Written by London swaminathan
Date: 17 APRIL 2017
Time uploaded in London:- 16-50
Post No. 3826
Pictures are taken from various sources; thanks.
contact; swami_48@yahoo.com
பிராமணர்களை ஆறு தொழில்கள் செய்வோர் என்று சங்கத் தமிழ் நூல்களும், தமிழ் வேதமாகிய திருக்குறளும் (560) போற்றுகின்றன. அது என்ன ஆறு தொழில்கள்?
1.வேட்டல் (வேள்விகளை/யாக யக்ஞங்களை செய்தல்)
2.வேட்பித்தல் (செய்துவைத்தல்)
3.ஓதல் (வேத அத்யயனம் செய்தல்)
4.ஓதுவித்தல் (ஏனையோருக்கு சொல்லிக்கொடுத்தல்)
5.ஈதல் (தானம் கொடுத்தல்)
6.ஏற்றல் (தானம் வாங்குதல்)
இதை சம்ஸ்கிருதத்தில் யஜன, யாஜன, அத்யயன, அத்யாபன, தான, பிரதிக்ரகம் என்பர்.
கிருத யுகத்தில், பிராமணர்கள், ஆறு தொழில்களை மட்டும் செய்துவந்தனர்.அதற்குப் பின்னர் வந்த யுகங்களில் அமைச்சர் தொழில், போர்த் தொழில் முதலிய பல தொழில்களைச் செய்ததை நாம் மஹாபாரதம் மூலம் அறிகிறோம். கலியுகத்திலோ அவர்கள் செய்யாத தொழில் இல்லை!
தமிழகத்தைப் பொறுத்த மட்டில் பிராமணர்கள் தூது போகும் தொழிலைச் செய்ததையும் சங்க இலக்கியத்தின் மூலமும், தொல்காப்பியத்தின் மூலமும், அறிகிறோம். அகநானூற்றில் வரும் செய்தி புதுமையானது. வேள்வி (யாக, யக்ஞங்கள்) செய்யாத பார்ப்பன ஜாதி சங்குகளை அறுத்து வளையல் செய்த விஷயத்தை அது சொல்கிறது.
“வேளாப் பார்ப்பான் வாளரந்துமித்த
வளைகளைந்து ஒழிந்த கொழுந்தின் அன்ன,
தளை பிணி அவிழா, கரி முகப் பகன்றை
………………………………..”
–அகநானூறு 24, ஆவூர் மூலங்கிழார்
பொருள்:–
“வேள்வியைச் செய்யாத பார்ப்பான் கூரிய அரத்தால் அறுத்தெடுத்த வளைகள் போக, மிஞ்சிய சங்கின் தலையைப் போன்ற கட்டமைந்த பிணிப்பு அவிழாத வலப்பக்கம் சுரிதலையுடையன பகன்றையின் அரும்புகள். அவை மலரும் காலமான…………….”
சிவபெருமானையே உனக்கு குலம் கோத்திரம் ஏதேனும் உண்டா? என்று கேள்வி கேட்ட நக்கீரனார் ஒரு வேளாப் பார்ப்பார் என்பர்.
“சங்கறுப்பது எங்கள் குலம், சங்கரனார்க்கு ஏது குலம்.
நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே”
என்று சொன்னதாக வரலாறு.
காயத்ரீ சொல்லாதவர் விராத்யர்கள்
பிராமணர்கள் 5 வயதிலும் க்ஷத்ரியர்கள் 6 வயதிலும் , வைஸ்யர்கள் 8 வயதிலும் பூணூல் போட்டுக்கொண்டு காயத்ரீ மந்திரத்தை உபதேசம் பெற வேண்டும். அப்படித் தவறினால் முறையே 16, 22, 24 வயது வரை அவர்கள் உபதேசம் பெறலாம். அப்படிச் செய்யாவிடில் அவர்கள் காயத்ரீ மந்திரத்தைச் சொல்லும் உரிமையை இழந்து விடுவார்கள் அவர்கள் விராத்யர்கள் என்று அழைக்கப்படுவர்-(மனு ஸ்ம்ருதி 2-37/40)
பிராமண, ஷத்ரிய, வைஸ்ய மக்கள் அவர்கள் ஜாதிப் பெண்களையே மணந்து கொண்டு பெற்ற பிள்ளைகள் சமயச் சடங்குகளைக் கைவிட்டு, காயத்ரீ சொல்லாமல் இருந்தால் அவர்கள் விராத்யர்கள் என்று அழைக்கப்படுவர் (மனு 10-20).
நாடோடியாகச் சுற்றும்யோகிகள், சித்தர்களையும் வேத நூல்கள் விராத்யர்கள் என்று அழைத்தன (குறிப்பாக அதர்வ வேதம்). அவர்கள் இப்படி வழித வறிப்போனாலும் அவர்கள் தாய் மதத்துக்குத் திரும்பி வர வேத நூல்களில் வழி செய்யப்பட்டுள்ளன. ஆகையால் இவர்கள் சமய அல்லது இன விரோதிகள் அல்ல. வழிதவறி வேறு சம்பிரதாயத்துக்கு சென்றவர்களே.
மாட்டு வண்டியில் இசைக் கலைஞர்களுடனும் காமக் கிழத்திகளுடனும் செல்லும் விராத்யர்கள் பற்றி அதர்வண வேதம் செப்பும்.
தமிழ் சித்தர்கள், பைராகிகள் முதலியோரும் எந்த விதி முறைகளையும் பின்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
My old article on the same subject:–
Who are Vratyas (outlaws)? Research Article No. 1794; 11th April 2015
—Subham–