எங்கும் நிறைகின்ற பொருளே! (Post No 2660)

Togan-volcano_1369656a

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 25 March 2016

 

Post No. 2660

 

Time uploaded in London :–  6-21 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

விவேகானந்த அமுதம்

 

எங்கும் நிறைகின்ற பொருளே!

 

ச.நாகராஜன்

 

viveka 15 p

கிழவியின் வலி!

 

பிட்டுக்கு மண் சுமந்த சிவபெருமானின் மீது வீழ்ந்த அடி எல்லோர் மீதும் பட்ட ‘பிட்டுக்கு மண் சுமந்த கதையை’ நாம் அறிவோம்.

 

எங்கும் இருப்பதை உணர்த்துபவன் இறைவன் மட்டுமல்ல. அந்த அனுபவத்தை தீர்க்கமாக உணர்ந்து அவனுடன் ஒன்றி விட்ட அடியார்களும் எங்கும் இருப்பதையும் எங்கும் நடப்பதையும் அறிய வல்லவர்கள்.

 

ஸ்வாமி விவேகானந்தர் வாழ்க்கையில் நடந்த இரு அற்புத சம்பவங்களைக் காண்போம்.

 

மேலை நாட்டில் ஓய்வின்றி உழைத்ததால் ஸ்வாமிஜியின் உடல் நலம் குன்றி இருந்தது. அவர் தாயகம் திரும்பியவுடன் அவர் ஓய்வெடுக்க வேண்டிய அவசியத்தை அனைவரும் வ்ற்புறுத்தினர். அதை ஏற்று ஸ்வாமிஜி டார்ஜிலிங் சென்றார்.

அங்கு ஒரு நாள் காலை நடைப்பயிற்சியின் போது ஒரு வயதான கிழவி தன்னால் சுமக்க முடியாத சுமையைச் சுமந்து செல்வதைக் கண்டு வேதனையுற்றார்.

 

அவருடன் கூடச் சென்றவர்கள் ஸ்வாமிஜி படும் துன்பத்தைக் கண்டு அவர்களும் வேதனைப்பட்டனர்.

 

திடீரென்று எதன் மீதோ  தடுக்கி அந்தக் கிழவி கீழே விழுந்தாள். அவளது விலா எலும்புகளில் சரியான அடி. அவள் வலி தாங்காமல் அலறினாள்.

 

அதே சமயம் ஸ்வாமிஜியும் அலறினார். “என்னால் நடக்க முடியாது. பயங்கரமான வலி”  – என்றார் அவர்.

கூட இருந்த சீடர்கள், “எந்த இடத்தில் வலிக்கிறது, ஸ்வாமிஜி?” என்று கேட்டனர்.

 

கிழவிக்கு அடிபட்ட அதே இடத்தை –  விலா எலும்புகளைக்-  காண்பித்த ஸ்வாமிஜி, “இங்கே தான்” என்றவர், அந்தக் கிழவிக்கு எப்படிப்பட்ட அடி தெரியுமா?” என்றார்.

 

அனைவரையும் தானாகவே பாவித்த ஸ்வாமிஜியின் இந்த வாழ்க்கைச் சம்பவம் அவர் எப்படிப்பட்ட இரக்க சுபாவம் உள்ளவர், யார் எங்கு துயருற்றாலும் உடனே அவர் மனம் என்ன பாடுபடும் என்பதைக் காட்டும் சம்பவம்!

 

ஸ்வாமிஜி தனியே இருக்கும் போது மனித குலம் படும் துன்பத்தக் கண்டு அழுவார். அப்படி ஒரு இரக்க மனோபாவம் அவருக்கு.

 

 

பிஜிக்கு அருகே வெடித்த எரிமலை!

 

பேலூர் மடத்தில்  ஸ்வாமிஜி தங்கி இருந்த போது அவருக்கு அடுத்த அறையில் ஸ்வாமி விஞ்ஞானானந்தா தங்கியிருந்தார்.

ஒரு நாள் இரவு இரண்டு மணிக்கு தன் அறையிலிருந்து வெளியே வந்த அவர் ஸ்வாமிஜி அமைதியின்றி தவித்தவாறே நடப்பதைக் கண்டார். ஆச்சரியப்பட்ட அவர் ஸ்வாமிஜியிடம், “ என்ன ஸ்வாமிஜி, தூங்கவில்லையா? தூக்கம் வரவில்லையா?” என்று கேட்டார்.

 

“நன்றாகத் தான் உறங்கிக் கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு அதிர்ச்சி. உடனே எழுந்து விட்டேன். நிச்சயமாக உலகில் எங்கோ ஒரு பெரிய விபத்து நேர்ந்திருக்கிறது.  அதில் ஏராளமானோர் உயிரை இழந்திருக்க வேண்டும்”.  என்றார் ஸ்வாமிஜி.

