கானகத்தில் புலியும் ஸ்வாமி விவேகானந்தரும்! (Post No.10,651)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,651
Date uploaded in London – – 12 FEBRUARY 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

கானகத்தில் புலியும் ஸ்வாமி விவேகானந்தரும்!

ச.நாகராஜன்

ஸ்வாமி விவேகானந்தரின் வாழ்க்கையில் அவரது பெருமிதமான, வளமோங்கிய, பக்கங்களை மட்டுமே உலகம் அறிந்து ஆனந்தப் படுகிறது.

அவர் சர்வ மத சபையில் உரையாற்றி உலகையே தன் பக்கம் ஈர்த்து வெற்றி கொண்ட பின் அவரை உலகம் நன்கு புரிந்து கொண்டது; பாராட்டியது.

முழு இந்தியாவும் அப்போது தான் விழித்துக் கொண்டு அவரை வணங்கத் தொடங்கியது.

வாழ்வில் ஏராளமான நாட்களை அவர் உண்ணாமல் மிகுந்த பசியுடன் களித்திருக்கிறார்.

இமயமலையின் உயரத்தில் ஏழ்மையில் வாழும் மக்களிடையே அவர்களே உண்ணுவதற்குப் போதுமான உணவு இல்லாத சமயத்தில் அவர்களை அணுகி உணவு கேட்பதை அவர் தவறாக நினைத்தார்.

இப்படி ஒரு வாழ்வும் எனக்குத் தேவை தானா என்று தன்னைத் தானே அவர் கேட்டுக் கொண்டார்.
பின்னால் ராமகிருஷ்ண மடம் பெரிதாக வளர்ந்த போது அவரைக் கண்டு தரிசித்து ஆசி பெற்றோர் ஏராளம்.
மன்மதநாத் கங்கூலி என்னும் ஸ்வாமிஜியின் சீடர் தன் நினைவலைகளை மிக நன்றாகப் பதிவு செய்துள்ளார்.

அதில் ஒரு பதிவு இது.

ஸ்வாமிஜி கூறியதை அவர் வார்த்தைகளிலேயே காண்போம்:
“பிறகு ஹிமாலயத்தில் ஒவ்வொரு வீடாகச் சென்று உணவுக்குப் பிச்சை கேட்பது எனது வழக்கமானது. மிகக் கடுமையான ஆன்மீக நெறிமுறைகளில் நான் எனது நேரத்தைச் செலவழித்தேன். எனக்குக் கிடைத்த உணவோ மிகவும் மோசமானதாக இருந்தது. பசிக்குப் போதுமானதாகவும் இல்லை.
ஒரு நாள் நான் என்னை பயனற்றவனாகக் கருதினேன். இந்த மலை வாழ் மக்கள் – அவர்களே மிகுந்த ஏழ்மையில் வாழ்பவர்கள். அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கும் குடும்பத்திற்குமே போதுமான உணவளிக்க வசதி இல்லாதவர்கள்.
இருந்தபோதிலும் எனக்கும் அதில் சிறிது வைத்திருந்து கொடுத்தார்கள். இப்படிப்பட்ட ஒரு வாழ்வு வாழ்ந்து என்ன பயன்?

நான் உணவுக்காக வெளியில் செல்வதை நிறுத்தி விட்டேன். இரண்டு நாட்கள் சாப்பிடாமலேயே கழிந்தன. எப்போதெல்லாம் தாகம் எடுக்கிறதோ அப்போதெல்லாம் ஒடையிலிருந்து என் கைகளைக் குவித்து அதையே ஒரு கோப்பை போல ஆக்கி, நீரை எடுத்துப் பருகிக் கொண்டிருந்தேன்.

பின்னர் அடர்ந்த காட்டிற்குள் நுழைந்தேன். அங்கு பாறையின் மீது அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தேன்.

என் கண்களைத் திறந்த போது என் எதிரே பெரிய வரிப்புலி ஒன்று என்னைப் பார்த்துக் கொண்டிருந்ததை உணர்ந்தேன். பளபளக்கும் கண்களால் அது என்னையே பார்த்துக் கொண்டிருந்தது.

“அப்பாடா! கடைசி கடைசியாக எனக்கு நிம்மதி கிடைக்கப் போகிறது, இந்த மிருகத்திற்கு இரை கிடைக்கப் போகிறது. இந்த மிருகத்திற்கு இந்த உடல் ஏதோ ஒரு விதத்தில் சேவை செய்தால் சரி தான், அது போதும்!” என்று நினைத்தேன்.
என் கண்களை மூடிக் கொண்டேன். அதன் வரவிற்காகக் காத்திருந்தேன்.

ஆனால் சில விநாடிகள் கழிந்தன; என் மீது அது பாயவில்லை.
ஆகவே என் கண்களைத் திறந்து பார்த்தேன். அது திரும்பிக் கானகத்தின் உள்ளே சென்று கொண்டிருந்தது.

அதற்காக வருத்தப்பட்டேன். ஆனால் பின்னர் புன்முறுவல் பூத்தேன்; ஏனெனில் எனக்குத் தெரியும், “என்னைக் காப்பாற்றியவர் எனது குருவே தான் என்று, அவர் தன் பணி முடியும் வரை என்னைக் காப்பார்”.

மன்மத நாத் கங்கூலியின் நினைவலைகள் வேதாந்த கேசரி இதழில் ஜனவரி மற்றும் ஏப்ரல் 1960 இதழ்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

அன்பர்கள் அனைவரும் அவரது முழுக் கட்டுரைகளைப் படித்தால் ஸ்வாமிஜியின் பெருமையை உணர்ந்து ஆனந்தமடைவது நிச்சயம்!


tags– புலி, ஸ்வாமி, விவேகானந்தர்,

ஸ்வாமி விவேகானந்தர் : அளக்க முடியா, மாபெரும் மஹான்! (10,553)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,553
Date uploaded in London – – 12 JANUARY 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஸ்வாமி விவேகானந்தர் பிறந்த தினம் : ஜனவரி 12.
நினைவைப் போற்றித் துதிக்கும் அஞ்சலிக் கட்டுரை
(அவதார தினம் : 12-1-1863 சமாதி 4-7-1902)

ஸ்வாமி விவேகானந்தர் : அளக்க முடியா, அறிய முடியா, மாபெரும் மஹான்!
ச.நாகராஜன்

அறிய முடியா மாபெரும் மஹான்

வெந்துயரில் வீழ்ந்திருந்த பாரதத்தைக் காக்க வந்த மாபெரும் மஹான் ஸ்வாமி விவேகானந்தர்.
அவரை யாராலும் அளக்க முடியாது; அவரை யாராலும் முழுவதுமாக அறிய முடியாது.
தான் வந்த நோக்கத்தைப் பரிபூரணமாக நிறைவேற்றி விட்டுத் தன் இருப்பிடத்திற்கு மீண்டார் அவர்.
அவரைப் பற்றிய ஏராளமான அனுபவங்களை அவருடன் பாரதத்திலும் மேலை நாடுகளிலும் பழகியவர்கள் நிறைய எழுதி வைத்துள்ளனர்.
ஜோஸபைன் மக்லியாட் ஸ்வாமிஜியின் அணுக்க பக்தை.
அவர் தனது நினைவலைகளில் குறிப்பிடும் சில சம்பவங்களை இங்கு பார்ப்போம்.

ஏன் ஸ்வாமிஜி நீங்கள் தனிப்பட்ட கடவுளைப் புகழ்கிறீர்கள்?
ஆல்பெர்டா ஸ்டர்ஜெஸ் (Alberta Sturges) என்பவர் ஜோஸபைனுக்கு நெருங்கிய உறவுக்காரப் பெண்மணி (Niece). பின்னால் இவர் லேடி சேண்ட்விச் என்ற பெயரால் அறியப்பட்டார். (Lady Sandwich)
அவர் ஸ்வாமிஜியின் அளப்பரிய அறிவைக் கண்டு பிரமித்துப் போனார்.

எதை எடுத்தாலும் அவரை விஞ்ச முடியாது; அப்படி ஒரு பிரம்மாண்டமான பல்துறை அறிவு.

ரோமுக்கு அவருடன் சென்ற ஆல்பெர்டா அங்குள்ள பல்வேறு இடங்களை ஸ்வாமிஜிக்கு விவரித்தார். ஆனால் அவரே அந்த இடங்களைப் பற்றிய ஸ்வாமிஜியின் பேரறிவைக் கண்டு வியந்து போனார். செயிண்ட் பீட்டருக்கு ஸ்வாமிஜியை அழைத்துச் சென்ற அவர் அங்குள்ள ரோமன் தேவாலயத்தில் உள்ள அடையாளச் சின்னங்களையும் நகைகளையும் மகான்களின் மீதிருந்த அற்புதமான அணிகலன்களையும் காண்பித்து விவரித்தார்.
அவர் ஸ்வாமிஜியைப் பார்த்து ஒரு கேள்வியைக் கேட்டார் :”ஸ்வாமிஜி! தனிப்பட்ட கடவுளை நம்பாதவர் நீங்கள். அப்படி இருக்க, இங்கு இப்படி மிகவும் போற்றுகின்றீர்களே”

ஸ்வாமிஜியின் போற்றுதலால் வியந்து இந்தக் கேள்வியைக் கேட்ட ஆல்பெர்டாவை நோக்கி ஸ்வாமிஜி, “ஆனால் ஆல்பெர்டா, நீ இதை நன்கு போற்றித் துதிக்கிறாயே! இதற்கு உரிய மரியாதையைத் தந்து தானே ஆக வேண்டும்”.
ஆல்பெர்டா நெகிழ்ந்து போனார்.

