வேதத்தில் விளையாட்டுகள் ! (Post No.8866)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8866

Date uploaded in London – –28 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வேதகாலத்தில் மக்கள் இன்பமாக வாழ்ந்தனர். பெண்களும் பொது இடங்களுக்குச் சென்று ஆடிப்பாடி மகிழ்ந்தனர். பாணினி 2700  ஆண்டுகளுக்கு முன் எழுதிய இலக்கண நூலிலும் அதன் உரைகளிலும் பல புதிய — அதாவது இப்போது வழக்கொழிந்த — விளையாட்டுகளைக்  காண்கிறோம் .

வேத கால மக்களின் முக்கியத் தொழில் விவசாயம், தேர்கள் செய்யும் தச்சசு வேலை, கால்நடை- குதிரை வளர்ப்பு, போர்த் தொழில், ஆயுத உற்பத்தி முதலியன ஆகும்.

அவர்கள் பொழுது போக்கச் செய்தவை – சூதாட்டம், ஆடல், பாடல், இன்னிசைக் கருவிகள் வாசித்தல், தேர் ஓட்டல், தேர் பந்தயம்/ ரதம் ஓட்டும் போட்டி, BOARDS GAMES போர்டு/ அட்டை விளையாட்டுகள்– அதாவது சொர்க்கப்படம் — பாம்பு-ஏணி SNAKES AND LADDER படம் உள்ள அட்டைப்பட விளையாட்டுகள், பல்லாங்குழி முதலியன.

சூதாட்டத்தின் தாக்கத்தை மஹாபாரதம்  வரை காண்கிறோம். நள- தமயந்தி சரிதத்தில் படிக்கிறோம். புறநானுற்றில்  பிராமணனும் மன்னனும் ஆடிய வட்டு ஆட்டத்தில் ஒருவர் மீது ஒருவர் பகடைக் காய்களை எரிந்து கோபம் அடைந்த பாடல் உளது. திருவள்ளுவரோ பத்து குறள்களில்  சூதாட்டம் பற்றி எச்சரிக்கிறார் ;ஆக, இமயம் முதல் குமரி வரை சூதாட்டம் ஆதிக்கம் செலுத்தியது.

உலகின் மிகப்பழமையான புஸ்தகம் ரிக்வேதம்; ஜெர்மானிய ஹெர்மன் ஜாகோபியும் இந்திய சுதந்திர சிற்பி பாலகங்காதர திலகரும் 6000 முதல் 8000 ஆண்டுப் பழமையானது என்று நிரூபித்துள்ளனர்; அதில் சூதாட்டத்தில் பணம் இழந்த ஒரு மனிதன் புலம்பு, புலம்பு என்று புலம்பி, உலகில் சிறந்தது வேளாண்மையே என்று விவசாயத்துக்குத் திரும்பி  வந்ததை ரிக்வேத 10-34-13 சூதாட்டப் பாடல் காட்டுகிறது; உலகின் முதல் சொற்பிறப்பியல் புஸ்தகம் (ETYMOLOGY எடிமோலஜி )எழுதியவர் யாஸ்கர். உலகில் கிரேக்கர்கள்  புஸ்தகம் எழுதுவதற்கு முன்னால் , அவர் சொற்பிறப்பியல் அகராதிக்கே போய்விட்டார். அவ்வளவு பழமையானது சம்ஸ்கிருதம். அவரும் சூதாட்டம்  ஒழிக , விவசாயம் வாழ்க என்று நிருக்தம் 8-3 ல் கதைக்கிறார்.

வள்ளுவனும் உலகிற்கு ஆணி, வேளாண்மை என்று சொல்லி பத்து பாக்களில் விவசாயம் ஜிந்தாபாத் என்று சொல்லிவிட்டு, மேலும் 10 குறட் பாக்களில் சூதாட்டம் மர்தாபாத் என்று வசை பாடுகிறார். ஆக, சூதாட்டம் என்னும் விளையாட்டு இந்துக்களின் வாழ்வில் கொடிகட்டிப் பறந்ததைப்  பார்க்கிறோம் .

இதற்கு அடுத்த படியாக வரும் விளையாட்டுகள் குதிரைப் பந்தயம், தேரோட்டும் பந்தயம். 