 

 

ஸ்வாமி விஞ்ஞானானந்தா இதைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. இங்கே ஒரு சிறிய அறையில் படுத்திருப்பவருக்கு உலகில் நடக்கும் பெரிய விபத்து எப்படித் தெரிய முடியும்?

 

மறுநாள்  பேப்பர் வந்த போது தான் அவருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. பிஜிக்கு அருகில் ஒரு எரிமலை வெடித்து ஏராளமானோர் அதில் உயிரை இழந்திருந்தனர். ஸ்வாமிஜி எந்த நேரத்தில் விபத்து நேர்ந்ததாக உணர்ந்தாரோ சரியாக அதே நேரத்தில் அந்த எரிமலை வெடித்த விபத்து நேர்ந்திருந்தது!

 

ஸ்வாமிஜி எங்கும் நிறைகின்ற பொருளை உணர்ந்தவர். அதனால் அவரும் கூட எங்கும் நிறைகின்ற பொருளாக ஆனவர்!

********

 

ஸ்வாமி விவேகானந்தரும் அக்பர் சமாதியும் (Post No. 2531)

viveka lanka

Written by S Nagarajan

 

Date: 12  February 2016

 

Post No. 2531

 

Time uploaded in London :–  8-01  AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

akbar-1

Picture of Akbar

12-2-2016 பாக்யா இதழில் வெளியாகி உள்ள கட்டுரை

 

ச.நாகராஜன்

 

 

 

முகலாய மன்னர்களிலேயே வித்தியாசமானவர் அக்பர். அவர் வாழ்நாள் இறுதி வரை கங்கை ஜலத்தையே அருந்தி வந்தார்.

அவர் பயணப்படும் போதெல்லாம் கங்கை ஜலம் குடம் குடமாகப் போதுமான அளவு கூடவே எடுத்துச் செல்லப்பட்டது.

அக்பருக்கு சூரியனிடத்தில் அளவு கடந்த பக்தி. தினமும் சூரியோதயத்திற்கு முன்னர் எழுவது அவர் வழக்கம்.

ஜைன மதத்தைச் சேர்ந்த பண்டிதரான பானுசந்திர உபாத்யாய அவருக்கு சூரிய ஸஹஸ்ரநாமத்தை உபதேசித்தார்.  ஆயிரம் நாமங்களைச் சொல்லி சூரியனை வழிபடும் வழக்கத்தை தன் வாழ்நாள் இறுதி வரை அக்பர் கடைப்பிடித்தார். சூரிய நமஸ்காரத்தை தினமும் செய்து வந்ததால் மிக்க ஆரோக்கியத்துடன் அவர் இருந்து வந்தார்.

இப்படிப்பட்ட அக்பரிடம் ஸ்வாமி விவேகானந்தருக்கு அலாதி ஈடுபாடும் மரியாதையும் உண்டு.

 

 

ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் சமாதிக்குப் பின்னர் ப்ரிவ்ராஜகராக தன்னந்தனியே தான் யார் என்று சொல்லாமல் ஸ்வாமி விவேகானந்தர் பாரதம் முழுவதும் சுற்றி வந்தார்.

அவரது புத்தி கூர்மையையும் வேதாந்தத்தை அவர் விளக்கும் விதமும் அவரது பரந்த அறிவையும் கண்டு வியந்து அவரிடம் மரியாதை கொண்ட சமஸ்தான மன்னர்கள் பலர்.

அவர்களுள் ஒருவர் கேத்ரி மன்னர். ஸ்வாமிஜியிடம் அலாதி பக்தி கொண்ட அவர் தன்னை அவருடைய சீடனாகவே ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று விண்ணப்பித்தார்.

 

 

ஸ்வாமிஜிக்கும் அவரது அன்னைக்கும் இருநூறு ரூபாயை அவர் மாதம் தோறும் உதவித் தொகையாக அனுப்பி வந்தார் என்றால் அவரது பக்தியை நாம் நன்கு ஊகிக்க முடியும்.

ஆக்ராவுக்கு அடுத்து உள்ள சிகந்தராவில் அக்பர் தான் வாழ்ந்த காலத்திலேயே தனக்கென ஒரு அற்புதமான சமாதியை அமைக்கலானார். 119 ஏக்கர் பரப்பில் இது 1600ஆம் ஆண்டு வாக்கில் கட்டப்பட்டது. அக்பரே கட்டிடத்தைத் தன் விருப்பப்படி வடிவமைத்தார். 1605இல் அவர் மறையவே அவரது மகன் ஜிஹாங்கீர் அதை 1613இல் முடித்தார்.

 

samadhi of akbar

Picture of Tomb of Akbar

ஆனால் அவுரங்கசீப் காலத்தில் ஜட் ராஜாவான ராஜாராம் ஜட் அநத சமாதியை முற்றிலுமாக அழித்தார். சமாதி முழுவதுமாக  கொளுத்தப்பட்டது. அக்பரின் எலும்புகளையும் அவர் எரித்தார்.