பணமா, நானா, வாங்கவே மாட்டேன்!

இலையுதிர்காலம் வந்தது. ஸ்விட்ஸர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு ஸ்வாமிஜி மிஸ்டர் சேவியர் (Mr and Mrs Sevier) தம்பதிகளுடனும் மிஸ்டர் ஜே.ஜே. குட்வினுடனும் (J.J.Goodwin) வந்தார்.
பிரம்மாண்டமான வரவேற்பு இந்தியாவில் ஸ்வாமிஜிக்காகக் காத்திருந்தது.
குட்வின் தான் ஸ்வாமிஜியின் சொற்பொழிவுகளைச் சுருக்கெழுத்தில் எடுத்த சுருக்கெழுத்தாளர்.
அவர் மிகுந்த திறமைசாலி. கோர்ட்டில் ஸ்டெனோகிராபராக பணியாற்றிக் கொண்டிருந்தார்.

அவரை 54, வெஸ்ட் 33வது தெருவில் நடந்த ஸ்வாமிஜியின் சொற்பொழிவுகளுக்கு அழைத்து அனைத்தையும் பதிவு பெறச் செய்தனர்.
அவை தான் நமக்கு Lectures from Colombo to Almora போன்ற நூல்களில் கிடைத்துள்ளன.
ஒரு நிமிடத்திற்கு 200 வார்த்தைகளைச் சுருக்கெழுத்தாக எடுக்கும் அசகாய சூரர் அவர்.

அவரை இந்த பணிக்கு அழைப்பது என்பது நிறைய செலவாகும் ஒன்று என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.
ஆனால் ஸ்வாமிஜியின் ஒரு வார்த்தையைக் கூட யாரும் இழக்க விரும்பவில்லை. ஆகவே அவர் அழைக்கப்பட்டார்.
ஒரு வாரம் சுருக்கெழுத்துப் பணியில் ஈடுபட்ட குட்வின் பின்னர் பணம் வாங்க மறுத்து விட்டார்.

“என்ன ஆயிற்று, உங்களுக்கு?” என்று அவரைக் கேட்ட போது, குட்வின் கூறினார்; ”விவேகானந்தர் தன் வாழ்க்கையையே கொடுக்கும் போது நான் எனது சேவையையாவது கொடுக்கக் கூடாதா?” என்று கேட்டார்.
ஸ்வாமிஜியுடன் உலகம் முழுவதும அவர் கூடவே சென்றார்.

ஸ்வாமிஜியின் வாயிலிருந்து உதிர்ந்த பொக்கிஷமான வார்த்தைகள் ஏழு தொகுதிகளாக வெளி வந்ததற்குக் காரணம் குட்வின் தான்!

இதென்ன நெற்றியில் செங்குத்துக் கோடு?! (நாமம்)

ஜோஸபைன் இந்தியா வந்தார். பம்பாயில் அவரை அளசிங்கர் வரவேற்றார்.
அவர் நெற்றியில் செங்குத்தான கோடு (நாமம்) இருந்ததைப் பார்த்து வியந்தார் ஜோஸபைன்.
காஷ்மீருக்கு ஸ்வாமிஜியுடன் ஜோஸபைன் சென்ற சமயம் ஒரு முறை அளசிங்கரைப் பற்றி அவர், “ என்ன பரிதாபம் பாருங்கள், அளசிங்கர் வைஷ்ணவ சின்னத்தை நெற்றியில் போட்டுக் கொண்டிருப்பது?” என்று விமரிசித்தார்.

உடனே அவர் பக்கம் திரும்பிய ஸ்வாமிஜி கடுமையாக, “என்ன, என்ன சொன்னாய் நீ? உனக்கென்ன தெரியும் அவரைப் பற்றி!” என்று கூறினார்.
ஜோஸபைனுக்கு ஒன்றும் புரியவில்லை – ஸ்வாமிஜி ஏன் இப்படிக் கடுமையாக வார்த்தைகளைக் கூறினார் என்று.
பின்னால் தான் அவர் தெரிந்து கொண்டார்.

அளசிங்கர் தான் வீடு வீடாகச் சென்று பிச்சை எடுத்துப் பணம் சேர்த்து ஸ்வாமிஜியை மேலை நாட்டிற்கு அனுப்பினார் என்று. அளசிங்க பெருமாள் சென்னையில் உள்ள கல்லூரியில் தத்துவப் பாடம் போதித்தவர். அவருக்கு மாதச் சம்பளம் 100 ரூபாய்கள். தந்தை, தாய், மனைவி, நான்கு குழந்தைகளைப் பேணி குடும்பத்தை அவர் நடத்தி வந்தார்.
“அவர் அப்படிப் பணம் சேர்த்திராவிடில் ஒரு வேளை எங்களைப் போன்றவர்கள் ஸ்வாமிஜியைப் பார்த்திருக்கவே முடியாது” என்று பின்னால் நினைவுக் குறிப்புகளில் எழுதினார் ஜோஸபைன்.

இப்படி ஸ்வாமி விவேகானந்தரைப் பற்றிய நினைவுக் குறிப்புகள் ஏராளம் உள்ளன. படித்தால் வியப்போம், பிரமிப்போம்.
பிரம்மாண்டமான ஒரு அவதாரம் பூமிக்கு வரும் போது அதன் ஒவ்வொரு கணமும் நமக்கு ஒரு பாடத்தை போதிக்கும், இல்லையா!
விவேகானந்தரைப் போற்றுவோம்; அவர் காட்டிய வழியில் செல்வோம்!

tag- விவேகானந்தர்


மாயை என்றால் என்ன? காண்பிக்க முடியுமா? (Post No.9794)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9794

Date uploaded in London – 30 JUNE   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மாயை என்றால் என்ன? காண்பிக்க முடியுமா?

ச.நாகராஜன்

ப்ரஹ்மம் சத்யம் ஜகன் மித்யா என்றார் ஆதி சங்கரர். இது பற்றிய ஒரு சுலோகமும் உண்டு.

ஸ்லோக அர்த்தேன ப்ரவக்ஷயாமி யத் உக்தம் க்ரந்த கோடிபி: |

ப்ரஹ்மம் சத்யம் ஜகன் மித்யா ஜீவோ ப்ரஹ்மைவ நபர: ||

கோடி கிரந்தங்கள் சொல்வதை அரை சுலோகத்தில் சொல்கிறேன். ப்ரஹ்மம் சத்யம். ஜகம் பொய். ஜீவனே ப்ரஹ்மம். அதுவன்றி வேறல்ல.

ஆதி சங்கரரின் இந்த சுலோகத்தின் பொருளை ஜீரணிப்பது அவ்வளவு சுலபம் இல்ல. உலகம் பொய்யா? இதோ நான் காண்கிறேனே இந்த வீடு, இந்த மனிதர்கள், பறவைகள், மரங்கள் எல்லாம் பொய்யா?

ஏன், பாரதியாரே ஒரு பாடல் பாடி விட்டார் இப்படி:-

நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே,நீங்களெல்லாம்
சொற்பனந்தானோ?-பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே,கேட்பதுவே,கருதுவதே, நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ?-உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?

வானகமே,இளவெயிலே,மரச்செறிவே,நீங்களெல்லாம்
கானலின் நீரோ?-வெறுங் காட்சிப் பிழைதானோ?
போன தெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே போனதனால்
நானுமோர் கனவோ?-இந்த ஞாலமும் பொய்தானோ?

கால மென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும்
கோலமும் பொய்களோ?-அங்குக் குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்க ளெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்,
சோலை பொய்யாமோ?-இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ?


காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்ப மன்றோ?
வீண்படு பொய்யிலே-நித்தம் விதிதொடர்ந் திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதில்லை
காண்பது சக்தியாம்-இந்தக் காட்சி நித்தியமாம்.

இப்படிப்பட்ட கவி வாக்கை விட வேறு எப்படி நமது உணர்வுகளைக் கூற முடியும்? காட்சிப் பிழையோ? சொப்பனமா? தோற்ற மயக்கமா? காண்பது தான் சத்தியம் என்ற முடிவுக்கு வந்து விட்டோம்.