குதிரைப் பந்தயம் சென்னை கிண்டி முதல் உலகின் மிகப்பெரிய  நாடுகள் வரை நடைபெற்றது. இப்பொழுது சூதாட்ட பெட்டிங் BETTING — பந்தயப்பணம் கட்டும் – கடைகள் உலகின் மிகப்பெரிய நகரங்களில் பேட்டைதோரும் உளது. இதைத் துவக்கி வைத்தவர்களும் இந்துக்களே. ‘இம்’ என்னும் முன்னே 700 காதம் சென்ற SUPER FAST சூப்பர் பாஸ்ட் ரதங்களை , நள   தமயந்தி சரிதத்தில் படிக்கிறோம். ‘வைகலும் எண் தேர் செய்த தச்சர்’கள் பற்றி புறநானுற்றில் பயில்கிறோம்.; தச்சர் என்பது ஸம்ஸ்க்ருதச் சொல்..

அகநாநூற்றில் காதலியைக் காணவரும் காதலர்கள் SUPER FAST SPEED சூப்பர் பாஸ்ட் ஸ்பீடில் வண்டியை ஒட்டும்படி டிரைவர்களுக்கு கட்டளை இடுவதையும் எழுதி வைத்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் — காந்தார- கேகய — வீராங்கனை கைகேயி, தசரதன் ரதத்துக்கு சாரதியாக இருந்து வெற்றிவாகை சூடி , இரண்டு வரம் பெற்று, அதை ‘மிஸ்யூஸ்’ MISUSE  பண்ணி ராமாயணக் கதையை எழுதச் செய்ததையும் நாம் அறிவோம்.  ஆக இமயம் முதல் குமரி வரை ‘பக்கா’ ரோடுகள் இருந்ததும் அதில் ஜப்பானிய BULLET TRAIN புல்லட் ட்ரையினை விட அதி வேகத்தில் நம்மூர்க்கார்கள் சென்றதையும் உலகிற்கே சொன்னோம். அப்பொழுது எகிப்தியர்களும், பாபிலோனியர்களுக்கும் குதிரைக்கும் ரதத்துக்கும் ஸ்பெல்லிங் SPELLING  கூடத் தெரியாது என்பதை சரித்திர வல்லுநர்கள் புகல்வர் . மாயா நாகரீக மக்களுக்கோ சக்கரம்/WHEEL என்பதே தெரியாது என்றும் பகர்வர்.

ரிக்வேதம் 10-102 பாடலில் ‘ரேக்ளா ரேஸ்’ போல அதிவேக மாட்டுவண்டி CHASE சேஸ் ஒன்றைப் படிக்கலாம். ஜேம்ஸ்பாண்ட் படங்களில் வரும் CAR CHASE கார் சேஸ் போன்றவற்றை விட அதிவேகத்தில் மாட்டு வண்டி பறந்ததையும் அந்த வீரனின் மனைவியும் வண்டி யி ல் சென்றதால் காற்றில் அவளுடைய ஆடை பறந்ததையும் படித்து மகிழலாம் ;

இது பற்றி வேதங்களுக்கு விளக்க உரை எழுதிய சாயனர் ஒரு கதை சொல்கிறார். முத்கலன் என்பவருடைய பசு, காளை மாடுகளைத் திருடர்கள் திருடிச் சென்றனர். அவனது  மனைவி முத்கலானி  வேகமாக காளை  வண்டியை ஓட்டி ச் சென்றாள் . முதக்கலன் தன்னுடைய  ‘கதை’–யைத் தூக்கி எறிந்து  திருடர்களை விரட்டினான். அக்காலத்தில் இந்து தம்பதியர்கள் எவ்வளவு வீரர்களாகத் திகழ் ந் தனர் என்பதற்கு இப்பாட்டு எடுத்துக்காட்டு. வண்டி ஓட்டுதல் , ரதம் ஓட்டுதல் முதலியனவும் ஆண் பெண் பங்கேற்புடன் நடைபெற்றன.

