரவர சைவர் 7)  அந்ய சைவர்.

இவர்களில் அநாதி சைவர் சிவபிரானே.

ஆதி சைவர் எனப்படுவோர் சிவபிரானின் ஊர்த்வ முகத்திலிருந்து தோன்றியவர்கள் ஆவர்.

கௌசிகர், காசியபர், பரத்வாஜர், அத்திரி, கௌதமர் ஆகிய ஐந்து முனிவரும் சதாசிவனின் பஞ்ச முகங்களால் தீக்ஷை செய்யப்பட்டவர்களாம். அவர்கள் குலத்தில் பிறந்தவர்களே ஆதி சைவர்கள் ஆவர்.

***

புராணத் துளிகள் மூன்றாம் பாகம் முற்றிற்று.

INDEX

ஆலயம் கட்டுவதனால் ஏற்படும் பலன்கள், நவநிதிகள், விபூதி தாரண மஹிமை, கிருஷ்ணர் கூறிய சிவ பூஜை மஹிமை, ஆதிசைவர் மஹிமை.

tags- ஆலயம் கட்டுதல்,  பலன்கள், நவநிதிகள், விபூதி , ஆதிசைவர் , மஹிமை.

விபூதியின் மஹிமை! – 1 (Post No.7541)

Vibhuti Valluvar

Written  by S Nagarajan             

Post No.7541

Date uploaded in London – – 6 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ச.நாகராஜன்

விபூதி எனப்படும் திருநீறு சைவர்கள் தரிக்க வேண்டிய முக்கியமான ஒன்று.

“ஒரு நாளாவது ஒருவன் பஸ்மத்தைத் தரிப்பானாயின் அவனுக்குண்டாகும் புண்ணியபலத்தைச் சொல்கிறேன், கேட்பாயாக : என்னவெனில் அவ்ன் மகாபாதகங்களைச் செய்திருப்பின் அவைகளும் வேறு பாதகங்களும் நசித்துப் போய்விடும். இது சத்தியம்! சத்தியம்!! சந்தேகமில்லை”

என்று இப்படி நாராயணர், நாரதரிடம் கூறிய் ஆச்சரியகரமான உரை தேவி பாகவதத்தில் இடம் பெறுகிறது.

தேவி பாகவதம், பதினொன்றாம் ஸ்கந்தத்தில் 11ஆம் அத்தியாயம் மூவகை பஸ்மம் பற்றி விளக்குகிறது.

12,13,14 ஆகிய அத்தியாயங்கள் பஸ்ம மகிமையை மிக விரிவாக விளக்குகின்றன.

15ஆம் அத்தியாயம் பஸ்மம் தரிக்கும் முறைகள் பற்றிய விளக்கத்தை அளிக்கிறது.

ஸ்கந்தபுராணமோ சூத சம்ஹிதையில் யக்ஞ வைபவ காண்டத்தில் (29ஆம் அத்தியாயம்) திருநீற்றின் மகிமை பற்றிக் கூறுகிறது.

அதை இங்கு சுருக்கமாகக் காண்போம்:

மஹாபஸ்மம், பஸ்மம் என்று விபூதி இரு வகைப் படுகிறது.

பாவங்களை எல்லாம் நாசம் பண்ணுவதால் அதற்குப் பஸ்மம் என்று பெயர்.

ஞானத்தைக் கொடுத்து மஹாபாவங்களை எல்லாம் நாசப்படுத்துவதால் சிவபெருமானே மஹாபஸ்மம் எனப்படுவார்.

அந்த மஹாபஸ்ம சொருபத்தை அடைந்தவர்களுக்கு தவம் முதலியவற்றினால் யாதொரு பயனும் இல்லை.

மஹாபஸ்ம சொரூபம் விளங்கப் பெற்றவன் சிவனே ஆவான்.

மஹா பஸ்ம ஞானம் அடைவதையே பெரும் பயன் என்று வேதம் முதலிய நூல்கள் கூறுகின்றன.

சிரௌதம், ஸ்மார்த்தம், லௌகிகம் என்று  பஸ்மம் மூன்று வகைப்படும்.

இதில் சிரௌதம், ஸ்மார்த்தம் ஆகிய இரண்டும் அந்தணர்களுக்கே உரியன.

லௌகிகம் மற்ற எல்லோருக்கும் ஆகும்.

ஜாபாலோபநிஷத் மந்திரங்களினால் உத்தூளனம் செய்து கொண்டு, பஞ்சபிரம மந்திரங்களால் நீர் விட்டுக் குழைத்துத் திரிபுண்டரம் தரித்துக் கொள்ள வேண்டும்.

மேதாவி முதலிய மந்திரங்களால் பிரம்மச்சாரி அணிய வேண்டும்.

சந்யாசி பிரணவ மந்திரத்தால் (ஓம்) அணிவது தகுதி.

மந்திரங்களுக்கு அதிகாரமில்லாதவன் மந்திரம் இல்லாமலேயே தரித்தல் வேண்டும்.

விபூதியை உத்தூளனமாகவும் திரிபுண்டரமாகவும் தரித்தல் ஞானாங்கமாகும் என்று வேதங்கள் சொல்லும்.

பாசுபத விரதத்தை அனுஷ்டிப்பவன் மெய்ஞானத்தை அடைந்தவனாவான் என கைவல்ய உபநிடதம் கூறுகிறது.

முக்தியை விரும்புவபவர்கள் விபூதியை எப்போதும் தரிக்க வேண்டும்.

உயிரைக் காப்பாற்றல், சுபம், ஸ்நானம், தானம், தவம், யாகம் எல்லாம் திருநீறு என்று வேதங்கள் கூறுகின்றன.

திருமால், பிரமன்,இந்திரன், தேவர்கள்,இலட்சுமி, சரஸ்வதி, இந்திராணி, அரம்பையர்கள், யட்சர், கந்தர்வர், ராக்ஷஸர், அசுரர், முனிவர்கள் ஆகிய இவர்களில் விபூதியை உத்தூளனமாகவும் திரிபுண்டரமாகவும் தரியாதவர் யார்?

திருநீறு அணியாதவர்க்கு ஞானமில்லை.

அவர்கள் கோடி ஜன்மம் எடுத்தாலும் சம்ஸார பந்தம் ஒழியார்; பாவிகள் ஆவார்! நரகத்தில் வீழ்ந்து வருந்துவர்.

வர்ணாசிரம தர்மம் தரும் பலனையும் அவர்கள் அடைய மாட்டார்கள். அவர்கள் செய்யும் புண்ணியமும் பாவமாகும்.

பல ஜன்மங்களிலும் பாவம் செய்தவர்களுக்கு விபூதியில் வெறுப்பு உண்டாகும்.

paramam pavitram Bhaba Vibhutim

விபூதியை விரும்பாதவர்கள் அனைவரும் மஹாபாவிகள் என்று

தெரிந்து கொள்ள வேண்டும்.

திருநீற்றின் மகிமையை ஒருவராலும் சொல்ல முடியாது.

இப்படி ஸ்காந்த புராணம் அழுத்தமான வார்த்தைகளால் விபூதி அணிவதன் அவசியத்தையும் அதன் மகிமையையும் விளக்குகிறது.

அடுத்து தேவி பாகவம் கூறும் மகிமைகளைச் சற்றுப் பார்ப்போம்.

  • தொடரும்

****