அப்படியானால் ஆதி சங்கரர் வாக்கு பொய்யா? ஒரு பெரிய அவதாரம் எதைச் சொன்னாலும் அந்த வார்த்தைகளில் பொருள் போய் ஒட்டிக் கொள்ளுமாமே! இதை சாஸ்திரம் அறுதியிட்டு உறுதி கூறுகிறது.

இதென்னடா, பெரிய சிக்கலாக இருக்கிறது. இது பொய்யா, அது பொய்யா, இல்லை இல்லை, இது மெய்யா, அல்லது அது மெய்யா?

இதே சந்தேகம் விவேகானந்தரின் அத்யந்த பக்தரான மன்மத் நாத் கங்கூலிக்கு ஒரு முறை வந்து விட்டது.

எல்லாம் மாயை தானா? என்று அவர் விவேகானந்தரைக் கேட்டார். அத்வைத சிங்கமான ஸ்வாமி விவேகானந்தர் உடனே ஆமாம், ஆமாம் அதில் என்ன சந்தேகம் என்று பதில் கூறினார்.

இல்லை, இதோ பார்க்கிறேனே, இவற்றை எல்லாம் எப்படி மாயை என்று கூற முடியும், விளங்கிக்கொள்ளவே முடியவில்லையே என்றார் சீடர்.

“உனக்கு என்னிடம் ஏதாவது கேட்க வேண்டுமா?”

“ஆமாம், மாயை என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும்.”

“அதை விட வேறு எதையாவது கேளேன்”

“ஊஹூம், வேறு எதுவும் தேவை இல்லை. மாயை பற்றித் தான் அறிய வேண்டும்”

‘அவசியம் தெரிந்து கொள்ள வேண்டுமா?

ஆமாம், ஆமாம், தெரிந்து கொண்டே ஆக வேண்டும்.

உடனே விவேகானந்தர் அவரை உற்றுப் பார்த்தார்.

“இதோ, பார், என்னைப் பார், நன்றாகப் பார்” என்றார் ஸ்வாமிஜி.

சீடர் அவரை உற்றுப் பார்த்தார். மாயைப் பற்றி அவர் பேச ஆரம்பித்தார்.

திடீரென்று எதிரில் இருந்த அனைத்தும் உருகிப் பொடிப் பொடியாக ஆரம்பித்தது. துகள் துகளாக.. இன்னும் சிறிய துகளாக, அதிர்வுகள், ஆனந்த நடனங்கள்.

வைப்ரேஷன்.. வைப்ரேஷன்.. வைப்ரேஷன்.

ஒன்றுமே தெரியவில்லை.

மன்மத நாதரால் தாங்க முடியவில்லை இந்தக் காட்சியை.

சில கணங்களில் அவரை விடுவித்தார் ஸ்வாமிஜி.

தன் இயல்பான நிலைக்குத் திரும்பிய சீடர் விக்கித்துத் திகைத்திருந்தார்.

பேச முடியவில்லை. ஒன்றும் புரியவில்லை.

“இப்போது தெரிகிறதா, மாயை என்றால் என்ன என்று உனக்கு?”

தலையை ஆட்டினார் அவர். மன்மத் நாத் கங்கூலி தனது இந்த அனுபவத்தை அப்படியே  எழுதி வைத்துள்ளார்.

அவரது அனுபவங்கள் வேதாந்த கேஸரி பத்திரிகையில் 1960ஆம் ஆண்டு

ஜனவரி மற்றும் ஏப்ரல் இதழ்களில் வெளியாகியுள்ளன.

உலகம் மாயை என்பதை நல்ல விசாரத்தின் மூலம் மட்டுமே தான் அறிந்து  கொள்ள முடியும். நான் யார், உலகம் என்ன? இப்படி நித்யா நித்ய விவேக விசாரம் செய்தால் நமது நிலை உயரும்.

அப்போது ப்ரஹ்மம் சத்யம் ஜகன் மித்யா என்ற அபூர்வமான பெறுதற்கு அரிய ஒரு நிலை பற்றி உணர முடியும்.

விவேகானந்தர் போன்ற மகான்களால் மட்டுமே இப்படி விளக்க முடியும். அதுவும் அந்த சீடர் அதிர்ஷ்டசாலியாக இருந்ததால் அவருக்க்கு இப்படி ஒரு அதிசய அனுபவம் கிடைத்தது!

சாஸ்திரமும் பொய்யில்லை; சங்கரர் வாக்கும் பொய்யில்லை.

ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!!

****

Index

ஆதி சங்கரர் ப்ரஹ்மம் சத்யம் ஜகன் மித்யா

பாரதியார் பாடல் – நிற்பதுவே, நடப்பதுவே

மன்மத் நாத் கங்கூலி, விவேகானந்தரின் சீடர், மாயை பற்றி கேள்வி

ஸ்வாமி விவேகானந்தர் மாயை பற்றி விளக்கம்

விவேக விசாரம்

tags- – விவேகானந்தர், மாயை, 

என்ன பேசுவது என்று திகைத்த ஸ்வாமி விவேகானந்தர்!(Post No.9660)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9660

Date uploaded in London – –  –29 May   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

என்ன பேசுவது என்று திகைத்த ஸ்வாமி விவேகானந்தர்!

ச.நாகராஜன்

1

இன்று நாம் ராமகிருஷ்ண பரமஹம்ஸரைப் பற்றிய பல அரிய தகவல்களைப் பெறப் பெரிதும் காரணமாக இருப்பவர் ம (M) என்று அழைக்கப்படும் மஹேந்திர நாத் குப்தா தான்!

அவர் ஒருமுறை பரமஹம்ஸரைப் பற்றி இப்படிக் கூறினார் தன் சிஷ்யரான ஸ்வாமி நித்யாத்மநந்தாவிடம்:

தாகூர் (ராமகிருஷ்ண பரமஹம்ஸரை ‘ம’ இப்படித் தான் குறிப்பிடுவார்) உயிருடன் இருந்த சமயம் நடந்த நிகழ்ச்சி இது. ஒரு நாள் நான் பதூர் பகன் (Badur Bagan) செல்லும் வழியில், வித்யாசாகர் மஹாஷய் வீட்டின் முன்னால் மயங்கி விழுந்து விட்டேன். எனது நிலையைக் கண்ட அக்கம்பக்கத்தார் விரைந்து வந்து என்னைத் தூக்கி ஒரு வண்டியில் வைத்து வீட்டுக்கு அனுப்பினார்கள். இதைக் கேள்விப்பட்ட பரமஹம்ஸர் எனக்கு இந்த மருத்துவ பரிந்துரையை (Prescription) அருளினார்: “சில நாட்கள் நன்றாக உறங்கு. எனக்கு அருகில் வராதே. என்னிடம் வந்து எனது சொற்களைக் கேட்டால் இன்னும் உன் நிலையை அது மோசமாக்கி விடும். எவ்வளவு பாலை அருந்த முடியுமோ, எவ்வளவு ஜீரணமாகுமோ அந்த அளவுக்கு அருந்து.”

பரமஹம்ஸரின் சொற்கள் வலிமை வாய்ந்தவை என்பதை விளக்க அவர் தன் சிஷ்யரிடம் கூறிய வார்த்தைகள் இவை.

2

ஸ்வாமி விவேகானந்தருக்கும் பரமஹம்ஸரின் வார்த்தைகள் எவ்வளவு வலிமை வாய்ந்தவை என்பது தெரியும். சில சமயம் அடுத்து என்ன செய்வது என்று அவர் திகைத்தால் வழி காட்டுதல் பரமஹம்ஸரிடமிருந்து தானே வரும்.

ஸ்வாமிஜியின் சீடரான மன்மதநாத் கங்குலி ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகிறார். ஒரு நாள் சம்பாஷணையின் போது ஸ்வாமிஜியே இந்தச் சம்பவத்தை அவரிடம் விவரித்தார்.

ஸ்வாமிஜி ஊர் உராகச் சென்று சொற்பொழிவுகள் ஆற்றி வந்த சமயம் அது. எல்லா விஷயங்களையும் அவர் பேசிக் கொண்டே வந்தார். ஒரு நாள் அவருக்கு மறுநாள் ஆற்ற வேண்டிய சொற்பொழிவில் எதைப் பற்றிப் பேசுவது என்று தெரியவில்லை. சொன்னதையே திருப்பிச் சொல்லவும் அவருக்குப் பிடிக்கவில்லை. இப்படி ஒரு அவலநிலைக்குத் தன்னை தள்ளி விட்டதற்காக அவர் குருநாதர் ராமகிருஷ்ணரை நொந்து கொண்டார். திடீரென்று அவர் தன்னுடன் பேசுவதை அவர் கேட்டார். கண்களை மூடிக் கொண்டார் ஸ்வாமிஜி. ராமகிருஷ்ணரின் திருவுருவம் தெரியவில்லை. ஆனால் குரல் மட்டும் நன்கு கேட்டது. ‘நீ இதைப் பற்றிப் பேசு; இதோ இது பற்றி…. கவலைப்படாதே’ என்றெல்லாம் அவர் நெடு நேரம் பேசிக் கொண்டிருந்தார். எனக்கு ஒரே ஆச்சரியம். எனக்கு மறுநாள் பேச வேண்டிய விஷயங்கள் அனைத்தும் கிடைத்து விட்டன. ஆனால் அதை விட இன்னொரு பெரிய ஆச்சரியம் எனக்குக் காத்திருந்தது. மறு நாள் காலை நான் தங்கியிருந்த அறைக்குப் பக்கத்து அறையில் இருந்தவர் என்னைச் சந்தித்தார்.