சமாதி சிதிலமடைந்தது. இதை பிரிட்டிஷ் அரசு காலத்தில்  லார்ட் கர்ஸன் பிரபு சிறிது சீரமைத்தார்.

இந்த சிதிலமடைந்த சமாதியை ஸ்வாமிஜி தன் சுற்றுப் பயணத்தின் போது பார்த்தார். அதுவோ கேத்ரி மன்னரின் ஆளுகையில் இப்போது இருந்தது.

 

தொண்டை அடைக்க கண்களில் நீர் அரும்ப, “அக்பரின் சமாதி இந்த நிலையில் இருக்கலாமா? மேற்கூரையில்லாமல் சூரிய வெளிச்சத்திலும் மழையிலும் இதை பார்க்கவே என் மனம் பொறுக்கவில்லையே” என்று அடிக்கடி அவர் கேத்ரி மன்னரிடம் கூறுவார்.

 

 

ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கேத்ரி மன்னரின் மனதில் ஆழப் பதிந்தது. குருநாதரின் ஆசை அல்லவா அது!

விவேகானந்தர் பின்னர் அமெரிக்கா சென்று சர்வமத மகாசபையில் உரையாற்றி உலகப் புகழ் பெற்று விட்டார். ஸ்வாமிஜியை அறிந்த மன்னர்களுக்கெல்லாம் பெரும் மகிழ்ச்சி. மக்களிடமோ பெரும் எழுச்சி ஏற்பட்டது.

 

 

யாருமறியாத சாதாரண சந்யாசியாக பாரதத்தை விட்டுச் சென்றவர் அகில உலகப் புகழுடன் திரும்பி வந்தார்.

ஒரு நாள் கல்கத்தாவிற்கு வரும் வழியில் அவருக்கு ஒரு செய்தி வந்தது. கேத்ரி மன்னர் அக்பரின் சமாதியை புனருத்தாரணம் செய்து வந்ததாகவும், ஒரு நாள் சாரம் முழுவதுமாக கீழே சரிந்து விழவே உயரத்திலிருந்த மன்னரும் விழுந்து மாண்டார் என்றும் ஸ்வாமிஜியிடம் தெரிவித்தார்கள்.

மிகவும் மனம் வருந்தினார் விவேகானந்தர்.

 

vivekaa maly

நீண்ட காலமாகத் தான் விரும்பியபடியே சமாதி நன்கு அமைக்கப்பட்டதை நினைத்து மகிழ்வதா? அல்லது தன்னால் உத்வேகமூட்டப்பட்ட தன் சீடர் கேத்ரி மன்னர் இதற்காக உயிர்த்தியாகம் செய்ததை எண்ணி வருந்துவதா!

நெடுநாள் அவர் மனம் கலங்கி வருந்தி இருந்தார்.

 

 

“கேத்ரி மன்னர் சில மாதங்களுக்கு முன் கீழே விழுந்து இறந்தார். எனவே என்னைச் சுற்றி அனைத்தும் இருளாக உள்ளன”  என்று எழுதினார் அவர்.

 

அக்பரின் சமாதியைப் புனரமைக்க உத்வேகம் ஊட்டிய மாபெரும் வீ ரத் துறவி விவேகானந்தர் என்றால் அந்தப் பணியில் உயிர்த் தியாகம் செய்த மாபெரும் மன்னராக கேத்ரி மன்னர் திகழ்கிறார்!

*******

 

விவேகானந்தரின் அற்புத அனுபவங்கள் – பகுதி 1(Post No. 2525)

விவேகா-அனிடஸ் மரியா

Written by S Nagarajan

 

Date: 10 February 2016

 

Post No. 2525

 

Time uploaded in London :–  6-10 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

அதீத உளவியல் ஆற்றல்

 

ஸ்வாமி விவேகானந்தரின் அற்புத அனுபவங்களும் ஆற்றலும்! – (1)

 

ச.நாகராஜன்

 

 விவேகா

சித்திகளைக் கண்டு மயங்காதே!

 

ஸ்வாமி விவேகானந்தரின் வாழ்க்கை நெடுக தனது அற்புதமான தவ ஆற்றலால் அவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம் உண்டு. அதீத உளவியல் சம்பந்தமாக அவர் அடைந்த அனுபவங்களும் ஏராளம் உண்டு. தனியே பெரிய நூலாகத் தொகுக்க வேண்டியவை இவை.

 

இந்த சிறு கட்டுரைத் தொடரில், ஒரு அறிமுகமாக, அவரது ஆற்றல்களையும அவர் அடைந்த அனுபவங்களையும் காணலாம். இதைப் படித்ததன் மூலம் அவரைப் பற்றி இன்னும் முற்றிலுமாக அறிய உத்வேகம் ஏற்பட்டால் அதுவே இந்த கட்டுரைத் தொடரின் பயனாக அமையும்.

முதலில் சித்திகள் பற்றி ராமகிருஷ்ண பரமஹம்ஸர் கூறியதை இங்கு நினைவு படுத்திக் கொள்வது நல்லது.