அந்தக்  காலத்தில் க்ஷத்ரியர்களாகப் பிறந்தால் வீரத்தை நிரூபித்தால்தான் பெண் கொடுப்பார்கள். கிருஷ்ணன், ஜல்லிக்கட்டில் பங்கு கொண்டு ஏழு காளைகளை அடக்கி நப்பின்னையை கல்யாணம் கட்டினான். அதைத் தொடர்ந்து யாதவ குல மாதர் அனைவரும் காளையை அடக்கியவரை மக்க  விரும்பியதை கலித்தொகைப் பாடல்கள் காட்டுகின்றன. இது போல குதிரைப் பந்தயத்தில் வெற்றி பெறுவோருக்கே பெண் கொடுத்தனர் வடக்கத்திய இந்துக்கள். சில நேரங்களில் யாரும் தூக்க முடியாத சிவன் வில்லைத் தூக்கி நாண்  ஏற்றிய ராமனுக்கு சீதையைக் கொடுத்ததையும் டில்லியில் நடந்த உலகத்தின் முதல் ஒலிம்பிக் போட்டியில் வெற்றிபெற்ற அர்ஜுனனுக்கு திரவுபதி கிடைத்ததையும் பார்க்கலாம். வில்வித்தை முதலிய விளையாட்டுகள் அடங்கிய ஒலிம்பிக் போட்டியை நாம் 5200 ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தியதை மஹாபாரதம், பாகவதம் முதலிய நூல்கள் காட்டும்.

குதிரைப் பந்தயத்தில் எல்லைக் கம்பம் ஒன்று இருக்கும் அதன் பெயர் கார்ஸ்ம என்று சாயனர் விளக்குகிறார் — RV. 1-116- 17

சவித் புதல்வியின் பெயர் சவிதா அல்லது சூர்யா . ரத போட்டியில் யார் வெல்வரோ அவருக்கே சவிதா/ சூர்யா கிடைப்பாள் என்று அறிவிக்கப்படுகிறது; எல்லாக் கடவுளரும் போட்டியில் பங்கேற்றனர். இறுதியில் அஸ்வினி தேவர்கள் வெற்றி பெற்றனர். உடனே எல்லோரும் சூர்யாவை தேரில் ஏற்றிச் சென்று அஸ்வினி தேவர்களுக்கு அளித்தனர் – காண்க ரிக்/ RV 1-119-5

ராஜசூய யாகத்தின்போது குதிரைப் பந்தயம், ரதம்  ஓட்டும் பந்தயம் நடைபெறும். சோழன் ராஜசூய யாகம் செய்ததை புறநாநூறு பாடுகிறது. அதற்கு சேர, பாண்டிய மன்னர்களும் அவ்வையாரும் வந்தனர். அப்போதும் இந்தப் பந்தயங்கள் நடந்திருக்கவேண்டும்.

ரிக் வேதம் RV.1-116 பாடலில் இன்னும் ஒரு சம்பவம் உளது. விமதன் என்பவன்  கல்யாணம் கட்டிமுடித்த பின்னர் புது மனைவியை ரதத்தில் அழைத்து வந்தான் . அப்போது அவனை எதிரிகளோ திருடர்களோ தாக்கினர். அஸ்வினி தேவர்கள் விரைந்து வந்து அந்த புதுமணத் தம்பதிகளுக்கு உதவுகின்றனர்.

இதே பாடலில் மேலும் சில வியப்பான செய்திகள் உள .

அஸ்வினி தேவர்கள் தங்கள் பலத்தைக் காட்ட — திறமையைக் காட்ட – ஒரு காளை மாட்டையும் காட்டுப் பன்றியையும் ரதத்தில் கட்டி இருந்தனர்.

100 சக்கரங்கள் 6 குதிரைகள் பூட்டிய ரதம் பற்றியும்  இதே பாடல் பாடுகிறது 1-116-ரிக்.

இந்தப் பாடல் அதிசயங்களின் பட்டியல் ; விளையாட்டுக்குத் தொடர்பில்லாத அதிசயங்களை தனியே காண்போம்.

கேலா (Khela)என்ற மன்னனுடன்  அவன் மனைவி விஸ்பலா(Vispala) வும் சென்றாள் . போரில் அவள் கால்களை இழந்தாள் . அஸ்வினி தேவர்கள் அவளுக்கு செயற்கைக் காலை பொருத்தினர். அந்த அளவுக்கு மருத்துவத் துறையில் இந்துக்கள் முன்னேறி இருந்தனர். தமிழ் நாட்டில் கீரந்தை  என்ற பிரமணனுக்காக கைகளை வெட்டிக்கொண்ட பாண்டிய மன்னனுக்கு மருத்துவர்கள் தங்கக் கைகளைப் பொருத்தியதால் பொற்கைப் பாண்டியன் என அவன் பெயர்பெற்றான்

ஆக தேர்கள், தேர் விளையாட்டுகள் பற்றி சங்க இலக்கியத்திலும் ரிக் வேதத்திலும் நிறைய செய்திகள் கிடைக்கின்றன.