அவர், “நேற்று உங்களுடன் யார் பேசிக் கொண்டிருந்தார். அவர் பேசியது ஒன்றுமே எனக்குப் புரியவில்லை. ஏனெனில் அவர் எனக்குப் புரியாத வேறு ஏதோ ஒரு மொழியில் பேசிக் கொண்டிருந்தார்!” என்றார்.

என்னிடம் ராமகிருஷ்ணர் பேசிக் கொண்டிருந்தது வங்க மொழியில்! எனக்கு ஒரே ஆச்சரியம், அந்த மனிதரும் இந்தப் பேச்சை எப்படிக் கேட்டார் என்பது தான்!

இதைத் தொடர்ந்து ராமகிருஷ்ணரைப் பற்றி இன்னும் பல அரிய தகவல்களை அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

இப்படி தனது நினைவுகளை மன்மதநாத் கங்குலி பகிர்ந்து கொண்டதை, வேதாந்த கேசரி ஆங்கிலப் பத்திரிகை 1960ஆம் வருடம் ஜனவரி, ஏப்ரல்  இதழ்களில் வெளியிட்டது.

ஆதாரம் : 1. M- The Apostle and the Evangelist by Swami NItyatmananda – Vol 1 P 10

2. Remniscences of Swami Vivekananda – Manmatha Nath Ganguli  P-343

***

tags- ஸ்வாமி ,விவேகானந்தர் ,

தங்கம் அல்ல, மனிதர்களே தேவை! (Post No.9491)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9491

Date uploaded in London – –  –14 APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தங்கம் அல்ல, மனிதர்களே தேவை!

ச.நாகராஜன்

படகு /ப்லவ வருஷ தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

XXX

பாழ்பட்டு வீழ்ந்திருக்கும் ஒரு உன்னதமான தேசத்தை உயர்த்தி மீண்டும் அந்த மகோன்னத நிலையை அடையச் செய்ய தங்கம் வேண்டாம். அர்ப்பணிப்பு மனப்பான்மை கொண்ட தைரியமிக்க மனிதர்களே வேண்டும். இதை அழகுற எமர்ஸன் ஒரு கவிதை வாயிலாகத் தெரிவிக்கிறார்:

தங்கம் அல்ல, மனிதர்களே மக்களை மகத்தானவர்களாகவும் வலிமையானவர்களாகவும் உருவாக்க  முடியும்;

ஸத்தியத்திற்காகவும் கௌரவத்திற்காகவும் எவர்கள் துணிந்து நிற்கிறார்களோ நீடித்து துயர் உறுகிறார்களோ,

மற்றவர்கள் உறங்கும் போது எந்த தைரியமிக்க மனிதர்கள் விழித்திருக்கிறார்களோ,

மற்றவர்கள் பயந்து ஓடி ஒளியும் போது எவர்கள் துணிந்து எதிர் நிற்கிறார்களோ,

அவர்களே ஒரு தேசத்தின் அஸ்திவாரத்தை ஆழமானதாக ஆக்கி அந்த தேசத்தை விண்ணளவு உயர்த்துகிறார்கள்!

    – எமர்ஸன்

Not gold, but only men can make

     A people great and strong ;

Men who for truth and honour’s sake

     Stand fast and suffer long.

Brave men who work while others sleep,

    Who dare while others fly –

They build a nation’s pillars deep

    And lift them to the sky.

                          – Emerson

                                          *

 ஸ்வாமி விவேகானந்தர் தனது பல உரைகளிலும் அர்ப்பணிப்பு மனப்பான்மை கொண்ட இளைஞர்களே வாருங்கள் எனக் கூறி பாரத தேச இளைஞர்களைத் தட்டி எழுப்பினார்.

சுதந்திரம் அடைந்து விட்டோம் என்றாலும் கூட நமது புகழோங்கிய பண்டைய நிலையை இன்னும் அடைந்த பாடில்லை. அதை அடைய அவர் காட்டிய வழியே இன்றைய இன்றியமையாத தேவை.

ஸ்வாமிஜியின் உரைகளில் சில பகுதிகளை இங்கே பார்ப்போம்:

Man-Making or Moulding of Workers

We want fiery young men – intelligent and  brave, who dare to go to the jaws of Death, and  are ready to swim the ocean across. We want  hundreds like that, both men and women. Try  your utmost for that end alone. Make converts

right and left, and put them into our purity- drilling machine. Start centres at places, go on always making converts.

A hundred thousand men and women, fired with the zeal of holiness, fortified with eternal faith in the Lord, and nerved to lion’s courage by their sympathy for the poor and the fallen and the downtrodden, will go over the length and

breadth of the land, preaching the gospel of salvation, the gospel of help, the gospel of social raising -up – the gospel of equality.

*

The highest men are calm, silent, and unknown.

They are the men who really know the power of thought; they are sure that, even if they go into a cave and close the door and simply think five true

thoughts and then pass away, these five thoughts of theirs will live through eternity. Indeed such thoughts will penetrate through the mountains, cross the oceans, and travel through the world. They will enter deep into human hearts and brains and raise up men and women who will give them practical expression in the workings of human life.

You must be Rishis yourselves

*

Act on the educated young men, bring them together, and organise them. Great things can be done by great sacrifices only. No selfishness, no name, no fame, yours or mine, nor my Master’s even!

Work, work the idea, the plan, my boys, my brave, noble, good souls – to the wheel, to the wheel put your shoulders !

Stop not to look back for name, or fame, or any such nonsense. Throw self

overboard and work. Remember, “The grass when made into a rope by being joined together can even chain a mad elephant.”

*

Have that faith, each one of you, in yourself – that eternal power is lodged in every soul – and you will revive the whole of India.

Ay, we will then go to every country under the sun, and our ideas will before long be a component of the many forces that are working to make up every nation in the world.

We must enter into the life of every race in India and abroad; shall have to work to bring this about. Now for that, I want young men. “It is the young, the strong, and healthy, of sharp intellect that will reach the Lord”, say the Vedas.

*

Throughout the history of mankind, if any motive power has been more potent than another in the lives of all great men and women, it is that of faith in themselves. Born with the consciousness that they were to be great, they became great.

*

Religion in India must be made as free and as easy of access as is God’s air. And this

is the kind of work we have to bring about in India, but not by getting up little sects and fighting on points of difference. Let us preach where we all agree

Give the truth and the false much vanish

if there is the darkness of centuries in a room and we go into the room and begin to cry, “Oh, it is dark, it is dark!”, will the darkness go? Bring in the

light and the darkness will vanish at once. This is the secret of reforming men.

stand fast. If a hundred fall in the fight, seize the flag and carry it on. God is true for all that, no matter who fails. Let him who falls hand on the flag to another to carry on; it can never fall.

A hundred thousand men and women, fired with the zeal of holiness, fortified with eternal faith in the Lord, and nerved to lion’s courage by their sympathy

for the poor and the fallen and the downtrodden, will go over the length and breadth of the land, preaching the gospel of salvation, the gospel of help,

the gospel of social raising-up – the gospel of equality.

Enter the arena as servants of the Lord

Again and again has our country fallen into a swoon, as it were, and again and again has India’s Lord, by the manifestation of Himself, revivified her.

***

Tags – எமர்ஸன் ,தங்கம், மனிதர்,  தேவை, விவேகானந்தர்,

‘நான் இந்தியாவின் திரண்ட வடிவமே’!- விவேகானந்தர் (Post No.9133)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9133

Date uploaded in London – –12 January  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஜனவரி 12 1863 ஸ்வாமி விவேகானந்தர் அவதரித்தார்.

இன்று ஜனவரி 12. அவரது நினைவைப் போற்றி அவரை வணங்கித் துதிப்போமாக!

ஸ்வாமி விவேகானந்தர் : ‘நான் இந்தியாவின் திரண்ட வடிவமே’!

ச.நாகராஜன்

ஸ்வாமி விவேகானந்தர் ஒரு முறை கூறினார் இப்படி  : தான் ஒரு ‘Condensed India’ என்று! (தான் இந்தியாவின் திரண்ட வடிவம்  என்று)

உண்மை தான்! அவரது நினைவெல்லாம் இந்தியாவின் சிறப்பையும் வளத்தையும் பற்றி மட்டுமே இருந்தது.