பரமஹம்ஸர் சித்திகளைக் கண்டு மயங்காதே என்று தெளிவாகப் பலமுறை கூறியுள்ளார். அதற்கு மதிப்புக் கொடுக்காதே; அதையும் தாண்டி உள்ள மஹாசக்தியை நாடு என்பதே அவரது அருளுரை.

 

இதையே ஸ்வாமிஜியும் தன் வாழ்நாள் முழுவதும் திரும்பத் திரும்பக் கூறியுள்ளார்.

 

ஆனால் பெரும் அவதாரங்கள் தோன்றும் போது அளப்பரிய ஏராளமான ஆற்றல்கள் அவர்களுடன் இயல்பாகவே தோன்றும். இப்படி அற்புதங்களைத் தாம் ஆற்றியதாகவே அவர்கள் கூற மாட்டார்கள்; அவர்கள் இதை அறிவதும் இல்லை, போலும். மற்றவர்கள் கூறும் போது, அப்படியா என்று வியப்பது வழக்கம்!

இந்தக் கருத்தை பகவான் ரமண மஹரிஷியும் அழுத்தம் திருத்தமாக அடிக்கடி கூறியுள்ளார்.

 

லாஸ் ஏஞ்சல்ஸ் உரை ; நினைத்ததைச் சொல்பவர்!

ஸ்வாமிஜி கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சல்ஸில் 1900ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் தேதி மனத்தின் சக்திகள் (The Powers of the Mind : Complete Works of Swami Vivekananda Volume II) என்று அற்புதமான உரை ஒன்றை நிகழ்த்தினார்.

 

அதில், “இயற்கைக்கு மீறிய நிகழ்வுகள் காலம் காலமாக நடந்து வருகின்றன. அதீதமான நிகழ்வுகளைப் பற்றி நாம் எல்லோரும் கேட்டிருக்கிறோம். சிலருக்கு சொந்த அனுபவங்களும் இதில் உண்டு. எனது சொந்த அனுபவங்களைச் சொல்வதன் மூலம் இந்த விஷயத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்” என்று அந்த உரையை அவர் ஆரம்பிக்கிறார்.

ஒரு சமயம் அவர் எந்தக் கேள்வியை மனதில் நினைத்தாலும் அதை அறிந்து கொண்டு அதற்கு உடனே விடை தரும் ஒருவரைப் பற்றிக் கேள்விப்பட்டார்.  எதிர்காலத்தில் இனி நடக்கப் போகும் சம்பவங்களையும் கூற வல்லவர் அவர்.  ஆர்வம் உந்தவே, சில நண்பர்களுடன் அவரைச் சந்திக்க ஸ்வாமிஜி கிளம்பினார். ஒவ்வொருவரும் தன் மனதில் ஏதோ ஒன்றை நினைத்துக் கொண்டனர். தவறு ஏதேனும் நடந்து விடக்கூடாது என்பதற்காக தான் நினைத்தது என்ன என்பதை ஒரு துண்டுப் பேப்பரில் எழுதி அதைத் தங்கள் பாக்கட்டில் போட்டுக் கொண்டனர். அந்த குழுவினரைப் பார்த்தவுடனேயே அந்த மனிதர் ஒவ்வொருவரும் என்ன கேள்வியை நினைத்திருக்கிறோம் என்பதைக் கூறி அதற்கான பதிலையும் கூறி விட்டார்.

 

 

பிறகு அவர் ஒரு பேப்பரில் ஏதோ எழுதி அதை மடித்து அதில் ஸ்வாமிஜையைக் கையெழுத்திடுமாறு கூறி. “இதைப் பார்க்காதீர்கள். உங்கள் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.

 

பின்னர், “நீங்கள் உங்களுக்குப் பிடித்த ஒரு வார்த்தையையோ அல்லது வாக்கியத்தையோ, அது எந்த  மொழியில் வேண்டுமானாலும் இருக்கலாம்! , நினைத்துக் கொள்ளுங்கள்” என்றார். அந்த மனிதருக்குத் தெரியாத சம்ஸ்கிருத மொழியில் ஒரு பெரிய வாக்கியத்தை ஸ்வாமிஜி நினைத்துக் கொண்டார்.

பின்னர் அந்த மனிதர், “இப்போது உங்கள் பையில் இருக்கும் பேப்பரை எடுத்துப் பாருங்கள்” என்றார். ஸ்வாமிஜி நினைத்த சம்ஸ்கிருத வாக்கியம் அந்தப் பேப்பரில் அப்படியே இருந்தது.

 

சிவாஜி, விவேகா, நேதாஜி

ஒரு மணி நேரம் முன்னர் அந்தப் பேப்பரில் அவர் எழுதியபோது, “நான் எழுதியதை உறுதி செய்து இவர் அதே வாக்கியத்தை நினைப்பார்” என்று சொல்லி இருந்தார். அது முற்றிலும் சரியாக ஆனது.