–SUBHAM–

tags– வேத காலம், சங்க காலம், விளையாட்டுகள், சூது , குதிரை, ரதம், பந்தயம்

பெண்கள் விளையாட்டுகள் (Post No.3537)

Written by London swaminathan

 

Date: 12 January 2017

 

Time uploaded in London:- 9-31

 

Post No.3537

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

பெண்கள் விளையாட்டுகள்:

 

அந்தக் காலத்தில் திருமணமாகும் வரை பெண்கள் என்ன என்ன விளையாடினர் என்று ஒரு பாட்டின் மூலம் தெரிகிறது. இது முற்றிலும் சரி என்பது சங்கத் தமிழ் பாடல்களாலும், ராமாயண, மஹாபாரத நூல்களாலும் உறுதியாகிறது:-

 

மருங்குவளர் பூங்கா மலர்வாவி யூச

றிருந்துமணி செய்குன்று தேமா- விரும்பமுத

பானங்கிளி பூவை பந்துகன்னங் கழங்கன்ன மயின்

மான்முல்லை பந்தர் வளர்ப்பு

–உபமான சங்கிரஹம் இரத்தினச் சுருக்கம்

72363-broken2bbest

1.பூங்காவில் பூக்கள் பறித்து விளையாடினர்.

2.பொய்கை, கிணறுகளில் நீராடிப் பொழுது போக்கினர்.

3.வீட்டிலும் மரத்தடியிலும் ஊஞ்சல் கட்டி ஆடினர்.

4.பணக்காரர் வீடுகளில் செயற்கையாக குன்று எழுப்பி அதில் ரத்தினக் கற்களைப் பதித்துவைத்து அதன் மேல் ஆடி ஓடி சாடினர்.

5.தேமாமரம் விளையாடினர் (மாமரத்தில் ஏறி அல்லது கல் விட்டெறிந்து மாங்காய், மாம்பழம் எடுத்துச் சாப்பிடுதல்) .

6.அமிர்தம் போன்ற பானங்கள் செய்து குடித்தனர்.

7.காய்களை வைத்து கழங்கு ஆடினர்;

8.பூப்பந்து ஆடினர்.

9.கிளி, பூவை (சாரிகைப் பறவை), அன்னம், மயில் ஆகிய பறவைகள் வளர்த்து பொழுது போக்கினர்.

10.முல்லைப் பூச்செடிக்கு பந்தல் கட்டி வளர்த்து அதைப் பராமரித்தனர். முல்லை என்றால் அது போன்ற பிறவகை மலர்ச் செடிகளும் அதில்  அடங்கும்.

 

ஐந்து தொழில்கள்

அம்பொற்றொடியணிமினார் தங்கைக்கைந்து தொழில்

செம்பவள மென்விரலைச் சேர்த்தெண்ணலம்பெழுதல்

பூசித்திலை கிள்ளல் பூத்தொடுத்தல் பண்ணெழில்யாழ்

வாசித்தலென்றுரை செய்வார்

–உபமான சங்கிரஹம் இரத்தினச் சுருக்கம்

 

பொருள்:-

அழகிய பொன்னினாற் செய்யப்பட்ட வளையலை அணிந்த மாதர் கைகளுக்கு ஐந்து தொழில்கள் உண்டு. (அவையாவையெனின்) 1.செம்பவளம் போன்ற மென்மையான விரல்களைச் சேர்த்து எண்ணுதல்,

2.அம்பின் உருவத்தை எழுதல்,

3.பூசை செய்து இலை பறித்தல்,

4.மலர் தொடுத்தல்,

5.பண்ணொடு கூடின அழகாகிய வீணை வாசித்தல் என்று சொல்வர்.

 

சங்க இலக்கியத்திலும் சம்ஸ்கிருத இலக்கியத்திலும் இந்த விளையாட்டுகள்வரும் இடங்களை தனியே எழுதுகிறேன்

–Subahm–