இந்தியாவைப் பற்றியும் அதன் வளமான எதிர்காலத்தையும் பற்றி அவர் பலரிடமும் கூறியுள்ளார்.

அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்:

தனது சீடர்களிடம் இந்தியாவின் பண்டைய புகழோங்கிய காலத்தைப் பற்றி கூறுவது அவரது வழக்கம். ஒரு முறை அவர் இந்தியாவின் பழம் பெருமைகளைக் கூறிவிட்டு, “ஆனால் எதிர்காலத்தில் இந்தியா இதை விட அதிகப் புகழைப் பெறும்” என்றார். தொடர்ந்து அவர், “நான் சொல்வதை நம்புங்கள், இன்னும் நானூறு ஐந்நூறு ஆண்டுகளில் இந்தியா எப்படி இருக்கப் போகிறது என்ற காட்சியை நான் கண்டேன்” என்றார்.

இன்னொரு முறை இந்தியாவில் என்னென்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றி, தனது வருங்கால உரைக்கும் பண்பின் மூலமாக அவர் கூறினார் இப்படி:

“இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்குள் இந்தியா சுதந்திரம் பெற்று விடும். சுதந்திரம் எதிர்பாராத விதத்தில் வரும். இன்னும் இருபது ஆண்டுகளுக்குள் ஒரு பெரிய மஹாயுத்தம் வரும். மேலை நாடுகள் தனது உலோகாயதப் போக்கைக் கைவிடவில்லை எனில் இன்னொரு மஹாயுத்தம் வருவதைத் தடுக்க முடியாது.”

இந்தியா பற்றி அவர் கூறினார் : “இந்தியா, சுதந்திரம் அடைந்த பிறகு மேலை நாடுகள் போல உலோகாயதத்தைக் கைக்கொள்ளும். (India, when independent, will embrace the materialism of the West and attain material prosperity to such an extent that it will surpass n past records in that field”). அது கடந்த கால வளத்தை எல்லாம் மிஞ்சி இருக்கும்”.

இத்துடன் அவர் மேலும் கூறியது ;” அமெரிக்கா போன்ற நாடுகள் உலோகாயத வளத்தின் உச்சகட்டத்தை எட்டிய நிலையில் இது போன்ற லௌகீக வளத்தினால் நிலையான சாந்தியைப் பெற முடியாது என்பதை அறிந்து கொண்டு ஆன்மீகத்தில் அதிகமாக நாட்டத்தைக் கொள்ளும்”.

இன்னொரு முறை அவர் பேசும் போது கூறினார் : “பிரிட்டிஷார் இந்தியாவை விட்டுப் போன பின் சீனா இந்தியாவை வெற்றி கொள்ளும் ஒரு அபாயம் நேரிடும்.”

இவை ஒவ்வொன்றாக நடந்து வருவதை நாம் பார்க்கிறோம். வளமான நாடாக இந்தியா ஆவதும், இந்தியாவின் ஆன்மீக சக்தியை அமெரிக்கா போன்ற நாடுகள் நாடத் துவங்குவதும் இப்போது ஆரம்பித்திருக்கிறது.

இந்தியாவின் ஏழை எளிய ஜனங்களைப் பற்றி அவர் கவலைப்படாத நாளே கிடையாது.

ஜோஸபைன் மக்லியாட் என்ற சிஷ்யை அவரிடம் ஒரு முறை, “ஸ்வாமிஜி, உங்களுக்கு நான் எந்த விதத்தில் உதவ முடியும்” என்று கேட்டார்.

ஸ்வாமிஜி உடனே, “லவ் இந்தியா – இந்தியாவை நேசி – (Love India) என்று பதில் அளித்தார்.

சகோதரி நிவேதிதை ஸ்வாமிஜியின் அடிப்படையான இந்த உண்மை அன்பைப் புரிந்து கொண்டு தான், இந்தியாவின் எழுச்சிக்காக வெகுவாகப் பாடுபட்டார்.

ரவீந்திரநாத் தாகூரிடம் ரோமெய்ன் ரோலந்து இந்தியாவைப் பற்றி எப்படிப் புரிந்து கொள்வது என்று கேட்ட போது, அவர், “இந்தியாவைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமெனில் ஸ்வாமி விவேகானந்தரைப் படியுங்க்ள்” என்றார். (Read Swami Vivekananda, if you want to know India.”)

வேதாந்தத்தைப் பற்றி வெகு ஆவலுடன் விவாதிக்க வந்த ஒரு பண்டிதரிடம் ஸ்வாமிஜி, “பண்டிதரே! முதலில் பசியால் வாடி உணவுக்காக ஏங்கி அழும் உங்கள் நாட்டில் வாழும் ஆயிரக்கணக்கானோரை முதலில் பார்த்து அவர்கள் பசிப்பிணியைத் தீர்க்க முயலுங்கள். அதன் பின்னர் என்னிடம் வாருங்கள். வேதாந்தம் பற்றி நிறையப் பேசுவோம்” என்றார்.

இப்படி ஏராளமான நிகழ்ச்சிகள் இன்னும் உண்டு. இந்தியாவைப் பற்றி நன்கு அறிய வேண்டுமானால் அந்த மஹா புருஷரைப் படிக்க வேண்டும் – கவி ரவீந்திரநாத் தாகூர் சொன்னது போல!

வாழ்க ஸ்வாமிஜி! வளர்க அவர் புகழ்; பின்பற்றுவோம் அவர் போதனைகளை!

tags– விவேகானந்தர், இந்தியா

பெல்காமில் விவேகானந்தரின் அற்புத ஆற்றல் வெளிப்பாடு! (Post8975.

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8975

Date uploaded in London – – 28 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

பெல்காமில் ஸ்வாமி விவேகானந்தரின் அற்புத ஆற்றலின் வெளிப்பாடு! – 1

ச.நாகராஜன்

உலகம் வியக்கும் அற்புத ஆற்றல் பெற்றவர் ஸ்வாமி விவேகானந்தர்.தன் வாழ்க்கை முழுவதும் ஒவ்வொரு கணமும் தன் அபூர்வமான ஆற்றலை அவர் வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார். வேண்டுமென்று வெளிப்படுத்தவில்லை. அந்த ஆற்றல் தானாக அவரிடமிருந்து பொங்கிக் கிளம்பி அவரைச் சந்தித்தோர் அனைவரையும் வியக்க வைத்தது; புளகாங்கிதம் அடைய வைத்தது.

ஒவ்வொரு ஊரிலும் இதே கதை தான்; ஒவ்வொருவரிடமும் இதே கதை தான்! அவரைச் சந்திப்பவர் அறிஞரானாலும் சரி, சாமானிய மனிதனாக இருந்தாலும் சரி அவரது ஆற்றலில் ஒரு துளியை அனுபவித்து வியப்பது வழக்கம்.

பாரதமெங்கும் பாத யாத்திரையாக அவர் சென்று கொண்டிருந்த சமயம் 1892 அக்டோபர் மாதம் அவர் கோலாப்பூரிலிருந்து கிளம்பி பெல்காம் சென்றார்.

அங்கே பல அறிஞர்களைச் சந்தித்தார். அவர்கள் அவரைப் பார்த்து வியந்தனர்.

ஹரிபாத மித்ரர் என்ற ஒருவர் துறவிகளிடம் அதிக மதிப்பு இல்லாதவர்.ஒரு நாள் அவரைச் சந்திக்கச் சென்றார் ஸ்வாமிஜி.

துறவிகள் என்றாலேயே ஏமாற்றுப் பேர்வழிகள் என்று நினைத்திருந்த ஹரி பாதர் தன்னிடம் ஏதாவது யாசிக்கத் தான் அவர் வந்திருப்பார் என்று எண்ணினார். ஒருவேளை தனது நண்பரான ஜி.எஸ். பாட்டே (G.S.Bhate) ஒரு மராட்டியர் என்பதால் அவரது வீட்டில் அவருக்கு தங்க விருப்பம் இல்லாமல் தன்னைக் காண வந்திருக்கிறாரோ என்றும் அவர் எண்ணினார்.

ஆனால் ஸ்வாமிஜி தன் வாயைத் திறந்து பேச ஆரம்பித்தவுடன் அவர் அசந்து போனார்.

அவரது ஆங்கிலப் பேச்சும் அறிவும் அவரை பிரமிக்க வைத்தது. அவரைத் தம்முடன் தங்குமாறு அவர் வெகுவாக வேண்டினார். ஆனால் ஸ்வாமிஜி அதற்குச் சம்மதிக்கவில்லை.

“நான் ஒரு மராட்டியரின் வீட்டில் சந்தோஷமாகவே இருக்கிறேன். ஒரு வங்காளியைக் கண்டவுடன் நான் இங்கு வந்து விட்டேன் என்றால் அவர் மனம் மிகவும் வருத்தப்படும். அந்தக் குடும்பத்தினர் என்னை அன்புடன் கவனித்து வருகின்றனர்” என்று பதிலிறுத்தார்.