 

இதே போல இன்னொரு நண்பர் அந்த மனிதருக்குத் தெரிந்திருக்க சற்றும் வாய்ப்பே இல்லாத அராபிய மொழியில், குர் ஆனில் வரும்  ஒரு பகுதியை எழுதி இருந்தார். அது அப்படியே அவர் முன்னரே வைத்த பேப்பரில் எழுதப்பட்டிருந்தது.

 

 

இன்னொரு நண்பரோ ஒரு வைத்தியர். அவர் ஜெர்மானிய மருத்துவ புத்தகத்தில் வரும் ஒரு வரியை நினைத்தார். அதுவும் அப்படியே பேப்பரில் எழுதப் பட்டிருந்தது.

 

 

சில நாட்கள் கழித்து  முந்தைய முறை எப்படியோ தான் மயக்கப்பட்டிருக்கிறோம் என்று நினைத்தவாறே ஸ்வாமிஜி மீண்டும் அந்த மனிதரிடம் சென்றார். ஆனால் என்ன ஆச்சரியம், இந்த முறையும் அவர் அப்படியே அந்த நிகழ்ச்சியை அதிசயமாக நடத்திக் காட்டினார்.

 

ஸ்வாமிஜியின் அனுபவங்கள் …       தொடரும்

 

இதை ஆங்கிலத்தில் படிக்க விரும்புபவர்களுக்காக ஸ்வாமிஜியின் மூலச் சொற்பொழிவுப் பகுதிகள் கீழே அப்படியே தரப்பட்டுள்ளன.

 

All over the world there has been the belief in the supernatural throughout the ages. All of us have heard of extraordinary happenings, and many of us have had some personal experience of them. I would rather introduce the subject by telling you certain facts which have come within my own experience.

 

I once heard of a man who, if any one went to him with questions in his mind, would answer them immediately; and I was also informed that he foretold events. I was curious and went to see him with a few friends. We each had something in our minds to ask, and, to avoid mistakes, we wrote down our questions and put them in our pockets. As soon as the man saw one of us, he repeated our questions and gave the answers to them. Then he wrote something on paper, which he folded up, asked me to sign on the back, and said, “Don’t look at it; put it in your pocket and keep it there till I ask for it again.” And so on to each one of us. He next told us about some events that would happen to us in the future. Then he said, “Now, think of a word or a sentence, from any language you like.” I thought of a long sentence from Sanskrit, a language of which he was entirely ignorant. “Now, take out the paper from your pocket,” he said. The Sanskrit sentence was written there! He had written it an hour before with the remark, “In confirmation of what I have written, this man will think of this sentence.” It was correct. Another of us who had been given a similar paper which he had signed and placed in his pocket, was also asked to think of a sentence. He thought of a sentence in Arabic, which it was still less possible for the man to know; it was some passage from the Koran. And my friend found this written down on the paper.
Another of us was a physician. He thought of a sentence from a German medical book. It was written on his paper.
Several days later I went to this man again, thinking possibly I had been deluded somehow before. I took other friends, and on this occasion also he came out wonderfully triumphant.

(To be Continued)

 

 

விவேகானந்தரைச் சந்தித்த விஞ்ஞானிகள்!

vivekananda

By ச.நாகராஜன்
Post No.1363; Dated 22nd October 2014

This was written by brother S Nagarajan to Tamil Magazine Bhagya:swami
Wish you all a Very Happy Deepavali

“ஒருமை நிலையைக் கண்டு பிடிப்பது தான் விஞ்ஞானம்.முழுமையான ஒருமை நிலை கிட்டியதும் அது மேலே செல்லாமல் நின்று விடும். எந்த ஓர் ஆன்மாவிலிருந்து பிற ஆன்மாக்கள் வெளிப்படுவது போன்று மாயையால் தோன்றுகிறதோ அந்த ஆன்மாவைக் கண்டு பிடித்தவுடன் மத, விஞ்ஞானம் பூரணமாகி விடும்” – ஸ்வாமி விவேகானந்தர் விஞ்ஞானம் மெய்ஞானம் பற்றிப் பேசியது

ஹிந்து மதம் மூட நம்பிக்கைகளின் மூட்டை என்றும் இந்தியாவில் வாழ்பவர்கள் தரித்திரத்திலும் அநாகரிகத்திலும் மூழ்கியவர்கள் என்றும், இந்தியருக்கு எந்தவிதமான ஒரு பெரிய கலையும் தெரியாதென்றும் திட்டமிட்டு பிரசாரம் செய்யப்பட்ட பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில் அதை உடைத்துச் சுக்கு நூறாக்கி எறிந்து ஹிந்து மதத்தின் மகோன்னதத்தை உலகெங்கும் அறியச் செய்து அதை அறிவியல் பூர்வமான மதம் என்பதை நிரூபித்தவர் ஸ்வாமி விவேகானந்தர்.

இயற்கையிலேயே விஞ்ஞான மனப்பான்மையை இளமையிலிருந்தே கொண்டிருந்த ஸ்வாமிஜி எந்த ஒரு விஷயத்தையும் அறிவியல் பூர்வமாகவே அணுகி வந்தார் – வாழ்நாள் இறுதி வரைக்கும். அதனால் தான் விஞ்ஞானிகளையும் மெய்ஞானிகளையும் ஒருசேர அவரால் கவர முடிந்தது.

நியூயார்க்கில் ஸ்வாமிஜி தங்கி இருந்த போது ஒரு அபூர்வமான சந்திப்பு நிகழ்ந்தது.மூன்று மேதைகள் சந்தித்த நிகழ்வாக இது அமைந்தது.1896ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரபல விஞ்ஞானியான நிகோலா டெஸ்லாவும் பிரெஞ்சு நடிகையான சாரா பெர்ன்ஹர்ட்டும் ஸ்வாமிஜியும் ஒரு நாள் சந்தித்தனர்.

சாரா பெர்ன்ஹர்ட் நியூயார்க்கில் ‘இஸீல்’ என்னும் நாடகத்தை நிகழ்த்தி வந்தார்.பிரெஞ்சு பாணியில் ஆக்கப்பட்டுள்ள புத்தரின் வாழ்க்கை வரலாறு அது. இஸீல் என்ற நாட்டியப் பெண்மணி புத்தரை ஒரு மரத்தடியில் மயக்க விரும்புகிறாள். புத்தர் அவருக்கு வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை விளக்கி உபதேசிக்கிறார். அந்த நேரமெல்லாம் அவள் புத்தரின் மடி மீதே உட்கார்ந்திருக்கிறாள். இறுதியில் அஞ்ஞானம் அகன்று தன் முயற்சியில் தோற்று பெரும் தெளிவை அவள் பெறுகிறாள்.

இந்த நாடகத்தைப் பார்க்க ஸ்வாமிஜி சென்றிருந்தார். இதை எப்படியோ அறிந்து கொண்ட நடிகை பெர்ன்ஹர்ட் பெரிதும் மனம் மகிழ்ந்து எப்படியாவது ஸ்வாமிஜியிடம் பேச விரும்பினார். விஞ்ஞானியான டெஸ்லாவும் பேச்சின் போது உடனிருந்தார்.

பெர்ன்ஹர்ட் மத விஷயங்களை ஆழ்ந்து கற்றவர். டெஸ்லாவும் அதே போல பல விஷயங்களை நுட்பமாக ஆராய்ந்தவர்.

ஸ்வாமிஜி அவர்களுக்கு வேதாந்தம் கூறும் ஆகாசம், பிராணன், கல்பங்கள் போன்றவற்றை விளக்கினார். நவீன விஞ்ஞானம் ஏற்றுக் கொள்ளக் கூடிய கொள்கைகளாக இவற்றை ஸ்வாமிஜி விளக்க ஆரம்பித்த போது எல்லையற்ற வியப்புடன் அதை அனைவரும் கேட்டு பிரமித்தனர்.

ஆகாசம், பிராணன் ஆகிய இரண்டும் மஹத், பிரபஞ்ச மனம் பிரம்மா அல்லது ஈஸ்வரனிடமிருந்தே வெளிப்படுகின்றன என்றார் ஸ்வாமிஜி. சக்தி, ஜடம் ஆகிய இரண்டையும் இயங்கா ஆற்றலாக மாற்றி விட முடியும் என்பதைக் கணித முறையில் காட்ட இயலும் என்றார் டெஸ்லா.
vivek

ஸ்வாமிஜியுடனான சந்திப்பும் அவரது உபதேச உரையும் டெஸ்லாவை வெகுவாகக் கவர்ந்தது. ஸ்வாமிஜியின் கருத்துக்களை அப்படியே ஏற்றுக் கொண்ட டெஸ்லா தனது இறுதி ஆண்டுகளில் அதை அப்படியே கட்டுரைகளில் எழுதினார்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மேரி லூயி என்பவர் ஸ்வாமிஜியின் சிஷ்யை. அவர் இந்த மூன்று மேதைகளின் அபூர்வ சந்திப்பைப் பற்றி குறிப்பிடுகையில்,” நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு ஒரு முறை விண்வெளியில் அபூர்வமாகச் சில கிரகங்களின் சேர்க்கை நிகழும். அது போல இந்த மூன்று மேதைகளின் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது!” என்று கூறி, “இதனால் அவர்களின் வாழ்க்கையில் என்ன தாக்கம் ஏற்பட்டது என்பதை ஊகிக்க மட்டுமே முடியும்” என்கிறார்.