மறுநால் பாட்டே வீட்டிற்குச் சென்ற ஹரிபாதர் அங்கு ஏராளமானோர் ஸ்வாமிஜியுடன் பேசக் குழுமி இருப்பதைக் கண்டார்.மறுபடியும் தன் வீட்டிற்கு அழைத்தார். இப்போது ஸ்வாமிஜி, ‘பாட்டே சம்மதித்தால் தான் தன்னால் வர முடியும்’ என்றார். உடனே ஹரிபாதர் பாட்டேயைக் கெஞ்ச ஆரம்பித்தார்.

ஒரு வழியாக பாட்டே சம்மதிக்க ஸ்வாமிஜி ஹரிபாதர் வீட்டிற்கு வந்தார். அங்கு அவரது பேச்சைக் கேட்ட ஹரிபாதர் அவருக்கு சகல கலைகளும் அத்துபடி என்பதை அறிந்து வியந்தார். வெறும் மத நூல்களும் தத்துவ நூல்களும் மட்டும் தெரிந்தவர் இல்லை அவர், இலக்கியங்களிலும் கரை கண்டவர் என்பதை ஸ்வாமிஜியின் பேச்சுக்கள் வெளிப்படுத்தின.

 ஒரு நாள் பேச்சின் போது ஸ்வாமிஜி  சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய ‘தி பிக்விக் பேப்பர்ஸ்’ (The Pickwick Papers) என்ற நகைச்சுவை நாவலிலிருந்து சில பகுதிகளை அப்படியே வார்த்தை மாறாமல் கூறினார்.

இதைக் கேட்ட ஹரிபாதருக்கு ஆச்சரியம் தாளவில்லை. எப்படி இப்படி அப்படியே உள்ளது உள்ளபடி மேற்கோள் காட்டிப் பேச முடிகிறது என்று எண்ணிய அவர் ஸ்வாமிஜியிடம் கேட்க அவர் பதில் கூறினார் இப்படி:

‘சிறு வயதில் ஒரு முறையும், ஆறு மாதத்திற்கு முன்னர் ஒரு முறையும் ஆக இரு முறை தான் அந்த நாவலை நான் படித்திருக்கிறேன். உடலில் செயல்படும் சக்திகளைக் கட்டுப்படுத்துவதால் தான் மன ஆற்றல் வளர்கிறது. எனவே உடலில் வெளிப்படுகின்ற பௌதிக சக்திகளைக் கட்டுப்படுத்தி சேமித்து அவற்றை மன ஆற்றலாக, ஆன்மீக ஆற்றலாக மாற்ற வேண்டும். எதையும் சிந்திக்காமல் அர்த்தமற்ற இன்ப விஷய நாட்டத்தில் ஈடுபட்டு உடலின் சக்திகளை விரயமாக்குவது அபாயகரமானது. இது மனதின் கிரகிக்கும் ஆற்றலை (Retentive Faculty) இழக்கச் செய்கிறது. இன்னும் ஒன்று: நீ செய்வதை, அது எதுவாக இருந்தாலும், அதை முழு மனதுடன் செய்ய வேண்டும். ஒரு முறை  சாது ஒருவர் தாமிரத்தால் ஆன சமையல் பாத்திரங்களைத் துலக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். துலக்கத் துலக்க அவைகள் தங்கப் பாத்திரங்கள் போல மின்னின. பூஜையையோ அல்லது தியானத்தையோ ஒருவர் எவ்வளவு ஈடுப்பாட்டுடன் செய்வார்களோ அந்த அளவுக்கு அவர் முழு மனதையும் செலுத்தி அந்த வேலையைச் செய்து கொண்டிருந்தார்.”

ஸ்வாமிஜியிடமிருந்து இந்த கர்ம யோக ரகசியத்தை ஹரி பாதர் கற்றுக் கொண்டார்.

அது மட்டுமல்ல பெல்காமில் ஸ்வாமிஜியுடன் விவாதத்திற்கு வந்தவர்கள் அனைவரும் அவரது அபூர்வ ஆற்றலைக் கண்டு திகைத்தனர்.

அவர்களில் ஒருவர் மெத்தப் படித்த ஒரு எக்ஸிகியூடிவ் எஞ்ஜினியர்.

அவரைப் பற்றி அடுத்த கட்டுரையில் காண்போம்.

– தொடரும்

TAGS – பெல்காம் , விவேகானந்தர்

ஸ்வாமி விவேகானந்தர் யார்? (Post No.7446)

Written by  S NAGARAJAN

Post No.7446

Date uploaded in London – 12 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ஸ்வாமி விவேகானந்தரின் ஜெயந்தி தினம் ஜனவரி 12. அவர் வழி நடப்போம்; உயர்வோம்; உய்வோம்!

ஸ்வாமிஜி தோற்றம் 12 ஜனவரி 1863 சமாதி 4 ஜூலை 1902

ஸ்வாமி விவேகானந்தர் யார்?

ச.நாகராஜன்

ஸ்வாமிஜி யார்?

ஸ்வாமி நித்யாத்மானந்தா ஒரு நாள் ‘எம்’ என்று அழைக்கப்பட்ட மஹேந்திரநாத் குப்தாவைப் பார்க்கச் சென்றார்.

நோக்கம்?

அவரது நண்பர் ஒருவர் அவரிடம், ‘எப்போதும் ‘எம்’ தாகூரைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பார்’ என்றார். தாகூர் என்று அவர் குறிப்பிட்டது ராமகிருஷ்ண பரமஹம்சரைத் தான்!

நித்யாமனந்தார் அப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். அவருக்கு ஒரே ஆச்சரியம். பாரதத்தைத் தட்டி எழுப்பியது ஸ்வாமிஜி (விவேகானந்தர்) அல்லவா! அவரைப் பற்றி அல்லவோ அதிகம் பேச வேண்டும்!

அவர் கங்கணம் கட்டிக் கொண்டார் – “‘எம்’மைப் பார்த்து ஏன் நீங்கள் ஸ்வாமிஜியைப் பற்றி அதிகம் பேசுவதில்லை” என்று கேட்டு அவருக்கு “உபதேசிக்க” வேண்டும் என்று எண்ணம் கொண்டார்.

ஸ்ராவண மாதம். ஒரு நாள் மத்தியானம். மழை பெய்து நின்றிருந்தது.

‘எம்’மைப் பார்த்தார் சிறுவனான நித்யாத்மானந்தா.

அவரை அன்புடன் வரவேற்ற ‘எம்’ பெரியவர் ஒருவரைச் சந்திப்பது போல அவருடன் பேசலானார்.

பேச்சு யாரைப் பற்றி? ஸ்வாமிஜியைப் பற்றி!

சுமார் மூன்று மணி நேரம் இடைவிடாமல் ஸ்வாமிஜியைப் பற்றி அவர் பேசிக் கொண்டிருந்தார்.

உபதேசிக்க வந்தவர் உபதேசம் பெற்றார். இடைவிடாமல் ‘எம்’முடன் இருந்து M- The Apostle & the Evangelist என்ற பெரிய அரிய நூலை 15 தொகுதிகளாக எழுதினார். வங்காளத்தில் எழுதிய மூலத்தைப் பின்னர் அவரே ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்தார்.

ஸ்வாமிஜி யார் என்பதைப் பற்றி நித்யாத்மானந்தருடனான அந்த முதல் சந்திப்பில் ‘எம்’ கூறினார் இப்படி:-

“If the youth of India only follow Swamiji it will not only benefit them but it will also benefit the country and the people. It is Shukadeva himself who has reappeared as Narendranath, in a new body. He has no needs whatsoever of his own. He is already a Nityasiddha, ever perfect – God like, one of the Saptarishis; his advent is for the good of Bharata and the world. He has descended from the fourth floor to the ground floor to teach the service in man – Narendra, this Mather-Meni, the great jewel of Ramakrishna! All the eighteen qualities he possesses whereas Keshab had but one. His conquest is greater than those of Caesar, Alexander, Napoleon – in the sphere of religion and so on.”

(ஸ்வாமிஜி சுகரே தான்; நித்ய சித்தர் அவர். மேலிருந்து கீழிறங்கி வந்து உபதேசித்தவர் அவர். அவரிடம் மஹரிஷிக்கான 18 குணங்களும் இருந்தன. அவரது வெற்றி மதத்தைப் பொறுத்த வரை சீஸர், அலெக்ஸாண்டர், நெப்போலியன் ஆகியோரது வெற்றிக்கும் மேலானது.)

விவேகானந்தரைப் பற்றிய இந்த உரை நித்யாத்மானந்தரைப் புளகாங்கிதம் அடைய வைத்தது; ஸ்வாமிஜியைப் பற்றிச் சரியாகப் புரிந்து கொள்ள ‘எம்’மின் மூன்று மணி நேரப் பேச்சு உதவியதோடு அவரை உயர்த்தி விட்டது.

பரமஹம்ஸர், விவேகானந்தர், மஹேந்திரநாத் குப்தர் ஆகியோர் பற்றிய சுவையான சம்பவங்களையும் அருளுரைகளையும் அவரது 15 தொகுதிகளில் காணலாம்.

***

ஸ்வாமிஜி தான் ஆற்றிய பணி பற்றி தானே கூறி அருளி இருக்கிறார் இப்படி:- (அதுவும் அவரது வாழ்க்கையின் கடைசி நாளில்!)

Belur Math, 4, July 1902  :- if there were another Vivekananda, he would have  understood what Vivekananda has done! And yet, how many Vivekanandas shall be born in time!

  • Spiritual Talks aby the First Disciples of Sri Ramakarishna p 302
  • விவேகானந்தர் என்ன செய்தார் என்பதை இன்னொரு விவேகனந்தரால் தான் புரிந்து கொள்ள முடியும். இன்னும் காலப்போக்கில் எத்தனை விவேகனந்தர்கள் தோன்றப் போகிறார்கள்!!!

                                                                            ***

இன்னும் லட்சக்கணக்கில் விவேகானந்தர்கள் தோன்றுவார்கள் என்பதையும் அவரே சொல்லி அருள்கிறார் இப்படி :-

“Do you think that there will be no more Vivekanandas after I die?…. Thee will be no lack of Vivekanandas, if the world needs them – thousands and millions of Vivekanandas will appear – from where, who knows! Know of certain that the work done by me is not the work of Vivekananda, it is His work – the Lord’s own work! If one governor-general retires another is sure to be sent in his place by the Emperor.”

  • Complete Works of Swami Vivekananda Volume 5, – 357-58
  • நான் இறந்த பிறகு விவேகனந்தர்களே இனி இருக்க மாட்டார்கள் என்று எண்ணுகிறாயா நீ? விவேகானந்தர்களுக்குப் பஞ்சமே இருக்காது – உலகிறகு அவர்கள் தேவையெனில்! ஆயிரக்கணக்கான பல லட்சக்கணக்கான விவேகானந்தர்கள் தோன்றுவர் – எங்கிருந்து ? – யாருக்குத் தெரியும்?!!! ஆனால் ஒன்றை மட்டும் நிச்சயமாக அறிந்து கொள்! நான் செய்த பணி விவேகானந்தரின் பணி அல்ல. இது அவனுடைய பணி! இறைவனின் சொந்த வேலை! ஒரு கவர்னர்-ஜெனரல் பணி ஓய்வு பெற்று விட்டால் இன்னொருவர் அவரிடத்திற்கு சக்கரவர்த்தியால் அனுப்பப்படுவார் என்பது நிச்சயம்!

விவேகானந்தர் மீண்டும் வருவாரா? நிச்சயம் வருவார்? ஏன்? இதை அவரே சொல்கிறார் இப்படி:-

“The Master said he would come again in about two hundred years – and I will come with him. When a Master comes, he brings hiw own people.

 மாஸ்டர் கூறினார் தான் இன்னும் இருநூறு வருடங்களில் திரும்பி வரப் போவதாக – நானும் அவருடன் வருவேன். ஒரு மாஸ்டர் வரும் போது அவர் தனது சொந்த ஆட்களைக் கூட்டிக் கொண்டு வருகிறார்!

  •  
  • Marie Louise Burke Swami Vivekanada in the West 6 Volumes – Volume 6 – p 17
  • Complete Works of Swami Vivekananda Volume 9, – 406

***

விவேகானந்தரின் ஹிருதயமும் ராதாவின் ஹிருதயமும் (Post No.7237)

Written by S NAGARAJAN

swami_48@yahoo.com

Date: 20 NOVEMBER 2019

Time  in London – 6-17 AM

Post No. 7237

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

ச.நாகராஜன்

ஸ்வாமி விவேகானந்தர் தனது வாழ்நாள் முழுவதும் புகழோங்கிய பாரதத்தின் முன்னாள் பெருமையையும் இந்நாள் சிறுமையையும் எண்ணி எண்ணி வருந்தினார்.

ஒரு முறை அவர், ‘எத்தனை நாள் தான் இப்படி வறுமையில் இந்தியா இருக்க முடியும்? அவள் மெலிதாகச் சுவாசித்துக் கொண்டிருப்பது ஒன்றால் மட்டுமே அவள் உயிருடன் இருக்கிறாள் என்பதை அறிய முடிகிறது” என்றார்.

வறுமை ஒழிந்த, ஆன்மீக சிகரத்தில் ஏறிய, அற்புத இந்தியாவை அவர் மக்கள் முன் உருவகப்படுத்தி வந்தார்.

இந்திய மக்கள் அனைவருக்காகவும் அவர் ஹிருதயம் உருகியது. அவர் ஹிருதயம் பூவைப் போன்று மென்மையானது.

ஸ்வாமி சதாசிவானந்தா அவரைப் பற்றிய தனது நினைவலைகளில் கூறும் இரு சம்பவங்களைப் பார்ப்போம்.

ஸ்வாமிஜி அபாரமான ஆளுமை உடையவர். அநீதியைக் கண்டால் பொங்கி எழுந்து தன் முழு வலிமையுடன் அதைத் தாக்கிப் பேசுவார். அந்த அநீதியை வேருடன் களைய வேண்டும் என ஆவேசப் படுவார்.

அதே சமயம் அவர் ஹிருதயம் மலரினும் மெல்லிது.

ஒரு முறை அவர் கூறினார்:” அப்போது தான் கறந்த பாலில் உள்ள குமிழிகளைத் தொடுவதால் உன் விரலில் காயம் ஏற்படுமா? நான் சொல்கிறேன், ஒரு வேளை இது சாத்தியமாக இருந்தாலும் இருக்கலாம். ஆனால் ஸ்ரீ ராதையின் ஹிருதயம் இதை விட மென்மையானது!

அதே மென்மையான ஹிருதயம் தான் ஸ்வாமிஜியினுடையதும்!

இன்னொரு நாள் நடந்த சம்பவம் இது:

ஒரு நாள் காலை டார்ஜிலிங்கில் தனது காலை உணவை முடித்துக் கொண்ட ஸ்வாமிஜி சில பேருடன் இயற்கை அழகை ரஸித்தவாறே  சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். திடீரென்று அவர் தன் மனக்கண்ணில் ஒரு வயதான பெண்மணி பெருஞ்சுமையைத் தனது முதுகில் சுமந்து செல்வதைக் கண்டார். அந்தச் சுமை விழ, அவர் அதை எடுக்க காயம் வேறு அவருக்கு ஏற்பட்டு விட்டது. அவருடன் கூடச் சென்றவர்களில் யாரும் இதைப் பார்க்கவே இல்லை. அவரது உதவியாளர்கள் இளைஞர்கள்; அனுபவம் இல்லாதவர்கள்; ஸ்வாமிஜியின் அபாரமான உயர்ந்த பிரபஞ்ச பிரக்ஞை நிலையை அறியாதவர்கள்.

ஸ்வாமிஜி தனது கண்களைத் வெகு தூரத்தில் இருந்த ஏதோ ஒன்றின் மீது தன் பார்வையைப் பதித்தார். அவரால் ஒரு அங்குலம் கூட நகர முடியவில்லை.

அவர் முகம் வெளுத்தது. வலியால் அவர் கத்தினார்;” ஆ! இங்கே ரொம்ப வலிக்கிறதே! என்னால் இனிமேல் நடக்கவே முடியாது” என்று அவர் அலறினார்.

ஒருவர் கேட்டார்: “ஸ்வாமிஜி! எந்த இடத்தில் உங்களுக்கு வலிக்கிறது?”

ஸ்வாமிஜி, “ இதோ இந்த இடத்தில்! அந்தப் பெண் விழுவதை நீ பார்க்கவில்லையா?” என்றார்.

கேட்ட இளைஞருக்கு ஒன்றுமே புரியவில்லை -ஸ்வாமிஜி வலியால் துடிக்கிறார் என்பது மட்டும் அவருக்குத் தெரிந்தது. அவருக்கு மேல் கொண்டு என்ன பேசுவது என்று தெரியவில்லை. பேசாமல் இருந்து விட்டார்.

காலம் செல்லச் செல்லத் தான் ஸ்வாமிஜியின் உண்மை நிலையை அவர்கள் அறிந்து கொண்டனர். மனிதனுக்கு மனிதன் ஒரு இரக்க சுபாவம் நிலவுகின்றது என்பதையும் பெரும் மகான்களுக்கோ தொலை தூரத்தில் இருந்தவர்களின் உணர்ச்சிகளையும் பார்க்கும் சக்தியும் அனுபவிக்கும் சக்தியும் இருக்கிறது என்பதையும் இந்தச் சம்பவத்தால் அவர்கள் பின்னால் புரிந்து கொண்டனர்.