இது தவிர மின் சாதனத்தைக் கண்டுபிடித்தவரான பேராசிரியர் எலிஷா க்ரேயும் அவரது மனைவியும் ஸ்வாமிஜியைத் தங்கள் வீட்டில் விருந்துண்ண அழைத்தனர். சிகாகோவில் நிகழ்ந்த மின்சாரம் பற்றிய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்த விஞ்ஞானிகள் ஸ்வாமிஜியைச் சந்தித்தனர். மின்சாரம் பற்றிய அவரது அபாரமான அறிவைக் கண்டு அவர்கள் பிரமித்தனர்.

விஞ்ஞானத்திற்கு பெரும் ஏற்றத்தைத் தந்ததன் மூலம் அவர்களை மெய்ஞானத்திற்குத் திருப்பிய மாபெரும் துறவியாகத் திகழ்ந்தார் ஸ்வாமி விவேகானந்தர்!

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. .
ஜப்பான் மீது அமெரிக்கா அணுகுண்டை போட்டதில் ஏராளமான ரகசிய விஷயங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று ஜனாதிபதி ட்ரூமனைப் பற்றியது. அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ரூஸ்வெல்ட் 1945ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் தேதியன்று திடீரென மரணம் அடைந்தார். அதே தினத்தில் ட்ரூமன் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார். ரூஸ்வெல்ட்டுக்கு ட்ரூமனைக் கண்டாலே பிடிக்காது. அவரிடம் எந்த விதமான அந்தரங்க விஷயத்தையும் அவர் பகிர்ந்து கொண்டதில்லை; ரூஸ்வெல்ல்டைப் பற்றி ட்ரூமன் கூறுகையில்,, “ நான் அறிந்ததிலேயே மிகவும் இறுக்கமான மனிதர் அவர்” என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார்.அணுகுண்டைத் தயாரிக்கும் மன்ஹாட்டன் ப்ராஜெக்டைப் பற்றி ட்ரூமனுக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால் ஏராளமான பணம் ஒரு ரகசிய திட்டத்திற்காகச் செலவழிக்கப்படுகிற்து என்பதை மட்டும் அவர் அறிவார்.

அணு விஞ்ஞானியான லியோ ஜிலார்டை (Leo Szilard) 1945ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் தேதி ரூஸ்வெல்ட் சந்திக்கவிருந்தார். ஜப்ப்பானியருக்கு ஒரு அதி பயங்கர ஆயுதம் பற்றிய நேரடி அனுபவத்தைத் தர வேண்டுமென ஜிலார்ட் விரும்பினார். பிரபல விஞ்ஞானியான ஐன்ஸ்டீன் மார்ச் 25ஆம் தேதியிட்டு ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் அணு விஞ்ஞானிகளுக்கும் காபினட் உறுப்பினர்களுக்கும் போதுமான அளவு தொடர்பு இல்லை என்பதைக் குறிப்பிட்டு விட்டு ஜனாதிபதி, டாக்டர் ஜிலார்ட் சொல்வதைக் கேட்பார் என நம்புவதாக்க் குறிப்பிட்டிருந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ரூஸ்வெல்ட் ஏப்ரல் 12ஆம் தேதி மறைந்து விடவே விஞ்ஞானிகளுக்கும் ரூஸ்வெல்ட்டுக்கும் இடையே நடக்க இருந்த சந்திப்பு நின்று போயிற்று.

இரண்டாவது உலக மகாயுத்தம் முடிவுக்கு வந்து கொண்டிருந்த தருணத்தில் ஜனாதிபதி ட்ரூமன் உல்லாச கடல் பயணம் ஒன்றை மேற்கொண்டு ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்.அதன் பின்னர் உல்லாச பயணத்தின் தொடர்ச்சியாக பெர்லின், ஜெர்மனிக்கு விஜயம் செய்தார்.

vivekananda2

விஞ்ஞானிகளை அவர் சந்திக்க விடாமல் செய்வதற்காகவே அவர் கடல் பயணம் மேற்கொள்ளச் செய்யப்பட்டார் என்ற ரகசியம் பின்னர் வெளியானது! ஜூலை 6ஆம் தேதி கிளம்பிய அவர் ஆகஸ்ட் 7ஆம் தேதி தான் அமெரிக்கா திரும்பினார். அதாவது அதற்கு முதல் நாள் தான் அமெரிக்கா ஹிரோஷிமா மீது அணுகுண்டை வீசி இருந்தது!

67 விஞ்ஞானிகள் அணுகுண்டைப் பயன்படுத்த வேண்டாம்; அது பேரழிவை ஏற்படுத்தும் என்று எழுதி இருந்த கடிதம் ட்ரூமனுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அதை அவர் பார்க்க விடாமல் செய்தனர் லீஹி மற்றும் க்ரோவ்ஸ் (Admiral Leahy, Groves) ஆகியோர். 1945, ஜூலை 8ஆம் தேதி அட்மிரல் லீஹி, செக்ரட்டரி ஆஃப் ஸ்டேட்டாக இருந்த ஜிம்மி பைர்ன்ஸ் ஆகியோர் ட்ரூமனுடன் ஜெர்மனிக்குச் செல்ல அகஸ்டா என்ற கப்பலில் ஏறினர். விந்தை என்னவெனில் இது மிகவும் மெதுவாகச் செல்லும் கப்பல்.