மற்றவர் துன்பத்தைப் பார்க்கச் சகிக்காத மென்மையான ஹிருதயம் ஸ்வாமிஜியின் ஹிருதயம். அது மெழுகு போல உருகி விடும் அடுத்தவரின் துன்பத்தைப் பார்த்து!

அற்புதமான அப்படிப்பட்ட பெரும் ஸ்வாமிஜி தான் நம்முடன் சமீப காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்தார்!

****

பாதிரிகளின் சூழ்ச்சியும் விவேகானந்தரின் வெற்றியும்! (Post No.5417)

WRITTEN BY S NAGARAJAN

Date: 11 SEPTEMBER 2018

 

Time uploaded in London – 6-24 AM (British Summer Time)

 

Post No. 5417

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

சிறப்புக் கட்டுரை

செப்டம்பர் 11. விவேகானந்தர் தனது உரையால் அமெரிக்காவை வெற்றி கொண்ட நன்னாள்!

 

பாதிரிகளின் சூழ்ச்சியும் விவேகானந்தரின் வெற்றியும்!

 

ச.நாகராஜன்

 

1

செப்டம்பர் 11. இன்று (11-9-2018) ஸ்வாமி விவேகானந்தர் சிகாகோவில் சர்வமத மகாசபையில் வெற்றிகரமான உரையாற்றிய 125 ஆண்டு விழா நாளாகும்.

அந்த மகத்தான வெற்றி ஹிந்து மதத்தின் வெற்றி. கூடியிருந்த அவையினர் அனைவரும் ஸ்வாமிஜி உரை முடித்தவுடன் இரு நிமிடங்கள் தொடர்ந்து கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அன்றிலிருந்து தொடங்கி அவரது பெயர் அமெரிக்கா முழுவதும் பிரபலமானது.

ஸ்வாமிஜியை இறுதிப் பேச்சாளராக அறிவிக்கும் பழக்கமும் ஏற்பட்டது. ஏனெனில் அவரது பேச்சைக் கேட்க விரும்பி வரும் மக்கள் அதுவரை காத்திருப்பர் என்பதால் தான்.

 

2

மன்மத நாத் கங்குலி என்பவர் ஸ்வாமிஜியின் பால் அத்யந்த பக்தி கொண்டவர். அவர் தனது நினைவலைகளைப் பின்னால் பகிர்ந்து கொண்டார்.அவரது அனுபவங்கள் வேதாந்த கேசரி இதழில் 1960ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் ஏப்ரல் மாத இதழ்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

அதில் ஒரு சுவாரசியமான சம்பவம் இது.

கங்குலி 1897ஆம் ஆண்டு ஸ்வாமிஜியை கல்கத்தாவில் தரிசித்தார்.பின்னர் அடுத்த முறை டிசம்பர் கடைசி வாரத்தில் சந்தித்தார்.

ஸ்வாமிஜியைக் கண்டவுடன் கங்குலி விரைந்து சென்று அவர் பாதங்களைக் கையால் தொட்டு வணங்கினார். அருகில் இருந்த ஒரு சிறு கூடாரத்தின் பக்கத்தில் ஒரு  டீ மேஜை இருந்தது. உட்காருவதற்கு சில ஸ்டூல்களும் இருந்தன. ஸ்வாமிஜி பிரம்மானந்தரிடம் கங்குலி அருந்துவதற்கு டீ கொண்டு வருமாறு கூறினார். டீயும் பிரசாதமும் வந்து சேர ஸ்வாமிஜி தனது சம்பாஷணையைத் துவக்கினார்.

அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி ஸ்வாமிஜி தன் நினைவுகளைச் சொல்லலானார்.

அவரது வார்த்தைகளிலேயே அதைப் பார்ப்போம்:

 

“சிகாகோவில் ஹிந்து மதம் தான் உலகிலேயே மிகப் பெரிய மதம் என்பது நிரூபிக்கப்பட்டது. இதைப் பாதிரிகளால் பொறுக்க முடியவில்லை. அவர்கள் கோபத்தால் கொதித்தனர். பிரான்ஸில் இன்னொரு சர்வமத மகாசபையைக் கூட்ட அவர்கள் விரும்பினர். பாரிஸில் அதை நடத்த எண்ணிய அவர்கள் அதில் பேசும் அனைவரும் பிரெஞ்சு மொழியிலேயே பேசுவதைக் கட்டாயமாக்கலாம் என முடிவு செய்தனர். அப்போது எனக்கு பிரெஞ்சு மொழி தெரியாது. அதனால் என்னை அந்த சர்வமத மாநாட்டில் கலந்து கொள்ளாமல் செய்து விட முடியும் என்று அவர்கள் எண்ணினர். ஆனால் நான் பிரான்ஸுக்கு சென்று பிரெஞ்சு மொழியை ஆறு மாதங்களில் நன்றாகக் கற்றுக் கொண்டு விட்டேன். பிரெஞ்சு மொழியிலேயே பல சொற்பொழிவுகளையும் நிகழ்த்தினேன். இதைப் பார்த்த மிஷனரிகள் தங்கள் உற்சாகத்தை இழந்தனர். இன்னொரு மாநாட்டை நடத்துவது என்ற அவர்களது எண்ணமே கிடப்பில் போடப்பட்டது.”

ஸ்வாமிஜியை புறந்தள்ளி ஓரங்கட்ட நினைத்த பாதிரிகளின் சூழ்ச்சியை மிக சுலபமாக அவர் முறியடித்து விட்டார். பிரெஞ்சு மொழியில் புலமை பெற்றதால் அதிலேயே பேசி பிரான்ஸ் மக்களை அவரால் கவர்ந்து ஈர்க்க முடிந்தது.

ஸ்வாமிஜி தங்கியிருந்த அறைக்கு வெளியே ஒரு பிரைவேட் லெட்டர் பாக்ஸ் இருந்தது. அதில் அவருக்கு வரும் தபால்கள் போடப்படும்.

அதில் அவருக்கு மிரட்டல் கடிதங்கள் ஏராளம் வந்தன. ஹிந்து மதம் பற்றிப் பேசுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற மிரட்டல் அந்தக் கடிதங்களில் இருக்கும்.

அஞ்சா நெஞ்சரான ஸ்வாமிஜி அதைச் சற்றும் பொருட்படுத்தவே இல்லை.

ஸ்வாமிஜி ராபர்ட் க்ரீன் இங்கர்சாலைச் சந்தித்த சமயத்தில் இங்கர்சால் அவரிடம், “நல்ல வேளை, நீங்கள் இப்போது வந்தீர்கள். சிறிது காலம் முன்னர் வந்திருந்தால் உங்களைக் கொன்றே இருப்பார்கள்” என்றார்.

ஹிந்து மதம் பற்றிய ஸ்வாமிஜியில் அரிய உரைகளால் பாதிரிகள் திடுக்கிட்டனர். பதில் சொல்ல முடியாமல் திணறினர்.

இதற்காக அவர்கள் செய்த சூழ்ச்சிகள் பல.

அவற்றில் ஒன்று தான் பிரான்ஸில் நடத்த திட்டமிட்ட அடுத்த மாநாடு.

அதை சுலபமாக உடைத்து எறிந்தார் அவர். ஒருவேளை பிரான்ஸில் மாநாடு நடந்திருந்தால் அமெரிக்காவை வெற்றி கொண்டது போல பிரான்ஸையும் அவர் வெற்றி கொண்டிருப்பார்.

 

3

இந்த 125வது ஆண்டு தினத்தில் ஹிந்து மதத்தின் பெருமையை உலகளாவிய விதத்தில் நிலை நாட்டிய ஸ்வாமி விவேகானந்தருக்கு நமது பக்தியுடனான பணிவான அஞ்சலியைச் செலுத்துவோம். அவர் போதித்த நமது மதத்தின் பெருமைகளை நினைத்துப் போற்றி அதைப் பாதுகாப்போம். நமது மதத்தின் அருமை பெருமைகளை உலகெங்கும் பரப்பி அனைவரும் உணரச் செய்வோம்!

***

ஆதாரம் : அத்வைத ஆஸ்ரமம்., கல்கத்தா வெளியிட்ட  Reminiscences of Swami Vivekananda என்ற நூல். (முதல் பதிப்பு  மே 1961; மேலும் பல பதிப்புகள் கண்ட நூல்) 430 பக்கங்கள் கொண்ட இந்த நூலில் கிழக்கு மற்றும் மேற்கைச் சேர்ந்த ஸ்வாமிஜியின் பக்தர்கள் மற்றும் அபிமானிகள் தெரிவிக்கும் சுவையான தகவல்கள் ஏராளம் உள்ளன.வாங்கிப் படித்துப் பாதுகாக்க வேண்டிய நூல். ராமகிருஷ்ண மடம் கிளைகளில் கிடைக்கும்.

–subham–