1945ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி நியூ மெக்ஸிகோவில் அலமொகோர்டோ (Alamogordo) என்னும் இடத்தில் அணுகுண்டு இரண்டாம் முறையாகச் சோதனை செய்து பார்க்கப்பட்டது.

ஆக, லீஹி, பைர்ன்ஸ், க்ரோவ்ஸ் ஆகிய மூவர் எண்ணப்படியே ஜனாதிபதி ட்ரூமனால் விஞ்ஞானிகளைச் சந்திக்க முடியவில்லை; அணுகுண்டும் போடப்பட்டது.

Contact swami_48@yahoo.com
***************

“அன்புள்ள மாணவர்களே!”- விவேகாநந்தர் வேண்டுகோள்

vivek stamp

Compiled by London Swaminathan
Post No.1346; Dated 14th October 2014.

சுவாமி விவேகாநந்தர் 1891 ஆம் ஆண்டில் ரஜபுதனத்தில் பல்கலைக்கழக மாணவர்களிடையே ஆற்றிய உரையிலிருந்து ஒரு பகுதி:

“அன்புள்ள மானவர்களே!

“சம்ஸ்கிருத மொழியைப் படியுங்கள். அத்தோடு மேலை நாட்டு விஞ்ஞான பாடங்களையும் படியுங்கள். எதையும் துல்லியமாகக் கணக்கிடக் கற்றுக் கொள்ளுங்கள். நன்றாகப் படித்துப் பாடுபடுங்கள். அப்போதுதான் இந்திய வரலாற்றை அறிவியல் பூர்வ அடிப்படையில் அமைத்துக் கொடுக்கும் காலம் வரும். இப்போது இந்திய வரலாறு உருச் சிதைந்து போய் கிடக்கிறது.

“ஆங்கிலேயர்கள் எழுதிய இந்திய வரலாறுகள் நம் மனதில் பலவீனத்தை உண்டாக்கும், ஏனெனில் நாம் அடைந்த தோல்விகளைப் பற்றி மட்டுமே அவர்கள் எழுதுகிறார்கள்.
“வெளிநாட்டுக்காரர்கள் எப்படி நம் வரலாற்றை எழுதமுடியும்? அவர்களுக்கு நம்முடைய பழக்க வழக்கங்களோ சமய தத்துவ விஷயங்களோ தெரியாதபோது பாரபட்சமற்ற, நியாயமான வரலாற்றை எழுதமுடியுமா?

malaysian-postal-stamp-on-swami-vivekananda

“நாமே நமக்கு சுதந்திரமான ஒரு வழியை வகுத்துக்கொண்டு வரலாற்று ஆராய்ச்சியில் இறங்க வேண்டும். புராண, இதிஹாசங்களைப் படித்து அவற்றின் அடிப்படையில் அறிவியல் பூர்வமான, துல்லியமான வரலாற்றை எழுத வேண்டும். இதை உங்கள் வாழ்க்கையில் ஒரு சாதனமாகக் கொள்ளுங்கள். நீங்கள் எழுதுவது இந்தியாவின் மீது பாசமும் பரிவும் உள்ளதாகவும் ஆன்மநேயத்தைத் தட்டி எழுப்புவதாகவும் இருக்கட்டும்.

“இந்தியர்கள்தான் இந்திய வரலாற்றை எழுத வேண்டும்.

“மறைந்து கிடக்கும் அரிய பெரிய பொக்கிஷங்களை அழிவிலிருந்து மீட்டுத் தருவது உங்களின் தலையாய பணியாகட்டும். ஒரு குழந்தை காணாமல் போய்விட்டால் அதைக் கண்டுபிடிக்கும் வரை (ஒரு தாய்) அமைதியாக இருப்பார்களா? அதேபோல மக்களின் உள்ளத்தில் இந்தியாவின் மகத்தான பழம்பெருமையை நிலைநாட்டும் வரை உங்கள் பணியை நிறுத்த முடியுமா? அதுதான் நீங்கள் கற்கும் உண்மையான தேசிய கல்வி — அதை அடையும்போது தேசிய உணர்ச்சி விழித்தெழுவதைக் காண்பீர்கள்.

இந்தியாவின் உண்மை வரலாற்றைக் கண்டெடுக்கும் நாளில் இந்தியா உலகிற்கு ஆன்மீக விஷயத்தில் மட்டும் அல்ல, அறிவியலிலும் நுண்கலைகளிலும் இந்த உலகிற்கே குரு என்று பறைசாற்றப்படும்.

vivekananda stamps

ஆதார நூல்கள்:
From Life of Swami Vivekananda (Mayavati Edition, 1961;pages 213,214 Instructions given to a group of University students of Rajaputana in 1891)
Also Complete Works of Swami Vivekananda –Vol.5, page 534(Mayavati Edition, 1961).